"எழுதாடா நாயே எழுதடா பேயே" என்று என்னை கடந்த ஒரு மாதமாக ஒவ்வொரு நாளும் வதைத்த சுகாவுக்கு முதற்கண் வணக்கங்களை தெரிவித்துக்கொண்டு எம் ட்ரிங்கியைப்ற்றி ஒரு பதிவை தொடர்கிறன்…


மனதில் நின்றவர்கள்-04-ட்ரிங்கோ உமா


ட்ரிங்கோ உமா , தாடிக்காரனுடைய உமா , மீசை உமா என பல பெயரால் அழைக்கப்படும் இவன் நான் கம்பஸ் வாழ்வில் கண்டவர்களில் ஒரு போதும் மறக்க முடியாதவன். அவனைப்பற்றி இந்த பதிவிடுவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி… அவன் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் இங்கு தருகிறேன்… உமா எனக்கு அறிமுகமாகியது நல்ல ஞாபகம் இருக்கிறது … இரண்டாம் செமஸ்டர் றிசல்டினை எமக்கு அறிவித்தது மது . அப்போது நாமெல்லாரும் யாழ்ப்பாணத்தில் இருந்தோம்.. எங்கோ திருநெல்வேலியில் அவனுடைய சொந்தக்கார வீட்டில் கடலை போட்டுக்கொண்டிருந்தபோது கம்பஸிலிருந்த யாரினூடாகவோ றிசல்ட் கேட்டுச் சொன்னான் மதுவதனதன்… எனக்கு றிசல்ட் பெரிதாக பிரச்சனை இல்லாவிட்டாலும் மோட்டுக்குத்து குத்திய மட்டீரியல் A தான் வந்திருந்தது… அதுதான் அப்செட்… ஆக றிகரக்சன் போடபோவதாக பலநாட்களின் பின்பு யாரிடமோ கதைத்த போது யாரோ உமாக்காந்தன் ஆமிக்காரனுடைய பாடத்துக்கு றிகரக்சன் போட்டதாக தெரிவித்திருந்தார்கள்;.. ஆகவே கம்பஸ் வந்தவுடன் உமாகாந்தனை தேடிக்கண்டு பிடித்து அவனிடம் கதையை விட்டேன்.. சிம்பிளாகச் சொன்னான்… நான் A க்கு செய்தனான். B+ போட்டுட்டான் எண்டு... நானும் சரி என்று ப்ரொசீட்சரை அறிந்து கொண்டு விட்டு விட்டேன்…இப்படித்தான் அறிமுகம் (பின்பு அவனுக்கு A வந்து விட்டிருந்ததாக பைனலியரில் சொன்னான்...)


அதன் பின்பு இரண்டாம் வருடம்… இலத்திரனியல் என்டர் பண்ணிவிட்ட படியால் நான் என்னுடைய படிப்பின் இறுக்கத்தை தளர்த்திக் கொண்டு விட்டிருந்தேன்… இனிமேலும் மண்டையை உடைக்க முடியாது என்று நினைத்து இசை , விழா ஒழுங்கமைப்புகள் , சினிமா பார்ப்பது என்று பிசியாகி விட்டேன்.. ஏதோ முதலாவது செமஸ்டரும் முடிந்து றிசல்ட் வந்தது … உமா பட்டையைக் கிளப்பியிருந்தான்.. தமிழரில் முதல் GPA .. இப்படி முதல் செமஸ்டரில் திரும்பிப்பார்க்க வைத்த உமா கடைசி வரையும் படிப்பில் ஹீரோதான்…


