மொறட்டுவை கம்பசில மூன்றாம் வருடம் படித்துக்கொண்டிருந்த ஒரு நாளில் கெமிக்கல் சசி வீட்டுக்கு சாப்பாட்டுக்கென பெரிய குழுவாக புறப்பட்டுப்போனோம்.வழிகேட்பதற்காக சசிக்கு கோல் எடுத்த போது சசி சொன்னது..

"வரேக்க றிவர் ஒண்டு ரன் பண்ணிக்கொண்டு இருக்கும்,அத தாண்டி வரேக்க ரூ ஸ்ரோறி பில்டிங் ஒண்டு இருக்கும்,அதில அப் ஸ்ரோறி தான் எங்கட கவுஸ்"

05/10/2010 அன்று பிரித்தானியா மிட்சம் பிரதேசத்தில் உள்ள ஜிம்மில்...
எவ்வளவு பயிற்சி செய்தாலும் காப்பிலியள் போல பாடி வராம டெட் பாடி கணக்காவே இருக்க காரணம் கேவலமான எங்கள் சாப்பாட்டு முறைதான் என பேசியபடி இருந்த போது சசி சொன்னது.

"நான் டெயிலி 3 டைம் மீல் எடுப்பன்.மில்க்,யூஸ் நைட்ல ரிங் பண்ணுவன்,சொ சாப்பாடு பிராப்ளம் இல்லை"

இவன் ஏழு ஜென்மத்துக்கும் திருந்த மாட்டான்.


கம்பசில முதலாம் வருசம் படிச்சுக்கொண்டிருந்த காலம்....
ஜெயசுதன் தன்னை ஒரு காதல் இளவரசனாக மனதில் வரித்து வைத்திருந்த நேரம்.ஒரு நாள் பட்டப் பகல்ல ஒரு மட்ட பிகரிடம் வழிந்து படுகேவலமாய் திட்டு வாங்கியதை பலர் கண்ணாரக்கண்டார்கள்.அவள் ஒரு நல்ல பிள்ளை என பல பெடியளோடு வாய்ச்சண்டை போட்டு கேவலப்பட்டதும் பின்னர் நடந்தது.

28/09/2010 லண்டன் மாநகரில் ரவுடி ஜெயசுதனோடு பேரூந்தில் பயணிக்கும் போது......
வண்டி நிறைய பெண்கள் கூட்டம்.ரீன் தொடக்கம் 40+ வரை பரவலான வீச்சில் நின்றிருந்தார்கள்.ஒருத்தியையும் விடாமல் சைட் அடித்து அறை வந்த பின் நடந்த நண்பர்கள் ஒன்று கூடலில் ரவுடி சொன்னது
"இவ்வளவு கேவலமா பெட்டைக்காக அலையுறவன பார்க்கேல.எல்லாரும் பெட்டய பார்ப்பாங்கள்.ஆனா நீ.... உன்னை எந்த பெட்டை பார்க்குது எண்டு பார்க்கிறாய்,கேடுகெட்ட மெண்டாலிட்டி,நான் ஒரு காலமும் பெட்டைக்காக அலைஞ்சதில்லை"

குடுக்காரன் பேச்சு விடிஞ்சா போச்சு.கணக்கெடுக்கப்படாது.


மூன்றாம் வருடம் படிக்கேக்க புதுசா வந்திருந்த யூனியர் பிள்ளையட்ட உங்களுக்கு வரப்போறவர் எப்படி இருக்கோணும் எண்டு கேட்க சொன்னது....
"நல்லவரா இருக்கோணும்"

பெரிய பிரித்தானியாவில் வெள்ளைக்கார பிள்ளைகளோடு கடலை போட கிடைக்கிற பொன்னான தருணங்களில் அதே கேள்வியை எடுத்து விட்ட போது ஒரு பிள்ளை சொன்னது.....
"என்னோட கனவுப்பையனுக்கு அழகான உடம்பு இருக்கோணும்.முக அழகு முக்கியமில்லை.ரிம் பண்ணின அப்ஸ் இருக்கோணும்.தசைப்பிடிப்பான தோள்கள்,உயிரோட்டமான கண்கள் அவசியம்.பணம்,அந்தஸ்து முக்கியமில்லை.என்னை புரிஞ்சு கொண்டா சரி."


பொத்திப்பொத்தி வச்சு பழுக்கவும் இல்லை பழக்கவும் இல்லை.


மொறட்டுவை,பதுவிதான விடுதி 2007 ம் ஆண்டு......
அலியப்பா சௌமியா என்று ஒரு கற்பனைப்பிகர உருவாக்கி அவளுக்கு ஓவரா பில்டப் குடுத்து தனக்கு குறும் தகவல்,தொலை பேசி அழைப்புக்களை நண்பர்கள் முன்னிலையில் சௌமியாவாக எடுக்க இன்னொருத்தியை செட் அப் பண்ணி......... சௌமியாவ சந்திக்க போவம் வா எண்டு ஒரு பிள்ள பூச்சிய கூட்டிக்கொண்டு போய் 3 மணித்தியாலம் காக்க வச்சு...... சாட்டு சொல்லி திருப்பி கூட்டி வந்து.......2 வருடங்களாக போட்ட நாடகத்தை ஒரு பார்ட்டியில் ஒப்புக்கொள்ள 7ஜி ஒரு கிழமை கதைக்காமல் ஒதுக்கி வைத்தது.

