.




வேறு பெயர்கள்-டேஞ்சர் சரி,விஞ்ஞானி,அலிபாய்,கெமிக்கல் அலி

கொக்குவில் எனும் ஊரிலே ஒரு தம்பதியினர் வாழ்ந்து வந்தனர்.மிக்க சிவ பக்தி கொண்ட அவர்கள் தவறாது கோவில் திருவிழாக்களில் கலந்து கொண்டு வந்தனர்.ஆனால் அவர்களின் மனைதையும் உறவுகளின் மனதையும் அரித்து வந்த ஒரு விடயம் இருந்தது.அதாகப்பட்டது அவர்களின் உறவுகளில் யாருக்கும் ஆண்வாரிசு கிடையாது என்பது பலத்த கவலையை தோற்று வித்திருந்தது.இதனால் மனமுடைந்த உறவினர்கள்,தம்பதியினர் எல்லோரும் ஆண்டவனிடம் ஆண்மகவு வேண்டி 333 நாட்கள் தொடர்ந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.ஆண்டவனும் மனமிரங்கி திருவருள் பாலித்தார்.1983ம் ஆண்டு ஜீன் மாதம் ஊரில்லாம் உறங்கிக்கொண்டிருந்த வேளை கொக்குவிலை பகலாக்கியது போல ஒரு ஒளி வானில் தெரிந்தது.




ஆமிக்காரன் தான் பரா லைட் அடிச்சிட்டு செல் அடிக்கப்போறான் என்று ஊரவர்கள் பதுங்கு குழிக்குள் முடங்கிக்கொண்டனர்.ஆனால் அந்த ஒளி அவர்கள் வீட்டு முற்றத்தில் இறங்கியது.ஊரார் அச்சத்தை விடுத்து அருகே வந்த போது அங்கே அழகா ஆறு குழந்தைகள் காணப்பட்டன.அதில் ஒன்று கட்டுக்கட்டாக புத்தகங்களோடும்,இன்னொன்று மிருதங்கத்தோடும்,இன்னொன்று 5 ரூபாய் குத்திகளோடும்,இன்னொன்று லாண்ட் மாஸ்ரர் பெல்ட்டோடும்,இன்னொன்று இரசாயன குவளைகளோடும்,கடைசிக்குழந்தை ரின் மீனோடும் காணப்பட்டன.ஆசையோடு ஆறு குழந்தைகளையும் அணைத்து எடுத்து உச்சி மோர்ந்த போது ஆறு குழந்தைகளின் உடல்களும் ஒட்டி அரிந்தபலகை போன்ற ஒரு உடம்பு தோன்றிவிட்டது.அவர்கள் அக்குழந்தைக்கு சசிவர்ணன் என்ற பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.



தமிழகராதி அர்த்தங்கள்-சசி - இந்துப்பு(வெடியுப்பு) : கருப்பூரம் : சந்திரன் : பச்சைக் கருப்பூரம் : கடல் : மழை.

