தற்போதைய நிலவரம்-04

.

எமது மட்டத்தின் விஞ்ஞானியான கெமிக்கல் அலிபாய் மிட்சம் நகரில் உள்ள மணல் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததும் கனாக்காலம் நிருபருக்கு தூக்கிவாரி போட்டது.ஏனென்றால் அந்த வீடு அவரின் தற்போதைய இருப்பிடத்துக்கு 50 மீற்றர் தொலைவிலேயே இருந்தும் கடந்த 2 மாதங்களாக அலிபாய் கண்ணில் தட்டுப்படவில்லை.தீவிர புலனாய்வு முடுக்கி விடப்பட்டு பெறப்பட்ட தகவல்கள் அதவிட மிக அதிர்ச்சியை தருபவையாக இருந்தன.அதாவது அலிபாய் வீட்டுக்குள் ஜம்போ சைஸ் டெடி பியர்,குரங்கு பொம்மைகளோடு குலாவி மகிழ்வதோடு அவற்றோடு உறங்குவும் செய்கிறார்.அதைவிட உள்வீட்டு ஜிம் ஒன்றை பெரும் செலவில் தருவித்து உடம்பை இரும்பாக்கி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.இவ்வாறு தொடரும் பட்சத்தில் விரைவில் ஒரு குழந்தை மனதுள்ள முரட்டு ஹீரோ ஒருவர் தமிழ் திரையுலகத்துக்கு கிடைப்பது உறுதி.





முகுந்தராசன் சில நாட்களாக முக நூலில் அடிக்கடி தட்டுப்பட்டு வருகிறாராம்.தலை வளர்த்து டெரரா போஸ் குடுத்த சில நாட்களிலேயே அதை நேராக்கி இன்னொரு போட்டோ போட்டார்.அடிக்கடி இயற்கை அழகை காட்டும் படங்களை முகநூலில் போட்டு வருவதுவும்,கருத்துக்கள் வெளியிடுவதும் குறித்து அவதானிகள் பலத்த சந்தேகங்களை வெளியிட்டு வருகின்றனர்.தனிமையை போக்க முகநூலை நாடும் பொதுவான காரணியோ பெண்கள் சம்பந்தப்பட்ட விசேட காரணியோ இதன் பின்னால் இருக்கலாமென்பது அவர்கள் கருத்தாகும்.எது எப்படியோ எங்கிருந்தாலும் நன்றாக இருந்தால் சரிதான்.





சிங்கபுரியில் இருந்த 7ஜி கும்பல் பெரிய பிரித்தானியாவுக்கு தளத்தை நகர்த்த முடிவெடுத்துள்ளதையடுத்து டகோட்டாவிலிருந்த தலைமைச்செயலகம் காலி செய்யப்பட்டுள்ளது.சுகா ஆவணிமாதமே பிரித்தானியாவுக்கு பின்வாங்கி ஓடியதையடுத்து ஜோன் கொன்சாலும் குடிகாரன் சௌந்தரும் பிரித்தானியா பயண ஏற்பாடுகளை கவனிக்க இலங்கைக்கு பயணமானார்கள்.மிஞ்சியிருந்த அலியப்பாவும் சிரிப்பு ரவுடியும் சென்ற கிழமை வீட்டை காலி செய்து கொண்டு அறை ஒன்றுக்கு குடி பெயர்ந்துள்ளனர்.மாசி மாச போனஸ் கிடைத்ததும் பிரித்தானியாவில் சிரிப்பு ரவுடி தரையிறங்க திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன.அலியப்பா புரூணை நோக்கி பயணிக்கவுள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.என்னதான் இருந்தாலும் ஆற்றங்கரையில் இருந்த அந்த அழகிய இல்லத்தில் இருந்த மகிழ்வை ஆயுளுக்கும் மறக்க முடியாது.





பிரித்தானியவில் இருந்து கனடா பக்கமாக இடம்பெயர்ந்த சசிக்குமார் பற்றி தகவல்கள் அறிந்தவர்கள் உடனடியாக கனாக்காலம் செய்திப்பிரிவுக்கு அறிவிக்கவும்.பலகாலம் தொடர்பில் இல்லாத இவர் கனடாவில் கொட்டும் இரண்டடி உயர பனிக்குள் புதைந்து போயிருக்கலாம்,அல்லது சூறைக்காற்றில் பறந்து உயரமான யூக்கலிப்ப்டஸ் மர வட்டுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.உறுதியான எலும்பும் டெரரான பாடியும் கொண்ட இவர் இறுதியாக பிரித்தானியாவில் பிரெஞ்சு தாடியுடன் சுற்றி திரிந்த போது எடுக்கப்பட்ட படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.





நிகழ்கால நாட்களில் மட்டத்து நண்பர்,நண்பிகள் பலருக்கு கலியாணம் நடந்து வருவது மிக்க மகிழ்சியை அளிக்கிறது.ஆனாலும் பலரும் பெண்நண்பிகள் கிடைத்தவுடன் நண்பர்களுடனான தொடர்புகளை குறைத்துக்கொள்வதையும் அவதானிக்க முடிகிறது.கங்காரு நாட்டில் வதியும் குமாரனும் நார்வே நாட்டு சிறுத்தையும் இந்த வரிசையில் கடைசியாக சேர்ந்து கொண்ட ஆட்கள்.இது குறித்து தண்ணிய போட்டுவிட்டு சிலாகித்த பெரிய பிரித்தானிய வாழ் மட்டத்து நண்பர்கள் "நமக்கும் கலியாணம் ஆகும் தானே? அப்ப நாமளும் பெடியள் கழட்டி விடுவம்" என முடிவெடுத்து கடுப்பில் திரிவதாக கேள்வி.


பிற் குறிப்பு-
தற்போதைய நிலவரம் பகுதி தனிப்பட்ட எவரையும் தாக்குவதை நோக்கமாக் கொண்டதல்ல.இதை புரிந்து கொள்ளும் மனமுதிர்சியில்லாத் சிக்கன்களும்,மங்கோகளும் இங்கே வருவதை நிறுத்தவும்.

.



கார்த்திகை மாத குளிருக்குள்ளும் வெறும் ரீசேர்ட்டோடு லண்டன் மாநகரின் கிழக்கே உள்ள இல்பேட் பிரதேச பேரூந்து தரிப்பிடத்தில் காத்திருந்த எனக்கு முன்னால் அரையில் இருந்து கால்சட்டை விழ விழ வந்து நின்றவனின் நோக்கம் வம்பிழுத்தல் வகையை சார்ந்தது என்பதை என் கற்பூர மூளை உடனேயே கனகச்சிதமாக கவ்விவிட்டது.கழுத்தில் இருந்த தடித்த உலோக சங்கிலியும் ஒட்ட வெட்டப்பட்டிருந்த தலை முடியும் அவன் தன்னை தானே ஒரு சண்டைக்காரனாக பிரகடனப்படுத்தியிருப்பதற்கான அடையாளங்களாக இருந்தாலும் அதற்கும் அப்பால்ப்பட்டு ஏதோவொரு மறைமுக காரணம் என் மீதான முரண்பாட்டுக்கு பின்னாலிருப்பதாகவும் உள்மனம் சொல்லியது சற்றே தூரத்தில் நின்று இவனை பார்ப்பதும் வெடுக்கென தலையை திருப்புவதுமாயிருந்த வடநாட்டுக்காரியை பார்த்ததும் சரியென்று ஆகியது.சண்டை பிடித்து கோபமாய் இருக்கும் பெண்நண்பியை மீள தன்பால் ஈர்க்கும் முகமாகவோ, முன் பின் தெரியாத ஒரு பிகரை வீரம் காட்டி மடக்கும் முகமாகவோ என்னை தட்டிப்பிழிய அவன் முடிவெடுத்து இருக்கலாம்.வயது ஏறியும் பூச்சிப்பிள்ளை கணக்கா இருக்கும் எனது மூஞ்சி அமைப்பும் அவனது எண்ணத்தை வலுப்படுத்தியிருக்கலாம்.



உருண்டோடிய சில நிமிடங்களுக்குள் அவன் "யோவ்! வை யூ லுங்கிங் அற் மீ மான்?" என்று வழமையான லண்டன் வம்பிழுப்பு வசனத்தை வெளிவிட்டபடி நெருங்க தொடங்கிவிட்டான்.நான் இப்போது என் முன்னால் நின்ற தெரிவுகளில் ஏதாவது ஒன்றை தெரிந்து எடுத்தாக வேண்டும்.முதலாவதாக நிபந்தனையின்றி சரணடைவது."பிளட்! யு லுக் லைக் ஏ லயன் , லீவ் திஸ் வாங்கர் புறோ" என்று தன்மானத்தை விற்று வார்த்தைகளை விட்டு கைகுலுக்கி கொள்ளலாம்.விளைவாக அவன் இரக்கப்பட்டு துப்பிவிட்டோ,தள்ளி விழுத்தி விட்டோ செல்லக்கூடும்.அல்லது "அடிமை ஒன்று சிக்கிட்டான்டா" என்ற புளகாங்கிதத்தில் நாலு நாள் எழும்பாத அளவுக்கு கும்மி விட்டு செல்லவும் கூடும்.அடுத்த தெரிவு அரசியல் தீர்வு.யாரையாவது உதவிக்கு வரும் வரை சத்தமாக பேசி சமாளிப்பது.இந்த சத்தம் வீதியால் போகும் சனத்துக்கு தகராறு குறித்து தெரியப்படுத்தும்.அவர்களில் சிலரோ பலரோ சேர்ந்து வந்து ஏதாவது ஒரு தீர்வை தந்து விட்டு செல்ல வாய்ப்பிருக்கிறது.முரட்டு கிழக்கு ஐரோப்பியர்கள் வந்தால் இவனை பிரிச்சுமேய்வதுடன் என்னை பாதுகாப்பாக அனுப்பி வைக்கவும் செய்வார்கள்.மூன்றாவது வழி சடுதியான,வேகமான பின்வாங்கலை மேற்கொள்வது.பிரடியில் குதிக்கால் பட ஓடி அருகே உள்ள நிலக்கீழ் ரயிலில் ஏறி தப்பியோடுவது.அவனும் தன்னைபார்த்து இந்த ஓட்டம் ஓடுகிறானே என்ற பூரிப்பில், முஞ்சியை நீட்டியபடியிருக்கும் அந்த பிகருக்கு வீரம் காட்டிய திருப்தியில் ஒருகட்டத்துக்கு மேல் விரட்டுவதை நிறுத்திவிடுவான்.என் முன்னால் நின்ற மூன்று தெரிவுகளையும் கண நேரத்தில் விலக்கிவிட்டு எப்போதும் எனக்கு விருப்பமான இறுதி தெரிவான நான்காவதை அலச தொடங்கினேன்.


வெற்றிகரமான திருப்பியடிப்பு எப்போதும் மிகுந்த மன மகிழ்சியை தரவல்லது.திருப்பியடிக்கும் போது மெலிய,வலிய அடிகள் பலவோ சிலவோ கிடைக்க வாய்ப்பிருக்கிறது.எது எப்படியோ எனது 27 வயது வாழ்க்கையில் அடிச்சதை விட அடி வாங்கினது தான் கூட என்பது மறைக்கவோ மறுக்கவோ இயலாத விடயம்.நினைவு நிற்கிற வரை எனக்கு முதன் முதலாக காதைப்பொத்தி அறைந்தது என் பெரிய மாமாக்காரன்.நோஞ்சான் பிள்ளை என்று எல்லோரும் பத்திரமாக வளர்த்த என் மீது வீட்டுக்குள் துப்பியதுக்காக 5 வயதில் அடியை போட்டு தொடக்கி வைத்தவர் அவர்தான்.இது 1989 இல் ஊரைவிட்டு ஓட முதல் நடந்தது.பின்னர் இடம்பெயர்ந்து சிறுப்பிட்டியில் இருந்த போது அகப்பை காம்பு,பப்பா குழல்,பூவரசம் தடி என்று பல வகையறா அடிகளை வாங்க பழகியிருந்தேன்.ஒரு கையால் பிரடியில் பிடித்து முதுகு தெரியும் வரை அமத்தி வளைத்துவிட்டு மறுகையால் முதுகில் அம்மா போடுகிற அடிகள் விசேடமானவை.குவிந்த உள்ளங்கை முதுகில் இறங்கும் போது காற்றடைத்து எழுகிற "படார்" என்ற சத்தம் அயலில் இருப்பவர்களை பயமுறுத்தும்."சின்ன பெடியனை இப்பிடி மோட்டுத்தனமா அடிக்க கூடாது" என்று சொந்தக்கார சனம் அம்மாவோடு வாக்குவாதப்பட எந்தவிதவலியுமில்லாமல் நான் ஓடிக்கொண்டிப்பேன்.பிறகு புத்தூர் சோமஸ்கந்தாவில் 4ஆம் ஆண்டு படிச்ச நேரம் பக்கத்து வகுப்பு மொனிற்றரோடு கொழுவுப்பட்டுட்டன்.வீட்ட போகேக்க அவன் கூட்டமா வந்து என்னை பிடிச்சு கும்ம தொடங்கினான்.நான் எல்லா அடியையும் வாங்கிக்கொண்டு கைக்கு எட்டுப்பட்ட ஒருத்தன் கழுத்தை பிடித்து அமத்த தொடங்கினேன்.எனது நல்ல நேரத்துக்கு அந்த இடத்துக்கு வந்த பக்கத்து வீட்டு அரவிந்தன் அண்ணா எல்லாரையும் அடிச்சு கலைச்சு என்னை வீட்டை கூட்டிக்கொண்டு வந்தார்.அடுத்த நாள் நான் அமத்தினதால கோபி எண்ட பெடியனுக்கு கழுத்து வீங்கி விசயம் பள்ளிக்கூடத்துக்கு போய் அடிச்ச அவ்வளவு பேருக்கும் குண்டியில் அடி விழுந்ததாக அரவிந்தன் அண்ணா சொன்னதும் ஒரே புளுகமா இருந்தது.அவர் தவளைபாய்ச்சலில் காவியமாகி விதைத்த போது அடிவிழுந்த அன்று சொன்ன "அடிச்சா திருப்பி அடிக்க தெரியாதோடா,ஒருதனுக்கு அடிக்க எல்லாரும் ஓடுவாங்கள்" என்றது மீளவும் நினைவுக்கு வந்தது."என்ரை பிள்ளையை உந்த காடைக்கூட்டங்கள் கொன்று போடுவாங்கள்" என்று அம்மா பிடிவாதம் பிடிக்க கல்வியன்காடு தமிழ்கலவன் பாடசாலைக்கு அப்பா மாத்தி விட்டார்.முதல் நாளே எல்லாரும் என்னை ரவுண்டு கட்ட நான் மௌனமாக நின்றேன்."எனக்கு அடிப்பியா?,இவனுக்கு அடிப்பியா?,அவனுக்கு?" மதிய உணவு நேரம் கேள்விகள் எகிற தொடங்கின.நீண்ட நேரம் மௌமாக நின்ற என்னைப்பார்த்து மோகனதாஸ் என்ற பெடியன் சொன்னான் "பாவம்! படிக்கும்.ஆனா அடிக்க மாட்டுது போல".இனியும் ஊமைக்கோட்டான் போல இருக்கப்படாது என்று முடிவெடுத்து அடுத்த நாள் இடைவேளை நேரத்தில் ஊமல் கொட்டையில் உதைபந்து விளையாடும் போது கொழுவுப்பட்ட விமலேந்திரன் என்ற ஒரு வகுப்பு தாதாவை தட்டிப்பிழிந்து பள்ளிக்கூடத்துக்க அடிபட கூடிய ஆட்கள் என்ற வரிசையில் சேர்ந்து கொண்டேன்.1995,யாழ் இந்துவில் 6 ஆம் ஆண்டில் இணைந்த போது வாய்த்தர்க்கம், மட்டுபடுத்தப்பட்ட சண்டை என்று வருமே தவிர பெரிதாக அடிபாடு வராது.ராபியோடு ஒருக்கா மட்டுப்பட்ட சண்டை ஒன்று வந்ததாக ஞாபகம்.பிறகு 1996 இல் கரவெட்டியில இடம்பெயர்ந்து இருந்த நாட்களில் கோவில் திருவிழா கச்சேரியில் முன்னால் இருந்த மனநலம் குன்றிய ஒருத்தனுக்கு எனக்கு பின்னால் இருந்தவன் கச்சான் கோதை எறிய அவன் கடுப்பாகி எழுந்து என்னை சாத்து சாத்து என்று சாத்திவிட்டான்.எல்லாம் முடிய பின்வரிசையில் நின்ற கோபாலு மாமா கேட்டார் "இவ்வளவு கதைக்கிறாய்,ஒரு அடி எண்டாலும் திருப்பியடிக்க தெரியாதோ?".பிறகு துன்னாலை வயல்கரையலை வரேக்கை வயது கூடின இரண்டு பெடியள் வந்து காரணம் கேட்காமல் கும்மிவிட்டுபோனார்கள்.வன்னியில் இருக்கேக்க இதே பாணியில் இன்னொரு அடி எனக்கு விழுந்தது.இராமநாதபுரம் மகாவித்தியாலய காலைபிரார்த்தனையில் முன்னால் நின்ற ஒரு வகுப்பு குறைஞ்ச பெடியனுக்கு பின்னாலிருந்தவன் குறுனி கல்லால எறிய அவன் நான் தான் எறிஞ்சனான் என்று சண்டைக்கு வந்தான்.பள்ளிக்கூடத்தில இருந்த ஆளில்லாத கொட்டிலுக்குள்ள நடுவர்கள் "யாராவது வாத்திமார் வருகினமா?" என்று காவல்காக்க வெடித்த சமரில் முதலடி எனக்கு காதை பொத்தி வெழுந்தது.சங்கூதும் சத்தம் அடங்க முதல் அவன் போட வேண்டிய அடியை எல்லாம் போட்டு முடித்து விட்டான். ஒரு வகுப்பு குறைஞ்ச பெடியனே அடிச்சிட்டான் என்று பள்ளிக்கூடம் முழுக்க கதை பரவ வகுப்பில இருந்த தவ்வல்,தவக்கை எல்லாம் எனக்கு அடிப்பம் என்று அறிக்கை விட நிலவரம் மோசமாகி போனது.அப்ப தான் கராத்தே பழகுவம் எண்ட முடிவை எடுத்தன்.பிறகு ஜெயசிக்குறு விரட்ட ஓடியோடி திரிஞ்சதிலை கராத்தே கனவாக இருந்தாலும் வீட்டில் கதவுகளுக்கும்,வாழை மரங்களுக்கும் உதைகளை அவ்வப்போது கொடுக்க தவறியதில்லை.