அதிலும் கடைசியடி நெருப்படி… எல்லாப் பெரிய மண்டைகளும் பயந்த ஒரு பைனல் இயர் புரோஜேக்டை கடைசியாக ட்ரிங்கோவில் கோயிலில் எங்கேயோ திருவிழாவில் நின்று விட்டு வந்த படியால் உமாவுக்கு தெரிவு செய்ய வேண்டியிருந்தது.. எல்லாரும் முதல் ப்ரோட்டோ டைப் முடித்திருந்தபோது அவன் ஒன்றுமே செய்யாமல் ப்ரசென்டேசன் செய்தான்… கடைசி ஒரு மாதம் மெனக்கட்டிருப்பானோ தெரியேல்ல .. அவனுடைய ப்ரொஜெக்டை ஒரு வெள்ளைக்காரன் அரை மணிநேரம் பாத்துக்கொண்டிருந்தானாம்… பிறகென்ன அதுக்கும் A+ தான்…




இனி காமெடிகளுக்கு வருவோம்… இவரும் சினிமாப்பைத்தியம்… கம்ப்யூட்டர் ஆக்கிரெக்சர் எக்சாம் மிற்கு முதல்நாள் ஆதியைப்பார்த்துவிட்டு இரவு கொடாவில் சிறியைக்கட்டிப்பித்து சொல்லித்தாடா சொல்லித்தாடா என்று அழுது கொண்டிருந்தேன்.. அடுத்த நாள் எக்சாம் நன்கு கடித்து விட்டது… சே சினிமாவுக்கு போன படியால்தான் இப்படியானது என்று என்னை நானே கடிந்து கொண்ட வேளை உமா புன்னகையுடன் வந்து நின்றான்…
நான் : எப்பிடி மச்சான் எக்சாம்?
உமா: பரவால்லடா! ஏ வரும் (இது உமாவின் ஸ்டைல் )
நான் : அடப்பாவி! எனக்கு கையிலதான்…
உமா: டேய் சும்மாவிடாத! நேற்று எனக்கு முன்னுக்கு நிண்டாய் கியூவில..
நான் :ஙே?
உமா: உன்னை அங்க கொன்கோட்டில நேற்று முன்னால கண்டன் … பிறகு கதை விடுறா… படிக்காம போனனீயெண்டு அவிக்கப்போறியா போறியா எனக்கிப்ப ?



அவனுக்கு ஏ ப்ளஸ் வந்திருந்தது அந்த பாடத்துக்கு..



உதே காமெடி சிவாஜி நேரம் திருப்பி நடந்தது… நான் 4.30 மணிக்கு (காலமை) பஸ் பிடிச்சு 5 மணிக்கு கொன் கோட் வாசலில நிக்கிறன் ஒருவனையும் காணேல்ல… எனக்கு பெரிய சந்தோசம்… சிவாஜி பெஸ்ட் சோ எப்பிடியாவது பாத்திடலாமெண்டு… ஆனா எனக்கு பிறகு வந்த ஒருத்தன் கதைவை தாண்டி உள்ள பாய்ஞ்சான்;.. எனக்கு கடுப்பாகி நானும் உள்ள பாய்ஞ்சா உள்ள பத்து பதினைஞ்சு பேர் இருக்கிறாங்கள். கிட்டப்போனா ஒருத்தன் கூப்பிடுறான்… கூர்ந்து பாத்தா நம்ம உமா… மயங்கி விழாத குறை நான்…



அடுத்தது எப்ப படிக்கிறான் எண்டு கண்டு பிடிக்க முடியாது.. நானும் கவனிச்சுப்பாத்துட்டு ஏலாதெண்டு விட்டிட்டன்.. ஆனா அவன் செய்த உதவிகளை ஆயுளுக்கும் மறக்கமாட்டன்.. சில செமிஸ்டர்கள் ஓவரா விளையாடி கடைசி நேரம் உமா முருகதாஸ் போன்றவர்களின் குப்பியிலதான் பிழைப்பே ஓடியது… உமாவிடம் போட்டியற்ற தன்மை காணப்பட்டமை என் போன்றவர்களுக்குதான் உதவியது..


