.










பயோ டேட்டா-

பெயர்-கிரிஸ்ணன் ஜெயசுதன்

வயசு-கலியாணவயசு

சிறப்பியல்பு-வெடித்தல்,வெடித்தல் மட்டும்

தொழில்- பெரிய பிரித்தானிய பெற்றோல் கம்பனியில் பெரிய உத்தியோகம். (இலங்கைக்காசுக்கு மாதம் 2 லட்சத்துக்கு மேல சம்பளமாம் ...அம்மாடியோவ்)

சமீபத்தைய சாதனை-வேலைத்தளத்துக்கு வந்த காப்பிலி பெண் "கட்டினா உன்னைமாதிரி ஒருத்தனை தான் கட்டணும்.உன்ர சிரிப்ப பார்த்துக்கொண்டே இருக்கலாம்" என்றது.(கடும் மது வெறியில் வந்திருந்தாள்)

வாழ்நாள்க்கவலை -இன்னும் பிகர் செட் ஆகலையே என்பது.

ஒரே எரிச்சல் - சௌந்தர ராஜனுக்கு பெண் கொடுக்க கந்தப்பளையில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் போட்டி போடுவது.

இனி இவரைப்பற்றிய சுவாரசியமான சில சம்பவங்களைப்பார்த்துக்கொண்டு போகலாமா??



ஜெயசுதன் ஆரம்பகால 7G+ குழு உறுப்பினர்.வசந்தன் 7G+ இன் முப்படை தளபதி என்றால் ஜெயசுதன் ரம்புக்வெல போல.
அதிரடிகள் அலியப்பாவால் பல தனியாக செய்யப்பட்டாலும் வெளி உலகிற்கு ஜெயசுதனின் வாய் மூலமாக சொல்லப்படுகையில் தன்னாலும் செய்யப்பட்டதாக இணைக்கப்பட்டே சொல்லப்படும்.இது ஜெயசுதனின் உண்மையான இயல்பு பற்றி தெரியாதவர்களுக்கு "இவன் கடும் ரவுடி போல"என்ற கருத்து உருவாகிவிடும்.வவுனியாவில் வெறியில் போன கிழவர்களுக்கு அடித்தது.பலாப்பழம் களவெடுத்தது போண்ற் துணிகர அதிரடிகளை அலியப்பா கஸ்டப்பட்டு செய்திருந்தான்.ஆனால் மூச்சு விடாமல் வெடித்து ரணகளப்படுத்தும் ஜெயசுதன் எல்லா தாக்குதள் பெருமைகளையும் அள்ளிச்சென்று விடுவான்.




மொறட்டுவவில் வெறியில் போன குடுகாரனுக்கு வசந்தன் சொட்டை போட்டுவைக்க ஜெயசுதன் உசாராகி பிரச்சாரம் தொடங்கினான்.இது நடந்தது முதலாவது செமிஸ்டரில்.எனக்கும் 7G+ இற்குமான தொடர்பு வந்தது இந்த ஜெயசுதனின் வெடிமூலமாக தான்.அத்துகோறளை வீட்டில் வெம்மையான மதிய வேளையில் லெஸ்லி,கமல்ஸ் கூட இருக்கையில்
குடுகாரனுக்கு அடித்தது பற்றியும் மன்னாருக்கு வவுனியாவிலிருந்து 150 கிலோமீ வேகத்தில் மோட்டார் சைக்கிளில்
போனது பற்றியும் கூறிக்கொண்டிருந்த ஜெயசுதன் திடீரென விட்ட ஒரு அதிர் வெடி எல்லோரையும் உலுப்பிபோட்டு விட்டது.
விரிவுரையைக்கு மட்டம் போட்டு படுத்திருந்த நாம் எல்லோரும் கலங்கிப்போனோம்.கமல்ஸ் கூட தூக்கத்தால் எழுந்துவிட்டான்.
வவுனியாவில் .....யக்க பெடியளுக்கு முருக்கம் செத்தலால் அடித்ததாய் சொல்லிவிட்டான்.சேது அடிச்சிருந்தா உள்ள போட்டிருப்பாங்களே?..என்க...நாங்கள் அப்ப உள்ளயே இருக்கிறம்...இது ஜெயசுதன்.நானும் பல வெடி விட்டவன் தான் ஆனால் இப்பிடியும் விடுவாங்களோ என்று குழம்பிப்போனேன்.எல்லோரும் நக்கல் அடிக்கிறார்கள்.ஆனால் அவன் தான் சொன்னதில் உறுதியாக இருந்தான்.