அலிகொண்ட அலிபாய்



சசி என்றால் கற்ப்பூரம்.பெயருக்கேற்ர கற்பூரம் போல உடனே பத்திக்கிற இயல்போடும்,வீரத்தோடும் வளர்ந்து வந்த சசிவர்ணன் குத்தில் மட்டுமல்ல,யானை ஏற்றம் ,குதிரை ஏற்றம் முதலியவற்ரையும் கற்று பெரு வீரனாக திகழ்ந்தான்.வன்னி வள நாட்டின் முத்தையன் கட்டுக்குளத்தில் காத்தாடி பூட்டி ஆட்டி கறன்ட் எடுத்து இருண்டா காடுகளை எல்லாம் பகலாக்கினான்.சும்மா திண்டு கொழுத்திருந்த மீன்களை எல்லாம் ரின்னில் அடைத்து ரின்மீன் செய்து பட்டினி போக்கினான்.பாமரமக்களெல்லாம் வண்டியை அமத்த பெல்ட் பாவிக்க சசியோ இயந்திரங்களில் பெல்ட்டை போட்டு ஓட்டி தொழில்நுட்பப் புரட்சி செய்தான்.கன்னியர் உள்ளம் கவர் கள்வனாக திகழ்ந்த இவனை பார்த்த இளம் பெண்கள் எல்லோரும் இவனென்ன இந்திரனா?/சந்திரனா என எண்ணி உடல் சோர்ந்ததாக பழைய வன்னிக்கவிஞர்களின் ஏட்டுச்சுவடிகளில் சசிபற்றி குறிப்புக்கள் காணப்படுகின்றன.ஆனாலும் எல்லா புகழும் வன்னியில் ஒரு சிறு பிரதேசத்துக்குள்ளேயே குறுக்கிப்போயிருந்தன.அதாவது குடத்திலிட்ட விளக்கு போல இருந்த சசியின் பிரகாசம் வெளியே தெரிந்தது கட்டுப்பெத்தை என்ற மேட்டில் ஏறியபிறகுதான்.ஆனால் முக்கால்க்கழுசானும் ,ஜெல் வைத்து கிளறி விட்டப்பட்ட முள்ளுத்தலையும் கொண்ட கலம்பு டமில் பெடியளலேயே அடைய முடியாத பிரபலத்தை 3 பிளீட்ஸ் வைச்ச "காதலன் ஜீன்ஸ்",நெற்றி நிறைய திருநீறு பூச்சு,பாட்டா செருப்பு என வலம் வந்த சசியால் எப்படி பெற முடிந்தது???.இதற்கு சசி பாவித்தது தனது பிரச்சாரத்திறனை.இவர் ஜெயசுதன்,தீபரூபன்,அச்சுதன்,ஜெனா,வசந்தன் மாதிரி ஊரைக்கூட்டும் சரவெடியன் அல்ல,அலுங்காமல் குலுங்காமல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல காலுக்கடியில் கொளுத்திப்போட்டு,பாதிக்கப்பட்டவன் வெடி என உணர முதலே இடத்தை காலி செய்யும் அசாத்திய திறமைசாலி.வன்னியில் இருந்து புறப்பட்ட இந்த புயல் கட்டுப்பெத்தையில் 4 வருசம் மையங்கொண்டு விளைவித்த சேதாரங்கள் சொல்லிஅடங்காதவை.

கட்டுப்பெத்தையில் கட்டுக்கடங்கா காளை




மொறட்டுவயில் கத்தரிக்கோல்.,கத்தி,நக வெட்டி போன்ற பல ஆயுதங்களை உள்ளடக்கிய அறைச்சாவிக்கொத்தை வெளியே தெரியும் படி விரலில் கொழுவிக்கொண்டு வலம் வந்த சசி "நான் படிக்க வரேல்லை ......... வேலைத்திட்டத்துக்கு தான் வந்தனான்" என்று பயப்படாம பரவலா கொழுத்திப்போட்ட வெடிதான் எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைத்தது.அடுத்த தாக ஹெல்த் சென்ரரில் டாக்டருக்கு சேர்ட்டை கழட்டி பாடி காட்டிவிட்டு திரும்பிய சேகர நோக்கி "என்ன இது உடம்பாடா இது?,எதோ அரிஞ்ச பலகை மாதிரி இருக்கு? நான் இப்ப கழட்டுவன் சேர்ட்ட,நீ நிண்டு பார்த்துட்டு போ" எண்டு சசி சொல்ல சேகர் தன்ர பாடிய இப்பிடி கேவலப்படுத்திட்டானே எண்ட கடுப்பில மேட்டர எல்லாருக்கும் போட "எவனோ சசியாம்? யார்ரா அவன்?" எண்டு தெரியாதவர்கள கேட்க வைத்தது.



