Showing posts with label தற்போதைய நிலவரம். Show all posts
Showing posts with label தற்போதைய நிலவரம். Show all posts

தற்போதைய நிலவரம் -10

இன்பத்தையும் துன்பத்தையும் பலவித அனுபவங்களையும் தந்த 2014 ஆம் ஆண்டு இன்னும் இரண்டே வாரங்களில் விடை பெறுகிறது. உலகமெல்லாம் பரந்து வாழும் எமது மட்டத்து நண்பர்களில் பிரித்தானியாவில் இருப்பவர்களே கூட்டிக்கழித்து பார்க்கும் போது இந்த வருடம் முழுவது கலக்கு கலக்கு என்று கலக்கியிருக்கிறார்கள். சிங்கபுரி வாழ் பேர்வழிகளில் பலரும் திருமணவாழ்வில் இணைந்த போதிலும் அதிக பரபரப்பில்லாத முகநூலில் புகைப்படங்கள் தென்பட்ட நிகழ்வுகளாகவே அவை கடந்து சென்றன. இலங்கா புரியிலும் குறிப்பிடத்தக்க சில பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை ஆய்வுக்குட்படுத்திய ஆசிரியர் பீடம் முக்கியத்துவ அடிப்படையில் அவற்றை கீழே வரிசைப்படுத்தியுள்ளது.

1) ஆறுபை சேகர்

நாய் சேகர் என்று பிரபலமான அதிரடி நாயகன் இவர். கலியாணம் கட்டாதவன் கட்டுறதுக்கு அலைய, கட்டினவன் பிள்ளைக்கு அலைய இவர் மட்டும் மனத்தை சிதறவிடாமல் இரும்புகளை தூக்குவதும் டயட்டுமாக அலைந்து ஆறு பையை செதுக்கியிருக்கிறார். வேலை வேலை என்று பறக்கிற பிரித்தானியாவில் இருந்து கொண்டு உடம்பை இறுக்கமா பேணுவதற்க்கு ஒரு தனித்திறமை வேணும் பாருங்கோ!. ஆறு பை ஏழு பையாகி ஏழு எட்டாக வாழ்த்துகிறோம்.


2) சிங்கம் "ராகுல்"

 முதன் முதலாக மட்டத்தில் கலியாணம் கட்டியவர். முதன் முதலாக அப்பா ஆகியவர். இரண்டாவது குழந்தைக்கும் அப்பா ஆகி இருக்கிறார். மூத்த பிள்ளை விளையாட பொம்மை கேட்டதெண்டு இரண்டாவது குழந்தையை பெற்றேனாக்கும் என்று முகநூலில் நிலைக்குறிப்பு போட்டுவிட்டு நெஞ்சை நிமிர்த்திக்கொள்கிறார் இந்த ஆண் சிங்கன்.



3) அப்பா ஆனார் அலிபாய்.

பலர் முதல் குழந்தைக்கு அப்பா/அம்மா ஆகியுள்ள போதிலும் இங்கே அப்பா ஆகியிருப்பவர் ஒரு விஞ்ஞானி. முத்தையன் கட்டு நியூட்டன். வன்னியிலேயே ரின்மீன் செய்த அப்துல் கலாம். பெண் குழந்தை பரிசாக கிடைத்தது என்று முகநூலில் நிலைக்குறிப்பிட்டு மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டுள்ளார். பிரித்தானியாவில் அறிவு மிக்க தமிழ் சந்ததி உருவாக சசியின் சேவை மேலும் தமிழினத்துக்கு தேவை.


4) காரோட்டும் செழியம்.

யாழ்குடாநாட்டில் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையோடு வாகனம் செலுத்தும் படி கேட்க்கப்படுகிறார்கள். கண்ணாடி அணிந்த பொறியியலாளர் ஒருவர் கண் மண் தெரியாத வேகத்தில் கண்மூடித்தனமாக காரோட்டுவதால் இவ்வெச்சரிக்கை விடப்படுகிறது . வதையின் அலகான செழியம் முன்னர் வெறுங்காலில் வந்தது பின்னர் உந்துருளியின் வலம் வந்தது. இப்போது காரில் தேரோட்டம் போகிறது. சமீபத்தில் மன்னார் சென்ற செழியம் அடுத்தது எந்த மாவட்டத்தை குறி வைக்கப்போகிறதோ?.


5) முதலாளி அலியப்பா

கடந்த 8 மாதங்களாக பலவிதமாக முதலாளி ஆகுவதற்கு முயன்று வந்த அலியப்பா சில வாரங்கள் முன்னர் அதில் வெற்றியும் கண்டிருந்தார். ஆனால் கன்னி முயற்சியிலேயே நிலக்கீழ் உயர் அழுத்த வயரை அறுத்து மாட்டிக்கொண்டுள்ளார். எரிந்த குழிக்கு அருகே இருந்த படி சுப்பவைசரை காலணி வாங்கி வரும் படி அனுப்பியிருக்கிறார். அந்த அறிவாளியும் இரண்டு வலது கால் அணிகளை வாங்கி வந்திருக்கிறான். இப்படியான புத்திசாலிகளை வைத்திருந்து எப்படி வேலை செய்வது என்று கடுப்பான முதலாளி பழையபடி தொழிலாளி ஆகிவிட்டார். முதலாளி வாட்சப்பில் அனுப்பிய படங்கள் கீழே!





தற்போதைய நிலவரம் -10



உடையாது என்று எல்லோருமே நினைத்த 7ஜி கும்பல் உடைந்துவிட்டது. கவிழாது என்று அடித்து கூறப்பட்ட டைட்டானிக்கே கவிழ்ந்த சம்பவத்தோடு ஒப்பிடும் போது இது ஒரு வெறும் விடயம் என்ற போதிலும் மட்டம் 2003 இனை பொறுத்தவரை இது குறிப்பிடத்தக்க கனமானது. பல்கலை நாட்களில் 7ஜி கும்பல் போட்ட அட்டகாசங்களும் அடிபாடுகளும் மட்டத்திலிருந்த சிலரை விலகிப்போக வைத்ததோடு பலரை பொறாமைப்படவும் வைத்திருந்தன. ஒவ்வொருத்தனும் எதோ ஒரு வகையில் பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருக்க இவர்களால் மட்டும் எப்படி இப்படி ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது என்று கடுப்பான ஜூனியர் சீனியர் ஏராளம். 7ஜி கும்பலின் பலமும் அதுதான்.பலவீனமும் அது தான். பிரச்சினைகளை ஒருபக்கம் போட்டுவிட்டு யாராவது மூன்றாவது தரப்போடு வம்பிழுப்பது, மூன்றாவது நபர் கிடைக்காத பட்சத்தில் தண்ணியை போட்டோ போடாமாலோ தமக்குள் சண்டையிட்டுக்கொள்வது ,அரட்டையடிப்பது என இவர்களின் வண்டி நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் வம்பிழுக்க எவருமே சிக்காத நிலமை 7ஜி கும்பலுக்கு உருவானது. வேலைத்தள பிரச்சினைகளை நிர்வகிப்பதும் அனுபவத்தின் மூலம் இலகுவாகிவிட்டது. இந்த நிலையில்த்தான் கடிக்க எலும்பு கிடைக்காத நாய்க்குட்டி தன் காலையே பல்லுழைவு போக்க கடிப்பது போல தமக்குள்ளேயே கடிபட ஆரம்பித்தார்கள். புரஜெக்ட் மனேச்சர் பதவி தந்த குருட்டு தன்னம்பிக்கையில் ஆளாளுக்கு தம்மை தலைவராகவும் தத்துவஞானியாகவும் ஆலோசகராகவும் பிம்பத்தை தமக்குள் வளர்த்துக்கொண்டு வலம் வர ஆரம்பித்தார்கள். உள்ளுக்குள் பகைமை வளர்ந்த போதிலும் தண்ணியை போட்டுவிட்டு நட்பு பாராட்டினார்கள். அப்பகை தெரியாமல் இருக்க மூன்றாவது பிரச்சினையை அலசினார்கள். வேடிக்கையாக வம்பிழுப்பது போல பாசாங்கு செய்து கொண்டு வன்மம் நிறைந்த கண்களோடு போதை எனும் போர்வையுள் மறைந்திருந்து தாக்குவது வழமையானது. இந்த தாக்குதல் என்மீது அதிகமாக இருப்பதை புரிந்துகொள்ள பெரிதாக நுண்ணறிவு ஒன்றும் தேவைப்படவில்லை. பொறுமையிழந்த ஒருநாளில் தண்ணியை போட்டுவிட்டு வேடிக்கையாக வம்பிழுத்தல் என்ற போர்வையை நீக்க முயன்றபோது உள்ளுக்குள் பிராங்கென்ஸ்டைன் பூதமாக மறைந்திருந்த மிருகம் வெளிப்பட்டுவிட்டது.

