.
சனிப்பெயர்சி பலன் காரணமாய் கம்பசில் சிலர் கதைப்பதை நாம் கேட்க நேரிட்டால் அது "கொலை" என்றும் அட்டமத்துச்சனிக்காலத்தில் சிலரின் வெடிகளை வலிந்து நாமே சென்று கேட்பது "தற்க்கொலை" என்றும் குறிச்சொற்களால் தரப்படும் .எமது மட்டத்தில் இவ்வகையில் புகழ் பூத்த கொலையாளிகளாக ராக் தீபன்,வசந்தன்,அலி,தொப்புள் ரஜி,குடுமான்,கிட்டார் கிரி ஆகியோர் திகழ்ந்தனர்.இவர்கள் கொலையாளிகள் என்று தெரிந்தும் கிட்டப்போய் பேச்சைக்கொடுத்து தற்க்கொலைக்கு முயன்று மயிரிழையில் உயிர் பிழைத்தவர்கள் பலர்.இவர்களில் தொப்புள் ரஜியை தவிர மற்ற அனைவரும் திட்டமிட்டு நேர்த்தியாக ஏதோ ஒரு நோக்கத்தை அடைவதற்க்காக வெடித்து மற்றவர்களை கொலை செய்தனர்.ரஜீந்திர தாஸ் தனது பூச்சிய உலக அறிவு காரணமாக திட்டமிட்ட வெடிகளை செய்யும் வல்லமை இல்லாமல் இருந்தார்.குத்து மதிப்பா தனது அறிவைக்காட்ட கதைக்க வெளிக்கிட அவை பலருக்கும் "பார்ட்டி நேர சிரிப்பூட்டிகளாக" மாறிப்போயின.



அதில் மிகப்பரபரப்பூட்டிய வெடிதான் இது.இதை வாசிக்கும் பட்சத்தில் தொப்புள்ரஜிக்கு ஒருவரும் பெண்கொடுக்க மாட்டார்கள்.சம்பவம் முதலாம் வருடத்தின் 2 வது தவணைக்காலத்தில்,அத்துக்கோறளை கிழவன் வீட்டில் நள்ளிரவைத்தாண்டி நடந்தது.பெண்ணீயவாதி கமல்ஸ் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக சொல்லிக்கொண்டிருந்தார்.அதை சசிக்குமார் செவிமடுத்து வழிமொழிந்து கொண்டிருந்தார்.இடையிடையே தினேஸ் "பெண்கள் பாவம் தான்,ஆனா எல்லாப்பெண்களும் நல்லமெண்டு இல்லை" எனப்பல கருத்துக்களை விதைக்க, கிரி வக்சன் மார்க்கர் பேனையால் நோட்சுகளை கலராக்கிக்கொண்டிருக்க,சேது லெஸ்லி ஏதோ ஒரு பழம் பாட்டை வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டு இருக்க பேச்சு சூடு பிடித்தது."ஆண்கள் குடும்பத்தை காப்பாற்ற எவ்வளவு கஸ்டப்படுகிறார்கள்,பெண்களுக்கு வீதப்படி பார்த்தா கஸ்டம் இல்லையே.இப்ப கூட நாங்கள் இரவிரவா முழிச்சு படிக்கிறம்.ஆனா அவளவையில கனபேர் ஓஎல் ஓட நிப்பாட்டிப்போட்டு மேனிவனப்ப காட்டி ஆராவது புள்ள பூச்சிய மடக்கி கலியாணம் கட்டி வெளிநாடு போய் சொகுசா வாழுறாளவை"என்ற கருத்தை நான் முன்வைக்க இது கமல்ஸ்,தொப்புள் ரஜியால் நிராகரிக்கப்பட்டது.உலகிலேயே மிககொடூரமான வேதனையை தருவதான பிரசவத்தை நிகழ்த்தும் பெண்களை எந்தவகையிலும் குற்றம் சாட்ட முடியாது எனச்சொன்ன கமல்ஸ் பிரசவம் சம்பந்தமாக உயிரியல் புத்தகங்களில் படித்தவற்றை சொல்லத்தொடங்கினார்.......

ஏதாவது இந்த விடயம் தொடர்பில் கதைக்க வேண்டும் என வாடியிருந்த தொப்புள் ரஜி திடீரென குறுக்கிட்டு சொன்னார்.....


"மச்சான் நாங்கள் சில நேரம் 2 க்கு போகவே எவ்வளவு கஸ்டப்படுறம்,அந்த பாதையால ஒரு பிள்ளை வருதெண்டா எவ்வளவு கஸ்டப்படுவாளவை?.பாவமடா பெண்கள்"

எல்லோரும் உருண்டு உருண்டு சிரிப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தேன்.ஆனால அது நடக்கவில்லை.5 பேரும் ரஜிந்திரதாசை சீரியசாக் பார்தபடியிருந்தனர்.வசமா ஒருத்தன் சிக்கிட்டான்,அவனை எடுத்த எடுப்பிலேயே குதறுவானேன்? என்றெண்ணி அமைதியாகிவிட்டனர் போலும் என எண்டிக்கொண்டேன். மேன் மேலும் கதையைப்போட்டோம்.அவன் சும்மா காமெடிக்கு சொல்லவில்லை சீரியசாகத்தான் கதைக்கிறான் என முடிவு பண்ணும் வரை வாயை கிளறினோம்.போதும் எனப்பட்ட பின் "ஆனா அந்த பாதை இல்லையேடா" என சேது சொல்ல ரஜி ஆடு மாடு குட்டி போட்டத நேரில் பார்த்தகதைகளை சொல்லி "பாதையில் சந்தேகமே இல்லை,அதேதான்" என்று வாதிட தொடங்க எழுந்த சிரிப்பு அலைகள் அத்துக்கோறளை கதவை அடித்து தூசணத்தில் கத்தும் வரை நீண்டது.




