கல்யாணரூபன்

.

முதல்வருடத்தில் ஒரு வெடியனாகவும் காமெடியனாகவும் போட்டுத்தாக்கும் கலை அறிந்தவனாகவும் அறிமுகமான தீபரூபன் ஒரு காதலனாக தன்னை நிலை நிறுத்தி கணவனாக வாழ்வத்ற்கான அடித்தளத்தை இந்த மாத இறுதிப்ப்பகுதியில் போடவிருக்கிறார்.இது தொடர்பாக முகப்புத்தகத்தில் குறுந்தகவல் அனுப்பிய தீபரூபன் எங்கே,எப்போது என்ற விடயங்களை குறிப்பிட மறந்துவிட்டதால் பலரும் இந்த வரலாற்று சாதனை தொடர்பில் தகவல்கள் வேண்டி அவாவி நிற்க்கின்றனர்.அதாவது பல்கலை வளாகத்தில் குழுமமாக வாழ்ந்து பின்னாளில் ஹொஸ்டலில் குடும்பமாக இருந்த நம்ம மட்ட பெடியளில் முதலாவது வெற்றிகரமான காதலுக்கு சொந்தக்காரனான தீபரூபன் கல்யாணம் உரிய பிரச்சாரம் இன்றி முதன்மை குறைந்து போவதை நாம் அனுமதிக்க முடியாது.இந்த விடயம் தொடர்பில் தீபரூபனால் தாக்கப்பட்டோரும்,தீபரூபனை தாக்கியோரும் ஒத்த நிலைப்பாட்டைக்கொண்டுள்ளனர்.எங்கள் மட்டத்து ரெப்பான தினேஸ் வழிப்படுத்த அப்பாஸ் இல்லை என்பதாலும்,அருகே பலமான ஆளணி இல்லாமையாலும் இது தொடர்பில் வலிந்த நடவடிக்கைகளை செய்யவியலாது இருக்கிறார் என்பதை நாம் அறிந்ததே.அத்தோடு அவரை சுற்றி இருக்கும் சிலரும் பதிவெழுதி,பதிவர் சந்திப்பு போடக்கூடியவர்களே தவிர வேறொண்றும் இயலாதவர்கள்.இன்னபிறகாரணிகளால் நாமே களமிறங்க வேண்டியது தவிர்க்க முடியாததாகின்றது.மேலும் வெட்டிப்பேச்சு பேசி செல்வரஞ்சன் போல காலத்தை கழிக்காமல் ராக்தீபன் கலியாணத்துக்கு நம்மால் செய்யக்கூடியவை சிலவற்றை ஐடியாக்களாய் கீழே தந்திருக்கிறேன்.படிச்சு பிடிச்சுப்போனா கருத்தைக்கவ்விக்கொள்ளுங்கள்.


1)மட்டம் 2003 காசு சேர்த்து பரிசுப்பொதி ஒன்றை வாங்கித்தீபரூபனுக்கு கொடுக்கலாம்.
இந்தப்பரிசு தீபரூபனின் வெடிகளில் இருந்து அந்த வாழ்க்கைத்துணையாக வரப்போகிற கொடுத்து வைத்த பெண் தன் காதுகளை பாதுகாக்க தரப்படுகிற பஞ்சாகவோ இல்லை விலையுடர்ந்த மோட்டார் வாகனமாகவோ இருக்கலாம்.(பிகு-தீபரூபனுக்கு சாளி மட்டுமே ஒடத்தெரியும் என்பதால் செலவு 60,000 ஐத்தாண்டாது.)

2)கலியாண நாளன்று மரம் நடலாம்.ஆளுக்கு 10 மரப்படி 100 மரம் நட்டாலே இது பத்திரிகை செய்தியாகி பப்ளிசிட்டி கிடைக்க வாய்ப்புண்டு.இந்த விடயத்தை எல்லாரும் பின்பற்றினால் வவுனியா சோலைவனமாகிவிடும்.

3)மட்டம் 2003,மற்றும் இளைய மாணவர்களான புளொக்கர்களுக்கு அன்புக்கட்டளை இட்டு எல்லோரையும் இந்த கலியாணம் பற்றியும் தீபரூபன் நற்க்குணங்கள் பற்றியும் எழுதக்கேட்கலாம்.இதன் போது அந்தக்கடலேறி குறுக்கால் இழுக்க வாய்ப்புண்டு.(அவரது புளொக்கை அவரே வாசிப்பதில்லை என்பதால் பெரிதாக அலட்டிக்கொள்ளத்தேவை இல்லை.)

