.


டைரக்டர் டயறி


தினக்குறிப்பு எழுதுவது எனக்கு பிடித்தமானது.கடந்து போன நினைவுகளை மீட்க மிக வலுவான சாதனம் அது.மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் நண்பர்கள் குழாம் கிடைத்த பின்பாடு கடக்கும் ஒவ்வொரு நாட்களும் சந்தோசமாகவே போயின. ஒவ்வொரு நாளும் படுக்கைக்கு போக முன்னர் அரை மணித்தியாலங்கள் வரை எழுத செலவிடுவேன்.காலமை எழும்பினது,லெக்சர் மட்டம் போட்டது,ஸ்டோன் பெஞ்சில் இருந்து பிகர் பார்த்தது,யார் யாருக்கு ஆப்பிட்டது?,யார் யாருக்கு குப்பி எடுத்தது?,எவனுக்கு எவள் செட் ஆனது போண்ற முக்கிய விடயங்கள் முதல்க்கொண்டு ரவிகடை கொத்து வரையான சாதாரண விடயங்கள் வரை பதிவேன்.(இந்தச்சொல்லை வைத்துக்கொண்டு "இவனும் அந்த பதியுற சங்க ஆள் சந்திப்புக்கெல்லாம் போவான் போல" எண்டு பயப்பட வேண்டாம்).சுய தணிக்கை,பூசி மறைப்பு போண்ற வேடமிடவேண்டிய தேவைகள் தினக்குறிப்பு எழுதும் போது இருப்பதில்லை ஆதலால் மனதில் ஓடுவது எல்லாமே எழுத்துக்களாகின.வருடங்கள் கழிந்து அமைதியான இரவுப்பொழுதுகளிலே பல ஆயிரம் மைல்களுக்கப்பாலிருந்து அந்தப்பக்கங்களை தட்டும் போது முழுக்காட்சியும் மனதுள் விரியும்.எந்த ஒருகவலையும்,பொறுப்புக்களும் இல்லாமல் இருந்த அந்த நாட்கள் மீட்க்கப்படும் போது ஒவ்வொன்றும் ஒவ்வொரு திரைப்படங்களாய் நீண்டு இனம் பிரியாத ஒரு மகிழ்ச்சியை,இழையோடும் சோகத்தை தந்து போகின்றன.

கனாக்காலத்துக்காக ஏதாவது எழுதலாம் என்று நினைத்தால் ஒன்றுமே இப்போது தோன்றுவதில்லை.அப்படி ஏதாவது மினெக்கெட்டு எழுதினாலும் ஒருத்தரும் கருத்துக்களை பகிர்வதில்லை.ஒரு பத்துப்பேர் படிப்பதற்க்காக எழுதுவதை விட கொடுமையானது ஒன்றுமில்லை.சரி எல்லாரும் நம்மை போல வெட்டிப்பயலா நேரமில்லாம இருக்கிறாங்கள் போல எண்டு மனதை தேற்றினலும் ஒவ்வொருத்தனும் முகப்புத்தகத்தில பெண்களுக்கு வாளி வைத்து,பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து,அவை அனுப்பிற பாடலுகளில விருப்பப்பட்டு,கவிதையா பின்னூட்டமிட்டு போடுற கும்மாளம் மனதை பற்றி எரிய வைக்குது.கன காலமா புளொக்கில எழுதிவாற ஒரு நண்பர் கேட்டார்.....

"டேய் அதில 30 பேருக்கு கிட்ட இருக்கிறாங்களே.அதில ஒரு 5 பேருக்கு கூட பின்னூட்டமிட நேரமில்லையா?,என்னதான் 4 வருசம் ஒண்டா படிச்சனியளோ? எண்டு.

நான் அவருக்கு காட்டமா சொன்னேன்....
"4 வருசமா ஒண்டா இருந்து நம்மட பெடியள பற்றி நல்லா நான் புரிஞ்சு வைச்சிருக்கிறன்.அவங்கள் ஒரு இடத்தில எழுதோணும் எண்டா அங்க பெண்வாசனை அடிக்கோணும்,இல்லாட்டி பப்ளிசிட்டி கிடைக்கோணும்.இது ரண்டும் இல்லாமல் எப்படி வருவாங்கள்?, அதோட நம்மட சனம் வேண்டுதல் பலிக்க தேரிழுக்கிறதில மட்டும் தானே ஒற்றுமையா இருக்கிறதுகள்.பொது விடயம் எண்டா குழிபறிப்பும் புறக்கணிப்பும் தானே செய்யுறதுகள்? மரபணுவில படிஞ்சு போன ஒரு குணவியல்பை வைச்சுக்கொண்டு நம்ம மொறா 2003 மட்ட பெடிபெட்டையள்ல குறை சொல்ல முடியாது தானேடா?"