பெடியர் வீணைவாசிச்சு செமையா வாங்கிக்கட்டுவார்… ஆனா பிசாசு ஒருக்காலும் விட்டுக்கொடுக்கமாட்டான்.. தான் பிடிச்ச முயலுக்கு மூண்டுகால்தான்.. அறிவகம் அலுப்பகம் எல்லாம் போய் வறுக்கும் … பாக்கிற எங்களுக்குத்தான் வேர்க்கும்…


அதோட போய்ஸ் படத்தில வாற செந்தில் மாதிரி எங்கெங்க அன்னதானம் போடுவாங்க எப்பப்ப பரீயா படம் போடுவாங்க எல்லாம் பெடிக்கு அத்துப்படி… டாண் எண்டு போய் நிண்டுடுவான் சரியான டைமுக்கு.. என்ககெண்டால் இவனென்னடா இப்பிடியிருக்கான் எண்டு யொசினை… ஆனா அதுவும் அவனுடைய ஒரு அட்ராக்சன் பொயிண்ட்தான்… அதோட காச கண்டபடி செலவழிக்க மாட்டான்… உதாரணத்துக்கு ஒண்டு சொல்றேனே… இவனுடைய 3315 போனை ஒருத்தன் சுட்டுட்டான்.. அதில இருந்தது ஒரு நாசமறுந்த ஹச் சிம்… அதுவும் அதில தெரியாத நம்பரிலருந்து கோல் வந்தா எடுக்கவே மாட்டான்.. ஏனென்றால் அப்போ இன்கமிங் காசு… ( ஒரு அந்தர அவசரத்துக்கு கூடி எடுக்கமாட்டான் கொடுமை!) இந்த வள்ளலில அந்த போனை வாங்கிறதுக்காக கள்ளன் கூட போனூடாக பேரம் பேசி 1000 இல முடிச்சு பிறகு பேர்சில 700வை மட்டும்கொண்டு போய் அவனை பிரிட்ஜ் இல சந்திச்சு 700 க்கு மடக்கி போனை வாங்கி வீடு திரும்பும்Nபுhது அவனும் கள்ளனும் ப்ரெண்ட்ஸ்.. நீங்க எடுப்பங்களா இப்பிடி ஒரு றிஸ்க்? என்னால செத்தாலும் முடியாதப்பா!


பெண்கள் பக்கமே இவன் தலை வைத்து படுத்ததில்லை ஆனால் எல்லாரும் ஒரு பஸ் பிரயாணத்தில் தோளில் யாரோ தூங்கியதாகவும் அதை கொன்சால் பார்த்ததாகவும் சொல்லி வறுப்பார்கள்… பெடி சின்ன ஸ்மைலோட போயிடும்…


நாங்கள் கப்பலில யாழ் போனபோது ஒரு கவனிப்பு கவனிச்சான் ட்ரிங்கோவில வச்சு … ஒருத்தனும் சொன்னா நம்ப மாட்டான்… சினிமாவில வாறமாதிரி கோழி அடிச்சு குழம்பு வைச்சு கொலை வெறி கவனிப்பு… மூச்சு முட்டிப்போச்சு எங்களுக்கு… கப்பலில சிவானுஜன் அஞ்சு நிமிசத்துக்கொருக்க உதைப்பற்றிதான் கதை… காசு சேர்க்கிற புத்தியுள்ளவன் கஞ்சனாயிருப்பான் எண்ட கொள்கை அதோட புஸ் ஆகிடிச்சு…


மாப்பளையிண்ட பிசினஸ் புத்தி இவருக்கு ஒவவொரு முறையும் வினையிலதான் முடியுறது… ஏதொ கோல்ட் கொய்ன் பிரமிட்டில சேர்ந்து காசு விட்டவன் (என்னையும் சேர்க்கப்பாத்தவன் நல்லகாலம் நான் சேரேல்ல) திருந்தாம பிறகும் சீகல்லில போட்டு நாமம் வாங்கினான்… இப்ப என்னவேலையில இருக்கானோ?