4)தீபரூபனின் குப்பியால் மற்ஸ் பாஸ் பண்ணினவங்கள் எல்லாம் கலியாண நாளன்று பெரிய பலகையில் "கணக்குக்கிறுக்கன்" என எழுதி பரிசாகத்தரலாம்.இது தீபரூபன் தொடர்பில் புகுந்த வீட்டாருக்கு ஒரு இமேஜை உருவாக்குவதோடு,மனைவிக்கு கொளுத்திப்போட கிடைத்த நல்ல
ஒரு சரவெடியாக தீபரூபனுக்கு இது அமையக்கூடும்.

5)தீபரூபனின் ஆருயிர் போட்டுத்தாக்கல் நண்பனான சசி தீபரூபன் கலியாணத்துக்கு நேரில் வரமுடியாது என்பதால் தீபரூபன் மிகுந்த கவலை அடையக்கூடும்.அதைப்போக்க சசியின் பெரிய போட்டோ/பொம்மையை தீபரூபன் கண்ணில் படுமாறு மண்டப மூலையில் வைக்கலாம்.கல்யாணம் முடிந்தபின் நண்பர்கள் அந்த பொம்மையை செருப்பால் அடித்து கொடும்பாவி கொழுத்தி மழையை வரவைத்து தம்பதியினரை வித்தியாசமாக வாழ்த்தலாம்.

6)குறூப் போட்டோ எடுக்கும் போது நண்பர்கள் எல்லோரும் அபூர்வசகோதரர் கமல் போல நின்று தீபரூபனை உயரமாக காட்டலாம்.இது பின்னாளில் கலியாண ஆல்பத்திக்காட்டி பிள்ளையளுக்கு தீ பரூபன் சோறு ஊட்டும் போது " எங்கட பட்ஜ்சில நான் தான் சரியான உயரம்" எனச்சொல்ல உதவக்கூடும்.

7)காலை தொடக்கம் மாலை நீளும் நீண்ட சடங்கு சம்பிரதாயங்களால் தீபரூபன் களைப்படையும் தருணங்களில் நண்பர்கள் கூட்டம் பின்னால் இருந்து "சசி,சசி" எனக்கத்தி
தீபரூபனை உற்ச்சாகமூட்டலாம்.

8)தீபரூபன் ஸ்டண்ட் செய்த கபோதி திரைப்படத்தை அகலத்திரையில் கலியாண மண்டப மூலையில் அடிக்கடி போட்டுக்காட்டலாம்.இது "மாப்பிளை பெரிய சண்டைக்காரன் போல" என்று கலியாணத்துக்கு வந்தோரை முணுமுணுக்க வைப்பதோடு பெண்ணுக்கு "இவர வெருட்டி அடக்கேலாது" என்ற எண்ணத்தை விதைக்கும்.

இவை காலை கழிவறையில் இருந்தபோது என்மனதில் உதித்த ஐடியாக்கள்.ஆளாளுக்கு ஆயிரம் ஐடியாக்கள் வந்திருக்கும்.எதாவது செய்து ராக்தீபனின் திருமணநாளில் அவனுக்கு திட்திப்பூடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

5 comments:

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

எனக்கும் ஒரு தலையங்கம் மட்டும் வந்தது.. நான் சும்மா எண்டுதான் யோசிச்சது.. பிறகுதான் தெரியும் உண்மையெண்டு... விபரங்கள் தெரிய ஆவலாய்த்தான் உளது...

Kaipillai said...
This comment has been removed by the author.
செந்தில் said...

its good to hear,,,,
Surprise ---- "the girl is from Jaffna medical faculty......."

Kaipillai said...

கௌபாய்! நீங்கள் நினைச்சா ராக் தீபன் கலியாணத்தை நேரடியாக Livestream ல ஒளிபரப்பி நாமெல்லாம் அதைப்பார்க்கும் பேற்றை பெற வழி சமைக்கலாமே?

Kaipillai said...

மருத்துவிச்சியையே மடக்கிப்போட்ட ராக்தீபனின் திறமை வியத்தல்க்குரியது.