ஒரு நாள் டெக்ஸ்டைல் ரிப்பார்ட்மெண்ட் விரிவுரையில எழுந்தமானமா கிறுக்கிக்கொண்டு போன லெக்சரர் ரெஸ்ட்ரியூப் ஒண்டிண்ட படத்த வரைய அந்தக் கிறுக்கல்கள ஒன்று விடாம பிரதிபண்ணிக்கொண்டிருந்த சசி உடனே பென்சில எடுத்து 2 சமாந்தரக்கோடுகளை வரைந்து,பரிசோதனைக்குழாயின் வளைந்த அடிப்பக்கம் வரைய வெண்டு வட்டவாரிய எடுக்க பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கெல்லாம் வயிற்றில புளிய கரைச்ச மாதிரி இருந்தது.நல்ல ஜிபிஏ எடுத்தா கெமிக்கல் டிப்பார்ட்ட்மெண்டுக்கு ஏத்தி வுடுவாங்களாம் எண்டு யாரோ போட்ட வெடிய நம்பி லிfகோ லிக்சனரி, மாக்கர் பேனைகள்,மார்க் பண்ணி கலரா மாறின நோட்ஸூகள்,என டேஞ்சரில் சசி போட்ட "காட்டுக்குத்து"(பெயருக்கான காப்புரிமை சிறிஸ்காந்திடம் இருந்து பெறப்பட்டது) டேஞ்சர் சசி,கெமிக்கல் சசி என்ற பெயர்களை சசிக்கு வாங்கித்தந்ததே தவிர கெமிக்கல் கனவு சாத்தியப்படவில்லை.சற்றும் மனம் தளராத சசி "நமக்கு கெமிக்கல் டிப்பார்ட் மெண்ட் கிடைக்காட்டி என்ன நமக்கு வரப்போறவள் நல்ல டிப்பார்ட் மெண்டா இருந்தா காணும்" எண்டு போட்ட பிளான் மொறட்டுவ வராலாற்றில் பொன் எழுத்துக்களால் பதியப்பட வேண்டியது.ஆனால் சசியின் தெரிவுதான் பிசகி விட்டது.எல்லோர் மனதிலும் எழுந்த கேள்விகள் இவைகள் தான்...............
சசிக்கு ஏன் இந்த கோணல்ப்புத்தி?/சசிக்கு கண்பார்வை குறைபாடா?/சசி பெண்களையே பார்த்ததில்லையா?/சசிக்கு விசரா?.......
இந்த நிலையில் இவற்றுக்கெல்லாம் பதில் தேட "பிளாஸ் பேக்"கில 2 ஆண்டுகள் பின்னோக்கி போக வேண்டியது அவசியமாகிறது.

வன்னிவளநாடும் கைலாயவன்னியனும்.



நிரம்பியோடும் நீர்நிலைகள்,வயல்களில் நிறைந்து பாரந்தாங்காமல் வளைந்து நிற்கின்ற நெற்கதிர்கள் , கொழுத்த ஜப்பான்,திலாப்பியா மீனினங்கள் நிறைந்த பாசன வாய்க்கால்களும் அவற்றை உண்ணும் விருப்புடன் கூடிய பறவைகள் கூட்டங்கள்,மதகு மேல்குந்தி கூட்டம் போடும் வயசுப்பெடியங்கள்,காற்றில் பறக்கவிடாமல் ஆடைகளை அழுத்திப்பிடித்தபடி சைக்கிளோடும் கன்னிப்பெண்கள்,ரொட்டிக்கடை வாசலில் பத்திரிகையோடு கூட்டம் போடும் பெரிசுகள்,பாக்குரலை கடந்த காலத்தை அசை போட்டபடி இடித்துக்கொண்டிருக்கும் கிழவிகள் என விசுவமடுவின் சகல அங்கங்களும் அறிந்தவன் சசி."பிள்ளயெண்டா அவன மாதிரி இருக்கோணும்" எண்டு மாற்றாக்கள சொல்ல வச்சது சசி உடையார்கட்டில் டிசைன் பண்னின ரின் மீன் தொழிற்சாலை.மண்ணெண்னை ரம் தகரத்தில் ரின் செய்து யப்பான் மீனுகள பிடிச்சு துண்ணு துண்டா வெட்டி கடைசியா "யூ" வளைவில போய் டின் அலுங்காம குலுங்காம விழுகிற மாதிரி செய்த இயந்திரம் நியூட்டனின் கண்டு பிடிப்புக்களுக்கு இணையானது ஆகும்.அதுக்கு பிறகு முத்தையன் கட்டுகுளக்கட்டால தன்ர பாட்டில பாய்ஞ்சுகொண்டிருந்த தண்ணிக்கு குறுக்கால காத்தாடி வச்சு கறண்ட் எடுத்து பல சிறார்களின் கல்விக்கு ஒளி ஏற்றியமை சசியின் மனிதாபிமானத்துக்கு எடுத்துக்கு காட்டாகும்.இளம் பிராயத்தின் பெரும் பகுதியை சித்தப்பாவின் பட்டறையில் கழித்த இவனுக்கு இயந்திரத்தின் பெல்ட்டோடு வேலை செய்வது மிகப்பிடித்தமானதாக இருந்தது.அத்தோடு மயூரன் அண்ணா பண்டாரவன்னியன் நாடகத்துக்கு வாள் பிடிக்கும் வேளைகளில் எல்லாம் கைலாய வன்னியனாக வால் பிடிக்கும் வேடம் சசிக்கே வந்துசேர நடிப்பில் பின்னி எடுக்கும் தருணங்களும் சேர்ந்து கொள்ளும்.