10/09/2010 கஸ்டப்பட்ட பிள்ளையள கஸ்டப்படுத்தாம படிக்க வைக்கப்போறன்.இஸ்டப்பட்டு எல்லாரும் ஒரு ஸ்கொலர்சிப் குடுப்பம்.....எண்டு சொல்லி நிறுவனத்துக்கான இலச்சினை,விண்ணப்ப படிவம் எண்டு சீரியசா சொல்ல எல்லாரும் அலேட் ஆகிட்டாங்கள்.நிச்சயமா யாரோ ஒரு பிகரோட மனதை வருடும் முயற்சி எண்டு விளங்கினது தான் காரணம்.


சிட்டி version 2.0 போல இது லந்து version 2.0 வோ?


மொறட்டுவை கம்பசில சிவில் டிப்பார்ட்மெண்டில தன்யா எண்டு ஒரு தமிழ்ப் பிள்ளை இருந்தது.சக மாணவிகள் எல்லாம் எங்களை பொறுக்கி என்று தடை செய்த போதும் எந்த ஒரு கருத்தும் சொல்லாமல் தன்ரபாட்டில அமைதியா இருந்ததால தண்ணி பார்ட்டியள்ள எல்லாம் அந்த பிள்ளய மனமார புகழ்ந்து தள்ளுவோம்.அவவும் பெயருக்கேற்றபடி 4வருசமும் தன்ர பாட்டில தனியா இருந்துட்டு அவுஸ்திரேலியா போயிட்டா.

இப்ப அதே முகத்தோற்றத்தோட ஒரு பிள்ளை முக நூல்ல இருக்கு.பெயரும் அதே தான்.ஆனா தனியவா இல்லை.நூறில்லை,இருநூறில்லை எண்ணூறுக்கு மேல நண்பர்கள் வச்சிருக்கிறா.அவுஸ்திரேலியாவில பறக்கிறதில பருந்து தொடக்கம் ஊருறதில ஓணான் வரைக்கும் அழகா படம் பிடிச்சு போடுவா.மிருகங்களும் தன்யாவ தங்கள்ல ஒண்டா நினைக்கிறதாலயோ என்னவோ..... பயந்து ஓடாம விறைப்பா போஸ் குடுக்குதுகள்.எல்லாத்தையும் போட்ட தன்யா இப்ப தன்னையே படம் பிடிச்சு போடுற அளவுக்கு வளர்ந்துட்டா. முதலைக்குளத்துக்க அரையளவு தண்ணியில நிண்டு போட்ட போட்டோ தான் இப்ப முக நூல்ல ஹாட் டாபிக் ஆகி இருக்கு.


அரை வளர்ச்சி நாடு அவுஸியிலேயே இவ்வளவு மாற்றம் எண்டா முழுசா வளர்ந்த அமெரிக்கா போன என்ன ஆகும்?

மொறட்டுவை கம்பசில டப்பா பிகர கூட உருகி உருகி பார்த்து, வாளி,குப்பி எல்லாம் வச்சு கேவலப்பட்ட பெடியள் பலர்.அது மட்டுமில்லாம ஆயா ரேஞ்சில இருந்த பிகருகள எல்லாம் மீரா ஜாஸ்மினுக்கும்,நயன் தாராவுக்கும்,பானுவுக்கு(தாமிரபரணி நாயகி) ஒப்பிட்ட கொடூர ரசனைக்காரர்கள் கூட இருந்திருக்கிறார்கள்.

உலகத்தின் சகல இனப்பெண்களையும் லண்டனில் பார்த்தாகி விட்டது.பெண் அழகு என்பதன் வரைவிலக்கணக்களை எல்லாம் பார்த்துவிட்டாங்கள் எங்கட பெடியள்.ஊருக்கு போகும் போது தமிழ் பெண்களை,சிங்கள பெண்களை சைட் அடிக்க கூட தோண்றாத அளவுக்கு இங்கே பார்த்தாகிவிட்டது.இருந்தும் தமிழ்ப்பெண்கள் மீதான ஈர்ப்பு மிச்சம் இருக்கிறது என்றால் கலாச்சாரம் ஒன்று மட்டுமே காரணமாக இருக்க முடியும்.ஆனால் அதையும் ஆமிக்காரனோடு சேர்ந்து மரத்தமிழிச்சிகள் பறக்கவிடுவதால் விரைவில் இச்சிந்தனையிலும் முற்றுப்புள்ளி விரைவில் விழும் என எதிர்பார்க்கலாம்.


வாழ்க்கை ஒரு வட்டமோ சதுரமோ சரிவகமோ இல்லை.பல நெளிவு சுழிவுகளை கொண்டதே அது.

1 comments:

Alliyappa said...

Kaipuula soooper appu..... nalla irukkida.....unnudaya ezhuthukkal niraya ninaiwugala appa appa meetu tharuthu......thanks machan....