இன்றையமாதம் 17ம்திகதி நடந்த நீண்ட நேர வாக்குவாதம், கைகலப்பின் பின்னர் நான் அந்த கும்பலை விட்டு வெளியேறி வந்தேன். எனக்கு இருப்பிடம் தர முன்வந்த சகமட்டத்து நண்பனிடம் "அவனை வீட்டுக்குள் விடாதே" என்று கேட்டுகொண்டார்கள். "உனக்கு எவன் இடம் தறானோ அவனுக்கு அடிப்போம்" என்று வேறு சிரிப்புபஞ்ச் டயலாக்குகளை எடுத்து விட்டார்கள். நான் வெளியே போகிறேன் என்பதைவிட நான் வெளியேறினால் பிறர் கேவலமாக நினைப்பார்களே என்ற நினைப்புத்தான் அதிகமாக அவர்களுக்கு இருந்தது.பிறருக்கு ஒரு காட்டு காட்ட வேண்டும் என்ற சிந்தனையையே அடிநாதமாக கொண்டவர்களிடம் வேறெப்படியான சிந்தனையை எதிர்பார்க்க முடியும்?.

இற்றைய திகதிக்கு இக்கும்பலில் எஞ்சியுள்ளவர்கள் பியர்கான்களோடு கூடியிருந்து நான் போனதற்கான காரணங்களை உருவகித்து அவைகுறித்து விவாதித்துக்கொண்டிருக்கக்கூடும். (இந்த வசனத்தை படித்த பின்னர் "எங்களுக்கு வேற வேலையில்லை உன்னைப்பற்றி கதைக்க?" என்று கடுப்பாகவும் கூடும்) உளவியலின் அடிப்படையே தெரியாத போதிலும் என் உளவியல் குறித்து அக்கு வேறி ஆணிவேறாக பிரித்து மேயவும் கூடும். அவை யாவும் தங்களுக்குள் இருக்கும் பூதத்தை மறைத்து அது என்னிடம் இருப்பதாக நிறுவி சுய மகிழ்ச்சி கொள்வதையே அடிப்படையாக கொண்டிருக்கும் என்பதையும் அவர்களோடே பத்து வருடமாக இருந்தவன் என்ற முறையில் மிகச்சரியாக ஊகிக்க முடியும்.

கூட்டிக்கழித்துப்பார்த்தால் இந்த கும்பலோடு 10 வருடமாக இருந்து மிஞ்சியது இரண்டு பேரோடான நட்பு மட்டும் தான்.எனது அனுமானம் மட்டும் சரியாக இருக்குமேயானால் இன்னும் இரண்டு வருடத்துக்கு மட்டுமே இந்த கும்பல் நீடிக்கும். அதற்க்குள் கலியாணம் கட்டி போறவன் போக எஞ்சியோர் மனநோய் முற்றி வெறி பிடித்தலைய இந்த கும்பல் அடுக்கி வைத்த சீட்டு கோபுரம் குலைவது போல் ஆகிவிடும். நாமெல்லாம் வாழ்க்கையில் கிட்டத்தட்ட அரைப்பங்கை தாண்டி விட்டோம். வாழ்ந்து முடிக்கும் தருணத்தில் அதுவரை வாழ்ந்த வாழ்க்கையின் பெறுமதி என்பது சொந்த ஊரிலிருந்து எங்கோ கண்காணாத தேசத்தில் இருக்கும் சீனனுக்கு கீழ் செய்த வேலையை கொண்டு மதிப்பிடப்படப் போவதில்லை. மாறாக அது நமது சமூகத்துக்கு என்ன செய்திருக்கிறோம் என்பதிலேயே தங்கியிருக்கும்.

தற்போதைய நிலவரம்-09


கட்டுப்பெத்தையில் பெரிய சாமி ஐங்கா நடத்திய ஆசிரமத்தில் 3 சின்னச்சாமியார்கள் இருந்தார்கள்.அறிவகம்,12B போண்ர பேர்வழிகளெல்லாம் கிட்ட நெருங்கவே அஞ்சுமளவுக்கு சக்தி மிக்க சாமியார்களாகவும் அவர்கள் விளங்கினார்கள்.நீலப்படம் பார்க்காமலும் மஞ்சள் புத்தகம் வாசிக்காமலும் படிப்பே கண்ணென பெரிய சாமியாரால் கண்டிப்புடன் வளர்க்கப்பட்ட அம்மூன்று சாமியார்களில் இளையவரும் சிறியவருமானவரே குட்டிச்சாமியார் என அழைக்கப்படும் பரணி ஆவார்.தவ வலிமையால் கல்வியில் கடும் சித்திகளை பெற்ற குட்டிச்சாமியார் இன்னும் சில தினங்களில் அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்கென பயணமாகிறார்.இலங்கையில் பெண்களை நேர் நோக்காது,அவர்களை தாயை,சகோதரியைப்போல் பாவித்து வாழ்ந்த சாமியார் பிகினி அழகிகள் பூனை நடைபோடும் நாட்டில் சென்று தடுமாறுவாரா? மாட்டாரா? என்று நண்பர்கள் கடுமையாக விவாதித்து வருகின்றனர்.



கௌபாய் திருமணம் முடித்து மிகக்குறுகிய காலத்துள் அப்பா ஆகி சாதனை படைத்தது யாவரும் அறிந்ததே.கௌபாய் தனது திருமணத்தின் முன்பு மட்டத்தை சேர்ந்த அநேகருக்கும் தனித்தனியாக அழைப்பு எடுத்து வரவேற்றிருந்தார்.முகநூலில் அழைப்பிதழை போட்டுவிட்டு பெயரை tag பண்ணும் இந்த உலகத்தில் கௌபாய் போண்றவர்கள் வித்தியாசமானவர்கள் தான் என்று பலரும் அந்நேரம் பேசிக்கொண்டார்கள்.அத்தருணத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம் ஒன்று தற்போது வெளியாகி பலரையும் குலுங்க குலுங்க சிரிக்க வைத்துள்ளது.கௌபாய் அத்தருணத்தில் இங்கிலாந்திலிருந்த  கனாக்காலம் நிருபருக்கு ஸ்கைப்பில் அழைப்பை எடுத்து திருமண விடயத்தை சொல்லியிருக்கிறார்."கல்யாணத்தின் டென்மார்க்கில் செட்டில் ஆகப்போகிறேன்" என்று கௌபாய் சொல்ல தன்னை எல்லாம் தெரிந்த ஆள் என காட்ட நினைத்த நிருபரும் "டென்மார் கடுமையான நிற வெறி பிடிச்ச நாடு,கவனமா இருங்கோ கௌபாய்" என்று செப்பியிருக்கிறார்.கௌபாய் என்ன லேசுப்பட்ட ஆளா?.ஒரே பதிலில் நிருபரை தூக்கியடித்திருக்கிறார். அவர் சொல்ல பதிலை இன்றுவரை சந்திப்பவர்களிடமெல்லாம் சொல்லித்திரிகிறாராம் நிருபர்.கௌபாய் அப்படி என்னதான் சொல்லியிருப்பார்?