நண்பர் எனது கருத்தை ஆமோதித்து தலையை ஆட்டுகிறார்.நான் வீடு வந்து அந்த கனாக்காலத்துக்கு காலப்பயணம் செய்ய விரும்பி பழைய தினக்குறிப்பு ஒன்றில் மூழ்குகிறேன்.



2007 ஆம் ஆண்டு ஆனி மாதம் 20ஆம் திகதி.புதன் கிழமை.

அறிவகக்காரர் படம் எடுக்கிறாங்கள் எண்டதால 7ஜி பிளஸ் தலமையகத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டிருந்தது."மச்சான் ஓவரா சவுண்டு குடுக்குறாங்கள் விடப்படாது" எண்டு அச்சு ஒரே பிடியா நிண்டான்."போய்ஸ் படத்த உல்டா பண்ணி எடுப்பமடா,அதில சித்தார்த் மாதிரி இதில நான்,எப்பிடி?" என்க ஓபி கையில கிடைச்ச எதாலயோ அச்சுவுக்கு எறிஞ்சான்.நானோ வேட்டையாடு விளையாடு பார்த்த பாதிப்பிலிருந்தேன்.டேய் "அதில கமல் ஆக்கள போட்டுத்தள்ளினவங்கள தேடி நியூயோர்க் போன மாதிரி இதில நோட்ச சுட்டவங்கள தேடி சேகர் பெராக்கு போறார்" என்று கதய வைப்பம் என்று விவாதத்தினிடையே அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தேன்.போடா "நீயும் உன்ர கதயும் நோட்ச சுடுறதெல்லாம் ஒரு கதயாடா?" எண்டு என்கதைக்கருவை அடிக்கடி ஓபி அவமானப்படுத்திக்கொண்டிருந்தான்.சூடான விவாத நடுவில அப்பாஸ் புறஜெக்ட் புறப்போசல் எழுத என்னை அழைக்க உடனடியாய் முடிவு எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் தொற்றிக்கொண்டது.சரி ஏதோ நீ நினைச்சபடியே எடுப்பம்.ஆனா இந்த கதை சரிவராது எண்டு ஓபி திருவாய் மலர்ந்து வழியனுப்பினான்.

21-06-2007,வியாழக்கிழமை.

அதிரடி ஹீரோ சேகருக்கு அறிமுகப்பாடல் தேவைப்பட்டது.நண்பர்களின் ஏகோபித்த முடிவுடன் இரக்கமின்றி கற்க கற்க பாடல் சுடப்பட்டது.பதுவிதான ஹொஸ்டல் வளாகத்தில் சேகர் போற வாற பெடியளுக்கெல்லாம் பேப்பர் வெடி அடிக்கிறான்,ஷவரில நிண்டு துள்ளுறான்,படிக்கட்டு கைப்பிடியில சறுக்கி குதிக்கிறான்.எல்லாத்தையும் "அருமை,கலக்கல் நடிப்பு"என்று பாராட்டிக்கொண்டு வீடியோ எடுத்துக்கொண்டிருந்தேன்.மூவி மேக்கரில் எடிடிங் லைனில் காணொளிகளை போட்டு ஓட்டிக்காட்ட நம்ம பெடியள்ட முகத்தில் ஒரு நம்பிக்கை.பிற்பகல் டைரக்டர் பவானின் சூட்டிங்க்கு அறிவகம் வருவதாய் சில நாள் முன் வாக்களித்திருந்தேன்.ஆனால் வழமை போல எம் பிரச்சினை உருவாக்கிகளான அச்சு,சௌந்தர்,சுதன் ஆகியோர் பிடித்துக்கொண்டார்கள்."நீ போகேலாது,போனா இங்க படம் எடுக்க வரேலாது" என்று .ஒரு மாதிரி இவங்களை வெட்டி அங்க போனா அங்கே சசி,சின்ரா,சிறிப்பிரகஸ் கேட்டார்கள் "ஏண்டா தமிழனெண்டா ஒற்றுமையா ஒரு வேலைய செய்ய மாட்டியளா?".எனக்கு சிரிப்பு பீறிட்டுக்கொண்டு வந்தது.ஒற்றுமைய பற்றி இவங்கள் கதைக்கிற அளவுக்கு நிலவரம் படுமோசம் எண்டு அடக்கிக்கொண்டேன்.கமெரா மேனாகிய சசி அப்பிடி வா இப்பிடி வா எண்டு சொல்லிக்கொண்டிருந்தான்.பவான் கதைவசனத்தை தந்து உச்சரிக்கச்சொன்னான்.இடையே உச்சரிப்பில் பிழை விட்டுவிட்டேன்.இதுக்கெண்டே காத்திருந்தது போல சின்ரா சொன்னான் "ஒழுங்கா சொல்ல தெரியாது,இதுக்க படம் வேற எடுக்க வெளிக்கிட்டாய்".கிட்டத்தட்ட நான் அழாக்குறையாக றூமுக்கு போய் காலை எடுத்த காணொளிகளை எடிட் பண்ண தொடங்கினேன்.சிவகரன்,கிரி,ஹரிசன் கருத்துக்கள் சொல்லி நல்ல வடிவமைப்புக்கு வழிவகுத்தார்கள்.