மேளத்தில் துயிலும் அழகு கண்டு மோகம் கொண்ட மோகினி.



வனப்பு மிக்க வாலிபன் சசி தன் ஓய்வு நேரத்தில் மிருதங்கம் பயின்று வித்துவானாக வரும் வரை எல்லாம் நன்றாகத்தானிருந்தது.சசியின் துடிப்பைக்கண்ட பரத நாட்டிய ரீச்சர் தனது வகுப்புக்கு மிருதங்கம் வாசிக்கக்கூப்பிட்டு விபரீதத்துக்கு வித்திட்டார்.கன்னிகள் ஆட கண்ணன் போல சசி கொட்டில் நடுவில் இருந்து நல்ல பிள்ளையாட்டம் மிருதங்கம் வாசிச்சு விட்டு தன்ர பாட்டில திரும்பி விடுவான்.இந்த அடக்கம்,அழகு,அறிவு,திறமை எல்லாம் அதில் ஒருத்திக்கு பிடித்துப்போயிற்று.ஒரு நாள் வகுப்புக்கு மேளத்தோடு வேளைக்கே வந்த சசி ஒருத்தரும் வரக்காணாது சற்றே மிருதங்கத்தை தலையணையாக்கி கண்னயர தலை மாட்டில் சற்று நேரத்தில் "சல்" "சல்" என்று கொலுசுச்சத்தம்.விழித்துப்பார்த்தால் அவள்...புன்முறுவல் பூத்தபடி தரையை லேசாக தட்டியபடி இருந்தாள்.




கண்டதும் காதல்




இயந்திரம்,பெல்ட்,ரின் மீன்,கறண்ட் என வறண்டு போன சசியின் மனதுக்குள் குளிர்மையான அருவி போல அவள் புகுந்தாள்.தூக்கமில்லா இரவுகள்,கண்ணாடி முன் போன பகல்ப்பொழுதுகள் என வளர்ந்த அந்தக்காதல்ச்செடி கனகாலம் நீடிக்காது நாயகியின் வெளிநாட்டுப்பயணத்தோடு கருகிப்போனது.ஒருவருடம் தாடி வளர்த்து வாணரம் ஆயிரம் குடுக்கார சூரியா போல திரிஞ்ச சசி போனால் போகட்டும் போடா எண்டு பாடிவிட்டு கடைசி 3 மாசம் படிச்சு வந்ததுதான் புடவைபொறியியல்ப்பீடம்,இல்லாட்டி இருக்கவேண்டிய இடமே வேற...இந்த பிளாஸ் பேக் ஒரு இரவு நேர ஏ_9 வீதிப்பயணத்தில் முதலாவது செமிஸ்டர் நேரத்தில் எனக்கு சசி சொன்னது.முதல் சொன்ன லவ் பெயிலியர் கதையிலும் கடைசி வரியையே சசி முதன்மையால் எனக்கு சொல்ல வந்ததாய்ப்பட்டது எனக்கு."சரி இந்த பிளாஸ் பேக்குக்கும் கம்பஸ் கதைக்கு என்ன தொடர்பு என்ன?" என நீங்கள் முணுமுணுப்பதுக்கு சசி அப்போ சொன்னதை அப்படியே இங்கே எழுதிவிடுகிறேன்.


"இவள நான் பார்த்தது என்னத்துக்கெண்டா,அந்த பீலிங்ஸ்ச மறக்கோணும் எண்டதுக்காண்டி...
அதோட அவளும் இவள மாதிரி சரியான கட்டைதான்.வடிவு எண்டதில அவளோட இவள ஒப்பிடேலாது.ஆனா கொஞ்ச சாயல் இருக்குத்தான்.இனிமேலாவது சும்மா என்ர லவ்வ கொச்சைப்படுத்தாம இரு என்ன?..."


கண்ணியும் சிக்காத கன்னியும்(?????)