புளுகனோ வெடியனோ கடும் எதிர்ப்பு வந்தால் சற்று தடம் மாற்றுவார்கள்.ஆனால் இவன் அசையவில்லை.எனக்கு மனம் சொல்லிற்று...நீ தேடிக்கொண்டிருந்தவன் இவன் தான்டா.. என்று.செய்யாது விட்டாலும் செய்ததாக சொல்வது அவனது ஆள் மன ஆசை.அப்பிடியென்றால் இவனுக்குள் ரவுடி ஆகவேண்டும் என்ற ஆசை உள்ளது.நமக்கும் அது தானே இருக்கிறது.ரவுடியாக வேண்டியது தான்.உடம்பால் முடியாட்டி என்ன வாய் இருக்கிறதே.....இவனோடு சேர்வோம்.மனம் முடிவெடுத்து விட்டது.(அன்று செய்த்து எத்துணை பெரிய தவறு என்று எனக்கு பின் உறைத்தது.)

வாய் மெய் இரண்டும் சேர்ந்தால் தான் பெரிய ரவுடியாக முடியும்.பல்கலையில் கராத்தே வகுப்பு தொடங்க போனேன்.ஆச்சரியம்...வெடி ஜெயசுதனும்,அலியப்பாவும் நிற்கிறார்கள்.அட ஒரே ரசனை தான் நமக்குள்...கககபோ...
பயிற்சிகள் தொடங்க அலியப்பா ஓரளவு நேர்த்திக காலைக்கையை ஆட்டுகிறான்.ஜெயசுதனை பார்க்கிறேன்.குடு அடித்தவன் போல தடுமாறிக்கொண்டிருந்தான்.இடைவேளையில் நான் முன்னமே பழகினவனாக்கும் என்பதை காட்டும் முகமாய் "அடிபடவிடுறாங்கலில்லை.காத்துக்கு பஞ்ச் பண்ணுறது நல்லாவே இல்லை" என போட்டு வைக்க,ஜெயசுதன் அலியப்பாவை தட்டி "வசந்தன் அடிபாட்டைபற்றி கதைக்கிறான்" என்க அலியப்பா என்னை கேவலமாய் ஒரு பார்வை பார்த்தானே...ஆயுளூக்கும் மறக்க மாட்டேன்.




பிறகு விரிவுரைகள் நடக்கும் ஒவ்வொரு நாளும் தனது ரவுடி வாழ்க்கையைப்பற்றிச்சொல்ல நானும் கவனமாய் கேட்பது போல நடித்துக்கொண்டிருப்பேன்.இவ்வாறு ரவுடி வாழ்க்கை ஒரு பக்கமா போனாலும் ஜெயசுதனின் வாளி வாழ்க்கை அதைவிட வேகமாக போய்க்கொண்டிருந்தது.அச்சுதனும் இவனுக்கும் இடையில் வாளி வைப்பதில் இணாக்கப்பாடு நிலவியது.வட்ட ஸ்டேன் பென்ஞ் இல் பெண்கள் இருக்க இருவரும் மணிக்கணக்கில் சூழ நின்று சூழ அளந்துகொண்டிருப்பார்கள்.வீரமும் காதலும் தானே பழம் தமிழர் பண்பு.காதலின் பல்கலை வேர்சன் தானே வாளி.கலக்குறாங்கள் என மனதிற்குள் நினைத்துக்கொள்வேன்.விரிவுரை முடிந்து நாமெல்லாம் கூடி கூட்டமா பன்னி கணக்கில் வர முதலாகவே இவர்கள் இருவரும் பெண்களும் வட்ட ஸ்டோன் பென்ஞ்சுக்கு வந்து விடுவார்கள்.தினமும் வழிசல்கள்,வாளியள்,சொங்கியள் என ஆயிரம் அர்ச்சனை கிடைக்கும் நண்பர்களிடமிரிருந்து.ஆனால் அவை அனைத்தையும் தனது திறமைமேல் கொண்ட பொறாமையின் வெளிப்பாடுகள் என ஒதுக்கி புன்முறுவல் பூக்கும் அரிய தகமை இவரிடம் மட்டும் தான் உண்டு.