22-06-2007,வெள்ளிக்கிழமை.

"சேகர் நீ 20 பேர பிரிச்சு மேயுற மாதிரி சீன் வைக்கிறன்" என்க சேகர் பரபரத்தான்.ஒவ்வொருத்தனா போனடிச்சு வரச்சொன்னேன்.கிரிவக்சன்,தீபரூபன்,ரஜித்,அச்சு,வசந்தன்,சௌந்தர்,சிவகரன்.கரிசன்,NDT நண்பர்களான குமரன்,சிவகரன் என 10 பேர மட்டுமே பிடிக்க முடிஞ்சுது.நான் வித்தியாசமா கமெரா வைக்கிறன் எண்டு நினைச்சு மரத்தில ஏறிட்டன்.2 கமெரா இருந்தது.ஒண்டு ரஜித் தந்தது.மற்றது தயந்தன் காலை தந்தது.ஒருகட்டத்தில் சேகர் உசுப்பேறி உண்மையா எல்லாருக்கும் அடிக்க வெளிக்கிட்டான்.ரஜித்,கிரி,ராக் தீபன் ஆகியோருக்கு இது தான் சந்தர்ப்பம் எண்டு குத்தி குமுறிட்டான்.அதன் பிற்பாடு "எல்லாம் சரி அந்த ரவுடிய தாக்குற மாதிரி சீன் ஒண்டு வைப்பமடா" என்க பெடியள் எல்லோர் முகத்திலும் ஆயிரம் பல்ப்பு எரிஞ்ச மாதிரி பிரகாசம்.பாய்ஞ்சடிச்சு ஐடியா குடுத்தாங்கள்.கிரிக்கு "பாமன் கடை பன்னி" எண்டு பேர் சூட்டப்பட்டது.கிரி சொன்னான் மச்சான்"நான் பிடியுங்கடா" எண்ட எல்லாரும் "என்னை பாய்ஞ்சு பிடிக்கட்டும்" சீன் செம கடியா வரும் எண்டு.இருள் கவ்விக்கொண்டிருந்தது.ஹீரோவின் புயபலத்தை காட்ட 10 பேர தூக்கி எறிஞ்சாத்தான் சரிவரும் என் முடிவெடுத்து "ஆக்சன்" எண்டு கத்திப்போட்டு பார்த்தா 9 பேர் விழுந்திட்டாங்கள் ஒருதன் மெதுவா குந்தி இருக்கிறான்.அட ஆர்ரா சனியன் எண்டு பார்த்தா "நம்ம வவுனியா ரவுடி ஜெயசுதன்".நான் கெட்ட வார்த்தையால் திட்ட அவன் திருப்பி கத்திட்டு சொன்னான் "டேய் ஏலுமெண்டா நீ வந்து நடியடா".மரத்தில இருந்து குதித்தே விட்டேன்.கமெராவ பிடிக்கிறது எப்படி எண்டு சொல்லிக்கொடுத்து விட்டு கீழ வந்து 10 பேரும் பாய்ந்து விழுந்தோம்.எல்லார் முகத்திலும் ஒரு கலக்கம். "இவன் றெக்கோட் பட்டனை அமத்தாமலும் விடக்கூடிய ஆள்" அச்சு காதருகே கிசுகிசுத்தான்.நல்லவேளையாக அவன் வழமை போல அன்று செயற்ப்படவில்லை.6 மணியளவில் எல்லோரும் எல் கண்டீன் போய் சாப்பிட்டோம்.சகலரின் பேச்சும் அறிவகத்தினை மடக்கோணும் என்பது குறித்தே இருந்தது.