வன்னியால் திரும்பி வந்த போது யாழ்ப்பாணம் மாறிப்போயிருந்தது.காக்கிசட்டைகளை காணும் போது இதயத்துடிப்பு எகிற தொடங்கும்.பயம் தெளிந்து சகஜமாக முதல் அருணோதயன்,ரஜீவ் போண்ற பூச்சி பிள்ளைகள் கூட எனக்கு அடிக்க,தலையில் குட்ட தொடங்கியிருந்தார்கள்.பின்னர் பிறவுண் வீதி மணி ரியூசனில் படித்த போது பெரியளவில் நண்பர் வட்டம் விரிந்தது.அம்பு வில்லு அடிபாடு,நெல்லிக்காயால் எறிபடுவது என சண்டை விளையாட்டுகள் விளையாடியதாலோ என்னவோ எங்களுக்குள் பெரிதாக மோதல் எதுவும் மூளவில்லை.ஆதிக்கத்தை வகுப்பறையில்,பாடசாலையில் நிலைநாட்ட தனித்தனி பேராக மோதிக்கொள்ளும் வழமை சாதரண தரம் முடிந்த நாட்களோடு இல்லாது போனது.உடல் வலு,சண்டை நுட்பம்,மனோபலம் போண்ற காரணிகள் கொண்டவர்களிடம் இருந்த வகுப்பறை,பாடசாலை ஆதிக்கம் இப்போது இவை எதுவுமில்லா பேர்வழிகளிடமும் செல்ல தொடங்கியது.தனியாக முடியாதவன் கூட்டத்தை சேர்க்க தொடங்கினான்.இப்போது தனிநபரை தாக்க கூட்டத்தை கூட்டி வர தொடங்கினார்கள்.எனக்கு ஆரம்பத்தில் அந்நியமாக இருந்த இவ்விடயம் பின்னாளில் தவிர்த்துக்கொள்ளப்பட முடியாதது ஆயிற்று.



2002 ஆமாண்டு இரவு பொழுதுகளில் பிறவுண் வீதியில் இருந்த எனது வீடு பட்டாசுகள் வீசி குழுத்தாக்குதலுக்கு உள்ளானது.எப்பிடியும் இரண்டாம் தரம் வருவாங்கள் எண்டு மதிலோடு காத்திருந்து வந்தவங்களை நோக்கி டோர்ச் அடிச்சு கத்தியை வீச கூட்டம் அலறியடித்து ஓடிப்போன விதம் எனக்குள் இருந்தா ஆக்ஸன் ஹீரோவை தட்டியெழுப்பி விட்டது.பிறகு முட்டை அஜித்தோடு கூட்டு வைத்து இரவிரவாக பெடியள் வீடுகள் மீது வெடி வீசி தாக்கிவிட்டு மறுநாள் வகுப்பறையில் கிளம்பும் பரபரப்பை அப்பாவியாக கேட்டுகொண்டு இருக்க தொடங்கினேன் .விறுவிறுப்பாக போய் கொண்டிருந்த இந்த நடவடிக்கைகளை தோசையின் வீட்டுக்கு வெடி போட போனதோடு நிறுத்தும்படி ஆயிற்று.அர்த்த சாமத்தில் மதிலருகே நாங்கள் வெடி போட போகவும் தோசையின் அப்பர் சிறுநீர் கழிக்க வரவும் சரியாக இருந்தது.பதறிப்போன அவர் "கள்ளன் கள்ளன்" என்று கத்த, பாலன் மூலவெடியை கொளுத்தி வீச ஊரெல்லாம் கலைக்க ஓடி வந்து யாழ் இந்து மைதானத்துள் ஒளித்து தப்பினோம்.பின்னாளில் ஆசைப்பட்ட படி கராத்தே,குங்பூ கலைகளை ஓரளவுக்கேனும் பழக வாய்ப்பு கிடைத்திருந்தாலும் பிரயோகிக்க தனிநபர் சண்டைகள் வாய்க்கவில்லை.கம்பசில் அமைந்தவை எல்லாமே குழுச்சண்டைகள் தான்.ஊருக்கு லீவில் போயிருந்த நேரம் ராஜா தியேட்டரில் மும்பை எக்பிரஸ் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது யாழ்பாண ரவுடி கும்பலோடு சைக்கிள் மோதுப்பட நாள் முழுக்க சத்தம் கேட்கும் படி காதைப்பொத்தி அடி பரிசாக கிடைத்தது.அத்தோடுவிடாமல் அவர்கள் கட்டை,போத்திலோடு விரட்ட மான் கராத்தேயை பாவித்து ஓடி தப்பியிருந்தேன்.இங்கிலாந்து வந்த பின் நீண்ட நாள் அடிவாங்காத குறையை காப்பிலிகள் தீர்த்து வைத்தார்கள்.3 பேர் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அடித்து தூள்கிளப்பினார்கள்.தலையால் ரத்தம் சொட்ட சொட்ட முகநூலில் ஸ்ரேற்றஸ் போட்டுவிட்டு தான் படுத்தேன்.அடிக்கும் போது வலிக்கும் ஆனால் ஒரே நேரத்தில் பல அடி விழுந்தால் வலிக்காது.இது தான் குழுவிடம் அடிவாங்குவதற்கும் தனிநபரிடம் அடிவாங்குவதற்கும் வித்தியாசம் என்பதை அந்த சம்பவம் எனக்கு விளக்கியிருந்தது.




இப்போது அவன் எனக்கு சரியாக 3 அடி தூரத்திலிருந்து என்னை சண்டைக்கு வரும் படி அழைக்க தொடங்கியிருந்தான்.அவனது கரங்கள் ஒரு காப்பிலி "ராப்" காரனை போல சுழன்றவண்ணம் இருந்தன.எனக்கு மிக பிடித்தமான தெரிவிலக்கம் நான்கை நடைமுறைப்படுத்த நான் முடிவெடுத்திருப்பது அவனுக்கு தெரியாத வண்ணம் என் உடல் பாவனைகளை மாற்றிக்கொண்டேன்.அவன் 18 வயதிலும் குறைவானவனாக இருக்கும் பட்சத்தில் சிறைக்கு போக நேரிடும்,அவன் குழுக்காரனாக இருப்பானாகில் நாளை பலரை எதிர் கொள்ள நேரிடும்,அவன் எனது தாக்குதலை முறியடிக்கும் பட்சத்தில் பலத்த இழப்புக்களை சந்திக்க நேரிடும்.முன்நின்ற அனைத்து எதிர்மறை சிந்தனைகளையும் துரத்தி எழுந்து அரை வட்டமாக சுழன்று "செங் சொவா" நிலையில் வலது காலை வீச அவனது கழுத்துக்கு சற்று கீழே இறங்கிய உதை அவனை மல்லாக்க விழுத்தி சில கணங்களில் அசைவற்றவனாக ஆக்கிவிட்டிருந்தது.

தெரிவு 4 - "அவலத்தை தந்தவனுக்கு அதை திருப்பி கொடு"




"ஏன் சிங்கப்பூரை விட்டுட்டு வந்தனி?" தொண்ணூற்று ஒன்பது தரம் ஏற்கனவே கேட்கப்பட்டிருந்த கேள்வியை சற்று முன்னர் தான் ஒரு நண்பன் நூறாக்கிவிட்டிருந்தான்.கேள்வி ஒன்றாக இருந்தாலும் ஒரேபதிலை சொல்ல என்மனம் இடங்கொடாததால் நூறுவிதமாக பதில் சொல்லி மிகவும் நொந்துபோய்விட்டேன்."வாழுறதுக்காக வேலை செய்யலாம்,ஆனா வாழ்க்கையே வேலை ஆகிடக்கூடது இல்லையா?" என்று நான் எதேச்சையா யாருக்கோ சொன்னது நூறு பதில்களிலும் எனக்கு ரொம்பவும் பிடித்துப்போயிற்று.நேற்று இதே பதிலைத்தான் ஆங்கிலத்தில் கஸ்டப்பட்டு மொழிமாற்றி அதே கேள்வியை கேட்ட வெள்ளையின அழகிய நண்பி ஒருத்திக்கு சொல்லிவிட்டு வந்தேன்.சாங்கி தளத்திலிருந்து இருந்து விமானச்சக்கரங்கள் விடுபடும் பொழுதுகளில் சிங்கபுரியை தாக்கி ஒரு கட்டுரை வரையத்தொடங்க வேண்டும் என்று நினைத்தபடி செயல்பட விமானத்தில் சூழல் அமையவில்லை.அதாகப்பட்டது அவுஸ்திரேலியாவில் இருந்து வந்து சிங்கபுரியில் ஆசிரியராக பணியாற்றும் பிரித்தானிய பாட்டனாரை கொண்ட,மலேசியதமிழ் பெண்ணை மனைவியாகவுடைய "பிலிப்" என்கிற பேர்வழி அந்த சூழல் இல்லாது போனமைக்கு மூலகாரணமாயிருக்கலாம். நெடும் பயணம் ஒன்றில் அருகேயுள்ள ஆங்கிலத்திலிருந்து அந்தியப்பட்டுபோயிருக்கும் அப்பாவி சக பயணியை கலவரப்படுத்தாது ஆறுதலாய்,வார்த்தைகளை பிரித்து பேசும் கலையில் கைதேர்ந்திருப்பது சீனருக்கே ஆசிரியராக இருந்த பிலிப்புக்கு பெரிய விடயமாயும் இருந்திருக்காது.




"சிங்கபுரி" நெருப்பை எரிக்கும் நகரம்.அந்தக்காலத்தில சிங்கப்பூர் என்ற பெயர் வர காரணமாக இருந்த அதே சிங்கத்தை பிடிச்சுக்கொண்டுவந்து இப்ப சிங்கப்பூரில விட்டா ஓடிப்போய் "ஏசி" றூமுக்குள்ள போய் பதுங்கிவிடும் அளவுக்கு வெப்பம்.மரத்தின் வளர்ச்சிக்கு கூட சுதந்திரம் கொடுக்காமல் கத்தரிபோட்டு அடக்கி வளர்க்கும் நிர்வாக பூமி.நிலமெல்லாம் கொங்கிறீட்டு ஊற்றி அதன் மேல் நடக்கும் மேன் மக்கள் வாழ்கிற நாடு.ஆளையாள் பார்க்காமல்,ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளாமல் ஐ போட்டும்,ஐ போனும் கரங்களில் தாங்கி செவிகளில் ஹெட்போனை ஓட்டி மக்கள் புகையிரதங்களில் போகின்ற அழகை காண ஆயிரம் கண்கள் வேணும்.யாராவது ஒருத்தன் இந்திய சாயலில் அருகே உட்கார்ந்தால் ஒடுங்கியும் வெள்ளைக்காரர்களை காணும் போது நிமிர்ந்து வெளித்தள்ளியும் உட்காரும் சப்பட்டை இன பெண்களை காணும் போதெல்லாம் ஒரு கண்ணாடியை கொடுத்து "மூஞ்சியை ஒருக்கா பார்க்கும் படி" சொல்ல தோண்றும்.ஆறு நாள் வேலை,ஏழாவது நாளும் வேலை என்பது கட்டுமானதுறையில் வேலை பார்க்கும் அடியார்கள் நியதி.சிங்கபுரி வளரத்தொடங்கிய காலங்களில் காய்கறிக்கடை வைத்திருந்தவன்,கஞ்சா வித்துக்கொண்டிருந்தவன் எல்லாம் கட்டுமானதுறைக்குள் கால்பதித்தன் காரணமாக இன்று பல ஆயிரம் அரைக்கிறுக்கு முதலாளிமாரை சந்திக்கவேண்டியிருப்பதால் அடிமட்ட வாய்த்தர்க்கங்களுக்கு குறைவேதுமில்லை.




