ராவணன் இலங்கைய ஆண்ட அரசன்,அனுமான் எண்டவன் நடு இரவில வந்து இலங்காபுரி நகருக்கு நெருப்பூட்டிவிட்டு தப்பி ஓடின குரங்கன்.ராவணனை அரக்கனெண்டும்,ராமன கடவுள் எண்டு வடக்கன் சொல்லலாம்.ஏனெண்டா அவன் அவங்கட ஆள்.ஆனா இலங்காபுரியான இலங்கையில இருக்கிற திராவிடதமிழன் ராமன கும்பிட்டு அனுமான் கலையாடி ஆவேசப்பட்டா...........இத என்னெண்டு சொல்லுறது?

அதே போல நரகாசுரன் திராவிட அரசன்.எண்ணிக்கையில் பெருத்த ஆரியன் படையெடுத்து நரக சூரனை கொன்றுவிட்டு இன்னாளே நன்னாளாம் என்று கொண்டாட அதை பார்த்து நம் நன்னாளும் இன்னாளாம் எண்டு புது உடுப்பு போட்டு மினுக்கி திரியிறத........என்ன வகைக்குள்ள அடக்குறது?






தமிழர் வாழ்வியல் செயல்பாடுகள்,மனோநிலைகள் போண்றனவற்றை அலசினால் இப்படி ஆயிரம் புரிந்துகொள்ளமுடியா புள்ளிகள் தென்படும்.தமிழ் நாட்டை ஆண்ட எம்ஜி ஆரிலிருந்து மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டார் வரைக்கும் தமிழரல்லர்.திரையுலகில் கூட திராவிட பண்புகள் கொண்ட தமிழிச்சி நாயகியாக தோண்றுவதை இன்றளவும் தமிழனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் இனத்தவனோடு பேசும் போது தன் நிலையை குறிகாட்ட ஆங்கிலம் கலப்பதன் பின்னால் உள்ள மனோநிலை.மிதி வெடி எடுக்க வந்த சிம்பாவே நாட்டு படிப்பறிவில்லா வெள்ளைக்காரனை பாடசலை ஆங்கில தினத்துக்கு பிரதம விருந்தாளியாக அழைத்து காலில் விழும் யாழ்ப்பாணத்து சிந்தனை.......இப்படி ஆயிரம் ஆயிரம் பு.கொ.மு புள்ளிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.




இவ்விசித்திர சிந்தனை ஓட்டத்துக்கு காரணமாக இருப்பனவற்றை அறிந்து கொள்ள ஆழ்ந்த ஆராட்சி ஒன்றும் செய்யதேவையில்லை.பதில் ஒற்றைச்சொல்லில் ஒளிந்து கிடக்கிறது.ஆயிரம் ஆண்டையும் தாண்டி தொடரும் காட்டிக்கொடுப்புக்கும் குழிபறிப்புகளுக்கும் தாழ்வு மன போக்குக்கும் காரணமான ஒற்றைச்சொல் அது.


"செருப்புப்புத்தி"

இந்த செருப்பு புத்திதான் ஆரம்பத்தில் ஆரியனுக்கு அடிபணிய வைத்தது.ஆரியனை தேவன் என விழிக்க வைத்தது.தன்னை தாழ்ந்தவனாக நினைக்க வைத்தது.தன் காரியமாற்ற தன்னினகருவறுக்கும் வேலைகளை கூட செய்யுமளவுக்கு கொண்டு போய் விட்டது.பெரியார் வந்து பகுத்தறிவு இயக்கம் வைத்துப்பார்த்தார் சரிவரவில்லை.பின்னாளில் படித்து பெரிய அளவில் தமிழன் சிந்திக்க தொடங்கிய பின்னும் செருப்பு புத்தி சப்பாத்து புத்தியாக உருமாறிற்றே தவிர மூலம் குலையவில்லை.

வெளிநாடு வந்து மேற்படிப்பு படிச்சாலும் புரட்சிகர சிந்தனை இருந்தாலும் செருப்பு புத்தி சுயநலபசை போடப்பட்டு தமிழ் மண்டையோடுகளில் இறுக்கமாக ஒட்டப்பட்டிருக்கிறது என்பதை கடந்த ஐப்பசி மாதம் 25 ம் திகதி நிரூபித்தார்கள் மொறா 2003 மட்ட மாணவர்கள்.


பின்னணி


கீழைத்தேயவரான எமக்கு மேலைத்தேய கலாச்சாரம் கிளுகிளுப்பூடுகிறது.நாளையை பற்றி யோசிக்காமல் தனக்காக உழைத்து தனக்காக வாழ்வது.கண்ணைப்பறிக்கும் ஒளிவிளக்குகளின் மின்னல்களோடு அதிரவைக்கும் இசைசேர்த்து நடனமாடி உற்சாகபான மிதப்பில் தாபங்களை தணிக்கும் தற்காலிக துணையோடு இரவுகளை ஓட்டுவது என்பனவெல்லாம் எமக்கு அந்நியமாக இருந்தாலும் அடிக்கடி ஆசையூட்டுபவை.அதேபோல் அமைதியான பந்தபிணைப்புகள் நிரம்பிய தியானம் வழிபாடு கலாச்சாரம் கட்டுப்பாடுகள் சேர்ந்த கீழைத்தேய வாழ்க்கை முறையாலும் மேற்க்குலகத்தினர் கவரப்படுகிறார்கள்.அவ்வாறு இந்து மதம் மீது ஈர்க்கப்பட்ட பிரித்தானியர்கள் வேல்ஸ் எனும் இடத்தில் ஒரு முருகன் கோவிலை கட்டி வழிபாடுகள் செய்து வருகின்றனர்.நம்மவர்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி ஆங்கில துதிப்பாடல்களை பாடி வழிபடுவது போல அவர்கள் செய்கிறார்கள்.