23-06-2007,சனிக்கிழமை

ஹீரோ களவு போன நோட்ச தேடி போகவேண்டும்.வழமையா நோட்ச சுடுறவங்கள் அத றூமில தானே ஒளிச்சு வைப்பாங்கள்.ஆனா இங்க வாற நோட்ச சுட்டவங்கள் ஒரு வகையான சைக்கோ கேசுகள்.(நிஜத்திலும் அது உண்மைதான்).எனவே நோட்ச காட்டுக்க ஒளிச்சு வைக்கிறாங்கள்.சீனை (???) விளக்கி விட்டு "அப்ப சேகர் வாடா காட்டுக்க போய் தேடுவம்" எண்டு கஜு காட்டுக்க இறங்கிட்டேன்.சேகர் ஒரு விசரனை பார்க்கிற மாதிரி என்னை பார்த்துக்கொண்டு வந்து கொண்டிருந்தான்.அச்சு இரட்டை வேடத்தில் நடிக்கப்போறன் எண்டு சொல்லி அடிக்கடி பயமுறுத்திக்கொண்டிருந்தான்.11 மணிக்கு படகுதுறையில் வெளிக்கிட்டு டேஞ்சர் வந்து சேர 3மணி ஆனது.அப்ப கேதா வந்து சேர்ந்தான்.சீனை நான் விளக்க முதல் அவன் என்னை விளக்கு விளக்கு எண்டு விளக்கிட்டான்.நான் யோசித்ததை விட அவன் சொன்ன வசனங்கள் அருமையாக இருந்தன.பேட்டி எடுக்கும் சீன் எடுத்துக்கொன்டிருந்த போது சேகர் போட்ட அதிரடியில் அச்சுவின் போன் நெறுங்கிப்போனது."எக்பிறஸ் ஸ்ரேசன்" (கிரி வக்சன் அதிவிரைவு ரெயில் இங்கு இருந்தே காலை கிளம்பி விரிவுரை முடிந்ததும் மாலை திரும்பும்.) போகும் வழியில் அறிவகம் போனேன்.சின்ரா "எந்தப்படம் ஓடுது பார்ப்பமடா" என்க இன்னும் போட்டி சூடு பிடித்தது.



24-06-2007 தொடக்கம் 26-06-2007

ஹீரோ மொறட்டுவவில் துப்பறிவது தொடக்கம் பெராதெனியாவில் தேடுவது வரையான காட்சிகளை படமாக்கினோம்.கிளைமாக்ஸ் காட்சி எடுப்பத்ற்க்காக வில்லன்கள் இருவரையும் பிடிப்பது மிகக்கடினமாக இருந்தது.சங்கமம் புத்தக வேலைகளை செய்யும் பொறுப்பு இருவரிலும் சுமத்தப்பட்டிருந்ததால் ஏகத்துக்கு பந்தா விட்டு திரிந்தார்கள்.குத்து மதிப்பாக எடுக்கத்திருந்த காணொளிகளை ஒன்று சேர்த்த போது தொடர்ச்சி சிதைந்து போனது.இந்த தவற்றை திருத்த கதையோட்டத்தை பெருமளவில் திருத்த வேண்டியதாயிற்று.