"படிச்சாத்தான் பெரிய ஆளா வரலாம்" என்ற வழமையான யாழ்ப்பாணத்து போதனை வழி ஒழுகி வளர்ந்தவர்களில் நானும் ஒருவன்.ஆண்டு ஐந்து ஸ்கொர்லர்சிப்பில் ஆரம்பித்து,சாதாரணதரம்,உயர்தரம் என என் வாழ்க்கையின் இளமைப்பராயம் முழுக்க இலக்குகள் நிர்ணயித்து அதை நோக்கி விரட்டிய சமுதாயத்தின் கட்டளையை ஏற்று ஓடி முடித்த போது 18 வயதுகள் ஓடிவிட்டிருந்தன.இது தான் உனக்கு பெறுபேறு உனக்கு படிப்பதற்கு தரக்கூடியது இதைத்தான் என்று முற்றிலும் விருப்பமில்லாத துறை ஒன்றுள் என்னை இலங்கை கல்விவிதானம் திணித்த போது கல்வி மேலிருந்த ஆவல் முழுமையாக சிதறிப்போனது.இளவயதில் எனக்குள் ஆயிரமாயிரம் வண்ணக்கனவுகள் இருந்தன.பாடல்களில் வரிகளில்லாமல் வரும் இசைத்தட பகுதிகளை மட்டும் உச்சஸ்தாயியில் ஒலிக்கவிட்டு மனதுள் அவற்றோடு காட்சிகளை கோர்த்துக்கொண்டிருப்பேன்.எனக்குள் ஒரு விஞ்ஞானியை உருவகித்து உருவாக்கிய உந்துகணைகளும்,ஈர்க்கு குச்சி விமானங்களும் வீட்டின் கொல்லைப்புறவேலிக்குள்ளேயே முடங்கிப்போய்விட்டன.அதீத அளவில் தகவல்களை புகுத்தி வினாக்கள் கேட்டு திறமையை அளவிடும் பல்கலை கல்வி முறை எனக்குள் உருவக்கிய அழுத்தத்தில் இருந்து விடுபட கனவுலகில் சஞ்சரிக்க தொடங்கினேன்.கனவுகளை காட்சிப்படுத்தும் வாய்ப்பு கூட அமைந்த அரும் நண்பர்களால் சிறிதளவில் சாத்தியமாகி வளாகமட்டத்துள் இயக்குனர் என்ற அளவில் போய் நின்றது.கனவுகளை முழுமைப்படுத்த முனைந்த போது அசிங்களத்தின் கோரம் மிருகத்தனமாக தாக்கியது.வெறுத்துப்போய் நாட்டைவிட்டு சுயநலத்தோடு வெளியேறி லண்டன் மாநகரில் வசித்த பொழுதுகளில் போர்களத்தில் விழுந்த எதிரிகள் தொகையை இணையத்தில் எண்ணும் போது உருவாகும் களிப்பு மட்டுமே வாழ்க்கையை கவலையின்றி ஓட்ட போதுமானதாக இருந்தது.இளமை குலுங்கும் லண்டன் மாநகரில் தேடி வந்து பேச்சு கொடுக்கும் இளம் பெண்களோடு கடலை போடுவதில் கூட கவனம் ஆரம்பத்தில் செல்லவில்லை.எல்லாம் முடிந்தது என்று மே17 சொல்லியபோது இரவுகளில் தூக்கம் போனது.வெறும் பார்வையாளனாக இருந்த எனக்குள்ளேயே இவ்வளவு வலி என்றால் அந்த சத்தியவேள்வியில் ஆகுதியாகி எரிந்தவர்களுக்கு முடிவு எவ்வளவு வலியை கொடுக்கும் என சிந்திக்க பலவீனம் மிகுந்தது.தூக்கம் வர உடல் களைப்படையவேண்டும் என முடிவெடுத்து உடற்பயிற்சிக்கூடத்தில் உடம்பை வருத்த தொடங்கினேன்.நாட்களின் ஓட்டத்தில் அதுவே வெறியாகியது.ஆறு பை,எட்டு பை,ஐடியல் பாடி,நடனம் என என்சிந்தனை முழுக்க உடல் பற்றியதாகவே இருந்த பொழுதுகளில் எதிர்ப்பாலர் மீது நாட்டம் வந்தது.பரபரப்பாக பேசப்படவேண்டும் என்பதற்காகவே அழகி ஒருத்தியை விரட்டதொடங்கினேன்.எதிலும் திருப்தியடையாத,பிறரை விட முதன்மையாக இருக்கவேண்டும் என நினைக்கிற சுபாவம் என்னை சும்மா இருக்கவிடவில்லை.அடுத்த கட்டத்துக்கு திட்டமிட தொடங்கினேன்.




நாளும் கோளும் கூடிய பொழுது ஒன்றில் "நடவடிக்கை சிங்கபுரியை" தொடங்கினேன்.அலியப்பா என்கிற வசந்தன்,குடிகாரன் என்கிற சௌந்தர் ஆகிய இருவரும் அந்நேரம் சிங்கபுரியில் உறுதியாக நிலைகொண்டிருந்தார்கள்.மத்திய கிழக்கின் வெம்மை தாங்க முடியாமல் இருவரும் சிங்கபுரிக்கு தப்பி ஓடிவந்து இளைப்பாறிவிட்டு 7ஜி+ மீள் கட்டுமானத்துக்கு அழைப்பு விட்டார்கள்."எவ்வளவு நாளைக்குத்தான் தும்படிப்பது?,சொந்தக்காரன்களுக்கு ஒரு காட்டு காட்டோணும்" எண்டு நினைத்த ஜெயசுதனும் கூட்டு சேர வரலாற்று சிறப்பு மிகுந்த அந்த தரையிறக்கம் நடைபெற்றே விட்டது.அலியப்பாவை நம்பி அந்தாட்டிக்காவில் கூட குடியேறலாம்.பனிக்கரடியை போட்டுத்தள்ளி கறிவைத்தாவது சோறு போடுவான்.அலியப்பா குடிகாரனை இழுத்துக்கொண்டு ஆற்றங்கரையில் அழகாக வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்து அழைக்க பக்கத்து வீட்டுக்கு போவது போல நானும் ஜெயசுதனும் போய்விட்டோம்.சாங்கி விமான தளத்தில் விடிகாலையில் இறங்கிய போது அதிர்ச்சி காத்திருந்தது.நம்மை வரவேற்க எவருமே இருக்கவில்லை.இருவரும் நம் வருகையை கொண்டாட இரவிரவாய் தண்ணீர் குடித்து காலையில் மட்டையாகிப்போயிருந்தார்கள்.தொடக்கமே இவ்வாறு ரணகளமாக போனதாலோ என்னவோ இறுதிவரை அட்டகாசத்துக்கு குறைவிருக்கவில்லை. எல்லையில்லாமல் நீளும் வேலை மணித்தியாலங்கள் உடலை பலவீனப்படுத்திகிழமையில் கிடைக்கிற ஒரு நாள் விடுமுறையை கூட அனுபவிக்க விடாமல் படுத்த படுக்கையாக்கி விடுகின்றன.மதியத்தை தாண்டிய பொழுதுகள் வரை அன்றைய தூக்கம் நீளும்.மறுநாள் எழுந்து வேலைக்கு ஓடும் போது எப்போது அடுத்த ஞாயிறு வரும் என மனம் ஏங்கும்.இரும்பை தூக்கி வளர்த்திருந்தாலும் என்றாலும் சூரியனுக்கு எதிராக மிகவும் பலவீனமாகி விடுவது என் "பாடி".ஹெல்மெட்டும் கனத்த காலணிகளுமாக நாள் முழுக்க வெயிலில் நின்றால் தாங்கமுடியா கண்வலியும்,தலையிடியும் இரவில் இலவச இணைப்பாக தவறாமல் கிடைக்கும்.ஆரம்பத்தில் வேலையின் நுட்பங்களை கற்று தேற வேண்டும் என இருந்த ஆர்வம் நாள் செல்ல செல்ல இல்லாமல் போனதற்கு தினமும் தவறாமல் இரவில் வந்த தலைவலி காரணமாயிருக்கலாம்.வாரத்தின் ஒரே ஒரு விடுமுறை நாளும் நீண்ட தூக்கத்தில் கழிக்க வேண்டி நிர்ப்பந்தம் வந்த போது சிங்கபுரி மேல் ஆத்திரம் வந்தது.சிங்கபுரி பொருளாதாரத்தில் சிறிலங்காவின் சரிவை பயன்படுத்தி அதிஸ்ட லாபம் அடித்திருக்கிறது.தனிநபர் வருமானம் மேற்குலகத்தோடு ஒப்பிடும் படி இருக்கிறது.ஆனாலும் பண்பாட்டு,பழக்க வழக்க விழுமியங்களில் வளர இன்னும் ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படும்.சப்பை மூக்கு மங்கோலியர்களுக்கு தென்னாசியர் மேல் இருக்கும் இளக்காரத்துக்கான காரணம் தோலின் நிறத்தையன்றி வேறு எதுவுமாக இருக்க முடியாது.என்னைப்பொறுத்தவரை மங்கோலிய இனம் ஒரு வேகமான செம்மறி கூட்டம்.ஒரு கோட்டை வரைந்து காட்டினால் அதே கோட்டை இரண்டு மடங்கு வேகத்தோடு போடுவார்கள்.ஆறாவது அறிவின் தொழிற்பாட்டில் புராதன தென்னாசியருக்கு கிட்ட கூட நிற்க மாட்டார்கள்.குழைந்து சேர் சேர் என வணக்கம் போடும் இந்திய,இலங்கை வெளிநாட்டவர்கள் மத்தியில் கொஞ்சம் கூட மதிக்காது திராவிட திமிரோடு பேசும் என்போண்றவர்கள் சப்பை மூக்கன்களுக்கு மிக அந்நியமாக தெரிந்திருப்பார்கள்.





கம்பசை விட்டு வெளியேறிய பிறகு தூய்மையான நண்பர்கள் பலர் ஒரே இடத்தில் ஒன்று சேர்வது வாய்க்கவில்லை.சிங்கபுரியில் அது மீண்டும் நடந்தது.களைத்து வேலையால் வந்து இரவு உணவுக்காக சமைக்கும் போது நடக்கும் அரட்டையில் மீண்டும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.நடுஇரவு தாண்டி நீளும் அரட்டைகளில் கம்பசை போலவன்றி வாழ்க்கையின் எதிர்காலம் பற்றிய கருக்களே அநேகம் இருக்கும்.கிழமையில் ஒரு தடவையாவது காபி ஷொப் எனப்படுகிற திறந்தவெளி உணவு+தண்ணி கடைகளில் விடிய விடிய பக்கா பிளானுகள் போடுவோம்.7 மாதமும் சிங்கபுரி,டகோட்டா,18 இல்லம் எப்போதும் களையாகதான் இருந்தது.முதலில் என் விருப்பத்திற்குரிய மாமாவும் மாமியும் அவுஸ்திரேலியாவில் இருந்து வந்து சென்றார்கள்,சில நாட்களில் ஜெயசுதனின் அக்கா குடும்பம் வந்து சென்றது,பின்னர் ஜோன் கொன்சால் தரையிறங்கியவுடன் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது.இடையே நீண்டகாலமாக உறங்கியிருந்த் தன்மான சிங்கத்தை தினேசும் அடிவருடிகளும் தட்டியெழுப்பிவிட சிங்கபுரியிலும் 7ஜி+ பிக்சர்ஸ் குறும்படம் உருவாக்கியது.இறுதியாக எனது மச்சான்காரன் செந்தூரன் வந்த பொழுதுகளிலும் வீடு கலகப்பாக தான் இருந்தது.நான் வந்த பின்னும் அலியப்பா குடும்பம் அங்கே போயிருப்பதாக அறிந்தேன்.7ஜி+ சிங்கபுரியில் இருக்கும் வரை உயிரூட்டமாக அந்த இல்லம் இருக்கும்.வேலை பார்த்த இடத்தில் இருந்த சேப்டி ஆபீசர் பழனியப்பன்,சிரிப்பு அங்கிள் அலுவா,அக்கோ,முள்ளுதலை முதலாளி அகான்,கவர்ச்சிக்கிழவி திருமதி அகான், கணக்கியலாளரான மஞ்சள் அழகி மிஸிங், செமகட்டை லிடியா,போர்மன் சாஜகான், சின்ன மாமன் அன்வர், வால்டர்,முருகன் ஆர்.டி.ஒ,சாரா,சிமுசு அன்டனி என மனதில் நிற்கும் முகங்கள் ஏராளம்.எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்நாளில் மறக்க முடியாத "அனுபவத்தை" தந்த தயந்தனையும் மறக்க கூடாது.





விமானம் ஹீத்ரோ தளத்தை நெருங்கிக்கொண்டிருந்தது.காலைப்பொழுதில் லண்டன் நகரம் அழகாக இருந்தது.வழமை போல குறுக்கே வெட்டியோடும் மேகங்கள் இன்று இல்லை.நானும் எனது விண்டோஸ் 7 போணை எடுத்து சுட தொடங்கினேன்.தரையிறங்கி டெர்மினலை நோக்கி விமானம் நகர்ந்த பொழுதில் பிலிப் ஒரு விடயத்தை கேட்கலாமா என்று தொடங்கினார்.கடந்த ஒரு வருட கதை முழுவதையும் நீண்ட பயணத்தில் ஒப்புவித்து இருந்தேன்.தலையை ஆட்டியபடி கேள்வியை எதிர்கொள்ள தயாரானேன்."இளைஞன் ஒருவன் நீண்ட நெடும் பயணங்களை மேற்கொள்வதால் மன முதிர்வு அடைகிறான்.உன் பயணங்கள் தொடர வாழ்த்துகிறேன்.உன் பயணங்களின் முடிவில் எந்த தேசத்தில் ஓய்வடைய வேண்டும் என்று விரும்புகிறாய் என்று அறியலாமா?"சில கணங்கள் யோசித்து விட்டு பில்டப்பா பதிலை சொல்ல தொடங்கினேன்.
"நாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள்.உலகிலேயே பழமையான இனம் என்னுடையது என்று ஆழமாக நம்புகிறேன்.எமக்கு என்று ஒரு தேசம் வேண்டும்.அவ்வாறு உருவாகும் பட்சத்தில் அதனை உயர்த்த உயிரைக்கொடுத்து வேலை செய்யலாம்.அது கிடைக்கும் வரை இவ்வாறு ஒவ்வொரு நாட்டிலும் குறை பிடித்து மறு நாட்டுக்கு ஓடுவது தொடரும் என்றே நினைக்கிறேன்"

பிலிப் வழமையான வெள்ளைக்கார மட்டிவாய்ச்சிரிப்பை உதிர்த்தபடி பொதிகளை தூக்கவாரம்பித்தார்.விமான பணிப்பெண்கள் வெளியேற்ற பாதைகளில் நின்று புன்னகைத்துக்கொண்டிருந்தார்கள்.

வேலியால போன அரசியல் ஓணான மடிக்க பிடிச்சு விட்டாபிறகு வடிவேல் காமெடியள் வாறதும் ஓய்ஞ்சிட்டுது.தன்ர பாட்டில சிரிச்சு மகிழ உறுதுணையா இருந்தவனும் இப்படி ஆயிட்டானே என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கேக்கை தான் மகிந்த மாமா வந்தது "அபி ஆட்சி இருக்கும் வரைக்கும் எவர் கிறீன் காமெடிதாங் மல்லி" என்று சொல்லி முடிச்சு எருமையில ஏறிப்போறமாதிரி கனவு வந்தது.திடுக்கிட்டு எழும்பி நித்திரை வராம இணையத்த தட்டேக்க "கிறிஸ் பூதம் தாக்கி பெண் படுகாயம்" எண்டு செய்தி கண்ணில பட பகிடி விடப்போறன் எண்டு சொல்லிப்போட்டு வதை பண்ணுறாரே எண்டு மனதில் விழுந்த எண்ணம் சில நாளின் பின் மாறிப்போனது.காடு அமைதியா இருந்தா சிங்கத்துக்கு பிடிக்காது.நாலைஞ்சு மிருகத்த போட்டுத்தள்ளி ரணகளத்த கிளப்பிட்டு படுத்தாத்தான் அதுக்கு தூக்கம் வரும்.சண்டைபிடிக்கவும் ஆள் இல்லை,பூச்சியள பிடிச்சு போடுவமெண்டா அதுக்கும் வெளிநாட்டுக்காரன் விடுறாங்கள் இல்லை.அண்ணனும் தம்பியுமா கித்துள் கள்ல பருகிட்டு மல்லாக்க இருந்து யோசிக்கேக்க இந்த பக்கா ஐடியா மனதில் பட்டிருகுமோ?.





ஆனா என்னைப்பொறுத்த வரை "ஆட்களுக்கு கிறிஸ் பூசி கருப்பாக்கி மிரட்டுவது" என்ற ஐடியா செம மொக்கையாகவே ஆரம்பத்தில் பட்டது.ஆனால் கிரிஸ் பூத வில்லன்கள் பெண்களை சீண்ட ஆண்கள் ஹீரோவாகி விரட்ட,பொலீஸ் புலனாய,இராணுவம் தேடுதல் வேட்டை நடத்த, பாராளுமன்றத்தில் பரபரப்பு விவாதம் போக......... சூடு கிளம்பி எல்லாமாக சேர்ந்து ஒரு ஹாலிவூட் சினிமா ரேஞ்சுக்கு தூள் கிளப்புகிறது.மூலக்கதை மொக்கையா இருந்தாலும் திரைக்கதை,காட்சியமைப்பு பக்காவாக இருந்தா படம் பிய்த்துக்கொண்டு போகும் என்பதற்க்கு நல்ல ஒரு உதாரணமும் ஆகிவிட்டது.அத்தோடு கிரிஸ் பூதங்கள் விவகாரத்தில் பலர் கோபப்பட்டு இருந்தாலும் அதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டிருப்பதை மறுக்கவோ மறைக்கவோ இயலாது.பூத வேசம் போட்டவர்கள்,அவர்களை விரட்ட காவல் இருக்கும் விடலைப்பெடியள் என ஒரு சுறுசுறுப்பான சமுதாயம் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.இது நிச்சயமாக என்றோ ஒரு நாள் நாட்டின் வளர்ச்சிக்கு வழி சமைக்கும்.





