தற்போதைய நிலவரம்-07




சிங்கபுரி நண்பர்கள் பலரும் தற்போது வளர்ச்சியடைந்து உறுதியான நிலைக்கு வந்துள்ளார்கள்.ஆரம்ப காலத்த்தில் இருந்ததைப்போலல்லாது நிறைவான சம்பளம்,வேலையிடத்தில் உயர்வான பதவி என வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளனர்.பதவி உயர்வுகள் தந்த ஊக்கம் பலரையும் பப்பாவில் ஏற்றி விட்டுள்ளதையும் காணமுடிகிறது.அதில் ஒரு விளைவுதான் ஒரு கேள்வியை கேட்டால் உடனேயே பதில் சொல்லாமல் சிறிது நேரம் எடுத்து பதில் சொல்வது.உயர்முகாமைத்துவ உத்திகளில் மிகப்பழமையான கடந்த நூற்றாண்டை சேர்ந்த இந்த முறையை சீனத்து முதலாளிமாரிடமிருந்து சிலர் கற்றுக்கொண்டு நண்பர்களிடையே நடைமுறைப்படுத்த முயல்வதை காணும் போது சிரிப்பு மேலிடுகிறது.அடிப்படையில் ஒருவர் கேள்வி கேட்கும் போது பதில் சொல்ல நேரம் எடுத்துக்கொள்வது கேட்பவர் பதவி நிலையில் தாழ்ந்தவராக இருக்கும் பட்சத்தில் அவருள் ஒரு விதமான பதற்றத்தையும்,பலவிதமான எதிர்மறை சிந்தனைகளையும் உருவாக்கும்.இந்நேரம் "கேள்வி ஏன் கேட்கப்படுகிறது?,இதற்கு பதில் சொல்வதான் என்ன இலாபம்? எப்படியான பதிலை சொல்லவேண்டும்?" போண்ற உப கேள்விகளை விடையளிக்க வேண்டியவர் உள்ளே உருவாக்கி தீர்த்துக்கொள்கிறார்.வேகமான முடிவுகளை வழங்கவல்ல முகாமைத்துவமே இந்நாளில் எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வகையான செயல்பாடுகளை நண்பர்கள் மத்தியிலும் மேற்கொள்வது "அரைக்கிறுக்கன்,மந்த புத்தி,பென்ரியம் -01 " போண்ற பட்டப்பெயர்களை பெற உதவுமே ஒழிய அறிவு ஜீவிகளாக காட்டிக்கொள்ள எந்த வகையிலும் உதவாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

திருமணம் என்பது மனிதன் உருவாக்கிக்கொண்ட குயுக்தியான நடைமுறை.பிடித்த பெண்ணோடு சேரவும் அவளை கூடவே வைத்திருக்கவும் நிறைய நேரத்தை செலவிட்டு போராட்டத்தை சந்தித்த ஆதி மனிதன் திருமணம் என்ற நடைமுறையை உருவாக்கினான்.ஆற்றல் மிக்க,பலமான மனிதர்கள் மட்டுமே செழிப்பான பெண்களை அடைய முடியும் என்ற இயற்கைநியதி மறைந்து "எல்லா ஆண்களுக்கும் பெண்" என்ற கோட்டா முறை திருமணம் மூலம் உருவானது.ஆனால் சில பேர்வழிகள் திருமணம் முடித்து விட்டு "அதை ஒரு வாழ்நாள் சாதனையாக" பீற்றிக்கொண்டு திரிவதை காணும் போது மனிதன் ஆதிவாசியாகவே இருந்திருக்கலாம் என தோண்றுகின்றது.இது நிற்க தற்போதைய நிலவரத்துக்கு வருகிறேன்.நண்பர்கள் பலரும் திருமணம் தொடர்பில் தீவிரமாக சிந்திக்க தொடங்கியிருக்கிறார்கள்.வீட்டுபொறுப்பை முடித்த பின் திருமணம்,பணம் சேர்த்த பின் திருமணம் என பல "பக்கா பிளானுகளை" போட்டு வைத்துள்ளனர்.பதினைஞ்சு பவுணிலை தாலி கட்டி,இருபது லட்சம் செலவழித்து கலியாணம் செய்தால் தான் கழுத்தை நீட்டுவோம் எனச்சொல்லும் பெண்களை அடித்து விரட்டிவிட்டு "மஞ்சள் கயிறே போதும் கண்ணாளா நீ வந்தால் காணும்" எனச்செப்பும் பெண்களை பிடியுங்கள்.கடின உழைப்பில் திரட்டிய பணத்தை ஆரோக்கியமான விதத்தில் முதலிடுங்கள்.