இவனைப் பார்ட்டியளுக்கு கூப்பிn எல்லாருக்கும் பயம்… காரணம் இவனுடைய அசகாய சாப்பாட்டு ராமானுஜம்… பாக்கிற எனக்கே தொண்டைய அடைக்கும் ..இவனோ ஒருத்தரையும் சட்டை பண்ணாமல் தன்பாட்டுக்கு உள்ளே தள்ளிக்கொண்டிருப்பான்… ஆனால் ஒரே நிம்மதி என்னவென்றால் மச்சான் முட்டை ட்டும்தான் அசைவமாக உண்பார்…ஹிஹி! அதுக்காக மிக்சர் ப்க்கட் பிஸ்கட் பக்கட் குளிர்பானம் ஏதாவது இவன் கண்ணில் பட்டால் .... பிறகென்ன கள்ளக்கடத்தல்தான்.. ரூமில போனா கிடக்கும்…


ரஜீ ஒரு முறை இவனுடைய கிடங்கு றூமைப் நக்கலடிப்பதாக கூறி ஓட்டைக்கதிரையை எல்லாம் கதையில் கொண்டுவந்து அடித்த காமெடி இப்போது நினைத்தாலும் குடல் பிய்யும் வரை சிரிக்கலாம்… எல்லாருக்கும் ஞாபகம் இருக்குமெண்டு நினைக்கிறேன் … மறந்து விடாதீர்கள்.. உமாவின் மகனுக்கு சொல்லவேண்டும்.. ஹாஹாஹா!



ஒரு முறை இவன் றூமுக்கு சென்றபோது பயோட்டினெக்ஸ் ஈ மாத்திரை உறைகள் வெளியே கிடந்தன…எதுக்கடா இது பாவிக்கிறது எண்டு கேட்டன்.. மயிர் நல்லா வளரும் மச்சான் எண்டான்.. அந்த நேரம் எனக்கு மீசை முளைக்கிற ஐடியாவிலயே இருக்கேல்ல இவனுக்கோ இடும்பன் மீசை… நானும் ஏதோ அவனுடைய மீசையிண்ட மந்திரத்தை கண்டு பிடிச்சமாதிரி அறாவிலைக்கு அந்த மருந்தில ஒரு சீட் வாங்கிக்கொண்டு வந்து ஒளிச்சு வைச்சு குடிச்சன்.. ஆனா அதை அந்த நாசமாப்போன குட்டி உமா கண்டுபிடிச்சு வெளில சொல்லி பரிசு கெடுத்திப்போட்டான்.. ஹாஹாஹா!


றஜீ எக்சாம் மூட்டங்களில இவனுடைய றூம் வாசலில வந்து நிண்டு சொல்லித்தருமாறு கேட்பான்.. இவனோ இன்னும் படிக்கலடா என்று சொல்லுவான்… அவ்வளவுதான் அந்த வாசிலில உருண்டு புரண்டு உலகத்தில இல்லாத நல்ல வார்த்தையெல்லாம் பாவிச்சு கத்திக்குழறி பிறகு ஓய்ஞ்சுபோய் “என்ட உமா கூட என்னை கைவிட்டிட்டான்” எண்டு சின்னப்பிள்ளை மாதிரி றஜீ விசும்பும்… அதுக்கு பிறகு உமா அவனை கூப்பிட்டு குப்பி டைம்டேபிள் குடுக்கும் … இந்தக்காமெடியை ஒவ்வொரு செமஸ்டரும் பார்க்கலாம் …


இப்படி சொல்லப்போனா சொல்லிக்கொண்டே போகலாம் … ஆகையால நிறுத்துறன்… மொத்தத்துல உமாவிண்ட கொள்கைகள் be simple ,ஓசியில கிடைச்சா ஒயிலையும் குடி , கல்வியில எவனுக்கும் உதவு , ஊரையும் உறவையும் மறக்காத ..

எல்லாமே நல்லதுதான்போல கிடக்கு இல்லையா?


நான் இவனைப்பற்றி எழுதக்காரணம் … இவனுடனான தொடர்பு இப்போ முற்றுமே இல்லை.. ஞாபகங்கள் சிறிது சிறிதாக மறைந்து வருகிறது… அவசரமாக பதிந்து வைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கம்தான்.. குறையிருந்தால் சுட்டிக்காட்டவும்… நன்றி …

Bullet

6 comments:

Kaipillai said...