இந்த பூத விவகாரம் நாட்டுசனத்துக்கு வேணுமெண்டா புதுசா இருக்கலாம்.ஆனா கட்டுப்பெத்தை பெடியளுக்கு இது ரொம்ப பழசு.ரஜீந்திர தாசுக்கு ரொம்ப ரொம்ப பழசு.அத்துக்கொறளை கிழவன் வீட்டில படுத்திருக்கேக்க சுவரால குதிச்சு ரஜீந்திரதாசின்ர வண்டிய பிறாண்டிப்போட்டு ஓடின பூதம் பற்றி அவனட்ட கேட்டா கதை கதையா சொல்லுவான்.அச்சு சுனாமியில அள்ளுபட்டுப்போனான் எண்டு யாரோவிட்ட கதைய நம்பின செழியன் மறுநாள் அச்சு நேரில் வர ஓடின ஓட்டம் போல ஒருத்தரும் கிறிஸ் பூததை கண்டு ஓடியிருக்க மாட்டார்கள்.கள்ள இளனி பறிக்க உயரமான தென்னையில் ஏறி சறுக்கி மூஞ்சி தவிர முன்பக்கமெல்லாம் தோல் உரிபட்ட அலியப்பா கத்தரி கலரில மருந்து பூசிக்கொண்டு கொஸ்டல்ல திரிஞ்சத பார்த்திருந்தா கிறிஸ் பூதங்களுக்கே அடிவயிற்றைக்கலக்கும்.இதைவிட டேஞ்சர் பூதம்,நூலக பூதம்,குத்துப்பூதம்,கதிரைப்பூதம்,கெமிக்கல் பூதம் என பல வகைகள் பார்த்தவர் நாங்கள்.




பூதம் எண்டா இப்பிடி இருக்கோணும்.......



குட்டிக்கதை

2007 ஆமாண்டின் இறுதிப்பகுதி அது.எமது விடுதியின் அறைக்கதவு சௌந்தரின் தாக்குதலுக்கு இலக்காகி நெறுங்கி விட்டிருந்தது.ரஜித் இனது அறைக்கதவில் உதைந்து அது கடுமையாக ஆடிக்கொண்டிருந்தது.மர்ம மனிதன் நெறுக்கி விட்டதாக விடுதி பொறுப்பாளரிடம் முறைப்பாடு கொடுத்து மீள திருத்தி தரும்படி கேட்டிருந்தோம்.எமக்கு கீழ் மாடியில் இருந்த பவான் இவை எல்லாவற்றையும் பார்த்து புன்னகைத்துக்கொண்டு இருந்தார்.ஒரு நாள் வெறியில் வந்த சிங்களபெடியன் தனது நண்பனின் அறையென்று பவானின் அறைக்கதவை திறக்க முயல அது திறபடவில்லை.ஆனால் கதவு தாளிடப்படாமலே இருந்தது.கடும் வெறியிலும் தன்னை ஒரு ஜேம்ஸ் பாண்டாக எண்ணிக்கொண்டானோ தெரியவில்லை....வெறும் கையாலேயே அடித்து கதவில் ஒரு ஓட்டையை போட்டு அதனூடு கையை விட்டு உள்பக்கமாக திறந்து உள்ளே பாய்ந்து விட்டான்.இத்துணைக்கும் அறையுள் இருந்த பவான் கலககாரங்கள் வாறாங்கள் என்று எண்ணி பல்கனிக்கு ஓடிவிட்டான்.கோகுலனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.பவானிடம் இருக்கும் நெறுக்கு தீனிகளை சாப்பிட வந்த அப்பாஸ் கதிகலங்கி போய் நின்றான்.சத்தம் கேட்டு ஓடி வந்த எமக்கு அந்த வாரம் முழுக்க சிரிப்பு சிரிப்பா வந்தது.பிறகு அதுவும் மர்ம மனிதன் தாக்குதலாக விடுதி பொறுப்பாளரிடம் பதிவு செய்யப்பட்டது.தொடர்ந்து நடக்கும் மர்ம மனிதன் ஊடுருவலை தடுக்க எண்ணிய வேர்டன் மாத்தயா பிரதான கதவை கடின பலகையில் போட்டது தான் செம காமெடி.இத்தனைக்கும் அந்த பிரதான மர்மமனிதன் எமது அறைக்குள் பெக்கை போட்டுவிட்டு இளைப்பாறிக்கொண்டிருந்தார்.


மர்ம மனிதன் தாக்குதலுக்குள்ளான கிண்ணியா இளைஞர் பேட்டி - காணொளி






பிற் குறிப்பு- இந்த பதிவை போட்டதன் நோக்கம் இதுதான்-


பெண் கிறிஸ் பூதபிகருகள் உங்கள் ஏரியாவில் நடமாடினால் எனக்கு உடனடியாக தெரியப்படுத்துங்கள்.ஏனென்றால் தற்போதைய நிலவரப்படி ....... ஐ விட பூதங்களே மேல்.

"எனக்கொரு பூதம் வேணும்மடா!"

"செம கிறிஸ் பூதமா வேணும்மடா!"






காதல்க்கிறுக்கன் நுண்ணிய புலன்களைக்கொண்டவன்.வெளுத்தெல்லாம் பாலென்று நம்பும் சாதாரண தமிழன் போலவில்லாது "மச்சான் இவன் ஒரு மார்க்கமனான ஆள், கவனமா இருக்கோணும்" என்று அடிக்கடி மங்கோ தொடர்பாக கருத்து தெரிவிப்பவன்.நாயகன் முரட்டு துணிச்சல்காரன்.இரண்டுபேருள்ளும் எனது மனதில் உருவான சந்தேகம் ஏற்கனவே முளைவிட்டிருந்ததால் கணநேரத்தில் நடுஇரவை அண்மித்த பொழுதுகளின் காரிருளை போர்வையாக்கி மங்கோ அறையுள் நடப்பவற்றை அவதானிக்கக்கூடிய சமீபத்தில் நிலையெடுத்துவிட்டிருந்தார்கள்.உள்ளே போன உரையாடல்களை செவிமடுத்த இருவருக்கும் தூக்கிவாரிப்போட்டது.

பின்னிரவில் அறைக்கு திரும்பிய மங்கோவின் அறையில் வதியும் சீனியர் ஒருவருக்கு நடந்த சம்பவம்,அதற்கான காரணம் என்பன திரிபில்லாமல் மெலிந்த குரலில் சொல்லப்பட்டாலும் இரவின் நிசப்தம் சுவர்களை தாண்டி வெளியே இருந்த காதல்கிறுக்கன் பாம்பு காது வரையும் அவற்றி எடுத்து வந்துவிட்டிருந்தது.அடித்தவர்கள் சும்மா அடிக்கவில்லை "எங்களோட தங்கச்சியோட சொறிவியா?, சொறிவியா?" என்று கேட்டு கேட்டுத்தான் மொங்கி இருக்கிறார்கள்.அதை வெளியில் சொன்னால் கேவலமாகிவிடும் என்று நினைத்த மங்கோ பாமன் கடைப்பன்னியின் ஆட்கள் சுகந்தமாறனை தேடிவந்த இடத்தில் தனக்கு அடித்து விட்டதாக கதை ஒன்றை வெகுநேர்த்தியாக பின்னியிருக்கிறார் என்பதை ஊகித்துக்கொள்ள புலனாய்வு அறிவொன்றும் தேவையில்லைதானே?.அது இளம்செழியனாலேயே முடியக்கூடியது.


நமது உள்வீட்டு விவகாரம் கொழும்பு அரைடமில்சுக்கு தெரிந்தால் கேவலமாகிவிடும் என முடிவெடுத்த நாம் சாத்வீக வழியில் மங்கோவிடம் விளக்கம் கேட்க முடிவெடுத்தோம்.காதல்கிறுக்கனும், குடிகாரனும் மறுநாள் விரிவுரை முடிந்து வந்த பொழுதுகளில் விடயத்தை மெதுவாக போட மங்கோ முதலில் தடுமாறி பின்னர் வன்சொற்களால் தாக்கத்தொடங்கிவிட்டார்.சிலநாட்களின் பின்னர் மங்கோவிடம் நேரடியாகவே பேசிவிடுவது என்று முடிவெடுத்தேன்.எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவனாக கருதிக்கொண்டிருந்தவனிடம் எப்படி இதைக்கேட்பது என்பது தொடர்பில் எனக்குள் மிகுந்த தயக்கம் இருந்ததால் சில நாள் தாமதமாயிற்று.

"உனக்கு என்ன விசரா?,உன்னால தான் நான் அடிவாங்கினான்,ஏன் இப்பிடி கதைய மாத்துறாய்?" என்று சொன்னவனிடம் இறுதியாக கேட்டேன்.
"எங்களோட தங்கச்சியோட சேட்டை விடாதே" எண்டு அடிச்சவங்கள் சிங்களத்தில் கேட்டதாக நீ "பிர----" என்கிற சீனியரிடம் செல்லவில்லையா?"

"இல்லை.அப்படி சொல்லேலை" மங்கோ அழுத்தமாக சாதித்தான்.கழுத்தறுப்பு,நம்பிக்கைத்துரோகம்,நயவஞ்சகம்,ஆப்படிப்பு,குழிபறிப்பு எனபனவற்றின் ஒட்டுமொத்த வடிவமாக மங்கோ தெரிந்தான்.மங்கோ ஒரு வெள்ளிதவறாமல் கோயிலுக்கு செல்வான்.தினமும் கடவுளை வழிபடுவான்.துளிகூட கடவுள் நம்பிக்கையில்லாத நான் கூட அவனின் நம்பிக்கை தூய்மையானது என மதிப்பளித்திருந்தேன்."ஓவரா சாமி கும்பிட கோயிலுக்கு போறவனை ஒரு காலமும் நம்பக்கூடாது" என அலியப்பா சொன்னது சரியென்று பட்டது.அத்தோடு அவனோடு பேசுவதை அடியோடு நிறுத்திவிட்டேன்.

பின்னாளில் தொற்றிக்கொண்ட குறும்படங்களை உருவாக்கும் ஆர்வம் காரணமாக கமெராவுடன் 7ஜி குழுமத்தோடு அலைந்ததில் ஏறக்குறைய இந்த விடயம் முற்றாகவே மனதைவிட்டு அகன்று போயிருந்தது.இறுதி வருடம் முதலாவது செமிஸ்டர் லீவுக்கு நுவரெலியாக்காடுகளுக்குள் சூட்டிங் என்று அலைந்துவிட்டு இறுதி செமிஸ்டருக்காக திரும்பிய போது வேலைநிறுத்தம் வந்து பல்கலை மூடப்பட்டது.விடுதிகளை விட்டு வெளியேறுமாறு நோட்டிஸ் ஒட்டிவிட்டார்கள்.எல்லோரும் போய்விட யாழ்மாணவர்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டோம்.முகமாலையில் தொடுக்கப்பட்ட வலிந்த தாக்குதலை அடுத்து பாதை மூடப்பட்டதால் எமக்கு வீடுகளுக்கு செல்ல வழியேதும் இருக்கவில்லை.பல்கலைக்கு வெளியே அறைகளை அவசரமாய் பார்த்து எங்களை திணித்துக்கொண்டேம்.ஏரியாவே வெறிச்சோடிப்போய் இருந்தது.பொழுது போவது மிகக்கடினமாக இருக்கவே வவுனியாவில் இருந்த நாயகனின் சகோதரி வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தோம்.சிரிப்பும் கும்மாளமுமாய் சிலநாட்கள் நகரமுதல் அந்த சம்பவம் நடந்தது.எமக்கு வெறும் ஆறே மீற்றர் தொலைவில் கிளைமோர் வெடித்தது.சிதறிய உருக்கு கோளங்கள் பெரும்பகுதியை அரணாக நின்ற வாகனம் ஒன்று தடுத்துக்கொண்டடலும் அதையும் மீறி இரு கோளங்கள் மங்கோவை தாக்கின.எல்லோரும் துடித்துப்போனோம்.சம்பவ இடத்தில் நின்ற அந்நியர்கள் நாமே என்றதால் பிரச்சினை பேயாய் விரட்டியது.நாயகனின் சகோதரியிடம் அவனை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு கொழும்புக்கு மாறினோம்.மொறட்டுவையில் தங்க இடமில்லாது தனித்து நின்றபோது கண்டுகொள்ளாது வீடுகளுக்கு ஓடிய குறிப்பிட்ட சில வவுனியா சகமட்ட பேர்வழிகள் விடயமறிந்து வைத்தியசாலைக்கு சென்று ஓடியதற்காக எங்களை தூற்றினார்கள்.அங்கே மங்கோவை சொந்த சகோதரனைப்போல கவனித்துக்கொண்டிருந்த நாயகனின் சகோதரியின் மனம் நோகும்படி மங்கோ வார்த்தைகளை வெளிவிடும்படியாக தூண்டிவிட்டார்கள்.மீள கட்டுப்பெத்தைக்கும் வந்து ஊளையிட்டார்கள்.

நடந்த சம்பவம் வழக்கிட்ட காரிகையின் தந்தைக்கு மட்டத்தின் வீணை மூலமாக போனது.அதே நேரம் வ.இ.காரிகையும் மீள பல்க்லையில் இணைந்து கொள்வதற்கான காலமும் நெருங்கிக்கொண்டிருந்தது.வவுனியாவில் நாங்கள் சிக்கிக்கொண்ட விடயம் கனதியானது என்பதை ஊகித்த அவன் ஆழமாக வலைபின்ன தொடங்கினான்.மகளின் மனவியாதியை உண்மை என நம்பி அதற்காக அப்பாவி இளைஞர்கள் வாழ்க்கையோடு விளையாடப்போகிறோம் என்பது அவனுக்கு தெரிந்திருகவில்லை.

பல்கலைகழக தலைமை கவுன்சிலரான வணிகதுங்க என்ற அரைலூசன் முன்பு வழக்கிட்ட காரிகையோடு வந்தமர்ந்த தகப்பன்காரன் "எனது மகளுக்கு மீளவும் பிரச்சினை வரக்கூடாது" என்று கேட்டுக்கொள்ள வணிகதுங்கவின் கரங்கள் மேசையில் இருந்த சங்கம புத்தகத்தை நோக்கி நீண்டன.