குடும்பமாகிவிட்ட விஞ்ஞானி மகிழுந்தில் இலண்டன் மாநகரை சுற்றி வரும் வேளை நண்பர் ஒருவரின் வீட்டுக்குள் சடுதியாக புகுந்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்."என்ன மச்சான் காரிலையோ வந்தனி?" என்று நண்பர் கேட்க "நாங்கள் ஓடாத வாகனமோ?,மனுவல் வாகனத்தையே மல்லாக்க வச்சு ஓட்டுற ஆட்கள்.மனுசிட ஓட்டோ கியர் வாகனத்தை ஓடுறது பெரிய வேலையோ?" என்று பதில் சொல்லியிருக்கிறார்.அருகே இருந்த துணைவியார் சிரித்து விட்டு " பார்க் பண்ணேக்க முன்னுக்கு நிண்ட காரை இடிக்க போயிட்டார்.நான் கை பிரேக் அடிச்சிருக்காட்டி அவ்வளவு தான்" எண்டாவாம்.இந்த சம்பவம் லண்டன் தண்ணி பார்ட்டிகளில் "பைற்ஸ்" ஆக அடிக்கடி இழுபடுவதை காணமுடிகிறது.


மலர்ந்த இந்த புத்தாண்டு வெற்றிகளையும் சந்தோசத்தையும் தரும் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கைப்பாதையில் தொடர்ந்து நடை போடுவோம் எனக்கூறி அடுத்த பதிவில் சந்திக்கும் வரை விடைபெறுகின்றேன்.

5 comments:

எஸ் சக்திவேல் said...

>அதில் ஒரு விளைவுதான் ஒரு கேள்வியை கேட்டால் உடனேயே பதில் சொல்லாமல் சிறிது நேரம் எடுத்து பதில் சொல்வது.உயர்முகாமைத்துவ உத்திகளில் மிகப்பழமையான கடந்த நூற்றாண்டை சேர்ந்த இந்த முறையை சீனத்து முதலாளிமாரிடமிருந்து சிலர் கற்றுக்கொண்டு நண்பர்களிடையே நடைமுறைப்படுத்த முயல்வதை காணும் போது சிரிப்பு மேலிடுகிறது

-----------------------

அதுமட்டுமல்ல , தேவையில்லாமல் நீளநீள மாகப் பேசுவது, தெரியாத விடயங்களைப் பற்றியும் தெரிந்ததுமாதிரிப் பேசுவது (அல்லது அப்படிப் பேசித் தாங்கள் முட்டாள்கள் அன்று காட்டிக் கொள்வது). இப்படி நிறைய எழுதலாம்.

எஸ் சக்திவேல் said...

There is no link to "add me' to follow your blog. Did I miss anything?

தினேஸ் said...

டேய்! பரதேசி நாயே கைப்புல்ல .சிங்கபூர் ல இருக்கிரவன் என்ன இளக்காரமா?.திரும்ப வாடி உனக்கு இருக்கு.

Anonymous said...

Dinesh! unaku ...... arupom.ugly asshole

Anonymous said...
This comment has been removed by a blog administrator.