27-06-2007,புதன் கிழமை

வில்லன்களான அலியப்பாவும் ,சௌந்தரும் இரக்கப்பட்டு கால்சீட் தந்துவிட்டார்கள் என்ற மகிழ்வோடு ஹொஸ்டலுக்கு போனால் நாயகனும் வில்லனும் வெள்ள வத்தை புறப்பட தயாராகிக்கொண்டிருந்தனர்.கன காலமா அவவ காணாமல் நாயகன் தவித்துப்போய் சூட்டிங்க விட அவ்வோடான சட்டிங்கே பெரிது என முடிவெடுத்து கிளம்ப முயன்ற வேளை கையும் களவுமாய் பிடித்தேன்.நாயகன் "டேய் சீன் இன்னும் இருக்கோடா"எண்டு சமாளிச்சுக்கொண்டு திரும்பி விட்டார்.ஆனால் பந்தாக்கு அரசனான அலியப்பா அசராமல் போய்விட்டான்.பிற்பகல் அலியப்பா வர படகுத்துறையருகே படப்பிடிப்பு தொடங்கியது.வேகமாய் எல்லாம் எடுத்துக்கொண்டிருந்தேன்."ரியாலிட்டி வேணுமடா" என சொல்லிச்சொல்லி அலியப்பா சேகரை பலதடவை மோசமாக தாக்கிவிட்டான்."கடைசியா கட்டையால தலையில அடிபட்டுத்தான் நான் மயங்கோணும்.அதுவரை வெறித்தனமா நான் அடிபடுவன்.ஏணண்டா நான் ஒரு பயங்கர முரட்டு வில்லன்,சரியோ?" எண்டது தொடங்கி இந்தக்கட்டை என்னில அடிபட்டு சில்லுச்சில்லா சிதறவேணும் எண்டு சொல்லியபடி ஒரு பெரிய கொட்டனை காட்டி அலுப்படிச்சது வரை அலியப்பா அட்டகாசம் தாங்க முடியல.எல்லாம் நல்லா போய்க்கொண்டிருத போது தான் கட்டுப்பெத்தை கற்பரசி சுலைக்சியும்,வேற்றினப்பெண் குமாரியும் படகு வலிக்க வந்தார்கள். அலியப்பாவின் காட்டுடலழகை கண்டோ என்னவோ அந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு மொக்கை போட ஆரம்பித்தனர்.கடுப்பில் இடம் மாறி அரைகுறையாய் முடித்து அறை மீண்டேன்.அதிகாலை 4 மணி வரை எடிடிங்.



28-06-2007,வியாழக்கிழமை

உறங்கப்போனது 4 மணிக்கு.காலை 5 மணிக்கு எமது டாக்டர்(?????) நிலாந்தி அம்மையாரின் பாடத்தின் "factory visit"க்கு போக வேண்டு.5 மணிக்கு எழுந்து முகம் கூட கழுவாமல் ஓட நான் என்ன ஜெயசுதனா?.போய்ச்சேர 5.15 ஆனது.நிலா நிக்கவச்சு காய்ச்சி எடுத்தது.பஸ் ஓடிக்கொண்டிருந்த்து.எனக்கோ நாளை மறுதினம் சங்கமத்துக்கு திரையிடுவது சாத்தியமா? என்ற பயம் தொற்றிக்கொண்டிருந்தது.அருகே பார்த்தேன் கபோதி நாயகன் சசி இயர் போனில் காதல் பாடலை ஓட்டிவிட்டி கனாக்கண்டு கொண்டிருந்தார்.தட்டி எழுப்பி "சசி யார்ட படம் ஓடுது பாப்பமோ?,டேய் நம்மட படம் 100கிமீ/மணி வேகம்" என்றேன்.சசி சொன்னான்"நம்மட 80 கிமீ/மணி வேகம்தான்.ஆனா திடீரெண்டு பாய்ஞ்சு 150கிமீ/மணியில் போகும்".பதிலேது எனக்கு சொல்ல வரவில்லை.நிலாவின் வதை முடித்து மீள 4 ஆனது.டப்பிங்,எடிடிங் என ஹொஸ்டலில் 3 மணிவரை நீண்டது.

29-06-2007,வெள்ளிக்கிழமை.

