அறிமுகம்

.


வாழ்க்கைப்பாதையில் குறுக்கிடும் வசந்தகாலங்களில் முக்கியமானவை பல்கலைக்கழக நாட்கள்.எங்கிருந்தோ இருந்து வந்தவர்களை ஒன்றாக 4 வருடங்கள் ஒன்றாக்கி,உணர்வுகளை பகிரவைத்து,மகிழ்ச்சியில் ஒன்றாக திழைக்க வைத்து,துக்கங்களை பகிரவைத்து,வேதனையோடு பிரியவைத்து போய்விட்டது பல்கலைக்கழகம்.அடர்காடு,சூழ அடிதடியை அடிப்படை தொழிலாக கொண்ட மக்கள்,இடையே வெட்டியோடும் ஆறு.அந்த ஆற்றின் கரையில் உலக வங்கி கடனில் கட்டப்பட்ட கொங்கிறீட் கூடுகள்.அதை "மகே விஸ்வ வித்தியாலய" என்று பீத்திக்கொண்டு திரியும் "மகே அம்மே" ஆட்கள்.அவர்களிற்குள்ளே அடிக்கடி வரும் முரண்பாடுகளால் மூடப்படும் வளாகம். இந்த ரணகளத்துக்குள்ளே படிப்பில் மட்டும், பெண்களில் மட்டும்,தண்ணியில் மட்டும்,லந்து மட்டும் என தம் கவனங்களை ஒவ்வொன்றில் ஒருமுகப்படுத்தி திரியும் பல வகைப்பட்ட தமிழ் மாணவர்கள்.வளாகத்தையொட்டி மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்வதன் மூலம் பிழைப்பு ஓட்டுகின்ற மக்கள்.இது தான் மொறட்டுவை பல்கலைகழகத்தின் வெளித்தெரியும் பண்புகள்.

ஆனால் உள்ளுக்குள்...

கட்டுப்பெத்தையின் ஒவ்வொரு மரத்துக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கு.ஒவ்வொரு ஸ்டேன் பென்ஞ்சுகளுக்கும் ஆயிரம் காதல்க்கதைகள் தெரியும்.விடுதி அரைச்சுவர்கள் கொண்டிருக்கும் கிறுக்கல்கள் வேறுபட்ட மனோநிலைகளை சொல்லி நிற்கின்றன.கட்டட மறைவில், புதர் மறைவில், ஆளில்லா நேர உணவக ஒளிவில் புதைந்துபோன கிளு கிளு கதைகள் ஏராளம்.

இந்த வளாகத்துக்குள் வந்து போனவர்களில்...2003 சித்திரை உயர்தரம் எழுதி 2004 தை மாதம் புகுந்து ...இறுதியில் 2008 ஆம் ஆண்டு ஆனி மாதம் வெளியே போன 73 தமிழ் மாணவர்களின் அனுபவங்களை பகிர்வதற்கென உருவாக்கப்பட்ட தளம் தானிது.உங்கள் இனிமையான அனுபவங்களை, வெற்றிகண்ட/ தோற்றுப்போன காதல்களை,துன்பியல் சம்பவங்களை மனம் திறந்து இங்கே கொட்டுங்கள்.பிறகு ஒருகாலத்தில் இளைமை மங்கி ஓய்ந்து போன நாட்களில் மீட்டுப்பார்க்க, புத்துணர்வு பெற இப்பதிவுகள் உதவக்கூடும்.

எம் வளாகம்.

6 comments:

செந்தில் said...

மிக நல்ல முயற்சி.....வாழ்த்துகள்

Kaipillai said...

வாழ்த்திறது எல்லாம் இருக்கட்டும்.நீங்கள் அக்காவ அடகு வச்சு பேக்கரிய வாங்கின கதய எழுதேக்க கட்டத்துர ஆட்கள செட்டப்பண்ணி அடிக்க மட்டும் வந்திட வேண்டும்.

குட்டி Don said...

ரெம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்ள் டா.

Rama said...

Aha marupadium aarampichchidaanungaiyaa..........
kalakkunka........

Kaipillai said...

வாழ்த்துக்களுக்கு நன்றி கமி.
சும்ம பிரீயா இருக்கிற நேரத்தில பம்பலப்பிட்டி கோயில்ல
நேரத்தை நாசமாக்காம பதிவு போடுங்க.

Rama////
நம்ம பொடியன் போல இருக்கு பிளாக் ல இணையலாமே!

கார்த்தி said...

வரட்டும் அதிரடி பதிவுகள் வாழ்த்துக்கள்!!!!