"ஓ அப்படியா? நல்லகாலம்,நான் வெள்ளையெண்டதால தப்பிட்டன்"



சிந்தா இலங்கையில் வகை வகையாக வாகனங்களில் திரிகிறார்.கூட யாராவது ஏறுங்கடா என்று கேட்டால் அக்கம்பக்கத்தில் இருபவர்கள் எல்லாம் பாய்ந்து ஓடுகிறார்கள்.அவர்களில் பயத்திலும் நியாயம் இருக்கிறது.ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு நாய்களையும் ஒரு வயோதிகரையும் இடித்துத்தள்ளியிருக்கிறார்.இவ்வளவு நடந்த பின்னரும் விடயம் தெரியாத ஒரு பூச்சி புதுசா வந்து சிக்க சிந்தா சில நாட்களுக்கு முன்னர் வானில் கிளம்பியிருக்கிறார்.அன்று சிக்கியது பருத்த வீதியோர பாலை மரம் ஒன்று.வழமை போல  சிந்தா தப்பித்து விட கூட வந்தவன் கட்டுகளுடன் உலாவுகின்றானாம்."இப்போதெல்லாம் கனவில் எமன் வராமல் சிந்தா வாகனத்துடன் வந்து ஏறச்சொல்லிக்கேட்பது போல வருகிறது" ஒரு அன்பர் பார்ட்டியில் சொல்லிவிட்டு வெடிச்சிரிப்பு உதிர்த்தாராம்.அந்த சிரிப்பின் பின்னால் எத்தனை வலிகள் மறைந்திருக்கின்றனவோ?



தற்போதைய நிலவரம்-08




இங்கிலாந்தின் மிகப்பெரும் அரசியல் வாதியும் பிரபல நர்சரி ஆசிரியருமான கமல்ஸ் யாழ்நகருக்கு குடிபெயர்ந்துள்ளார்.இலங்கையை விட்டு இனி இம்மியளவும் அசையமாட்டேன் என இவர் அடிக்கடி அவிழ்த்து விழும் அறிக்கையை கேட்பவர்கள் "இவனல்லவா மண்பற்றுக்காரன்" என்று மயிர் கூச்செறிந்து போகிறார்களாம். இரண்டாயிரத்து பதினெட்டு வரை பிரித்தானிய விசாவை அடித்து பொக்கற்றுக்குள் பத்திரமாக வைத்திருக்கும் விடயம் அறிந்தவர்கள் நமட்டுச்சிரிப்போடு அறிக்கையை கேட்டு செல்வதுவும் குறிப்பிடத்தக்கது.இதே நேரம் யாழ் போதனா வைத்தியசாலையில் கமல்சின் மூக்கை பிளந்த வைத்தியர்கள் உள்ளிருந்து பெரிய ஒரு கல்லை கடந்த வாரம் கிண்டி எடுத்தனர்.கல் எப்படி உள்ளே போனது என்பது தொடர்பில் குழப்பமுற்ற வைத்தியர்கள் பலப்பல சாத்தியங்களை தெரிவித்துள்ளனர்.எது எப்படியோ அறுவைச்சிகிச்சையில் பின்னர் "அதெண்டாலும் சரிதான்.இதெண்டாலும் சரி தான்" என்று அரைவாசி வாயாலும் மிகுதி அரைவாசி மூக்காலும் கமல்ஸ் பேசும் பாணி மாறாதிருக்க "கமல்ஸ் ரசிகர்கள்" பிரார்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.




இலங்கை மின்சார சபையின் யாழ்பாண மின்பிறப்பாக்கி தற்போது அதி நவீன ஹொண்டா சிவிக் காரில் உலாவி வருகிறாராம்.எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் அதிகமாக கவலைப்படும் அவர் காரை மின்சாரத்தின் ஓடச்செய்வதற்கு மாற்றீடுகள் உண்டா என்றும் சிந்தித்து வருகிறார்."இந்த வருடம் முடிய முதல் மாடர்ன் பிகரா மடக்குவேன்" என்று சபதமெடுத்து நல்லூர் தேர்முட்டியிலும் முட்டுசந்து மறைப்புகளிலும் வெறியோடு காத்திருக்கும் இவர் இந்த முறையும் தோல்வியே தழுவுவார் என்று நண்பர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்."ஒழுங்கைகளிலும் ,கோயில்களிலும் பிகர் பிடித்த காலம் எல்லாம் மலையேறி விட்டது.பஸ்களிலும் ரெயில் பயணங்களிலும் போறவன் வாறவன் எல்லாம் சிக்க வைக்கிறான்.வச்சிருக்கிற ஹொண்டா சிவிக்கை ஓட்டுற மாதிரி ஓட்டினா பிகர் தானா பிக்கப் ஆகும்" என்று இவர் தொடர்பில் கருத்து தெரிவித்த  இன்னொரு மின்சார பொறியியலாளர் கனாக்காலம் நிருபரிடம் அங்கலாய்த்துக்கொண்டார்.மின்சாரத்தோடயே வீம்பா விளையாடுறவருக்கு சம்சாரம் பிடிக்கிறது ஒரு பிரச்சினையா இருக்கக்கூடாது பாருங்கோ!




மட்டத்தின் நண்ப ,நண்பிகளுக்கு திருமணம் என்றாலே வாயார,மனதார வாழ்த்தி குதூகலிக்கும் நண்பர்கள் "றெமோ" வின் திருமணம் விடயத்தில் மட்டும் அனல் பறக்கும் ஆத்திரத்தோடு இருக்கிறார்களாம்.ஹிட்லரின் நாட்டில் பணி புரிந்து வரும் "றெமோ" நீல கண்களும் வெளிறிய சருமமும் உள்ள ஆரிய அழகியைத்தான் கரம் பிடிப்பார் என அவதானிகள் தொடர்ச்சியாக கருத்துக்களை வெளிவிட்டு வந்த போதிலும் அனைத்தையும் பொய்யாக்கிவிட்டு உள்ளூர் பெண் ஒருவரை யாழ்ப்பாணத்துக்கு வந்து கரம் பிடித்து கூட்டி சென்றிருக்கிறார்.சில முக்கிய நபர்களைத் தவிர ஏனைய மட்டத்து நண்பர்களுக்கு "றெமோ" பெப்பே காட்டி கண்ணில் மண்ணை தூவி மூன்று முடிச்சை போட்ட விதம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்க்கியுள்ளது.அன்று காதால் புகை வருமளவுக்கு காட்டுக்குத்து குத்தியவர் இன்று நண்பர்கள் காதில் பூவை வைத்து விட்டு கலியாணம் கட்டியதொன்றும் பெரிய விடயம் இல்லைத்தானே!