......................................................(வருவாள் வ.இ.கா)


************************************

புலனாய்வுக்குறிப்புக்கள்-

மங்கோவுக்கு அடிவிழுந்ததன் உண்மையான காரணத்தை நீண்டகாலமாக தேடிக்கொண்டிருதேன்.பல்கலை இறுதி நாட்களில் அதற்கான விடை சிக்கியது.வழக்கிட்ட காரிகைக்கு ஒரு சகோதரன் இருந்தான்.குரே பார்க்கில் இருக்கும் சிங்கள பெடியளோடு பழகும் வாய்ப்பை பெற்ற அவன் தமக்கையின் கல்வியை சிலர் குழப்பிவிட்டதாக கதையோடு கதையாக செண்டெமெண்ட் ரசம் கலந்து போட்டிருக்கிறான்.ஆத்திரப்பட்ட சிங்கள பெடியளிடம் மங்கோ ஒவ்வொரு வெள்ளியும் கோவிலுக்கு வருவான் என்ற விடயத்தை சொல்லி அழைத்துப்போய் எட்டநின்று ஆளைக்காட்டிவிட்டு நழுவியிருக்கிறான்.அடிக்க வந்தவர்கள் மீது கெமிக்கல் சசி தாக்குதலை நடத்த ஓரிரு அடிகளோடு மங்கோ தப்பிவிட்டான்.அடித்தவர்களின் முதலாவது இலக்கு மங்கோ தான்.இரண்டாவதாக நான் இருந்திருக்கலாம்(வழக்கிட்ட காரிகை தனது படிப்பை குழப்பியவனாக என்னையும் குறிப்பிட்டிருக்கும் பட்சத்தில்).அப்படியெனில் "சுகந்தமாற எங்கே" என்று கேட்டது உண்மையாக இருந்திருக்கலாம்.ஆனால் என்னை அடிக்கவந்தவர்கள் தன்னை அடித்துவிட்டதாக மங்கோ குறிப்பிட்டதுதான் தவறாகிவிட்டது.பின்னாளில் வழக்கிட்டகாரிகையின் சகோதரன் செய்ததும் நியாயமாகவே பட்டது.எனக்கு ஒரு அக்கா இருந்து இவ்வாறான குற்றச்சாட்டை ஒருவன் மீது தெரிவிக்கும்பட்சத்தில் நானும் அவன் செய்ததைத்தான் செய்திருப்பேன்.





"அப்பாஸ் அண்ணை வாறார்,அப்பாஸ் அண்ணை வாறார்" எண்டு பலரும் பரபரத்திருக்க கட்டை கால்ச்சட்டையோடு படுவேகமாக சைக்கிளில் வந்து யாழ் இந்து மைதான மதிலருகே பெடியள் மத்தியில் இறங்கிய அந்த பேர்வழியை பார்க்கும் போது "கடும் சுறுசுறுப்பான ஆள் போல" என்ற எண்ணம் தோண்றுவதை தடுக்க முடியவில்லை.அது நடிகர் அப்பாஸ் மிக பிரபலமாக இருந்த நேரம்.அப்பாஸ் போலவே முகச்சாயலோடு இருப்பதாக அவனை உசுப்பேத்திவிட்ட நண்பர்கள் அப்பாஸ் என்ற பெயரையும் உவந்தளித்து உயரமான பப்பாவில் ஏற்றி விட்டிருந்தார்கள்.பெண்கள் மத்தியிலும் அப்பாஸ் வாறான் எண்டால் ஒரு சலசலப்பு கிளம்புமளவுக்கு அப்பெயர் பிரபலமாகி விட்டிருந்தது.இந்நிலவரமே மிகக்கொடும் சோம்பேறியான அவனை சுறுசுறுப்பானவனாக நடக்கும்படி தூண்டிக்கொண்டிருந்தது.இவ்வாறு பள்ளி நாட்களில் எனக்கு சீனியராக இருந்த அப்பாஸ் பல்கலையில் சகதோழனாக வந்து வாய்த்தார்.


அடக்கமிகு ஆண்மகன் -
{விரிவுரையாளர் அறைவரை நீண்ட சுகாவின் மறைப்பு கமெரா}

பல்கலை ஆரம்ப நாட்களில் அத்துக்கோறளை கிழவன் வீட்டில் கமலரூபன்,தினேஸ்,லெஸ்லி,கிரிவக்சன்,ரஜீந்திரதாஸ்,சசிக்குமார் ஆகியோருடன் ஒரு வருடங்களுக்கு மேலாக இருக்கும் வாய்ப்பு கிடைத்தது.கமலரூபன் எனும் அருமையான நண்பன் எனக்கு அறிமுகமானது அங்கே தான்.அப்பாஸ் அடிக்கடி அவிழ்த்துவிடும் கதைகள் அநேகமாக பள்ளிநாட்களில் எவரோடாவது சண்டை பிடித்தது பற்றியோ,பிகருகளை விரட்டியது பற்றியுமே இருக்கும்.அவையனைத்தையும் உண்மையென நம்பியவர்கள் அப்பாசை எவருக்கும் அஞ்சாத முரட்டு காதல் நாயகனாகவே எண்ணியிருப்பார்கள்.காதலை பற்றி போட்டுத்தாக்கினால் "லவ்வையும் செக்சையும் கலக்காதே" என்ற பஞ்சு டயலாக்கை எடுத்துவிட்டு முகம் சிவக்க பாய்ச்சல் தொடுக்கும் அப்பாஸ் குறித்து அனைவரும் கொண்டிருந்த கருத்துக்கள் எல்லாம் பின்னாட்களில் தலைகீழாய் மாறிப்போயின.எமதுமட்டம் வலிந்த நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவைகள் ஏற்பட்ட போதெல்லாம் அப்பாஸ் சிலபல காரணங்களை சொல்லி பின்வாங்க "இவன் சிங்கமல்ல,சின்னஞ்சிறு பிள்ளை பூச்சியே" என பலரும் முடிவை மாற்றிக்கொண்டார்கள்.உருவத்தில் பரவலாக இருந்தாலும் உள்ளுக்குள் சிறிய குழந்தையின் மனமே இருந்தது.குரலில் முரட்டுத்தன்மை இருந்தாலும் உள்ளுக்குள் மலர் போண்ற மென்மை அவனுள் இருந்தது.நண்பர்கள் உடல்நலம் பாதிக்கப்படும் போது உதவ ஓடி வருபவர்களில் முதலாவதாக கட்டாயம் கமலரூபன் இருப்பான்.

முள்ளுக்குள் ஈரம் -இந்த முள்ளுத்தலைக்குள் இருக்கும் ஈரம் எக்கச்சக்கம்.

கண்ணை மூடிக்கொண்டு கமலரூபன் பற்றி யோசிக்கும் போது முதலாவதா நினைவுக்கு வாறது அவனோட வண்டியும் இடைவிடா நெடும் தூக்கமும் ஓயாமல் தின்பண்டங்களை அரைத்தபடியிருக்கும் வாயும் தான்.மூன்று நேர சாப்பாடு என்பதைத்தாண்டி பின்னேர சாப்பாடு,பின்னிரவுச்சாப்பாடு என பல புதிய உணவு நுட்பங்களை எனக்கு அறிமுகப்படுத்தி வேலிக்கதியால் போல இருந்த எனது பாடியை பழனிப்படிக்கட்டுகளாக்க வழிகாட்டியவன்.எவ்வளவு சண்டை வந்தாலும் ,வாக்குவாதம் வந்தாலும் கமலரூபன்,சேகரன்,ரியாஸ்,சுகந்தமாறன் கூட்டணிக்குள் பிளவு ஒரு போதும் எட்டிப்பாராது.சிங்கள பெடியளோட Project செய்தா பாதுகாப்பா பாஸ் பண்ணிடலாம் எண்டு எல்லா பெடியளும் எஸ்கேப் ஆகிவிட இனவெறி பொங்கி வழிந்த விரிவுரையாளர்கள் மத்தியிலும் தன்மானச்சிங்கங்களாய் நின்று Project செய்து காட்ட அச்சாணியாய் நின்றவன் கமலரூபன்.கமலரூபனை பற்றி எழுதலாம் என முடிவெடுத்து உட்கார்ந்த போது பாற்கடலை பெட்டைப்பூனை நக்கிக்குடிக்க வெளிக்கிட்ட கதையாக போகுது என்று எனக்கு சிறிது நேரத்திலேயே விளங்கிவிட்டது.எத்தனை சம்பவங்கள்? எத்தனை நினைவலைகள்? ஒவ்வொண்றும் கனமானவை.ஒன்றுக்கு முக்கியம் கொடுத்து இன்னொன்றை எழுதாமல் விட மனது இடம் கொடுக்கவில்லை.இதனால் பிரபலங்களில் சுயவிபரம் எழுதும் வழமையான பத்திரிகை பாணியில் அப்பாஸை அடக்கிவிட விளைகிறேன்.

பெயர்-கமலரூபன்.க

ஏனைய பெயர்கள்-அப்பாஸ்,கமல்ஸ்,அரசியல்வாதி

வயசு- பதினாறு

பால்- 100% ஆம்பிளை சிங்கம்.

நிறை- ஒரு தொன்

பிடித்த உணவு- உலர் ஒடியல் (இலங்கையில் இருந்து இங்கிலாந்துக்கு இன்றளவும் குடும்பத்தினரால் விநியோகிக்கப்படுவதாய் கேள்வி)

சாதனைகள்- பல கிலோ நிறையுடைய வண்டி இருந்தும் கால்பந்தாட்ட வீரனாய் திகழ்ந்தது.மனிதனின் அதிகபட்ச நாளொன்றுக்கான உணவு உள்ளெடுக்கும் அளவுக்கான பழைய சாதனைகளை முறியடித்தமை.

வாழ்நாள் கவலை- நீண்டகாலமாக கண்ணி வைத்து மாட்ட முயன்ற முயல் தப்பியோடியது.யாழ்ப்பாணமும் தமிழ்ப்பெண்களும் என்ற தலைப்பில் சங்கம புத்தகத்தில் போடவென எழுதிய ஆய்வுக்கட்டுரையை பெடியள் போட்டுத்தாக்கி தடுத்தமை.

வாங்கிய ஆப்புக்கள்- நிழல் போல இருந்த நண்பன் காரணமாக வில்லங்க வழக்குகளை சந்தித்தது.வளைந்து கொடுக்கும் நடைமுறையை கைக்கொண்டதன் காரணமாக காட்டி சிலரால் திட்டமிடப்பட்டு சுமத்தப்பட்ட அரசியல் வாதி என்ற பட்டத்தை தவிர்க்கமுடியாமல் போனமை.

சமீபத்திய சாதனை- வாயும் வயிறுமாய் இருப்பது போலிருந்த உடம்பை உருக்கு டேஞ்சர் படிக்கட்டு போல ஆக்கியது.லண்டனின் காப்பிலி மாணவனுக்கு ஆசிரியனாகியது.

பலவீனம்- அறணை தலை போன இடத்துக்கு வால் வர முதல் நடந்தது எல்லாம் மறந்து போடுமாம்.அப்பாஸ் ஒரு இரண்டு கால் அறணை.தொலைத்த தொலைபேசிகள்,மற்றும் இதர பொருட்கள் தொகை கணக்கிலடங்காது.

பலம்- பல மொழி வித்துவம்.முன்பு மும்மொழியில் கலக்கியவர் இப்போது முந்நூறுக்கு மேல் பேசுவதாக கேள்வி.ஏனடா நாங்கள் கதவ தட்ட ஓடினனி எண்டு காவல்துறை சொய்சாபுரத்தில் வைத்து கேட்க " இஸ்ஸரா They will come தானே?" என்று கேட்ட மும்மொழிக் கேள்வியை மரணப்படுக்கையில் நினைத்தாலும் சிரிப்பு வரும்.

நினைவில் நின்றவர்கள் பகுதி நீண்டகாலமாக எழுதப்படாமல் விடுபட்டுப்போனது.படுவேகமாக மங்கிவரும் நினைவுகளின் வீரியம் குறைய முதல் அவற்றை பதிவுகளாக்கிவிட வேண்டும் என்பதால் வேலைப்பழுவின் மத்தியிலும் எழுதுவதை தொடருகிறேன்.தனிமனித கூக்குரலாக ஒரு மட்டத்தின் புளொக் இருப்பதை நான் விரும்பவில்லை.எனவே நீங்களும் உங்கள் பங்களிப்பை தரும்படி மீளவும் அழைக்கிறேன்.

கடைசியா அப்பாசின் ரேட்மார்க் டயலாக் ஒண்டு-


"நீங்கள் பங்களிச்சாலும் பிரச்சினை இல்லை,பங்களிக்காட்டியும் பிரச்சினை இல்லை,குறைநினைக்கமாட்டன்.ஆனா பங்களிச்சா நல்லது"



Billie Jean ன் என்னுடைய காதலி இல்லை!
அந்த குழந்தைக்கும் நான் அப்பா இல்லை!

{Billie Jean is not my lover
She's just a girl who claims that I am the one
But the kid is not my son
She says I am the one, but the kid is not my son
}


1982,மைக்கல் ஜாக்சன் திரில்லர் ஆல்பம் வெளியிட்டு மிகப்பிரபலமாயிருந்த நேரம் அது.மைக்கேல் மின்னல் நடனக்காரர்.நேர்த்தியான உடல்வாகும்,ஸ்டைலும்,காந்தக்குரலும் எல்லோரையும் குறிப்பாக பெண்களை வெகுவாக கவர்ந்திழுத்தன.போகுமிடமெல்லாம் பெண் ரசிகைகள் தொடர்ந்தனர்.ஒருத்தன் வாழ்க்கையில் கொஞ்சம் மேலே வந்தாலே அவனின் உயர்ச்சியில் பங்கு போட ஓடி வருவது பெண் இயல்பு.உலக சூப்பர் ஸ்டார் மைக்கேலை சும்மா விடுவார்களா?ஆளாளுக்கு காதலியாக துடித்தனர்.ஒரு பெண் ஒரு படி மேலே போய் "எனது இரட்டைக்குழந்தைகளில் ஒன்றுக்கு மைக்கேல் தான் அப்பா" என்று ஒரே போடாக போட்டுவிட்டார்.அது மட்டுமில்லாது காதல் கடிதங்கள் கடிதங்கள் அனுப்பியும் லந்து பண்ண ஆரம்பித்து விட்டார்.

"நீங்கள் உங்கள் சொந்த பிள்ளையை புறக்கணிக்கக்கூடாது,நாமிருவரும் இணைந்து அதை வளர்த்தால் மிகவும் கவித்துவமான வாழ்க்கை எமக்கு கிட்டும்" என்று வலியுறுத்தி வந்தார்.இத்துணைக்கும் மைக்கேல் அந்த பெண்ணை நேரே கண்டது கூட இல்லை.தொடர்ச்சியாக வந்த கடிதங்கள் வந்து கொண்டிருந்த ஒரு நாளில் ஒரு பார்சலும் வந்திருந்தது.உள்ளே ஒரு துப்பாக்கியுடன் அந்தப்பெண்ணின் போட்டோ.கூடவே ஒரு கடிதமும்...

"இந்த துப்பாக்கியை எடுத்து சுட்டு உங்களை இந்த நேரத்தில்,இந்த நாளில் தற்கொலை செய்து கொள்ளுங்கள்,அதே நாளில் என்னையும் குழந்தையையும் அழித்துக்கொள்கிறேன்,அடுத்த பிறவியாலவது ஒன்று சேர்வோம்" என்று பீதியை கிழப்பி மைக்கேலின் நிம்மதியான தூக்கத்துக்கு வேட்டு வைத்தார்.பைத்தியம் என்று ஒதுக்கி விடாது அந்த ரசிகையின் படத்தை வீட்டில் மாட்டி வைத்தார் மைக்கேல் ஜாக்சன்.நீண்டகாலமாக தொடபேயில்லாது இருந்த அந்தப்பெண் மனநிலை பாதிப்புக்குள்ளாகி மனநிலை மருத்துவமனைக்கு அனுப்பப்டதாக பின்னாளில் அறிந்து கொண்டார்.இச்சம்பவத்தை மையமாக வைத்தே "Billie Jean" பாடலையும் எழுதி இருந்தார்.

பாடல் காட்சியமைப்பு மிக நுணுக்கமான கதை ஒன்றை சொல்லுவது போலிருக்கும்.அத்தோடு மைக்கேல் சக்தி கொண்ட மனிதனாக காட்டப்பட்டிருப்பார்.அவர் காலடி வைக்கும் இடங்களில் உள்ள "Tiles" ஒளிமயமாகும்.பின் தொடரும் புகைப்படக்காரனுக்கு உருவமாக தெரியும் அவர் நிஜத்தில் அரூபம்.மின்னல் தாக்கும் போது ஷோரூமில் இருக்கும் கமெரா ஒன்றின் தொழில்பாடு தூண்டப்பட வெளியாகும் புகைப்படத்தில் மைக்கேல் இல்லாதிருப்பதை குறியீடாக பார்வையாளனுக்கு காட்டி அதை விளக்கி இருப்பார்கள்."Billie Jean"என்ற பெண்ணை பற்றி பாடலில் சொல்லியபடி அவளின் இருப்பிடத்துக்கு செல்லும் மைக்கேலை பின் தொடர்ந்துவரும் புகைப்படக்காரன், "Bille Jean" அறையருகே மைக்கேல் மாயமாகி விட அங்கே வரும் போலீசால் அறையை வேவுபார்த்த குற்றத்துக்காக கைது செய்யப்படுவதோடு பாடல் முடிகிறது.

