வாழ்த்துகிறோம்.

.




கிளு கிளு கனவுகளோட வாற பெடியள் மனசில மண்ண அள்ளி போட்டதும் மட்டுமில்லாம மண்ணெண்ணய ஊத்தி பற்ற வச்சு துடிக்க வைக்கிற கம்பஸ் எண்டா இலங்கையில அது மொறட்டுவை தான்.ஏனைய பல்கலைகள் விடுமுறை தரும் நாட்களில் கூட சாதாரண பாடவிதானத்தைவிட மேலதிகமாக யூன் ரேம், யூலை ரேம் எண்டு தவணையள் போட்டு "விளையாடுறது, போட்டோ எடுக்கிறது எப்பிடி எண்டு படிப்பிக்கிறம்" என்றெல்லாம் விதம் விதமாய் படிப்பிச்சு துன்புறுத்துகிற வதை முகாம்.மிக நீண்டகாலமாய் அடிப்படை விளையாட்டு வசதிகள் கூட செய்து தராமல் அலுப்படிச்ச புத்தகப்பூச்சி பொறுப்பானவர்களின் கீழ் இருந்த இடம்.எவ்வளவு கொடுமைகள் நடந்தாலும் மகே அம்மே ஆட்கள் மாலை நேரங்களில் பெண் நண்பியோடு அடித்து தொட்டு விளையாடி புத்துணர்வு பெற்றுவிடுவார்கள்.வெள்ளி மாலையானதும் ஊருக்கு பறந்து விடுவார்கள்.கலம்பு அரை டமில்ஸ்சும் ஓடி விடுவார்கள்.வடகிழக்கு டமில் மாணவர்களே முழு சித்ரவதையையும் அனுபவிப்பார்கள். முழு நேரமும் கட்டுப்பெத்தை வனாந்தரத்துக்குள் இருந்து டம்மி டமில் பிகருகளோடு கடலை போட்டு ஏச்சு வாங்கி குடுக்காரரிடம் இரவு மசாஜ் வாங்கி சிங்க வம்ச யாலுவா இடம் திட்டு வாங்கி கூட இருந்து ஆப்படிக்கிற மரத்தமிழ் நண்பனை சமாளிச்சு அரைத்தமிழ் கொழும்பரோட முட்டுப்பட்டு ,குத்தி, குப்பி எடுத்து டெங்கு, சிக்கன் பொக்ஸ் தடை எல்லாம் தாண்டி பட்டத்த வாங்கி பறக்க விடுறது எண்டா சாதாரண விடயம் இல்லை.ஒரு வதை முகாமுக்கு நிகராக சோதனைகள் தருவாதாலே என்னவோ, வெளியே வாற எங்கட பெடி, பெட்டயள் எந்த தடையையும் இலகுவாக தாண்டும் தகமை நிரம்பி இருக்கிறார்கள்.


எங்களுக்கும் ஜூனியர் வருவாங்கள் தானே என்ற முதலாம் வருட பேரவாவை நிறைவு செய்யும் விதமாய் வந்து வாளி வைப்பதை எந்த மட்டத்திலுமில்லாத அளவுக்கு செய்து பரீட்சை எண்ட பொக்ஸ உடைச்சு வெற்றியா வெளியேறிய நம் தம்பி தங்கைகள் நாளை (22/06/2010) பட்டம் வாங்குகிறார்கள்.நம் மட்ட(தறு) தலை தினேஸ் ஆணைப்படி இந்த பதிவுச்சுவரிலே பாசமிகு சீனியர்களாகிய எங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பதிப்பதில் மொறா மட்டம் 2003 ஆகிய நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.


இதை விட எங்கள் ரவுடி சினேக் ரியாசும் நிலாந்தி என்ற அரக்கியின் நயவஞ்சக நடவடிக்கைகள் காரணமாக ஒரு வருடம் பிந்தி இளையோருடன் சேர்ந்து பட்டம் வாங்குகிறார்.அவரை விசேடமாக வாழ்த்துவதில் கனாக்காலம் ஆசிரிய பீடம் மனமகிழ்வு கொள்கிறது.

1 comments:

Unknown said...

ஆமாம் பட்டம் வாங்குறது என்பது இலேசுப்பட்ட விடயமில்லை... ஆமாம் நீ சென்னதுக்கு பிறகுதான் தெரியுது இவளவு கஸ்டப்பட்டு படிச்சு பாஸ் பண்ணியிருக்கம் எண்டு... நாம கில்லாடிகள் தான்டா.... வாழ்த்துக்கள் அன்பு நண்பன் சினேக் றியாஸ் மற்றும் அன்பு தம்பி,தங்கை மாருக்கு....