இன்று எடிடிங் முழுமைப்படுத்தியாக வேண்டும்.சேகர் தொலை பேசியில் உரையாடும் காட்சியை எடுத்து விட்டு 3 மணிவரை பார்த்துக்கொண்டிருந்தோம்.ஒரு விஐபி வரவேண்டும்.வேற யார் நம்ம குடுமான் தான்.அவர் நடித்து தந்த 5 நிமிட நீளமான காட்சியை குப்பை என சொல்லி நான் தூக்கியதால் "நான் நடிச்சத தூக்க நீ யார்டா" எண்ட கடுப்பில் இருந்தார்.அதனால் சில நாட்க்களாக சூட்டிங்கை புறக்கணித்து வழமைபோல தனது வேலைகளை செய்து கொண்டிருந்தார்.கடைசியா 4 மணிக்கு வந்து அரை மணித்தியாலம் கால்சீட் தர வேகமாக சிவில்டிப்பார்ட்மெண்ட் முன்பாக காணொளிப்படுத்தினோம்.இரவு ஒரு மணித்தியாலம் தான் தூக்கம் கிடைத்தது.பிழை பிழையா டப்பிங் பேசி அச்சு வதைத்துக்கொண்டிருந்தான்.



30-06-2007,சனிக்கிழமை,சங்கமம் 2007.

இன்று சங்கமம்.உறக்கமில்லா விழிகளோடு அச்சுவும் நானும் எடிடிங் செய்து கொண்டிருந்தோம்.ஒருவாறு முதல் பிரதி எடுக்க பிற்பகல் 1மணி ஆயிற்று.மீள மீள ஓட்டிப்பார்க்கப்பட்டு கருத்துக்கள் நண்பர்களிடம் கேட்க்கப்பட்டு திருத்தங்கள் செய்த படி இருந்தோம்.4 மணியளவில் அச்சு செய்திருந்த முன்னோட்டத்தை போட்டு பரீட்ச்சிக்கும் படி ஜெயசுதனை அனுப்பிவிட்டு நான் அறை திரும்பினேன்.நண்பர்கள் ஆரவாரமாய் சங்கமத்துக்கு தயாராகிக்கொண்டிருதனர்.குடுமானிடமிருந்து தொலை பேசி அழைப்பி வருகிறது.என்ன இழவோ என்ற கடுப்புடன் றிசீவ் பண்ணுகிறேன் "மச்சான் ரெயிலர் பிச்சு உதறுது,பெடியள் எல்லாம் கூ அடிக்கிறாங்கள்,நீ கெதியா வாடா" என்கிறான்.தூக்கமில்லா களைப்பு விலகி உற்சாக்ம் பீறிட வேகமாக நடக்கிறேன் விழா மண்டபத்தை நோக்கி.....

*************************************************************************************
நண்பர்கள் பலரிடம் சேர்க்கப்பட்ட அனுபவ நினைவுகளை ஆதரமாய்க்கொண்டு முழு சங்கமம் நிகழ்வையும் ஒரு பொதுக்கண்ணோட்டத்தில் விரைவில் எழுதுவேன்.

இப்பதிவு பல்கலைவாழ்க்கை பற்றிய ஒரு தனிமனிதனின் பார்வையாகும்.சுயதம்பட்டமோ,பப்ளிசிட்டியோ எனது நோக்கமல்ல.எல்லோரும் தங்கள் பார்வையில் நடந்த இனிப்பன நினைவுகளை இங்கே பதிவிடலாம்.முகம் தெரியா பல்லாயிரம் பேருக்காக சீரியஸ் பதிவராக வேடம் கொள்வதை விட முகம் தெரிந்த சுகதுக்கங்களில் பங்கெடுத்த 10 நண்பர்கள் படிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு எழுதுவதில் உள்ள ஆத்மதிருப்தி அலாதியானது.

7ஜி+,காம்ப் கூட்டுத்தயாரிப்பான பில்லா2007 திரைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

PART-01



PART-02



PART-03



PART-04



PART-05

6 comments:

Anonymous said...

நல்ல அனுபவம்... கமராவை பொலிஸ் பறிச்சதையும்... தினேசின்ர சரக்கு பிரச்சினையில அலியப்பாவா பொலிஸ் தேடின கதையையும் கொஞ்சம் சுவாரசியமா எழுதுங்கோ.....

அச்சு ஏன் இங்கால பக்கம் வாறல!!!!!

Kaipillai said...