கட்டப்படும் கட்டடங்களையும் நீண்டுகொண்டே போகிற வீதிகளையும் பார்த்தால் யாழ்ப்பாணம் அபிவிருத்தி அடைகிறது என்று சின்னப்பிள்ளை கூட சொல்லிவிடும்.சும்மா இருந்தவன் கூட வேலியை வெட்டி வீசிவிட்டு மதில் கட்டி பெயின்ற் அடிக்கிறான்.குழி கக்கூஸ் போதாதென்று கொமெட் கட்டுகிறார்கள்.போகிற போக்கைப்பார்த்தால் இன்னும் பத்து வருடங்களில் யாழ்ப்பாணம் சிங்கபுரி போல கொங்கிறீட் கூடு ஆகும் அபாயமுண்டு.நிற்க,விடயத்துக்கு வருகிறேன்.பல்கி பெருகும் கட்டுமான தொழிலில் மட்டத்தின் நண்பர்கள் பலரும் குதித்திருக்கிறார்கள்.எல்லோருக்கும் சுள்ளான் "ராக் தீபன்" தான் முன்னோடி.கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறார் சுள்ளான்.ஐந்தாறு கட்டுமானங்களை நிர்வகிக்கும் அதே சமயம் அப்பாவும் ஆகியிருக்கிறார்.ஒரே பந்தில் இரண்டு "சிக்ஸர்" அடிக்க யாராலும் முடியாது என்று எவன்டா சொன்னது?.



சிங்கபுரியில் மிகப்பெரும் திட்ட நிர்வாகியாக இருக்கும் சிரிப்பு ரவுடி உச்ச சம்பளத்தை எட்டிய பூரிப்பில் வறுத்த தவளை கறியை சாப்பிட்டதுமில்லாமல் முகநூலில் "முதன் முதலாக தவளை சாப்பிடுகிறேன்" என்றும் நிலைக்குறிப்பிட்டுமிருக்கிறார்.யாரோ ஒரு குறுக்கால போனவன் "மலிவான விளம்பரத்துக்காக இயக்கத்துக்கு முருக்கம் செத்தலால் அடித்ததாக புளுகியது போல இன்னொரு புளுகு" என கருத்து எழுதிவிட வெகுண்ட சிரிப்பு தவளை கறி தின்னும் படத்தை பிடித்து கீழே போட்டிருக்கிறார்.அந்த படம் அங்கே போய் இங்கே போய் கடைசியாக கனாக்காலம் நிருபரிடம் சிக்கிவிட்டது.உசுப்பேத்தினா சிரிப்பு ரவுடியை கிணத்துக்க குதிக்கவும் வைக்கலாம் என்று அந்த "குறுக்கால போன" நண்பர் சிரிப்புடன் கருத்து தெரிவித்தார்.


தற்போதைய நிலவரம்-07




சிங்கபுரி நண்பர்கள் பலரும் தற்போது வளர்ச்சியடைந்து உறுதியான நிலைக்கு வந்துள்ளார்கள்.ஆரம்ப காலத்த்தில் இருந்ததைப்போலல்லாது நிறைவான சம்பளம்,வேலையிடத்தில் உயர்வான பதவி என வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளனர்.பதவி உயர்வுகள் தந்த ஊக்கம் பலரையும் பப்பாவில் ஏற்றி விட்டுள்ளதையும் காணமுடிகிறது.அதில் ஒரு விளைவுதான் ஒரு கேள்வியை கேட்டால் உடனேயே பதில் சொல்லாமல் சிறிது நேரம் எடுத்து பதில் சொல்வது.உயர்முகாமைத்துவ உத்திகளில் மிகப்பழமையான கடந்த நூற்றாண்டை சேர்ந்த இந்த முறையை சீனத்து முதலாளிமாரிடமிருந்து சிலர் கற்றுக்கொண்டு நண்பர்களிடையே நடைமுறைப்படுத்த முயல்வதை காணும் போது சிரிப்பு மேலிடுகிறது.அடிப்படையில் ஒருவர் கேள்வி கேட்கும் போது பதில் சொல்ல நேரம் எடுத்துக்கொள்வது கேட்பவர் பதவி நிலையில் தாழ்ந்தவராக இருக்கும் பட்சத்தில் அவருள் ஒரு விதமான பதற்றத்தையும்,பலவிதமான எதிர்மறை சிந்தனைகளையும் உருவாக்கும்.இந்நேரம் "கேள்வி ஏன் கேட்கப்படுகிறது?,இதற்கு பதில் சொல்வதான் என்ன இலாபம்? எப்படியான பதிலை சொல்லவேண்டும்?" போண்ற உப கேள்விகளை விடையளிக்க வேண்டியவர் உள்ளே உருவாக்கி தீர்த்துக்கொள்கிறார்.வேகமான முடிவுகளை வழங்கவல்ல முகாமைத்துவமே இந்நாளில் எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வகையான செயல்பாடுகளை நண்பர்கள் மத்தியிலும் மேற்கொள்வது "அரைக்கிறுக்கன்,மந்த புத்தி,பென்ரியம் -01 " போண்ற பட்டப்பெயர்களை பெற உதவுமே ஒழிய அறிவு ஜீவிகளாக காட்டிக்கொள்ள எந்த வகையிலும் உதவாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

திருமணம் என்பது மனிதன் உருவாக்கிக்கொண்ட குயுக்தியான நடைமுறை.பிடித்த பெண்ணோடு சேரவும் அவளை கூடவே வைத்திருக்கவும் நிறைய நேரத்தை செலவிட்டு போராட்டத்தை சந்தித்த ஆதி மனிதன் திருமணம் என்ற நடைமுறையை உருவாக்கினான்.ஆற்றல் மிக்க,பலமான மனிதர்கள் மட்டுமே செழிப்பான பெண்களை அடைய முடியும் என்ற இயற்கைநியதி மறைந்து "எல்லா ஆண்களுக்கும் பெண்" என்ற கோட்டா முறை திருமணம் மூலம் உருவானது.ஆனால் சில பேர்வழிகள் திருமணம் முடித்து விட்டு "அதை ஒரு வாழ்நாள் சாதனையாக" பீற்றிக்கொண்டு திரிவதை காணும் போது மனிதன் ஆதிவாசியாகவே இருந்திருக்கலாம் என தோண்றுகின்றது.இது நிற்க தற்போதைய நிலவரத்துக்கு வருகிறேன்.நண்பர்கள் பலரும் திருமணம் தொடர்பில் தீவிரமாக சிந்திக்க தொடங்கியிருக்கிறார்கள்.வீட்டுபொறுப்பை முடித்த பின் திருமணம்,பணம் சேர்த்த பின் திருமணம் என பல "பக்கா பிளானுகளை" போட்டு வைத்துள்ளனர்.பதினைஞ்சு பவுணிலை தாலி கட்டி,இருபது லட்சம் செலவழித்து கலியாணம் செய்தால் தான் கழுத்தை நீட்டுவோம் எனச்சொல்லும் பெண்களை அடித்து விரட்டிவிட்டு "மஞ்சள் கயிறே போதும் கண்ணாளா நீ வந்தால் காணும்" எனச்செப்பும் பெண்களை பிடியுங்கள்.கடின உழைப்பில் திரட்டிய பணத்தை ஆரோக்கியமான விதத்தில் முதலிடுங்கள்.