//ஒரு பஸ் பிரயாணத்தில் தோளில் யாரோ தூங்கியதாகவும் அதை கொன்சால் பார்த்ததாகவும் சொல்லி வறுப்பார்கள்… பெடி சின்ன ஸ்மைலோட போயிடும்… //
எனக்கும் இண்டைக்கும் அவண்ட வாயால உண்மைய அறியோணும் எண்ட ஆவல் இருக்கு.ஏனெண்டா கொன்சால தலைகீழா கட்டித்தூக்கி அடிச்சாலும் பொய் சொல்ல மாட்டான்.அவன் சொன்ன கதை இது.பல தடவை பல பேர் கேட்டுப்பார்த்திட்டம்.பதில் சொல்லவே இல்லை.இப்ப புளொக்கில இருக்கிறான்.இத வாசிச்சிருந்தா இந்த ரகசியத்த போட்டு உடைப்பான் எண்டு நினைக்கிறன்.ஏணெண்டா மற்றவன் என்ன சொல்லுவான் எண்டு கருதி ஒளிச்சு வாழ்ற வயசுகள நம்மில பலர் கடந்திட்டம் எண்டு நினைக்கிறன்.(ஆனா இப்பவும் மகாத்மா எழுத்தில் மகாத்மா வேடம் போடுறவங்கள் இருகிறாங்கள்.)

Kaipillai said...

கட்டுப்பெத்தை பாலத்தடியில் நடந்த அந்த சுவாரசியமான உரையாடலின் ஒரு பகுதி.
கள்ளன் - "ஹரி ஹரி மல்லி 700 தண்டக்கோ"
உமா-ஸ்துதி அய்யே இந்தாங்கோ.
கள்ளன் -(தமிழாக்கம்)- மற்றவன் எண்டா தந்திருக்க மாட்டான்.நான் தந்திருகிறன் எண்டா "நான் எவ்வளவு நல்லவன் எண்டத யோசிச்சு பாரும் மல்லி"
உமா- " சேர் உங்களுக்கு நல்ல மனசு சேர்.எனக்காண்டி இவ்வளவு செய்ததுக்கு தாங்ஸ்"

-போனை மீட்ட பின் உமா செப்பியவற்றின் நினைவுப்பதிவுகளில் இருந்து.

புல்லட் said...

இன்னொன்றையும் எழுதவேண்டுமென்று நினைத்து விட்டு மறந்து விடடன்..

உமா ஒரு சின்ன விடயத்துக்கு அடிக்டட் ஆகியிருந்தான்..
இதை எப்படியாவது நாங்கள் வைத்த ப்ரெஸ்சர் நைட்டில்வைத்து தாக்க வேண்டுமென்று நினைத்த அப்பாஸ் உமா வாய்தவறி ஒரு முறை விட்ட ஸ்டேட்மென்டை பப்ளிக்கில் பகிரங்கப்படுத்துகிறான்..

அனைவரும் விக்கித்து நிற்க அவன் சிம்பிளாகச் சொன்னான்
மீன் பிடிக்கிறதெண்டு கடலுக்க இறங்கினாப்பிறகு சின்ன மீன் பெரிய மீன் எண்டு பார்க்க முடியுமா?

எனக்குப் பொறி கலங்கிவிட்டது..
இதுவும் ஞாபகம் வைத்திருக்க வேண்டிய விடயம்.

Anonymous said...

Hi all,
Nice blogging.
But,
Is this 2003 batch official blog or Suganthamaran's individual blog?
If this is 2003 batch blog, Thinesh can you please invite all friends to join with this blog

சுழியோடி said...

அனானியாக வந்த இந்த தன்னை வெளிக்காட்ட விரும்பா கூச்ச சுபாவம் கொண்ட புள்ளப்பூச்சி விருப்பப்படியே தினேஸ் எல்லோரையும் அழைப்பார் என்று நினைகிறேன்.

கார்த்தி said...

Super!!