மைக்கேல் பிச்சையிட்டதும் ஒளிவெள்ளமாய் அழகான ஆடையோடு உருமாறும் பிச்சைக்காரன் பாடல் முடிவில் ஒரு பெண்ணோடு போவது,காலணியை துடைக்க பயன்படுத்திய வரிப்புலி துணி போலவே முதுகு வரிகளோடு பூனை ஒன்று ஓடுவது என அனுமாஸ்ய விடயங்கள் அழகாக கோர்க்கப்பட்டிருக்கும் இந்த பாடல் திரில்லர் ஆல்பத்தில் இடம்பெற அருகதையற்றதாக தயாரிப்பாளரால் ஒதுக்கப்பட்டிருந்தது.ஆனால் சற்றும் தளராத மைக்கேல் அதை 1983 இல் தனிப்பாடலாக வெளியிட்டார்.அப்பாடலின் வெற்றி தனிப்பாடல் ஆல்பங்களுக்கு ஒரு ஒரு தொடக்கமாக அமைந்தது என்றால் மிகையாகாது.பாப் உலகின் முடிசூடா மாமன்னன் மைக்கேல் ஜாக்சனின் இரண்டாம் ஆண்டு நினைவு தருணங்களில் இவ்விடயத்தை பகிவது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.(25/06/2009)


02/06/2008

02/06/2008 இனை மட்டம் 2003 ஐ சேர்ந்த எவரும் இலகுவில் மறந்து விட்டிருக்கமுடியாது.அன்று எமது மட்டத்துக்குரிய மொறட்டுவை பல்க்லையின் இறுதி நாள் கடந்து போனது.அதை தொடர்ந்து வந்த 06/06/2008 அன்று பல்கலை அருகே எமது மட்டத்தை சேர்ந்த சகோதர மொழி மாணவன் Gamunu Ratnayake உட்பட 21 உயிர்களை காவு கொண்ட கொடூர கிளைமோர் குண்டு வெடிப்பு நிகழ்வு நடந்த பின்னர் அப்பகுதிக்கு மீண்டும் செல்லும் அறவே வாய்ப்பு அற்றுப்போனது.




கெமுனு மிக அமைதியான நண்பன்.எல்லோரும் நன்றாக கதைப்பான்.இரவுப்பொழுதுகளில் விடுதியின் துணிகள் துவைக்கும் இடத்தில் அடிக்கடி அவனை காண நேரிடும்.ஆடைகள் கழுவிய படி அவனோடு உரையாடிய பொழுதுகள் நன்றாக நினைவில் இருக்கின்றன.திரைப்படங்கள் உருவாக்குவது தொடர்பிலான எனது ஆர்வம் குறித்து அவனுக்கு மிக நன்றாக தெரியும்."உனது படத்தில் எனக்கு ஒரு பாத்திரம் வேண்டும்" என்று ஒரு நாள் கேட்டு வைக்க "மச்சான்! ஒரு சிங்கள பெடியனே நம்ம பட்டத்தில நடிக்க விரும்பிறான்டா" என்று பெருமையாக பீற்றிக்கொண்டதும் மறக்கவில்லை.வெடித்து சிதறிய குண்டு அவன் முகத்தை சிதைத்துவிட்டிருந்ததாக பார்த்தவர்கள் சொல்ல கேட்டும், அவன் இறுதிநிகழ்வுக்கு கூட செல்ல இயலாத நிலவரம் குறித்து சிலாகித்தும் வருந்திய பொழுதுகள் கனமானவை.கடந்த மூன்றுவருடமாக மீளாத்துயிலில் உறங்குகின்ற அந்த நண்பனுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

http://sundaytimes.lk/080608/News/news0017.html

யுத்தமில்லாத உலகமொன்றில் பிறவி எடுத்து மீள அந்த நண்பனை சந்தித்து பேசவேண்டும் என்பது தொடர்பிலான எண்ணங்கள் என்னுள் அணிவகுப்பதை என்னால் நிறுத்தமுடியவில்லை.இறந்த காலத்தினுள் போய் விருப்பமான நாட்களை மீள ஒரு முறை வாழ வேண்டும் என்ற அவா பல நாட்களாய் என்னுள் வியாபித்து இருக்கிறது.இது ஒரு வகையான மனநோயோ என்ற சந்தேகம் இருப்பினும்,அது எனக்கு பிடித்தமானதாக இருப்பதால் அது குறித்து அலட்டிக்கொள்லவில்லை.

இவ்வகையான எண்ணவோட்டம்தான் சில வாரங்கள் முன்பு ஒரு குறும் படத்தை உருவாக்குவதற்கானகருவை என்னுள் விதைத்தது.நேரமிருந்தால் ஒரு தடவை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.



நீண்ட இடைவெளிக்கு பின்னர் வழக்கிட்ட காரிகை பாகம்-02 மூலமாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.இயந்திரகதியில் ஓடும் வாழ்நாட்பொழுதுகளில் உட்கார்ந்து 3 வருடங்கள் முன்பாக நடைபெற்று முடிந்த அருவருப்பான ஒரு நிகழ்வை மீட்டி எழுத்துக்களாக்குவது கடினமானது.இருந்த போதிலும் இச்சம்பவத்தை பதிவிடுவதன் மூலம் எதிர்காலத்தில் ஒரு மாணவனாவது இவ்வாறான அசாதரண மனநிலை கொண்ட பெண் மூலமாக பாதிக்கப்படும் சந்தர்ப்பம் தவிர்க்கப்படுமென்ற இழையோடும் நம்பிக்கை தொடர்ந்து எழுத உத்வேகம் தருகிறது.பாகம்-01 பரபரப்பை கிளறிய அதே நேரம் சில சுவாரசியமான எதிர்வினைகளுக்கும் வழிவகுத்து இருக்கிறது.அவெதிர்வினை மந்தமாக நகர்ந்து கொண்டிருந்த சிங்கபுரி வாழ்க்கையை சில நாட்களாய் பரபரப்பாக்கி விட்டிருந்தது.




07/05/2011 அன்று சிங்கப்புரி வாழ் மொறட்டுவை தமிழ் மாணவர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்ச்சி பலூன் உடைப்பு,பேப்பர் பாலம் கட்டுதல்,இனிய பாடல்கள் போண்ற சிறப்பு நிகழ்சிகள் புடைசூழ நடைபெற்று கடந்து போனது.நிகழ்சியை ஏற்பாடு செய்திருந்த மூத்த அண்ணாமாருக்கு நன்றிகள்.நிகழ்சிக்கான தயாரிப்பு வேலைகள் பலவற்றையும் 2003 மட்டத்தில் எவ்விடயத்தையும் எதிர்த்து கதைப்பவர் பொறுப்பேற்றிருந்தார்.நிகழ்சிக்கு 2003 மட்டத்தை சேர்ந்தவர்களை அழைக்கும் பொறுப்பு மட்ட கைப்பொம்மை தலைவர் மங்கோலியனுக்கு தரப்பட்டிருந்தது.கைக்கு வந்த பொறுப்பை மூலமாக வைத்து "வழக்கிட்ட காரிகை-பாகம்-01" பதிவுக்கான எதிர்வினை ஒன்றுக்கு மங்கோலியன் திட்டமிட்டார்.அதன்படி 7ஜி குழுவினருக்கான நிகழ்ச்சி அழைப்பு தவிர்க்கப்பட்டது."பெரிய இடத்து ஆசீர்வாதத்துடன் தான் நடக்கிறது போல" என்றெண்ணி ஒதுங்கிப்போக முடிவெடுத்தவர்கள் "மங்கோலியனின் தன்னிச்சையான் நடவடிக்கையே இது" என்ற தகவல் கிடைத்ததும் முடிவை மாற்றிக்கொண்டார்கள்.நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் குறும்படம் ஒன்றை திரையிட்டு பங்களிப்பை செலுத்தவும் திட்டமிட்டார்கள்.மிகுந்த சிரமத்தோடு சிலநாட்களுள் உருவாக்கிய அக்குறும்படம் இறுதி நாளன்று திரையிட உகந்தது அல்லாததாக நிராகரிக்கப்பட்டு அருவருப்பான அரசியல் ஒன்று அரங்கேற்றப்பட்டது.இத்தோடு இவ்விடயம் நிற்க இனி பிரதான கதைக்கு நான் வருகிறேன்.




L-புளொக் கன்ரீன் களைகட்டிப்போய் இருந்தது.புதிதாக மாணவர்கள் வந்த நாள் அது.பெடியள வெருட்டுவதும் பெட்டையள வெருட்டுவது போல வழிவதுமாய் போய் கொண்டிருந்த இடத்துக்கு சாப்பாட்டை முடித்துவிட்டு நானும் கமல்சும் காலடி எடுத்து வைத்தோம் சனியன் எமக்காக காத்திருப்பதை அறியாமல்.மங்கோலியன் முகமெல்லாம் பல்பு எரிய விட்ட படி ஒரு பெண்ணோடு பேசியபடியிருந்தார்.மங்கோலியன் வேண்டுகோளின் படி எங்கட மட்ட பெடியள் "அவரை உனக்கு பிடிச்சிருக்கா?" என்று அவளிடம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.நாமும் எங்களின் பங்குக்கு மங்கோலியன் பெருமைகளை சொல்லி சிறுவிரிவிரை ஒன்றை நிகழ்த்தி விட்டு விரிவுரைக்கு ஓடிவிட்டோம்.கடந்து வந்த நாட்களில் போவோர் வருவோரெல்லாம் "அவனை உனக்கு பிடிச்சிருக்கா" என்று கேட்பதுவும் அப்பெண் மௌனமாக இருப்பதுவும் சகஜமாகி விட்டது.எதையும் பிளான் பண்ணி செய்யும் கமல்ஸ் இரகசியமாக ஒரு நாள் மங்கோலியன் அவளை காதலிப்பதாக காதில் போட்ட தகவல் குபீர் சிரிப்பை வரவைத்தது.அப்பெண் கடந்து போகையில் "மங்கோ" மங்கோ" என்று மங்கோலியன் பெயர் சொல்லி ஸ்டோன் பெஞ்சில் இருந்து கத்துவதும் சில நாட்களில் அலுத்து போனது.ஏறக்குறைய ஒரு மாதம் கடந்த வேளையில் யாரோ காமெடிக்கு ஒட்டிய போஸ்டரில் இக் காதலையும் பிட் ஆக இழுத்துப்போட்டு விட என்னோடு வந்து மங்கோலியன் வாய்த்தர்க்கம் செய்தது பசுமையாக இப்பவும் ஞாபகத்தில் இருக்கிறது.3ம்வருட ஆரம்பத்தில் நடந்த இந்நிகழ்வு தொடர்ந்து வந்த தொழில்ப்பயிற்சி காலமான 6 மாதங்கள் முடிவில் ஏறக்குறைய மறந்து போயிருந்தது.




அது எமது ரெயினிங் பீரியட் இறுதிப்பகுதி நாட்களில் ஒன்று,வெள்ளிக்கிழமை."மங்கோக்கு பம்பலப்பிட்டியில் வைச்சு அடிச்சிட்டாங்களாம்" என்று அழைப்பு வர வேகமாக விரைந்தேன்.நூலகத்துக்கு சமீபமாக மட்டத்து பெடியள் எல்லாரும் ஆக்ரோசமாக விவாதித்தபடி இருந்தார்கள்.கோயிலுக்கு போய் வரேக்க அடிச்தையும் கூடப்போன எல்லோரும் தப்பி ஓடி விட சசிவர்ணன் அவங்களோடு அடிபட்டு ஊமைக்காயங்களோடு தப்பியது பற்றியும் கமல்ஸ் விபரித்தான்.அந்நாளில் பாமன்கடை தாதாவாகிய எம்மட்ட பேர்வழி எங்களோடு பிரச்சினைப்பட்டுக்கொண்டு இருந்தார்.கொழும்பில் உள்ள குழுப்பெடியளிடம் "அவங்களுக்கு அடிச்சு விடு,அடிச்சு விடு" என்று கேட்டபடி திரிந்தது எமது செவிகளையும் எட்டியிருந்தது.ஆனாலும் அவரை வெறும் அட்டைக்கத்தி என கருதியதால் கணக்கெடாது விட்டிருந்தோம்.இச்சம்பவத்துக்கு காரணங்கள் தேடிய போது விடையாக பாமன் கடை ரவுடி பிரமாண்டமாக் தெரிந்தார்.எதிர்வினைக்கு திட்டமிட்டோம்.தாக்குதல் குழு அடித்து நெறுக்க துடித்தது.வழமை போல் அரசியல்க்குழு தடுத்தபடியிருந்தது.பத்துவிதான விடுதியில் அடிவாங்கி உடைந்து போன மூக்கோடு இருந்த மங்கோலியன் தன்னை அடிச்சவங்கள் "சுகந்தமாற எங்க?" எங்க?" என்று கேட்டதாக சொன்னதும் "அவனே தான் ஆள் வச்சு அடிச்சிருப்பான்" என்று உறுதி செய்யப்பட்டது.அறிவக குழுமம் "நீ வாய குடுக்கிறது,அவன் பாவம் அடிவாங்கிட்டான்" என்று என்னோடு கோபப்பட்டது.நீண்ட விவாதத்துக்கு பின்னர் மிகுந்த ஆத்திரத்தோடு கட்டிலில் விழுந்த பொழுதுகளில் அந்த சந்தேகம் முளைவிட்டது.அவசரமாய் அழைப்பெடுத்து 7ஜி குழுமத்துக்கு விபரம் சொல்ல காதல்கிறுக்கனும்,நாயகனும் மங்கோலியன் அறை யன்னலருகே இருந்து வேவு பார்க்க,செவியில் விழுந்த வசனங்கள் வேறு கதையை சொல்லின.

காரிகை வருவாள்...........




கட்டுப்பெத்தை ஒன்று சேர்த்து வைத்த காதலர்கள் இருவர் வருகிற வாரம் இல்லற வாழ்வில் இணையவிருக்கிறார்கள்.அவர்களை மனமார வாழ்த்துவதில் கனாக்காலம் ஆசிரியர் பீடம் மிகுந்த மன மகிழ்ச்சி அடைகிறது.கடுகளவும் கூட வெளியே கசியாமல் கனகச்சிதமாக ஓட்டிய காதல்ப்படகை வெற்றிகரமாக கரையேற்றி இருக்கிறது இந்த ஜோடி.யதுநந்தன் - வாசுகி தம்பதியினரை எல்லாம் பெற்று வாழ வாயார வாழ்த்துகிறோம்.



இதேவேளை எதிர்வரும் மே22 ஆம் திகதி திருமணவாழ்வில் இணையவிருக்கும் நண்பன் கோபாலகிருஸ்ணன் சுதர்சனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மன மகிழ்ச்சி அடைகிறோம்.

வரிசை வரிசையாக நடந்துவரும் திருமண நிகழ்வுகள் கட்டுப்பெத்தை 2003/2004 மட்டத்துக்கு சுந்தரகாண்டம் நடந்து வருவது போண்ற ஒரு தோற்றப்பாடை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதே வேளை பலரும் "எமக்கு எப்போ திருமணம் நடக்கும்?" என்ற ஏக்கக்காய்சலில் வாடிவருவதையும் காணக்கூடயதாக இருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.அவர்களின் ஏக்கமும் தீர எல்லாம் வல்ல கட்டுப்பெத்தை புத்த பகவான் அருள் பாலிப்பாராகட்டும்.