வாழ்நாளில் மிககேவலமாக ஒரு ஆண் பெண்ணால் அவமானப்படுத்தப்பட்டதை நேரே கண்டது இவர் மூலமாகத்தான்.
அந்த சம்பவம் ஒரு நாள் பின்னேரம் விரிவுரை முடிந்து வந்த போது நடந்தது.அவ்வளவுக்கு கேவலத்தை ஒரு பெடியன் எதிர்கொண்டு சிரித்த முகத்தோடு சென்றதை நான் ஆயுளில் கண்டதில்லை.காணப்போவதும் இல்லை என்றே நம்புகின்றேன்.எங்களோடு வந்த ஜெயசுதனின் முகத்தில் திடீரென பல்ப் எரிஞ்சது மாதிரி ஒரு பிரகாசம் எதிரே வந்த ஒரு பெண்ணை கண்டதாலேற்பட்டது..துள்ளிக்கொண்டு" அங்க முனியம்மா(பெயர் இங்கே மாற்றப்பட்டுள்ளது) வாறா என்ற படி ஒரு ஆட்டுக்குட்டி தாயாட்டிடம் பால் குடிக்க போவது போல தனக்கே உரிய சமச்சீரற்ற நடையோடு ஒடிப்போய் முனியம்மா வுக்கு ஏதோ சொல்லி வாளி வைக்க அவள் "உன்ன மாதிரி ஒரு வளிசல் கேசை நான் கண்டதில்லடா" என்க எங்களுக்கெல்லாம் காற்சட்டை கிளிந்து விளுந்து விட்டது போல இருந்தது.ஆனால் ஜெயசுதன் மாறா புன்னகையோடும் "என்ன
நீரே இப்படி சொல்லலாமா" என்று கேட்டபடி பின்னால் போய்க்கொண்டிருந்தான்.இவ்வளவுக்கும் முனியம்மா வை ஒரு பிகர் என்று சொல்ல முடியாது.கரும்பில்லா ஊரில இலுப்பம் பூ சக்கரை என்ற ரீதியில் தான் அவள் பிரபலம் பெற்றிருந்தாள்.

அடுத்த நாள் ஏனடா இப்படி கேவலப்படுறாய் என்று நானும் கமல்சும் கேட்க ஜெயசுதன் ஒரு கேவலமான சிரிப்புடன் எங்களைப்பார்த்தான்." உங்களுக்கு அவளோட கதைக்க விருப்பமா?.நீங்க கதைச்சா அவள் கதைப்பாள்.நல்ல பெட்டை என்றான்".பெண்களோட பிரண்டா பழகுங்கடா....வவுனியாவில நாங்கள் வீட்டுக்கு போய் உண்வு சாப்பிடுற அளவுக்கு கேர்ல் பிறண்ட் வைச்சிருக்கிறம்.நீங்களும் அவளை ஒரு பெட்டையா யோசிக்காம பிறண்டா பழகுங்க என்க கமல்சும் நானும் சூடாகி தூசணங்கள் சில பொழிந்தோம்.ஜெயசுதனின் கண் சிவந்தது.முகத்தில் ரவுடி களை படர்ந்தது.மீசை முளைக்கிற இடம் துடித்தது(ஜெயசுதனுக்கு 3ம் வருடத்திலேயே மீசை மயிர்கள் முளைத்தன என்பதால் அப்படி குறிப்பிட்டேன்).யாரைப்பற்றியும் கதை அவளைப்பற்றி கதையாதே என்று கப்டன் போல சீறினான்.இந்த சீற்றத்தைப்பற்றி சிலாகித்து பல பார்ட்டிகளில் விழுந்து விழுந்து பின்னாளில் சிரித்திருந்தோம்.
ஆனால் பிற்காலத்தில் தனது தவற்றை உணர்ந்து வாளி வாழ்க்கையை கைவிட்டு மிகச்சிறந்த ஒரு நண்பனாக பலருக்கு இவர் திகழ்ந்ததையும் இந்த இடத்தில் குறிப்பிடவேண்டும்.



சமீபத்தில் லண்டன் சௌத் பாங் யுனிவேசிற்றியிலயும் தனது வெடியை கொழுத்திப்போட பாதிக்கப்பட்ட தமிழ் மாணவன் ஒருவன் தனது உள்ளக்குமுறலை கீழ்க்கண்டவாறு மூஞ்சிப்புத்தகத்தில் வடித்திருந்தான்.


//அந்த காலத்தில பெரிய பிரித்தானியா போறவய சீமைக்கு போகினம் எண்டு தான் பழசுகள் சொல்லுங்கள்.ஊர் மாட்டுக்கு பதிலா வெளிநாட்டில இருந்து அறிமுகமான கறவைப்பசுவை சீமைப்பசு
எண்டு கூப்பிட்ட எங்கள் மூத்தகுடிகள் அத விடாமல் சீமையாடு,சீமைமுயல்,சீமை தண்ணி இறைப்பு மிசின்,சீமைச்சரக்கு(தண்ணி) எண்டு தொடர்ந்து பெயரிட்டு தங்களது பிரித்தானிய மோகத்தை காட்டியிருந்தார்கள்.அந்த வரிசையில இப்ப வாறவர்தான் சீமை ரவுடி.கமல் நாயகன்ல தென்பாண்டிச்சீமை ரவுடியா வந்தது போல இவர் தென்வங்கிச்சீமையில இவர்தான் ரவுடி.
ஆளப்பார்த்தா சிரிப்பு வரும்.பேசத்தொடங்கினா அழுகை வரும்.கதைக்க தொடங்கினா பயம் பிடிக்கும்,புளுக தொடங்கினா ரத்தம் வரும்.(காதில)