செருப்பு புத்தி வெளிப்பாடு


வழமையான ஒன்றுகூடல்களுக்கு கூட வராத பலரும் வரலாறு காணாதவாறு(?) பெருமெடுப்பில் ஒன்று கூடி 1000£ பவுண்ட்ஸ் செலவில் வாகனம் ஒன்றை அமர்த்தி வேலைகளுக்கு விடுமுறை எடுத்து 2 நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு வெள்ளைக்காரர் பூசை செய்யும் அந்த புனித தலத்தை தரிசித்து வரங்கள் வாங்கி திரும்பி வந்தார்கள்.


இந்த அறிவு ஜீவிகளிடம் இந்த தளத்தின் வழியாக சில கேள்விகளை முன்வைக்கிறேன்.

கடவுள் நம்பிக்கையை வாழ்க்கைக்கு ஊன்று கோல போண்றது.தடுமாறும் சமயங்களில் பிடித்தே ஆகவேண்டும்.வாழ்க்கையே தடுமாற்றம் என்றால் வாழ்க்கை முழுக்க இடுப்பில் மந்திரித்த அரைஞாண் கயிறு கட்டியே ஆகவேண்டும்.பிழை சொல்லவில்லை.ஆனால்....

1) கடவுளை தேடி இவ்வளவு தூரம் பெரும் பண செலவோடு போயே ஆகவேண்டுமா?.
நாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளில் சிலவற்றை தெரிந்தெடுத்து உதவி இருக்கலாமே?,அந்த பிஞ்சு உள்ளங்கள் உங்களை வாழ்த்தும் போது வேல்ஸ் முருகன் தராதது கூட கிடைத்து இருக்கும்.

2)வெள்ளைக்காரன் பூசை செய்தால் புனித தலமா?, அப்போ ஒரு பேச்சுக்கு பிரிக்ஸ்டனின் காப்பிலியள் கோயில் கட்டினல் அதை புனித தலமாக்கி யாத்திரை போவீர்களா?

3)போரில் உயிர்நீத்தவர்களை நினைவு கூர்வதற்க்கு கூட வேலைக்கு விடுப்பு போட்டு ஒன்று சேராத நீங்கள் இந்த புனித யாத்திரைக்காக மட்டும் ஒன்று கூடியதன் காரணம் என்ன?

மேற்சொன்ன வினாக்கள் மூலம் என்னை பகுத்தறிவுவாதியாகவும் வித்தியாசமானவனாகவும் காட்டிக்கொள்ளும் எண்ணம் கிஞ்சித்துமில்லை.இதே கேள்விகளை என்னிடமும் கேட்கப்போகிறேன்.என்கவலை எல்லாம் படித்தவர்கள் விளக்கமானவர்கள் என்று சமூகத்தில் சிறுபகுதியேனும் வைத்திருக்கிற நம்பிக்கைகளை இவ்வாறான புனித தல (?) யாத்திரைகள் சிதைத்துவிடக்கூடாது என்பதுதான்.சிதைந்து போன ஓரினத்தின் தூண்களான நம்போண்ற இளைஞர்கள் மத ஊண்றுகோல் பிடித்து தள்ளாடினால் ஆயிரம் ஆண்டுக்கும் எழுந்திருக்க முடியாது.

இறுதியாக பஞ்சு டயலாக்....

தன்னம்பிக்கை உள்ள சுயநலமில்லா மனிதனுக்கு மதங்கள் தேவையில்லை.
ஆதி திராவிடன் எந்த மதத்தையும் பின்பற்றவுமில்லை..

2 comments:

Rajeeth said...

நாத்திகன் என்ற சொல் அற்றுப்போய், பகுத்தறிவாளன் என்ற புதிய பதம் உருவாகியுள்ளது. ஒரு பகுத்தறிவாளனாக என் சிந்தனைகளுக்கு எழுத்துருவம் கொடுத்ததாக உணர்கிறேன்.இன்னும் நிறைய விடயங்களை சொல்ல முடியும்.

கிடுகுவேலி said...

நல்ல கருத்துகள்...சிந்திக்க வேண்டியது இளைஞர்களின் பொறுப்பு. ஆனால் ஒரு தொலைக்காட்சி உரையாடலில் யாரோ ஒரு பேராசிரியர் சொன்னார். “உலகமயமாதல் என்பது சுயநலத்தைத்தான் மக்களிடம் அதிகளவு வளர்த்திருக்கிறது. பொதுநலம் சார்ந்து சிந்திக்கும் பண்பை சிதைத்துவிட்டது”......அது என்னவோ சரியென்றே தோன்றுகிறது.