இதற்க்குப்பிறகு சசி அந்த தேவதையை(????) மடக்க போட்ட பிளானுகள் ஏராளம்.5ரூபா குத்தியை போட்டு பல்கலை வளாக பொது தொலைபேசியால் மிஸ்ட்கால் அடித்து மறுமுனையில் அழுத்தமுதல் றிசீவரை வைத்து மீள 5 ரூபாயை எடுத்து அடுத்த நாள் மிஸ்ட்கோலுக்கு பக்குவப்படுத்துவது,போனுக்கோ/ஐபொட்டுக்கோ தொடுக்கப்படாத வெறு இயர் போனை காதில் மாட்டிக்கொண்டு திரிவது,பிரபுதேவா ஜீன்ஸிலிருந்து டெனிமுக்கு மாறினது,தமிழோடான ஆங்கில வார்த்தைக்கலப்பை கூட்டியது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.எல்லாத்தையும் எழுதப்போனால் புளொக் ஸ்ரக் ஆகிவிடும்.சசி எத்தனை பிளானை போட்டாலும் அவை எல்லாம் கட்சியா வடிவேலு தாலி கட்ட வெளிக்கிட்ட கதயாத்தான் போச்சு.(அந்த பிகர் ரீமா போல இருக்கும் என நினைப்பவர்கள் உங்கள் செருப்பை கழட்டி உங்கள் மூஞ்சியில் 3 முறை அடித்துக்கொள்ளவும்.)




பிணம் கூட சிரிக்கும் இவன் கதை கேட்டு.


சசி பற்றி ஒரு பதிவில் எழுதுவது என்பது சமுத்திரத்தை இறைத்து வற்ற வைப்பது போலவாகும்.சசி போட்ட வெடிகளில் சில எம் காதுகளில் கேட்டன.ஆனால் கேட்க்காமல் போன வெடிகள் தான் பல.நீங்கள் மனது வைத்தால் சசி தனிப்பட்ட முறையில் உங்களுக்கு கொளுத்திப்போட்ட வெடிகளை ஒவ்வொருவரும் இங்கே பதிவாக்க முடியும்.அவை ஆவணப்படுத்துவது அவசியமாகும்.ஏனேன்றால் சசியின் வெடிகள் சில நூற்றாண்டுகள் தாண்டிப்பேசப்படவேண்டியவை ஆகும்.
சசியின் நடிப்பாற்றலையும் அழகையும் கண்டு இயக்குனர் பவான் அவர்கள் "கபோதி" திரைப்படத்தில் நாயகனாக்கி இருந்தார்.பெண்வேடத்தில் வந்து கலக்கிய சசி உண்மையில் அந்த "தேவதை"யை விட ஆயிரம் மடங்கு அழகாக இருந்தார்.பவான் "கபோதி" பட அனுபவங்களை,காணொளியை இங்கே பதிவிடுவார் என எதிர்பார்க்கிறேன்.கபோதி பட திறமை கண்டு சசியிடம் கஸ்டப்பட்டு கால்சீட் எடுத்து காணொளிபப்படுத்தி முற்றுப்பெற வாய்ப்புக்கூடாத அவதாரம் படத்துக்கான அந்த காட்சியை இங்கே இணைத்துள்ளேன்.


3 comments:

Rama said...

சுனாமி டைமில எல்லா சனமும் அல்லோல பட நம்மட சசி தனது 7ம் அறிவை பயன்படுத்தி ஏதோ டின் ஃபிஷ் செய்தவன் எண்டு காத்து வாக்கில கேள்வி பட்டனான். ஆணால் இந்த ஹெமி இக்கு பின்னால இவ்வளவு விசயம் இருக்கு என்டால் யோசிகதாண் வேண்டும். இன்டியாவுக்க்கு ஒரு அப்துல் கலாம் மாதிரி வன்னிக்கு ஒரு சசி என தோனுது...........

Kaipillai said...

அந்த ரின் மீன் பக்ரிய உடயார் கட்ட பிடிச்சுப்போட்டு மகே அம்மே ஆட்க்கள் ரீவியில காட்டினவையள்.பார்க்கேலயோ?.ஆனா அந்த நீர்மின்சார நிலையம் இன்னும் சிக்கேல.

Rajeeth said...

அதே A9 பயணமொன்றில் எனக்கு நாடி நரம்பெல்லாம் விறைக்க வைத்த சம்பவம்
ஒரு முறை தமிழீழ தலைநகரத்தில் சசி நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்த சமயம்....சாரமும் முண்டா பனியனும் தலையில் முண்டாசும் கட்டிக்கொண்டு ஒரு உருவம் அங்குமிங்கும் உலாவிக்கொண்டிருந்ததாம்.யாருக்குமே அடையாளம் தெரியாத அவரை "நமது தேசிய தலைவர் தான் அது" என்று 100 அடி தூரத்துக்கப்பால் நின்றுகொண்டே அடையாளம் கண்டுகொண்டவன் தான் சசி.