வரிசையாக அடுக்கப்பட்டிருந்த இயந்திரங்களை பார்வையிட்டுக்கொண்டுவந்த மாறனிற்கு எதை தெரிவு செய்வது என்பது தொடர்பில் குழப்பம் மிகுதியாக இருந்தது.முடிவில்லா இன்பம் தருவதற்கென்றே விசேடமாக வடிவமைக்கப்பட்ட "சொப்னா", இடைவிடாமல் பேசும் இயல்புடைய "எலெக்ரோவா" கடின வேலைகள் செய்யவல்ல "இயந்திரிக்கா" என்றிருந்த எவையும் மனதில் ஒட்டவில்லை.நீண்ட நேரமாக விபரித்திருந்தும் எதையும் தெரிவு செய்யாதது தொடர்பில் விற்பனையாளர் சலிப்புற்றிருந்ததை அவர் முகத்தில் படர்ந்திருந்த ரேகைகள் காட்டின.

"நீங்கள் காட்டியவை எவையும் எனது தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவை அல்ல"
"உங்கள் தேவை என்ன என்று சொல்ல முடியுமா?"
"எனக்கு அப்பழுக்கில்லா அன்பு வேண்டும்,அதை தரக்கூடிய வகை இருந்தால் காட்டுங்கள்"

பரந்து நீண்டிருந்த காட்சியறையின் ஒதுக்குப்புறமான பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அந்த இயந்திரப்பெண்ணை பார்த்தவுடனேயேஅவனுக்குப்பிடித்துப்போயிற்று.பெரிதான கண்கள், இழையோடும் புன்னகை சுமந்த உதடுகள்,கூரிய நாசி என மிக அழகாக இருந்தாள்.மெலிதென்று சொல்லும் அளவுக்கு சற்று மேலாக இருந்த அவளது உடலமைப்பு மிகக் கவர்ச்சியாக இருந்தது.வைத்த கண் வாங்காமல் இயந்திரப்பெண்ணை வெறிக்கத்தொடங்கிய மாறனை விற்பனையாளன் மெல்லிய செருமலொன்றின் மூலம் குலைத்து தொடர்ந்தான்.

"இது E-வோனா வகை.பெரிதாக பேசாது. நகைசுவை உணர்வும் குறைவு.ஆனால் மிகவும் கூர்மையான உணர்வுகள் கொண்டது.இதன் தொடுகை ஒவ்வொன்றிலும் உயிரோட்டம் நிறைந்திருக்கும்.ஆனால் இதை பெரிதாக ஒருவரும் வாங்க விரும்புவதில்லை.மிக மென்மையான இதன் உணர்வுகள் எளிதில் காயப்படக்கூடியவை.சிறிய தவறை நீங்கள் இழைத்தாலும் மீளநெருங்க முடியாத அளவுக்கு விலகிச்சென்றுவிடும்.போலியாகவேனும் அப்பழுக்கில்லா தூண்டல்களை காட்டும் பட்சத்தில் களங்கமில்லா அன்பு இவளிடமிருந்து கிடைக்க வாய்ப்புண்டு என்று நினைக்கிறேன்.




மாறனுக்கு வயது 26 ஆகிவிட்டிருந்தது.அவன் கடந்து வந்த பாதை எங்கிலும் ஏமாற்றமும் விரக்தியும் நிரம்பிக்கிடந்தனவே தவிர குதூகலம் இருக்கவில்லை.சுயநலமாக இருப்பதாக சூழவுள்ள அநேகரை சாடிக்கொண்டு அந்நியப்பட்டு போயிருந்தான்.எனக்கு அப்பழுக்கில்லா அன்பு வேண்டும் வேற ஒண்டும் வேண்டாம் என்று அடிக்கடி சொல்வதனை நண்பர்கள் ஏளனம் செய்தும் அவன் நிறுத்துவதாய் இல்லை.கிறிஸ்துவுக்குப்பின் 2112 ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டு அப்பழுக்கில்லா அன்புக்காக அலைவது சிறுபிள்ளைத்தனம் என்பது அவனுக்குத்தெரிந்திருந்தாலும் மனம் அசாத்தியத்தின் பின்னாலேயே ஓடியபடியிருந்தது.பேசாமல் தற்கொலை செய்து கொண்டு அகபோனிஸ் பறவையாக பிறப்போமா ? என்றெல்லாம் விசித்திர சிந்தைகள் அவனுள் அணிவகுத்திருந்த நாட்களிலொன்றில் அந்த நிறுவனம் பற்றி தெரிய வந்தது.மனித இனத்தின் ஆண் பெண் இருபாலரிடையேயும் அதிகரித்து வந்த விரிசலை அந்த நிறுவம் வியாபாரமாக்கி உயிருள்ள நம்பகரமில்லா வாழ்க்கைத்துணையிடமிருந்து காமத்தையும்,காதலையும் பெறுவதை விட உயிரற்ற நம்பிக்கையான இயந்திரங்களிடமிருந்து பெறுவது சிறப்பானது பரந்த அளவில் விளம்பரப்படுத்தியபடி இருந்தது.உயிரில்லா சடத்துடன் உணர்வுகளை பகிர்ந்து கொள்வது இயற்கைக்கு எதிரானது என இவ்விவகாரம் தொடர்பில் கருத்தினைக்கொண்டிருந்தாலும் அயல்வீட்டில் புதிதாய் குடிவந்து சூழவுள்ளோர் பொறாமைப்படும் படி குடும்பம் நடத்தியபடியிருந்த அலியப்பா நேற்று தண்ணிய போட்டுவிட்டு மனைவியுடன் வாக்குவாதப்பட்ட பொழுதுகளில் "கடுமையா வதைச்சியெண்டா வயர புடுங்கிப்போடுவன்" எண்டு கடுப்பில செப்ப அவள் சொப்பன சுந்தரியல்ல சொப்னா வகை ரோபோவே என்ற உண்மை தெரிந்ததும் மாறன் மனத்திலும் ஆசை முளைவிட்டு இன்று E-வோனாவை வாங்குமளவுக்கு கொண்டுவந்து விட்டது.




E-வோனா வந்த பிறகு வாழ்க்கையில் புது வசந்தம் பூத்திருப்பதாக மாறன் உணர்ந்தான்.மானிடப்பெண்களில் பல தசாப்தங்களுக்கு முன்னே இல்லாமல்ப்போன நாற்குணங்களும் அவளிடம் இருந்தன.எல்லா விடயங்களும் தெரிந்த அதிபுத்திசாலியாக இருந்தும் சிறிதளவும் கர்வம் அவளிடம் இருக்கவில்லை.அவளுக்குள் பொதிக்கப்பட்டிருந்த பல்லாயிரம் சிறப்பு தொழில்பாடுகளை ஒவ்வொன்றாய் மார்பகங்களுக்கு கீழேயிருந்த தொடுகைத்திரையில் வெட்டிப்பொழுதுகளில் துளாவி அறிவது மிகவும் சுவாரசியமாக இருந்தது.அவளால் மண்ணிறமும் கரிய கூந்தலும் கொண்ட திராவிடப்பெண் உருவம் தொடக்கம்,வெண்ணிற சருமத்தோடு பழுப்பு தலைமுடி கொண்ட கோசியன் பெண் வடிவம் வரை சிலநொடிகளுக்குள் உருமாற முடிந்தது.வீதியில் அழைத்துச்செல்லும் போது எதிர்ப்படும் அநேக ஆண்களும் அவன் மீது பொறாமைப்படும் தருணங்களில் அவள் எத்துணை அழகாக,திருத்தமாக,அவனோடு நெருக்கமாக இருக்கிறாள் என்பது புரிந்தது.கூடவே அதிலிருக்கிற ஆபத்தும் தெரிந்தது.E-வோனா மனிதப்பெண்ணைப்போலவே வடிவமைக்கப்பட்ட ஒரு இயந்திரம். ஆதலால் கற்காலத்தில் திடாகத்திரமான நல்ல வேட்டைக்காரனை நாடியது தொடக்கம் விவசாய யுகங்களில் திறமையான விளைச்சல்காரனை கைக்குள் போட விளைந்தது ஈறாக தற் பொழுதுகளில் செல்வாக்கு,பணம் என குறிவைத்து அலையும் மானுடப்பெண்களின் மேன்மையானதை தேர்தெடுக்கும் அடிப்படை இயல்பு அவளுள்ளும் பொதிந்திருக்க வாய்ப்பிருப்பதாக மனம் சொல்லி எச்சரிக்கை செய்தது.




சாளரங்களூடு நகரத்தின் விளிப்புகளுக்குப்பின்னால் சூரியன் மறையும் அழகை பார்த்தபடி ஆழ்ந்த யோசனையில் மூழ்கிப்போயிருந்தான் மாறன்.இயந்திரப்பெண்ணைக்கூட நம்ப முடியாமலிருப்பதற்க்கு காரணமாவிருப்பது பெண்களின் இயல்பா? அல்லது ஆழமாக ஊறிப்போன சந்தேக மனநோயா?.பணியிடத்து நண்பி "தீபிகா" சமீப நாட்களாய் அடிக்கடி அவனிடம் மோகனமாய் புன்னகைத்தது அடிக்கடி நினைவில் வந்து போயிற்று.அவளிடம் இது குறித்து பேசியாக வேண்டும் என எண்ணிக்கொண்டான்.திடீரென தோள்களில் மலர்களின் மென்மையோடு விழுந்த கரங்கள் அவன் சிந்தனையை குலைத்தன.திரும்ப E-வோனா நின்றிருந்தாள்.அவள் முகத்தில் எப்போதும் ததும்பி வழியும் மென் புன்னகை தவறியிருந்தது.

"நான் ஒரு விடயம் உன்னிடம் கேட்க வேண்டும் அனுமதி தருவாயா?"
"நிச்சயமாக! உனக்கு இல்லாததா?"
"நான் அழகாக இருக்கிறேனா?"

உள்ளே சென்று திரும்பிய மாறன் கரங்களில் முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தது.அது கோளப்பிளற்சி கொண்டது என்பது அவனுக்கு மட்டும் தெரியும்.

"நீ அழகா இல்லையா என்பதை நீயே பார்த்து அறிந்து கொள்"

அவளின் திருத்தமான உருவை கோளப்பிளற்சி ஆடி சிதைத்து அவலட்சணமாக்கியது.இவோனாவின் பார்வைப்புலன்கள் கிரகித்த ஆடிவிம்பம் மானுடப்பெண்களில் அழகு வரைவிலக்கணங்களாக அவளுள் தரவேற்றப்பட்டிருந்த மில்லியன்கணக்கான விமபங்களோடு ஒப்பிட்டு ஓடி அலசி அழகற்றதாக அடையாளப்படுத்தப்பட்டு ஆழ் நினைவகங்களில் முடிவாக பொதிந்து போனது.E-வோனா தலையை குனிந்து கொண்டாள்.அவள் விழிகளில் ஈரமான திரவம் கசிந்திருந்தது.




நடு இரவையும் தாண்டியும் வீடு திரும்பாதவனுக்காக கதவோரம் விழி பொருத்தி காத்திருந்தாள் E-வோனா.இது அசாதாரணமானது.அவன் பாதுகாப்பு குறித்தான அக்கறை மேலிட அவனது கைத்தொலைபேசியை சிஸ்டம் ஊடே தேடினாள்.அவனது கைப்பேசியின் இருப்பிடப்புள்ளி 2 கிலோமீற்றர் தூரத்திலிருந்த நகரத்தின் பிரபலமான இரவுவிடுதியொன்றுள் நிலைபெற்றிருந்தது.அவளது சக்தி வாய்ந்த அலைஉணரிகள் விடுதியின் பாதுகாப்பு கமெராக்கள் மொனிடரிங் அறைக்கு அனுப்புக்கொண்டிருந்த ஒளிப்பட அலைகளை உறிஞ்சி கிரகித்தன.ஒவ்வொரு கமெராவூடாக தேடியவள் கண்களில் மாறன் அகப்பட்டான்.மதுக்கிண்ணத்தோடு அருகே அரைகுறை ஆடையோடு நிற்பவள் அவனை அடுத்த நிலைக்கு தயார்ப்படுத்திக்கொண்டிருந்தாள்.அவளது ஒளிப்படத்தை தேடுபொறிகளூடு தேட அவள் பெயர் தீபிகா என்று அகத்திரை சொல்லியது.அவள் ஆழ்மனத்தில் பொதிந்த சுயவிம்பத்தோடு தீபிகாவை ஒப்பிட்டதும் வந்த பதில் விரக்தி உணர்வை கிளப்பியது.




போதையின் உச்சத்தில் மாறன் தீபிகாவோடு விடுதியின் அறை ஒன்றுக்குள் நுழைந்து தாளிட்டுக்கொண்ட பொழுதுகளில் E-வோனா உயரமான கட்டடத்திலிருந்து குதித்து தன்னைத்தானே நெறுங்கச்செய்து இறந்து போனாள்.

{யாவும் கற்பனையே.உயிருள்ள அல்லது இறந்த யாரையும் சம்பந்தப்படுத்துவன அல்ல.}





மூன்றாண்டுகள் தாண்டி விட்டிருந்த போதிலும் அச்சம்பவம் இன்றுவரை மனதைவிட்டு அகலவில்லை.அச்சம்பவத்தைவிட பாரதூரமான சம்பவங்கள் பல எனது வாழ்க்கையில் நடைபெற்றிருந்த போதிலும் அவை ஒவ்வொன்றிற்க்குப்பின்னாலும் ஏதாவது காரணம் இருந்தது.அநேககாரணங்கள் அடித்தது,அடிவாங்கியது,அடிவாங்கினவன் ஆள் வைச்சு திருப்பியடிச்சது,மிரட்டியது,மிரட்டலுக்கு உள்ளானவன் போட்டுக்கொடுத்து உள்ள போனது என்ற வகைக்குள் உள்ளடங்கிவிட்டக்கூடியவை.ஆனால் "அந்த" சம்பவத்துக்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது தொடர்பிலான என தேடலுக்கான பதில்கள் பல தளங்களில் கிடக்கின்றன.நீங்கள் வீதியால் போகிறீர்கள் திடீரென்று ஐஞ்சாறு அன்பர்கள் குறுக்கா வந்து தட்டிப்பிழிந்துவிட்டு செல்கிறார்கள்.போகும் போது "மவனே கிக்சாவ இனிமே பார்த்தியெண்டா பின்னிடுவம்" என்று சொல்லிவிட்டும் செல்கிறார்கள்.அடிவிழுந்த வலி ஒருபக்கம் இருந்தாலும் மனக்குழப்பம் பெரிதாக இருக்காது.KICKஷா என்ற மட்ட பிகருக்கு முந்தநாள் போட்ட கடலை பயிராகி இன்று விளைந்திருக்கிறது என்று மனதுக்கு தெரிந்துவிடும்.சேதவிபர அடைப்படையில் அடுத்த முறை கிக்சாவை கண்டால் காததூரம் ஓடுவதா? அல்லது கடலையை இன்னும் ஆழமா போடுவதா? என்று சிந்தித்து முடிவென்றை எடுப்போம்.

ஆனால் முன்னப்பின்ன தெரியாத டம்மி பிகர் ஒன்று திடீரென காவல்த்துறை வாகனத்தில் வந்து "இதோ! இவன் தான் என்னை ரேப் பண்ணினது" என்று போட்டுக்கொடுத்து உங்களை அண்டவெயாரோடு முட்டிக்கு முட்டி தட்ட வைத்தால் எப்படி இருக்கும்?...இதே போலத்தான் அச்சம்பவமும் நிகழ்ந்தது.

அந்த வழக்கை முதலில் அறிக்கையாக சுருக்கித் தருவது இவ்விடத்தில் உசிதமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

குற்றச்சாட்டு-2007 இல் மொறட்டுவைக்கு கல்வி பயில வந்த தமிழ் மாணவி ஒருவரை மிகக்கொடூரமாக உடல் உள நெருக்குதலுக்கு உள்ளாக்கியமை,பின் தொடர்ந்து வந்தமை,தொலைபேசியில் மிரட்டியமை

குற்றவாளிகள்- முதலாம் இலக்க குற்றவாளி,இரண்டாமிலக்க குற்றவாளி

விளைவுகள்- பாதிக்கபட்ட மாணவி ஒருவருடத்தை தவற விட்டு அடுத்த வருடத்தினரோடு சேர்ந்து படிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.அவர் மிகக்கடுமையான உளப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.பல்கலைக்கழகம் வரவே அஞ்சுமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டபட்டவர் வாதம்-குறிப்பிட்ட பெண்மேல் மட்டத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்த பன்னாடை மையலுற்றது மட்டுமே எமக்கு தெரியும்.வேறு எதுவும் இது தொடர்பில் தெரியாது.

