பெயர் - குழந்தைவேல் வசந்தன் அல்லது அலியப்பா/சன்ரா

வகை- சிங்கப்பூர் இஞ்சினியர் மாப்பிள்ளை

தொழில்-திட்ட முகாமையாளர் (PM)

உப தொழில்கள்- மாங்காய்,தேங்காய் தொடக்கம் ஜம்புக்காய் வரை களவாக பிடுங்கி உண்பது.முதலை பிடிப்பது,வீண் வம்பிழுத்து அடிப்பது மற்றும் அடிவாங்குவது.

வாழ்நாள் சாதனைகள்- மல்லாவியில் சும்மா போன முதலையை கவிட்டுப்போட்டு கதற கதற அடித்து கொண்றது

உடல் அமைப்பு- மலைப்பாம்பு போல பருத்த புயங்களுக்கும் உராங்குடான் போண்ற உறுதியான தேள்களுக்கும் பிதுங்கிய வயிற்றுக்கும் சொந்தக்காரன்.

நிறம்- அவித்த ஆப்பிள் பழ நிறம்.

எதிர்பார்க்கும் வரன் - கொஞ்சம் கூட படிப்பறிவு இல்லாதவராயும் காதில் என்ன பூ வைத்தாலும் நம்புபவராயும் அதிக எடை கொண்டவராயும் இருத்தல் அவசியம்.

சீதனப்பெறுமதி - 20 கோடி (Exclude vat)

பி.கு- சிவந்த அழகிய பெண்கள் எனில் ஸ்கொலர்சிப் வழங்கப்பட்டு கணிசமான அளவு தள்ளுபடி கிடைக்க வாய்ப்புண்டு.
பெயர்- கனகசிங்கம் கமலரூபன் / அப்பாஸ்

வகை- இங்கிலாந்து ரோயல் குடும்ப மாப்பிள்ளை

தொழில்- அப்படி என்றான் என்ன?

வாழ்நாள் சோகம்- கூடவிருந்த மங்கோ உம்சாண்டி விசயத்தில் கோர்த்து விட்டதும் "யாழ்ப்பாணமும் பெண்களும்" என்ற ஆய்வுக்கட்டுரையை எழுத முடியாமல் போனதுவும்.

உடல்கட்டமைப்பு- யுத்தடாங்கி போல உறுதியான தசைகளையும் தண்ணி பவுசர் போல மென்மையான வண்டியையும் கொண்டவர்.

தோல் நிறம்- யாழ்ப்பாண பெண்களுக்கு மிகப்பிடித்தமான கோதுமை நிறம்.

மணவாட்டிக்கு இருக்கவேண்டிய தகைமைகள்- காதுகேளாதவராக இருத்தல் அவசியம்.(மாப்பிள்ளை படுக்கும் போது நிலக்கரி ரயில் தலைக்கு மேலால் ஓடுவது போலவும்,டிஸ்கவரி சனலை ஒலிபெருக்கி வைத்து பார்ப்பது போலவும் அருகில் இருப்பவருக்கு தோண்றுமளவுக்கு குறட்டை ஒலியை உருவாக்குவார்.)

சீதனம்- பணமாக எதுவும் தேவையில்லை.பொருளாக ஒரு லோட் புளுக்கொடியலும் ஒரு மாதம் கல்லால் குத்திச்சாப்பிட தேவையான தேக்கங்காய்களும்.

சிறப்பு இயல்புகள்- தூங்கி களைப்பாகி அந்த களைப்பை போக்க மறுபடியும் தூங்குமளவுக்கு சுறுசுறுப்பானவர்.சாப்பாட்டின் முன் சாப்பாடு & சாப்பாட்டின் பின்னுணவு என பல ஆகாரங்கள் எடுக்குமளவுக்கு ஆசாரம் மிக்கவர்.

பெயர்- சசிக்குமார் பத்மனாதன்

வகை- கனேடியன் PR* மாப்பிள்ளை (*யாழ்ப்பாண பெண்கள் கவனத்துக்கு)

தொழில்- MSc செய்வது.ரெஜிபோமில் வெயிட் அடிப்பது.

வாழ்நாள் சாதனை- 1999 ல் பீரங்கிப்பிரிவுக்கு எறியம் படிப்பித்தது.2004 ஆம் ஆண்டு ரஜீந்திரதாசை பிடிக்க வந்த முனிப்பேய்க்கு வெறும் உடம்பை காட்டி அதைmவெருண்டோட செய்தது.

உருவ அமைப்பு- மனித உடலில் உள்ள 206 என்புகளையும் உயிருடன் உள்ளபடியே காண்பிக்க வல்ல விந்தையான உடலமைப்பு இவருடையதாகும்.மெடிகல் மிராகிள்!

சரும நிறம்- தமிழ்ப்பெண்களின் உள்ளத்தை கொள்ளையடிக்க வல்ல தங்க நிறத்தில் மின்னும் கவர்ச்சியான சருமம்.

திருமதி சசிக்குமார் எப்படி இருக்க வேண்டும்- ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு உடல் வெளிறியவராகவும் 25 கிலோ எடைக்கு மிகாதவராயும் இருத்தல் வேண்டும்.

சீதனம்- இலங்கை ரூபாய்கள் ஏற்றுகொள்ளப்படமாட்டாது.ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுண்கள் அல்லது இரண்டு மில்லியன் கனேடிய டொலர்கள்.
பெயர்-பெருமாள் சௌந்தராஜன்

தொழில்- அண்டகவரில் இருந்து உளவு பார்த்தல் (விஸ்வரூபம் கமல் போல)

பிடித்தது- கலெக்சிS3 ,பியர்,வைன்.விஸ்கி,சிக்கன் ஹொட் விங்க்ஸ்

பிடிக்காதது- ஆப்பிள் ஐபோன்,அட்வைஸ்,காசை தந்துவிட்டு திருப்பி கேட்பது.