குடும்பமாகிவிட்ட விஞ்ஞானி மகிழுந்தில் இலண்டன் மாநகரை சுற்றி வரும் வேளை நண்பர் ஒருவரின் வீட்டுக்குள் சடுதியாக புகுந்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்."என்ன மச்சான் காரிலையோ வந்தனி?" என்று நண்பர் கேட்க "நாங்கள் ஓடாத வாகனமோ?,மனுவல் வாகனத்தையே மல்லாக்க வச்சு ஓட்டுற ஆட்கள்.மனுசிட ஓட்டோ கியர் வாகனத்தை ஓடுறது பெரிய வேலையோ?" என்று பதில் சொல்லியிருக்கிறார்.அருகே இருந்த துணைவியார் சிரித்து விட்டு " பார்க் பண்ணேக்க முன்னுக்கு நிண்ட காரை இடிக்க போயிட்டார்.நான் கை பிரேக் அடிச்சிருக்காட்டி அவ்வளவு தான்" எண்டாவாம்.இந்த சம்பவம் லண்டன் தண்ணி பார்ட்டிகளில் "பைற்ஸ்" ஆக அடிக்கடி இழுபடுவதை காணமுடிகிறது.


மலர்ந்த இந்த புத்தாண்டு வெற்றிகளையும் சந்தோசத்தையும் தரும் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கைப்பாதையில் தொடர்ந்து நடை போடுவோம் எனக்கூறி அடுத்த பதிவில் சந்திக்கும் வரை விடைபெறுகின்றேன்.

தற்போதைய நிலவரம்-06

வாழ்க்கை சக்கரம் உருண்டோடும் வேகத்தில் என்னவெல்லாமோ நடக்கிறது.தலை நிறைய முடியோடு வலம் வந்த நண்பர்களில் பாதிப்பேருக்கு அரை மொட்டை விழுந்து விட்டது.பயிற்றங்காய் பாடியோடு வலம் வந்த பலர் பானையளவு வயிறு வளர்த்து திண்டாடுகிறார்கள்.இருப்பினும் சில மாற்றங்கள் வாழ்க்கைக்கு புதுப்பொலிவு ஊட்டுபவையாகவும் மனமகிழ்ச்சியை ஊட்டுபவையாகவும் இருக்கின்றன.அந்த வரிசையில் இடம் வலமாக இரண்டு இரண்டுப்படி நாலு மடிப்பு வைத்த "காதலன்" ஜீன்ஸ் போட்டுக்கொண்டு மொறட்டுவைக்கு 2004 ஆம் ஆண்டில் வந்த கெமிக்கல் சசி டெனிமுக்கு மாறி லண்டனுக்கு வந்து லோகிப்புக்கு இறங்கி கடைசியாக இல்லற வாழ்க்கைக்குள்ளும் குதிக்க தயாராகி விட்டார்.மட்டத்தின் சில பேர்வழிகளைப்போலல்லாது எல்லோருக்கும் அழைப்பு விடுத்து இன்முகத்தோடு தகவல் கூறி கல்யாணத்துக்கு தயாராகும் விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.பம்பலப்பிட்டி கோயிலில் உம்சாண்டியின் தம்பி செட் பண்ணிய ஆட்கள் மட்ட கைப்பொம்மை தலைவனை அடிக்க வர எல்லோரும் ஓடி ஒழிய தனிய நிண்டு அடிபட்ட போது வெளிப்பட்ட அந்த ஆண்சிங்கம் மீளவும் வேறு விதமாக தென்பட்டிருக்கிறது.விஞ்ஞான வாழ்க்கை போலவே இல்லற வாழ்விலும் சிறப்படைய வாழ்த்துவதில் கனாக்காலம் பெருமையடைகிறது.



குதிரையில் ஏறி பிஸ்டலை இடுப்பில் செருகாமலே கௌபாயாக வலம் வந்தவர் மதுவர்ணன்.டென்மார்க் நாட்டு நங்கையோடு இல்லறத்தில் இணையவென விரைவில் கடல் கடக்க போகிறார்.மட்டத்தின் அனைத்து நண்பர்களுக்கும் அழைப்பெடுத்து உரையாடி தகவல் சொல்லி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.ஆனி மாதம் இந்தியாவில் மூன்று முடிச்சை போடவிருக்கும் நண்பரை வாயார வாழ்த்துகிறோம்.பி-கு: இந்திய திருமணத்துக்கு தொப்புள் அழகன் புதுமண தம்பதியராய் போய் சிறப்பிக்க இருக்கிறாராம்."ஹனி மூன் போறதுமாச்சு,கௌபாய் கலியாணத்தில் கலக்கிறதுமாச்சு" என கல்லு ரண்டு மாங்காய் திட்டத்தோடு காத்திருக்கிறாராம்.எப்படியோ போற இடத்தில வண்டி மேல தேங்காய் விழாட்டி சரி.


இப்படி சிலர் பகிரங்கமாக திருமணம் செய்ய்தாலும் ஒளித்து மறைத்து செய்பவர்களும் இன்னும் இருக்கிறார்கள்.திருமணம்/பதிவு திருமணம் எனபது வாழ்க்கையில் ஒரு படி நிலை.அதை நண்பர்களுக்கு சொல்லாமல் மறைப்பது ஒரு வகையில் கோழைத்தனம்/தாழ்வு மனப்பான்மையில் வெளிப்பாடு என்று தான் கருத வேண்டியிருக்கிறது.

தற்போதைய நிலவரம்-05




ஏற்ற இறக்கம்,வளைவு நெழிவுகள் கொண்டது தான் வாழ்க்கை.வாழ்க்கை வட்டம் உருளும் போது வாளிகள் சண்டை பிடிப்பதுவும் சண்டை பிடித்தவர்கள் வாளிகளாவதும் சகஜமே என்பதை சிங்கையில் சில நாள் முன் நடைபெற்ற சம்பவம் கோடிட்டு காட்டி நிற்கிறது.பிரித்தானியாவில் இருந்து சிங்கைக்கு போன கௌதம் வாசுதேவ மேனன் நண்பர்களை சந்திக்க அழைப்பு விட்டிருக்கிறார்.நீண்ட நாள் சந்திக்காத நண்பனை மீள காணப்போகிறோம் என பலரும் குதூகலிக்க ஒருவர் மட்டும் கடுப்பாகிவிட்டாராம்.அந்த நபரை மேனன் முகநூலில் தடை செய்து வைத்திருந்தாராம்."போர் என்றால் போர் சமாதனம் என்றால் சமாதானம்,தடை போட்டு விட்டு பேச அழைப்பு விடுப்பது அவமானப்படுத்துவது போலத்தானே?" என்று சம்பந்தப்பட்டவர் குமுற கன்ராபிய தவிர மிச்ச எல்லாரும் மேனன் பக்கம் நின்று தாக்கி விட்டார்களாம்.எது எப்படியோ இந்த குமுறலிலும் நியாயம் இருக்கிறது என்று நடுநிலை வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன.



மொறா 2003 மட்ட தமிழ் மாணவர்களில் கிட்டத்தட்ட 15 பேருக்கு மேல் புரபசனல் கமெரா வைத்திருக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.இந்த கமெராவில் உள்ள விசேடம் என்னவென்றால் ஜூம் போட்டு தவளைய படம் எடுத்தால் கூட அழகாக காட்டும்.இதனால் வண்டியுள்ளோர்,பேஸ் கட், பர்சனாலிட்டி குறைவானோர் காட்டில் அடை மழை பொழிகிறது.வண்டியழகன் ரஜீந்திரதாஸ் கூட ஒரு புகைப்படத்தில் பிராட் பிட் போல தெரிவதாக முகநூல் அப்ளிகேசன் ஒன்று தெரிவித்திருப்பது ஒன்றே இந்த கமெராக்களில் ஆற்றலுக்கு எடுத்துக்காட்டு.இது ஒரு புறமிருக்க கங்காரு நாட்டில் தனியா இருக்கும் பெண்மணி ஏரிக்கரைய படம் எடுத்து போட அவுஸ்திரேலிய உள்ளூர் கவுன்சில் சிறந்த படம் என்று பரிசு கொடுத்து விட்டதால் உற்சாகமாகி எந்நேரமும் கமெராவும் கையுமாக கொலைவெறியோடு அலைவதாக கேள்வி.