தொப்புள்ரஜி காமெடிக்கு ஏ சான்றிதழ் தரலாம் என்றால் வசந்தனின் காமெடிகளில் பலவற்றுக்கு PG கொடுக்கலாம்.ஏனென்றால் எல்லாம் குழந்தைக்கால காமெடிகள்.மல்லாவியில் 3 வயதில் வசந்தன் செத்த யானை ஒண்டுக்கு மேல ஏறினவன்.4 வயதில வயசுக்கு வந்த வசந்தன் முதல்பாம்பு அடிச்சது 5 வயசில.இவ்வளவு அட்டகாசம் போட்டும் ஒரு முதலை கொஞ்சம் கூட பயம் இல்லாமல் வசந்தன் வீட்டுக்கு பக்கத்த வந்திட்டுது."முதலை,முதலை"என ஊர்ப்பெண்கள் கூச்சலிட்டதில் மல்லாவியே திரண்டு வந்து விட்டிருந்தது.பெரிய பெரிய பயில்வான்கள் எல்லாம் அடிக்கிறார்கள் முதலை மசியவில்லை.வசந்தன் வாறான்.பெரிய கல்லு ஒண்டை எடுத்து தலைக்கு மேலே தூக்கி முதலையின்ர மண்டைக்கு மேல ஒரே போடு.முதலை ஒருக்கா துள்ளி விழுகிறது.குனிந்து முதலையின் கண்ணைப் பார்க்கிறான்.கண்ணால் இரத்தம் ஒரு சொட்டு வந்து வெளியால் விழுகிறது.முதலை செத்ததாக வசந்தன் அறிவிக்கிறான்.ஊர் மக்கள் பாராட்டுகின்றனர்.அது வசந்தன் அச்சுவுக்கு தனியாக றூமில சொன்னது.8 வயசில் இது சாத்தியமா எண்டு யோசிச்சு மண்டய குடைஞ்ச அச்சு முடியாம இந்த கதய வெளியால விட்டுட்டான்.



இவர்களுக்கு அடுத்தபடியாக தரவரிசையில் 3வது நிலையை பிடிப்பவர் கிரிவக்சன்.இவரின் பெரும் வெடிகளை இங்கே எழுதப்போனால் அவர் இந்த புளொக்கில் இருந்தே நீங்கி விடும் அபாயம் உண்டென்பதால் அந்த "புகழ் பூத்த அரவிந்தசாமி" கதையை மட்டும் சொல்கிறேன்.கிரி ஒருதடவை என்னை தனது மாமா வீட்டுக்கு அழைத்துப்போனான்.போறவழியில சொன்னான் "டேய் என்ர மாமா அரவிந்தசாமி மாதிரி இருப்பார்,நல்ல வடிவு,வந்து பாரன்" எண்டு.போய் பார்த்தேன்.ஒன்றும் பேசாமல் வாற வழியில் " ஓமடா நீ சொன்னது உண்மைதான்" என ஒரு பொய்யை சொல்லி விட்டு பேசாமல் வந்துவிட்டேன்.(பிற்க்காலத்தில் இக்கதையை செந்திலுக்கு,சிவகரனுக்கு நான் சொல்லப்போக அவர்களுக்கும் கிரிவக்சன் இவைகளை ஏற்க்கெனவே சொல்லி விட்டது தெரிந்தது.).கமலகாசனின் பாடல்களை போட்டுவிட்டு "என்ன வடிவா இருக்கிறாண்டா,அவன்ர கலரும்,முகவெட்டும் வேற யாருக்கு இருக்கு,கட்டையெண்டாலும் ஹண்ட்சம் மச்சான்" என கிரி அடிக்கடி புல்லரிப்பதை பார்த்து விட்டு பலரும் பப்பாவில் ஏத்த ஒரு நாள் அந்த உள்மனநினைவு வெளிப்பட்டு விட்டது.அதாவது கிரிவக்சன் தன்னை ஒரு கமலகாசனின் குளோன் என்று ஆழமாக நம்புகிறான் என்பது வெளிப்பட்டு விட்டது.பிறகு ஒரு நாள் சொன்னான் "எனர மச்சாள் திரிசா மாதிரி எண்டு பெடியள் எல்லாம் கலைக்கிறாங்கள்,ஆனா எனக்கு அவள்ல ஆர்வம் இல்லைடா".ஆக மொத்ததில் கிரி சுத்தி சுத்தி தனது உறவு,குடும்பங்களில் 90% மானவர்களை நடிக,நடிகைகளுடன் ஒப்பிட்டிருக்கிறான் என்பது 4ம் வருட முடிவில்த்தான் தெரிய வந்தது.

இவர்களை விட வரிசைப்படுத்தலில் மெகா வெடியர்களான ஓபி,சசி,ராக் தீபன் ஆகியோரை உள்ளடக்கவில்லை.அடக்க முடியவில்லை என்பதே உண்மை.அதற்க்கு ஒரு முழு நீள காவியமே எழுதவேண்டும்.அல்லாவிட்டால் பாற்க்கடலை நக்கி குடிக்க பூனை வெளிக்கிட்டது போல ஆகிவிடும்.

2 comments:

செந்தில் said...

expecting more abt giri....!
sorry prob with my tamil typing,,, update with new story soon

Kaipillai said...

நன்றி செந்தில்...ஆனால் கிரி கதைய எழுதப்போனால் பலத்த எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி வரும் என்பதால் பயமாக இருக்கிறது.