விரும்பி அணிவது- பச்சை நிற செருப்பு.ஒரேஞ்ச் நிற ஜம்பர்,பிங்க் கலர் யட்டி

வாழ்நாள் சாதனை- 10 மீற்றர் தொலைவில் இருந்த அயல்வீட்டில் தண்ணி அடித்துவிட்டு வீடு வந்து சேர 5 மணித்தியாலங்கள் எடுத்ததுக்கொண்டது.

சரும நிறம்-பிளாக் லேபிலில் பெப்சியை அரைக்கு அரையாக கலக்கும் போது வரும் கலவை நிறம்.

உடல் தோற்றம்- சிவாஸ் ரீகல் போல வளைவுநெளிவுகளையும் பட்வைசர் கான் போல பளபளப்பையும் மக்னம் போல் "கிக்" கையும் பார்பவருக்கு தருவதாகும்.

எதிர்பார்க்கும் வரன்-கள்ளுத்தவறனைகாறர்,சாராயக்கடைக்காரர்,கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் குடிவழிப்பிறந்த குலமகளாய் இருத்தல் வேண்டும்.

சீதனம்- வீடு,நிலம்,பணம் எதுவுமே வேண்டாம்.முதலிரவுக்கு பாலும் பழமும் கொடுத்தனுப்பாமல் வைட் டயமண்டும்,சிக்கன் பைற்சும் அனுப்பிவிட்டால் காணும்.

பெயர்- மொறட்டுவை தமிழ்ப்பெண்
(Ex-சரோஜாதேவி,பத்மினி,வித்யா,மீனா,ரேகா,கன்சிக்கா,தீபிகா)

(எங்கள் அழகிகளைப்பற்றி எழுதினால் "போடுவோம்" என வாளிகள் பலவழிகளாலும் மிரட்டியதால் பயந்து பொதுவாக பெயர் குறிப்பிடாமல் போடும்படி ஆகிவிட்டது.)

குணம்- அடக்கம்,ஒடுக்கம்,குடும்பப்பாங்கு,நாற்குணம்

தோற்றம்- சில பெண்ணுங்களை பார்த்த உடனேயே பிடிக்கும்,இன்னும் சிலதை பார்க்க பார்க்க பிடிக்கும்.கட்டுப்பெத்தை கன்னிகளை பார்க்காமலே பிடிக்கும்.

பிடித்த ஆண்கள்- தண்ணி போடாதவர்கள்,சத்தமாக பேசாதவர்கள்,குனிந்து நடப்பவர்கள்,பேசும் போது கட்டை விரலால் கோலம் போடுபவர்கள்,நோட்ஸ் போட்டோ கொப்பி அடித்து தருபவர்கள்,பெண்களின் புத்ததக பாரம் சுமப்பவர்கள்,விடுதி ஆண்களின் உள்வீட்டு விவகாரங்களை போட்டு கொடுப்பவர்கள்,காலை "குட் மோர்னிங்கும்" மாலை "குட் நைட்டும்" குறுந்தகவல் அனுப்புபவர்கள்.பேரூந்தில் சீட் பிடித்து தருபவர்கள்,கன்ரீனில் பால்,யோக்கட்,ஐஸ்கிறீம் வாங்கி தருபவர்கள் என நீளும்.

சீதனம் விபரம் - "நாங்கள் சீதனம் தரமாட்டோம்.மாறாக எங்களை மணப்பதானால் ஆண்கள் எங்களுக்கு சீதனம் தந்தாக வேண்டும்" (பிரசித்தி பெற்ற கட்டுப்பெத்தை தமிழ் பெண்களின்  மகுடவாக்கியம்)

பல ஆண்கள் தங்களது விபரங்களை பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தபோதிலும் மேற்சொன்ன நால்வரது விரபரங்கள் மட்டும் பிரபல்ய அடிப்படையில் ஆசிரியர் பீடத்தால் தெரிவு செய்யப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளன.ஏனையோர் மனம்தளராது காத்திருக்கவும்.உங்களுக்கேற்ற மணப்பெண்ணை பிடித்து தரும்வரை கனாக்காலம் ஓயப்போவதில்லை.
5 comments:

Achu said...

Kaipulla! Why don't you include your name?

எஸ் சக்திவேல் said...

தாங்க முடியலேயப்பா :-(

BTW

தங்களின் பயோ டேற்றா எங்கே?

எஸ் சக்திவேல் said...
This comment has been removed by the author.
எஸ் சக்திவேல் said...

4) இந்தமாதிரி 'லச்சணமான" பிள்ளைகளெல்லாம் உங்களோடு படிச்சினமே? 1988 ஏ/எல் எழுதி 1991 பெப். பேரா/மோரா போன எங்கள் காலத்தில் இப்படி எல்லாம் இல்லை.

3 March 2013 13:27

Kaipillai said...

சக்திவேல்! இப்பதிவு திருமணம் ஆகாத பரிதாபத்துக்குரிய பேர்வழிகளுக்கானது.பல பெண்நண்பிகள் கொண்ட கைப்புள்ளைக்கு எதுக்கு பயோ டேற்றா?
லட்சணம் என்பது பார்ப்பவர் கண்ணை பொறுத்தது.காஞ்ச மாட்டுக்கு காவோலையும் குளிர்சியாத்தான் தெரியும்.