முந்தி உலக நடப்பு ஒண்டும் தெரியாம இருக்கேக்கயே பயங்கர ரவுடி.இப்ப வாழ்க்கையில நல்லா அடிபட்டு உலகம் அறிஞ்சு எங்கயும் போய் எதயும் முடிக்க்கூடிய நிலைல இருப்பதாக அவர் வாயாலேயே சொல்லக்கேள்விப்பட்டு இதயம் தினமும் பயத்தில் அடித்துக்கொள்கிறது.
என்வாழ்நாளில் என்னப்பற்றிய மிகக்கேவலமான கருத்தாக நான் கருதுவது அவர் என்னப்பற்றி நினைத்து உதிர்த்த அந்த வார்த்தைகளைத்தான்.("நீ வாழ்க்கைய எப்படி சமாளிக்கப்போறாய் எண்டு நினைச்சா எனக்கு கவலையா கிடக்கு".)அவர் பேர் சொல்லவே என்னக்கு முடியல.அவ்வளவுக்கு அவர் மேல் மதிப்பும் மரியாதையும் பயமும் எனக்குண்டு.லண்டனில முருக்கம் செத்தல் இல்லாது எவ்வளவு நல்லது எண்டு நான் நினைத்துக்கொள்வேன்.ஏனெண்டா வாள் வீச்சு,வாய் வீச்சுகளில் மட்டுமல்ல முருக்கம் செத்தல் வீச்சிலும் அவர் கெட்டிக்காரன்.அவர் பெயரை சரியாக கண்டு பிடிச்சு
இங்க எழுதும் அந்த தில்லான ஆளுக்கு தென்வங்கி கோழிக்கடையில் வறுத்த சிக்கன் பெடெக்ஸ் வாங்கித்தரப்படும்.//
இது ஒன்றே போதும் இவர் தீரம் சொல்ல.




வெடிகளுக்கு அப்பால்ப்பட்டு ஜெயசுதன் ஒரு ரொமாண்டிக் ஹீரோ.இவர் நடித்த படத்திலிருந்து ஒரு பாடல்க்காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது.பார்த்து மகிழுங்கள்.

5 comments:

Rajeeth said...

ஆம் ....இதை தான் இவ்வளவு நாளும் எதிர்பார்த்திருந்தேன். அட்டகாசமான ஆரம்பம்.இன்னும் நிறைய எதிர்பார்கிறேன். ஒரே ஒரு வேண்டுகோள், சீரியஸ் ஆன விசயங்களை சேர்க்க வேண்டம், ஏனண்டால் மனது நகைச்சுவை பொருந்திய பல்கலை நினைவுகள் தான் இப்போது வேண்டிநிற்கிறது.

வாழ்த்துக்கள் சுகா.......

Kaipillai said...

ரஜீத்! 25 வயசு வந்து விட்டது.இனியும் சீரியஸ் ,அசீரியஸ் என கதைச்சுக்கொண்டிருக்க முடியாது.மனம் ஐங்கா,ராகுல் ஆட்கள் போல பக்குவப்பட்டிருக்க வேண்டும்.இதில எல்லாரும் ஆளையாள் போட்டுத்தாக்கி மகிழ வேண்டும் என்பது தான் என் விருப்பம்.நான் மட்டும் எழுதிக்கொண்டிருக்க இதையும் பந்தா என்று அறிவிச்சு விடுவாங்கள் நம்ம பெடியள்.

Rama said...

உடம்புல எண்ணெய் தடவிட்டு போன போலீஸ் சுடுற குண்டு உடம்பில பட்டாலும் வழுக்கி கொண்டு போகும் எண்டு உதை எழுதிறவர் சொல்ல, அதை கேட்டவன் ஒரு கிழமையா பேய் அறைந்த மாதிரி சொய்சா பிளட் இல திரிந்தவன். இப்படி அண்ட ஆகாச புளுகெல்லாம் ஜெயசுதன் ஓட பழகிய பிறகே வந்தது உமக்கு???

Kaipillai said...

நான்
தடி பழகியது குடு மானிடமிருந்து..
குடி பழகியது குடிகாரன் சௌந்தரிடமிருந்து..
அடி பழகியது அலியப்பாவிடமிருந்து...
ஆனால் எனக்கு வெடி பழக்கிய பவானந்தை
மறக்க முடியுமா?

Anonymous said...

//நீங்க வேணா உங்க போன் நெம்பர தாங்க உங்களுக்கு கிளுகிளுப்பு கலந்து இந்த கதையள இரவிரவா சொல்லுறன்.

அதுதானே உன்ர வேலை. கேவலம்... கிளு கிளு கதை பேசி ஜூனியர் பிள்ளைகளிடம் கிழிக்கப்பட்ட சங்கதிகளை எழுது முதலில்...