இங்கிலாந்தில் மீள ஒன்று சேர தொடங்கியுள்ள ஏழு ஜி நண்பர்கள் கோடைக்கால வேளையில் எந்நேரமும் தண்ணீரில் மிதக்க திட்டமிடுவதாக தகவல்கள் கசிந்துள்ளன.அடுத்த வருடங்களில் காளை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி அநேகருக்கு விழவுள்ளதால் இக்கோடையை இறுதிக்கோடையாக அறிவித்துள்ளனராம்.நாயகனும் வெறிகாரனும் "ராபட் பற்றிசன்" போல தலை மயிரை வளர்த்து மத்திய லண்டன் நகரில் உள்ள பப்புகளுக்கு வரும் வேற்றின பெண்களை மடக்க திட்டமிடுவதாகவும் புலனாய்வு நிலையம் தெரிவிக்கிறது."வெறிக்குட்டிக்கு வளர்த்தா வளரும் ஆனா நாயகன் ஆயிரம் வருசம் வளார்த்தாலும் தலைமயிர் வட்டமா திரும்பி தலைக்குள்ள போகுமே தவிர நீளமா வராது" என சிங்கையில் அதிஉயர் சம்பளம் வாங்கும் சிரிப்பு ரவுடி கருத்து வெளியிட்டுள்ளார்."தானா வளராட்டி தட்டி வளர வைப்பேன்" என அறிவித்துள்ள நாயகன் சீன பாம்பு எண்ணெய் வாங்கி தலையில் தடவியபடி திரிந்த காட்சியை பலரும் கண்டுள்ளார்கள்.



புல்லட்டு பிளாக்கர் கடைசியாக் சொந்த நாட்டு பாசத்தை விடுத்து கங்காரு நாட்டுக்கு பாய்ந்துவிட்டாராம்.எவரையும் இன்முகத்தோடு வரவேற்கும் வீணை தம்பதிகள் புல்லட்டுக்கும் வயிரார கொட்டியிருக்கிறார்கள்.பழையபடி அவர்தனது எழுத்துப்பணியை தொடர வேண்டும் என கனாக்காலம் இப்பதிவு மூலமாக கேட்டுக்கொள்கிறது.இதே நேரம் ஐந்து கரத்தான் அப்பே லங்காவில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு படித்த மனிதர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.சிங்கப்பூரின் லீக்குவான்யூ,இஸ்ரேலின் மோசேதயான் போல இலங்காபுரிக்கு ஐங்கரத்தான் ஆகவேண்டும் என்று ப்லரும் அவரை கேட்டுக்கொண்டதாகவும் அறிகிறோம்.



ஹொஸ்டலில் சிறிஸ் என்ற பெயரிலை ஒரு றெமோ இருந்தான்.காலுக்க தண்ணி வச்சுக்கொண்டு கதிரை எரிய எரிய படிக்கிற ஆள்.பாட்டு எண்டா என்னெண்டு கேட்டால் " அர்த்தமுள்ள சொற்களால் கோர்க்கப்பட்ட சந்தத்தோடு வாத்தியங்களால் ஆன பிண்ணனி இசையோடு இணைக்கப்பட்ட வரிகள்" என்று வரைவிலக்கணம் சொன்ன அவர் இன்று லேடி காக்காவூக்கு காக்கா பிடிக்கிறாராம்,பியான்சு, ஸ்பிரிட்டனி பியர் போண்ற அழகிகள் உதடுகளில் இருந்து வரும் கிளர்சியூட்டும் பாட்டுக்களுக்கு அடிமையாகி முழு றெமோவாக ஆகிவிட்டதாக ஜெர்மனிய வானொலி தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரம்-04

.

எமது மட்டத்தின் விஞ்ஞானியான கெமிக்கல் அலிபாய் மிட்சம் நகரில் உள்ள மணல் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததும் கனாக்காலம் நிருபருக்கு தூக்கிவாரி போட்டது.ஏனென்றால் அந்த வீடு அவரின் தற்போதைய இருப்பிடத்துக்கு 50 மீற்றர் தொலைவிலேயே இருந்தும் கடந்த 2 மாதங்களாக அலிபாய் கண்ணில் தட்டுப்படவில்லை.தீவிர புலனாய்வு முடுக்கி விடப்பட்டு பெறப்பட்ட தகவல்கள் அதவிட மிக அதிர்ச்சியை தருபவையாக இருந்தன.அதாவது அலிபாய் வீட்டுக்குள் ஜம்போ சைஸ் டெடி பியர்,குரங்கு பொம்மைகளோடு குலாவி மகிழ்வதோடு அவற்றோடு உறங்குவும் செய்கிறார்.அதைவிட உள்வீட்டு ஜிம் ஒன்றை பெரும் செலவில் தருவித்து உடம்பை இரும்பாக்கி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.இவ்வாறு தொடரும் பட்சத்தில் விரைவில் ஒரு குழந்தை மனதுள்ள முரட்டு ஹீரோ ஒருவர் தமிழ் திரையுலகத்துக்கு கிடைப்பது உறுதி.





முகுந்தராசன் சில நாட்களாக முக நூலில் அடிக்கடி தட்டுப்பட்டு வருகிறாராம்.தலை வளர்த்து டெரரா போஸ் குடுத்த சில நாட்களிலேயே அதை நேராக்கி இன்னொரு போட்டோ போட்டார்.அடிக்கடி இயற்கை அழகை காட்டும் படங்களை முகநூலில் போட்டு வருவதுவும்,கருத்துக்கள் வெளியிடுவதும் குறித்து அவதானிகள் பலத்த சந்தேகங்களை வெளியிட்டு வருகின்றனர்.தனிமையை போக்க முகநூலை நாடும் பொதுவான காரணியோ பெண்கள் சம்பந்தப்பட்ட விசேட காரணியோ இதன் பின்னால் இருக்கலாமென்பது அவர்கள் கருத்தாகும்.எது எப்படியோ எங்கிருந்தாலும் நன்றாக இருந்தால் சரிதான்.





சிங்கபுரியில் இருந்த 7ஜி கும்பல் பெரிய பிரித்தானியாவுக்கு தளத்தை நகர்த்த முடிவெடுத்துள்ளதையடுத்து டகோட்டாவிலிருந்த தலைமைச்செயலகம் காலி செய்யப்பட்டுள்ளது.சுகா ஆவணிமாதமே பிரித்தானியாவுக்கு பின்வாங்கி ஓடியதையடுத்து ஜோன் கொன்சாலும் குடிகாரன் சௌந்தரும் பிரித்தானியா பயண ஏற்பாடுகளை கவனிக்க இலங்கைக்கு பயணமானார்கள்.மிஞ்சியிருந்த அலியப்பாவும் சிரிப்பு ரவுடியும் சென்ற கிழமை வீட்டை காலி செய்து கொண்டு அறை ஒன்றுக்கு குடி பெயர்ந்துள்ளனர்.மாசி மாச போனஸ் கிடைத்ததும் பிரித்தானியாவில் சிரிப்பு ரவுடி தரையிறங்க திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன.அலியப்பா புரூணை நோக்கி பயணிக்கவுள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.என்னதான் இருந்தாலும் ஆற்றங்கரையில் இருந்த அந்த அழகிய இல்லத்தில் இருந்த மகிழ்வை ஆயுளுக்கும் மறக்க முடியாது.