கமராவை பொலிஸ் பறிச்சதையும்... தினேசின்ர சரக்கு பிரச்சினையில அலியப்பாவா பொலிஸ் தேடின கதையையும் கொஞ்சம் சுவாரசியமா எழுதுங்கோ///

இப்ப எழுதிறதே கன பேருக்கு பிடிக்கலை.ஏனெண்டா தங்கட சில்மிசங்களும் வெளியால வந்திடுமோ எண்டு பயப்படுறாங்கள்.நாம ஆப்பு வாங்கினமே தவிர ஒருத்தருக்கும் ஆப்பு,குழிபறிப்புகள் செய்யவில்லை என்பதால் துணிந்து எழுது தடை ஏதுமில்லை.விரைவில் மேல்சொன்ன விடயங்களையும் எழுதலாம் என்றிருக்கிறேன்.

அச்சு ஏன் இங்கால பக்கம் வாறல!!!!//

குறூப்பில இருக்கிற யாராவது பெண்பிள்ளை பதிவிட்டாப்பிறகு பாருங்கோ,ஓடிவந்து நிற்ப்பான்.

செந்தில் said...

Suga,,,
Thanks for Revising old memories,,,,
I still rem the last day,, when we came to collect Sangamam souvenirs u ppl were busy dubbing and editing,,,,,and we were not sure whether the movie will be released or not,,,, (Hope u remember sangamam souvenir politics regarding siva's article)


Bt the appreciation of the audience was awesome,,,, and been the inspiration for the next project AVADHARAM...

BDW U better share the blog link in Facebook,,,, we are not getting any notification about the blog update...

Do u have any idea who's this "Anonymous"
Take care

Kaipillai said...

Suga,,,
Thanks for Revising old memories,,,,
I still rem the last day,, when we came to collect Sangamam souvenirs u ppl were busy dubbing and editing,,,,,and we were not sure whether the movie will be released or not,,,,//
செந்தில் 2005,2006,2007 ஆம் ஆண்டு டயறியள தட்டி படிச்சா சந்தோசமும் கவலையும் கலந்த கலவையா எதோ ஒரு விதமான பீலிங்ஸ் வருதப்பா.

Hope u remember sangamam souvenir politics regarding siva's article//
அந்த அரசியல் நடவடிக்கையின் போது ஒரு புத்தகம் மட்டும் தப்பவைக்கப்பட்டது.சங்கமம் 2007 புத்தகத்தை முழுமையாக e-book ஆக போடும் போது அந்தக்கதையையும் நீங்கள் எதிர்பார்க்கலாம்.

project AVADHARAM////
அது தான் ஜேம்ஸ் கமரூன் avatar (தமிழாக்கம் - அவதாரம்) எண்டு நம்ம பட கதய எடுக்கிறாரே பிறகு என்ன கவலை.

BDW U better share the blog link in Facebook,,,, we are not getting any notification about the blog update...//

இனி அப்டேற்ஸ் எல்லாம் இமெயிலில் வரும்.சரிதானே.நீங்களும் எழுதுங்கள்.

Do u have any idea who's this "Anonymous"
Take care//

நம்ம பெடியள் தான் ஒருத்தரும் பின்னூட்டம் போடுறாங்களில்லை.அனானியாச்சும் போட்டனே எண்டு சந்தோசப்படுவம்.

மாயா said...

நீங்கள் எடுத்த படத்தை நாம் படம் வெளிவந்த அந்தக்காலத்தில் பார்த்து பிரமிப்படைந்திருந்தோம்....
அதுக்கு பிறகு அவதாரம் ரெயிலர் வெளியிட்டு இன்னும் பீதியக்கிளப்பியிருந்தீங்கள் !
ஆனால் அத்திரைப்படம் வெளியிடாமையையிட்டு வருத்தம் தான் .. எனினும் உங்கள் திறமை நிச்சயம் ஒரு நாள் வெளிப்படும்.. வருந்தாதீர்கள்..


- உங்கள் வலைப்பூவின் வார்ப்புரு உங்கள் தளத்தின் சுமையைக் கூட்டுகிறது ஏதாவது செய்யவும் -

நன்றிகளுடன்
மாயா

Kaipillai said...

நம்பிக்கையூட்டியமைக்கு நன்றிகள் மாயா.அதென்ன வார்ப்புரு.அதெப்படி சுமைய கூட்டும்?.அதுக்கு என்ன செய்யிறது?