மட்ட சகமாணவர் கருத்து-குறிப்பிட்ட பெண்ணுக்கு இவ்வாறான பிரச்ச்சினைகள் ஏற்படுத்தப்பட்டதாக நமக்கு தெரியாது.குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அப்பெண்ணுக்கு எந்தப்பிரச்சினையும் கொடுத்ததாக அறியவில்லை.ஆனால் ஒரு தமிழ்ப்பெண் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதால் அவர் தரப்பில் உண்மை இருக்கலாம்.

பல்கலை வழக்கை விசாரித்த "வணிகதுங்க" தலைமையிலான அரைலூசுக்கும்பலின் கருத்து-பெண் பாதிக்கப்பட்டது உண்மை.இம்மாணவர்கள் செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்படவேண்டியவர்கள்.இவ்வாறான சம்பவத்தில் எதிர்காலத்திலீடுபடுபவர்கள் பயம்கொள்ளும்படி தண்டனை இருக்க வேண்டும்.

காவல்துறை நிலையத்திலும் தாக்கல் செய்யப்பட்ட அதே வழக்கை விசாரித்த தலைமைக்காவல் நிலைய அதிகாரி கருத்து-
"மல்லி! பெம்பிளை வழக்குப்போட்டா முடிவு உங்களுக்கு சாதகமா ஒருகாலமும் வராது.அந்த விசரி இருக்கிற பக்கமே போகாதையுங்கோ!.இனிமேல் கவனமா இருங்கோ!"

தற்போதைய நிலவரம்- பிரச்சினையை தொடங்கி வைத்த மட்டத்தின் பிரதிநிதியானவரும் அப்பெண்ணும் ஜோடியாகி விட்டார்கள்.குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல்கலைக்கழகத்தால் தண்டிக்கபட்டு,சிங்கள காவல்துறை நிலையங்களாக அலைந்து நொந்து நூடில்ஸ் போல ஆகிப்போனார்கள்.

முழு சம்பவத்தையும் அலசிய உளவியலாளர் கருத்து-
குறிப்பிட்ட பெண்ணுக்கு மாணவர் தலைவரான மங்கோலியன் மேல் ஆர்வம் இருந்திருக்கிறது.அதன் காரணமாக கல்வியை தவற விட்டிருக்கிறார்.அல்லது கண்டிப்பான வீட்டுக்காரருக்கு அஞ்சி மனதில் உண்டான ஈர்ப்பை மறைக்க முயன்று தோற்றிருக்கிறார்.அதன் காரணமாகவும் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல்ப்போயிருக்கலாம்.பெறுபேறுகள் குறையுமிடத்து முதல்தெரிவுகளான பொறியியல் பீடங்களுக்கு போகமுடியாமல் போனால் வீட்டார் கொண்டிருக்கும் அதீத நம்பிக்கை இல்லாமல் போக வாய்ப்புண்டு என அஞ்சி பரீட்சையை அடுத்த வருடம் எதிர்கொள்வதற்காக காரணங்கள் தேடியிருக்கிறார்.அத்தருணத்தில் மங்கோலியனோடு கூடவே சத்தமாக சிரித்தபடி திரிந்த குற்றம்சாட்டப்பட்டவர்களான இருவரும் மனதில் வர காரணங்களாக்கியிருக்கிறார்.அக்காரணக்களுக்கு கொழும்பு மாணவிகளான வீணை வாசிப்பவரும் இன்னும் சிலரும் உரமேற்ற இறுதியாக அதை வழக்காக்கி இருக்கிறார்.

பாதிக்கப்பட்டவர் வாதம்-
பொய்வழக்கு போட்டதைக்கூட மன்னித்து விடலாம் ஆனால் "பிரச்சினைக்குரிய யாழ்ப்பாண மாணவர்கள்" என போட்டுக்கொடுத்து மிகச்சிக்கலான காலகட்டத்தில் உயிராபத்தை ஏற்படுத்த முயன்றதை மட்டும் மன்னிக்கவே முடியாது.தமிழனான அக்குறிப்பிட்ட பெண்ணின் தந்தை இப்படி காவல்துறைநிலையத்தில் கொடுத்த முறைப்பாட்டை சிங்களவரான நிலையபொறுப்பதிகாரி கோடிட்டுக்காட்டி "நான் என்றபடியால் தப்பித்தீர்கள்,வேறு எவராவது என்றால் அவ்வளவுதான்" என்று சொன்னதையும் மறக்க முடியாது.சரிபிழைகளுக்கு அப்பால்ப்பட்டு இவ்வகையான அசிங்கமனோபாவத்தின் மூலப்புள்ளி எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டு போகும் போது தெரியும் முடிவிடம் எப்பவும் போல அருவருப்பாகவே காட்சியளிக்கிறது.

{வழக்கு வளரும்}





மிலாமிளிக்கா!.மிதப்புக்காலணிகள் மீது மிருதுவான பாதம் வைத்து புரவி நடை போடும் ஐந்தடி உடம்புக்காரி.உயரம் மட்டும் மட்டுப்பட்டதே தவிர, கட்டுமீறிய அளவுகளாய் மீதம் எல்லாம் வாய்த்திருந்தன.முதல்சந்திப்பிலேயே காதல் சொன்ன காளைகளை எல்லாம் முரட்டுப்பார்வையாலேயே விரட்டிய அவளுக்கு அவன் வந்து முன்னால் நின்றபோது மூச்சே வரவில்லை.அவள் அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருந்த உதடுகளால் அவன் அழகாய் புன்னகைத்த போது பைத்தியமாகிப்போனாள்.கலாச்சாரம் கட்டுப்பாடு எல்லாம் மறந்து,உணர்ச்சி நிரம்பிய கணமொன்றில் சனநெருக்கடியான வீதியோரமாய் அவனோடு ஆழமாய் உதட்டு முத்தம் பரிமாறிக்கொண்டதை ஊரே பரபரப்பாய் கதைத்தது.விடயம் அறிந்தவர்கள் அவளை காணும் தருணங்களில் வீசும் விசித்திரப்பார்வைகள் அம்முத்தத்தை மீளவும் நினைவுக்குள் கொண்டுவந்து கிளர்ச்சியூட்டினவே தவிர அவமானத்தை தருபவையாக இருக்கவில்லை.அவள் அங்குலம் அங்குலமாய் உணர்வு ஊற்றி வளர்த்த காதல்ச்செடிக்கு ஒரு ஆண்டு வயது ஆகிய தருணங்களில்த்தான் அந்த அரிதான,உவப்பான வாய்ப்பு தேடி வந்தது.சிறுவயதிலிருந்து அவளின் கனவுகளினிருப்பிடமாகி இருக்கும் லண்டன்,சொகுசுக்காரில் வந்து இறங்கும் கணவனின் கோட்டுப்பைகளிலிருக்கும் பணத்தின் கனதி,நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் வாழ்க்கை என கண் முன்னே நின்ற பிம்பங்களை சுருக்குப்பையில் போட்டுகட்டி உளத்தாரசின் ஒரு தட்டில் போட்டுவிட்டு மறுதட்டில் அவன் காதலை போட்டபோது ஈடாகவில்லை."என்னை மன்னிச்சிடுடா!, தற்கொலை செய்வம் எண்டு மிரட்டுற வீட்டுக்காரருக்கு முன்னால என்னால எதுவுமே செய்ய முடியேலை,உனக்கு என்னை விட நல்ல ஒருத்தி கிடைப்பா" என்று சில கண்ணீர்த்துளிகளை இலவச இணைப்பாக்கிச்சொல்லி முடித்து நிமிர்ந்த போது அவன் பலவீனமான நடையோடு போய்க்கொண்டிருந்தான்.



நாட்களின் ஓட்டத்தில் பழைய நினைவுகள் மழுங்கிப்போயிருந்தன.தொலைபேசியில் புதியகாதலை எதிர்கால வெளிநாட்டு கணவனோடு வளர்ப்பதொண்றும் அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. குறிக்கப்பட்ட மணநாள் நெருங்க பரபரப்பாகி அழகு சிகிச்சை நிலையங்களுக்கு ஓடிக்கொண்டிருந்தபோது தான் அந்த கொடூரமான ஒற்றைத்தலைவலி அவளைத்தாக்கியது.சகல மாத்திரை மருந்துகளுக்கும் அடங்காமல் கபாலத்தில் தொடர் சம்மட்டி அடிகளாய் பிறந்த வேதனையின் வீச்சம் தாங்க முடியாமல் இறுதியாய் டொக்டர் மலரவனிடம் வந்தாள்.மிளாமிளிக்காவை மல்லாக்க வைத்து ரொமோகிறபி ஸ்கானருள் செலுத்தி முப்பரிமாண படங்களை எடுத்துப்பார்த்த போது கபாலத்தின் வலது பக்கமாக மேலே கருப்பாக புள்ளியாய் எதோ ஒன்று தெரிந்தது.அசாதாரண வளர்ச்சி கொண்ட கலங்களால் உருவாகும் விம்பத்திலும் பார்க்க அது வேறுபட்டிருந்தது.ஆழ அலசி கூர்ந்து பார்க்க அப்புள்ளியூடு சென்ற எக்ஸ் கதிர்கள் எவையும் தெறித்து வரவேயில்லை என்பது விளங்கிற்று.சக்திக்கதிர்களை உறிஞ்சி தெறிக்கவிடாமல் வைத்திருக்கும் புள்ளி என்றால்......... மனித உடல்க்கலங்களுக்கு அப்படியான ஒரு இயல்பு இருப்பதேயில்லையே?....விலகலை உண்டாக்கும் கதிரியக்க உலோகங்கள் கூட எக்ஸ் கதிர்களை முழுமையாக சிறைப்பிடிப்பதில்லை......சாத்தியமான தகவுகளூடு பாய்ந்த எண்ணஓட்டம் ஒரு புள்ளியின் தரித்து நின்ற போது மலரவன் முகத்தின் வியர்வைத்துளிகள் ஏசி குளிர்மையையும் மீறி பூத்திருந்தன.



காஸ்மிக் கருந்துளைகள் பிரபஞ்சத்தின் பிரமாண்ட மர்மப்புள்ளிகள்.அளவிடமுடியா திணிவையும் மிகக்குறுகிய கன அளவையும் கொண்ட அவை அளவில்லா ஈர்ப்பு விசையால் ஒளியையும் தப்பவிடாமல் சிறைப்பிடிக்கும் வல்லமையுள்ளவை. சூழவுள்ள திணிவுகளை விழுங்கி விரிந்து செல்லும் இவற்றுள் திணிவழியும் வீதம் உள்ளிழுப்பதை விட அதிகமாயிருக்கும் என்பதால் வளர்ச்சி எக்காலத்திலும் கட்டுப்படாதென பௌதீக ஆசிரியர் அக்காலத்தில் சொன்னது நினைவில் வந்தது.இவற்றுக்கு மாறாக மிகச்சிறிய அளவிலான கருந்துளைகளும் உள்ளன.திணிவில் 5000 புரோட்டன்களுக்கு சமனானானதும் அளவில் புரோட்டனை விட 1000 மடங்கு சிறியதுமான திணிவு கருந்துளையாக தொழில்படுமென நவீன விஞ்ஞானம் சொல்கிறது.உடலியல் கூறுகளிலொன்று பிரிகையடைந்து மிகமிக சிறியதாகும் பட்சத்தில் அது பிறகலங்களை விழுங்கும் துளையாக மாறி வளர்ந்து கொண்டே செல்வதற்கான வாய்ப்பு பில்லியனில் ஒன்றேனும் இருப்பதாக மனம் சொல்லியது.




"செல்வி மிளாமிளிக்கா! உங்களுக்கு வந்திருப்பது பிரபஞ்ச மூலைமுடுக்குகளிலும் இல்லாத அரிதான நோய் ஒன்று.கபாலத்துள் இருந்த கல அணுக்களில் ஒன்று படுவேகமாக பிரிகையடைந்து கருந்துளையை உருவாக்கி இருக்கிறது.அது சூழவுள்ள கலங்களை விழுங்கி வளர்ச்சியடைந்து வருகிறது.கால ஓட்டத்தில் அது உம்மை மட்டுமல்ல உலகத்தையே விழுங்கவல்லதாகவும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது.மலரவன் சொல்லிக்கொண்டு போன வார்த்தைகள் பிம்பங்களாக அணிவகுக்க, மிளாமிளிக்கா மிரளத்தொடங்கினாள்.




"நிறைகுறைதல்,கலச்சிதைவுக்கு காரணமான HCG ஓமோனின் ஒரு வடிவமே இச்சிக்கலுக்கு மூலமாக இருக்கும் என நினைக்கிறேன்.மனதை விட்டு நீக்க முடியாமல் இருக்கும் துன்பியல் நினைவு ஏதாவது நீண்ட நாளாய் இருக்கிறதா செல்வி மிளாமிளிக்கா?"

"அப்படி ஒன்றுமே இல்லை டொக்டர்"

"குற்ற உணர்வு?,யாருக்காவது தீங்கு அல்லது துரோகம் இழைத்ததாய் உணர்வு?,அதுவும் HCG சுரப்பை தூண்டும்"

"ம்ம்ம்.இல்லை.ஆனா கொஞ்சமா.அதை சரியாக்கேலும் எண்டு நினைக்கிறன்"

"முதல்ல அதை செய்யுங்கோ,கடவுள் உங்கள் பக்கம் நிற்பாராகட்டும்.
முக்கியமாக இதைப்பற்றி எவருக்கும் சொல்லி விடாதீர்கள்.உங்களால் தமக்கு ஆபத்து என நினைப்பவர்கள் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள்."



சில மாதங்களின் பின்பு குளிர்மையான மழை நாள் ஒன்றில் மலரவனை சந்திக்க யாரோ பூங்கொத்துக்களோடு காத்திருப்பதாய் உதவியாளர்கள் சொல்லிப்போனார்கள்.சென்று பார்த்த போது மலர்ந்த முகத்தோடு அவன் நின்றிருந்தான்."டொக்டர்,அவ சம்மதம் சொல்லிட்டா,வாற மாதம் கலியாணம்.நீங்க அவசியம் வந்தாகணும்,நான் இப்ப ட்ரக்ஸ் எல்லாம் விட்டு வேளா வேளைக்கு சாப்பிட்டு எப்பிடி மாறிட்டன் பாருங்கோ" வார்த்தைகளில் குழந்தையின் குதூகலம் தெரிந்தது.

அன்றிரவு மலரவன் வழமை போல ஆழமான சிந்தனைக்குள் தன்னை அமிழ்த்திக்கொண்டிருந்தார்.அவரால் நிச்சயம் அவன் திருமணத்தில் பங்கேற்க முடியாது.அது விரும்பத்தகா விளைவுகளை ஏற்படுத்தலாம்.அநேகமாக மிளாமிளிக்கா கழுத்தில் அணிந்திருக்கும் கனமான ஆபரணம் திருமணம் முடிந்த பின் பெட்டிக்குள் உறங்கச்சென்றதும் அந்த ஒற்றைத்தலைவலி அகன்றுவிடும். உதவி தேடி வந்தவளுக்கு புனைகதை சொல்லி குழப்பியது கிஞ்சித்தும் வருத்தத்தை தரவில்லை.காதல் துரோகத்தாலுண்டான வலிகள் நிரம்பிய பாதை வழி வந்தவன் அவ்வலி இன்னொருவனுக்கு கிடைப்பதை ஒருபோதும் விரும்பமாட்டான்.