பிரித்தானியவில் இருந்து கனடா பக்கமாக இடம்பெயர்ந்த சசிக்குமார் பற்றி தகவல்கள் அறிந்தவர்கள் உடனடியாக கனாக்காலம் செய்திப்பிரிவுக்கு அறிவிக்கவும்.பலகாலம் தொடர்பில் இல்லாத இவர் கனடாவில் கொட்டும் இரண்டடி உயர பனிக்குள் புதைந்து போயிருக்கலாம்,அல்லது சூறைக்காற்றில் பறந்து உயரமான யூக்கலிப்ப்டஸ் மர வட்டுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.உறுதியான எலும்பும் டெரரான பாடியும் கொண்ட இவர் இறுதியாக பிரித்தானியாவில் பிரெஞ்சு தாடியுடன் சுற்றி திரிந்த போது எடுக்கப்பட்ட படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.





நிகழ்கால நாட்களில் மட்டத்து நண்பர்,நண்பிகள் பலருக்கு கலியாணம் நடந்து வருவது மிக்க மகிழ்சியை அளிக்கிறது.ஆனாலும் பலரும் பெண்நண்பிகள் கிடைத்தவுடன் நண்பர்களுடனான தொடர்புகளை குறைத்துக்கொள்வதையும் அவதானிக்க முடிகிறது.கங்காரு நாட்டில் வதியும் குமாரனும் நார்வே நாட்டு சிறுத்தையும் இந்த வரிசையில் கடைசியாக சேர்ந்து கொண்ட ஆட்கள்.இது குறித்து தண்ணிய போட்டுவிட்டு சிலாகித்த பெரிய பிரித்தானிய வாழ் மட்டத்து நண்பர்கள் "நமக்கும் கலியாணம் ஆகும் தானே? அப்ப நாமளும் பெடியள் கழட்டி விடுவம்" என முடிவெடுத்து கடுப்பில் திரிவதாக கேள்வி.


பிற் குறிப்பு-
தற்போதைய நிலவரம் பகுதி தனிப்பட்ட எவரையும் தாக்குவதை நோக்கமாக் கொண்டதல்ல.இதை புரிந்து கொள்ளும் மனமுதிர்சியில்லாத் சிக்கன்களும்,மங்கோகளும் இங்கே வருவதை நிறுத்தவும்.

தற்போதைய நிலவரம் (3)




கட்டுப்பெத்தை மட்டம் 2003 கட்டழகர்களுக்கு இது கலியாணக்காலம்.காதல் தோல்வி,ஒரு தலைக்காதல் வலிகள் எல்லாம் மறந்து கடுகதி வேகத்தில் கால்கட்டுகள் கால்களில் விழும் காலம்.காலம் காலமா நீடித்திருந்த கலியாணக்கனவுகள் நனவாகும் காலம்.தானாக காலில் கட்டை போட்டவர்கள்,பெற்றோரால் வலிந்து போடப்பெற்றவர்கள் என வரிசை நீள்கிறது.கடுகளவும் வெளியே கசியாம கவனமா அவனவன் கலியாண அழைப்பு அடிக்கும் வரை காப்பாற்ற நினைத்திருந்ததை கனாக்காலம் வெளியக புலனாய்வுப்பிரிவு அக்குவேறு ஆணிவேறாக பிரிச்சு மேய்ஞ்சுவிட்டது.தகவல்களை நேரடியாக தராமல் கிசுகிசு பாணியில் தந்தால் பலரின் கடுப்பை கிளப்பாம இருக்கலாம் என்பதால் மறைஞ்சும் மறையாமலும் போல நாசூக்கா தர முடிவெடுத்துள்ளது ஆசிரியர் பீடம்.

நார்வே நாட்டில் எரிக்சொல்கெயிம் கண்ணில் விரல விட்டு ஆட்டிக்கொண்டிருக்கும் கருப்பழகன் வலையில் கட்டழகி ஒருத்தி வசமா சிக்கி விட்டாராம்.சாதகம் பார்த்து வீட்டுக்காரர் இழுத்தடிச்சு காலவிரயம் செய்ததால் பொறுமையின் எல்லைக்கோட்டை கடந்த இவர் கட்டையா சிக்கினா காணும் என்று வெறித்தனமா தேடி வந்தாராம்.கட்டையே காணும் எண்டு இருந்தவருக்கு நாட்டுக்கட்டையா செமையா ஒண்டு சிக்கவே சிறுத்தை இப்போ சில்வண்டாகி ஸ்கைப்பும் ஐபோட்டும் மா வாழ்கைய ஓட்டுதாம்.படிப்பு முடிய ஏழாலையில ஏரியாவே கிழிஞ்சு தொங்கிற மாதிரி தடல்புடலா 3 முடிச்ச போடப்போகிறாராம்.

அவுஸ்திரேலியா டாக்டர் படிப்புத்தம்பிக்கு கனடா நாட்டில் கன்னி சிக்கிவிட்டதாம்.காலகாலமா ஸ்கைப் பக்கமே வராத அவர் அவாவோட அழைப்புக்காக எப்போதும் ஆன்லைனில் வாடியிருக்கிறாராம்.ஒருதலையாக நடிகை தமனாவை காதலித்த அவர்....தமனா வேறுயாரோடோ போய்வந்ததாக அறிந்ததில் இருந்து நடைபிணமாக நடமாடி வந்தாராம்.தற்போது பள்ளிக்கால நண்பியே வாழ்க்கைத்துணையாக வரப்போவதையிட்டு புளகாங்கிதமுற்று சிரிச்ச முகத்துடன் அவுஸ்திரேலியா எங்கும் சுற்றி திரிவதாயும் கேள்வி.

மட்டத்தில் பல ஆண்களின் தூக்கத்தைக்கெடுத்த தொப்புள் அழகனின் தங்கைக்கு கலியாணம் முடிந்ததையடுத்து வீட்டார் இவ்வருட இறுதிக்குள் அழகனையும் குடும்பஸ்தன் ஆக்க முடிவெடுத்து விட்டதாக தாயக நிருபர் தெரிவித்தார்.இது நடைபெறும் பட்சத்தில் அவரை ஒருதலையாக காதலித்து வந்த பலர் தாடியும் தண்ணியுமாக வாழு அவல நிலை உருவாக வாய்ப்பிருப்பதாக உளவியலாளர் கௌபாய் மது எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.அதே நேரம் பிள்ளை எவ்வழியால் பூமிக்கு வரும் என்பதிலேயே கடும் குழப்பமான கருத்தைக்கொண்டுள்ள இவர் கட்டி பிள்ளை பெத்து அப்பா ஆகிறது எல்லாம் நடக்கிற காரியமா என்று குசும்பர்கள் தண்ணிப்பார்ட்டிகளில் சிலாகிப்பதையும் குறிப்பிட்டுத்தானக் வேண்டும்.

மட்டத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்த மங்கோலியநாட்டு சாயல்காரருக்கு வழக்கிட்ட காரிகை சிக்கிவிட்டாராம்.அப்போ காதல்(ம) கடுப்பில் சம்பந்தமேயில்லாதவை எல்லாம் வழக்கில் சிக்க வைத்து காவல்துறை நிலையங்களுக்கு அலையவிட்டது எவ்வகையில் நியாயம் என்று பாதிக்கப்பட்டவர்கள் புலம்புவதை தம்பதி கணக்கேயெடுக்கவில்லையாம்.ஊடல்ல இதெல்லாம் சகஜமப்பா எண்டு மங்கோலியன் சொல்லிக்கொண்டாலும் பாதிக்கப்பட்டவங்கள் அடுப்பில வச்சமாதிரித்தான் இப்பவும் திரியுறாங்களாம்.என்ன இழவோ செய்திட்டு போகட்டும்,ஆனா பின்னாளில தாம்பத்திய வாழ்க்கையில் விரிசல்,உரசல் வரும்போதெல்லாம் பக்கத்து வீட்டுக்காரன் தான் காரணம் எண்டு வழக்குப்போடாட்டி சரிதான்.

சிக்கனை பிரதான உணவாக திண்டு வாழும் பேர்வழிக்கு பதிவுத்திருமணம் முடிந்து விட்டதாம்.இரு வீட்டார் அனுபதிப்பத்திரத்தோடு காதலியோடு கடை கடையா ஏறி வகை வகையா சிக்கன் தின்று வருகிறாராம்.சமீபத்தில் பெரிய பிரித்தானியாவில் இருந்து சிங்கைக்கு புலம்பெயர்ந்த டைரக்டர் மட்டு அச்சுவுடன் கொழும்பில் உள்ள பிரபல வறுகோழி கடையில் இருந்த போது அங்கே தம்பதியாக வந்த சிக்கன் வசமாக சிக்கிவே கமெராவை எடுத்து பிளாஸ் அடித்து விட்டாராம்.ஆனால் கடலேறியாக ஊருக்கு நல்லது சொல்லும் அவர் 4 வருடமா கூடப்படித்தவர்கள் எண்டு கொஞ்சம் கூட கணக்கெடுக்காமல் தனர பாட்டில காதலியோடு சிக்கனை வாங்கிக்கொண்டு போய் விட்டாராம்.

தொடர்ந்து பெடியள பற்றி கிசுகிசு எழுதினா கிளுகிளுப்பிருக்காது எண்டதால் சில மட்டத்து அம்மணிக்கள் பற்றியும் கசிய விடுகிறோம்.

கங்காரு நாட்டு புகைப்படம் பிடிக்கும் அழகி பெரிய பிரித்தானிய சீனியர் அண்ணன் ஒருத்தருக்கு பச்சை சமிக்கைய காட்டிவிட்டாராம்.முகநூலில் அம்மணி போடும் புகைப்படங்களில் ஒரு வகையான குதூகலம் ஒட்டிக்கொண்டிருப்பதை குசும்பர்கள் கண்டு கொண்டாலும் வழமை போல போட்டுத்தாக்காமல் தண்ணிய போட்டுவிட்டு வாயார வாழ்த்துகிறார்களாம்.அம்மணியிடம் அனைவரும் கொண்டுள்ள நன்பதிப்புத்தான் அதற்குக்காரணம் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லைத்தானே!



கடைசியா கிசு கிசு Of the வருடம்.

வாத்து அழகி முட்டையிடப்போகிறாராம்.முகநூலில் வாத்துவை ஒரு மொடலா நினைச்ச்சு போடப்பட்டிருக்கிற புகைப்படங்கள் நண்பர்கள் வேலைப்பழு மறந்து சிரிக்க பார்க்கும் காமெடி பீசுகளாகி இருக்கின்றன.வின்னர் வடிவேலு காமெடி,வண்டு முருகன் காமெடி இதுகள பார்க்கேக்க கூட இந்தளவுக்கு சிரிப்பு வரேல எண்ட பேச்சு பெரிய பிரித்தானியா,சிங்கை வாழ் சேவல்கூட்டங்களிடம் பரவலா அடிபடுகுதாம்.

பிகு : மனதில் நின்றவர்கள் என்ற பகுதி நீண்டகாலமாக பதிவிடப்படாமல் விடுபட்டுள்ளது.உங்கள் மனதில் நின்ற அல்லது நிற்கக்கூடாத அந்தப்பேர்வழியைப்பற்றி இங்கே பதிப்பித்து உங்கள் நினைவுகளை பகிர்துகொள்ளுங்கள்.


தற்போதைய நிலவரம் - 02

இன்று காலை கனாக்காலம் கலையகத்துக்கு கிடைத்த ஒரு மின் அஞ்சலில் பிரபல "சிப்ட்" அடிகாரனாகிய ஜெயசுதன் லண்டனில் ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் அழகிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் கிடைத்தன.பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் இருந்த அந்தப்புகைப்படங்களை பகுப்பாய்வு செய்த கானாககாலம் பொறுப்பாசிரியர்கள் அவை "ஜெயசுதானந்தா" வினுடையவை தான் என்பதை உறுதிப்படுத்தினர்.இவர் கூறும் வாழ்க்கையின் முன்னேற்றம் தொடர்பான அறிவுரைகளுக்கு உலகலாவிய ரீதியில் பக்தர்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.அத்தோடு ஸ்கைப் மூலமாக இன்றளவும் நண்பர்களோடு அனைத்துலக நட்புபேணுவதுமிவரின் சிறப்பு அம்சமாகும்.சீதனம் வாங்கியே கலியாணம் செய்ய வேண்டும் என்ற கொள்கை உடைய ஜெயசுதானந்தா சுவாமிகள் அருளிய

"மொறட்டுவை இஞ்சினியர் எண்டாலே நல்ல சீதனம் வாங்கலாம்,லண்டனுக்கு வந்தா இன்னும் வாங்கலாம்,Msc செய்தா அதை இரட்டிப்பாக்கலாம்"

என்ற அருள் வாக்கு மொறா மாணவர்கள் மத்தியில் மிகப்பிரபலமானதாகும்.இவ்வாறு வெளியே சொன்ன போதிலும்...

"என்னதான் உள்ள படிச்சு இருந்தாலும் வெற்றுக்கண் பார்வைக்கு அது தெரியாது,ஊனக்கண்ணுக்கு தெரிவது உடம்பு தான்,எனவே உடம்பை வளர்த்து சீதனம் வளருங்கள்"

என நெருங்கிய வட்டாரங்களில் சமீப நாட்களாக அருளுரைத்ததாக தகவல்கள் கனாக்காலம் நிருபருக்கு தகவல்கள் கிடைத்திருந்தன."ஜெயசுதானந்தாவின் இவ் உள்ளக்கிடக்கையே உடற்பயிற்சி நிலையத்துக்கு அவரை செல்ல தூண்டி இருக்கலாம்"என அவரது பரம சீடனாகிய கொழும்பு பல்கலை மாணவன் சிவதீபன் நிருபருக்கு தெரிவித்தார்.இது ஒரு புறமிருக்க ஜெயசுதானந்தாவின் பேச்சாளராகிய சேகரனை தொடர்பு கொண்டு இந்த புகைப்படங்கள் தொடர்பில் கேட்டபோது "இதற்க்கும் சுவாமிக்கும் எத்தொடர்பும் இல்லை,அவை கணணி வரைகலை மூலம் செய்யப்பட்டவை" என மறுதலித்தார்.இதை தொடர்ந்து அவசரமாக படங்களை தணிக்கை செய்த ஆசிரியர் பீடம் அழகிகளோடு இருக்கும் புகைப்படங்களை நீக்கி விட்டு ஏனையவற்றை வாச்கர்களுக்கு வெளியிடும் முடிவை எடுத்தது.
புகைப்படங்களை கீழே பாருங்கள்....

வெறித்தனமான உடற்ப்பயிற்சி







ஜெயசுதானந்தா சீடன் சிந்தானந்தா



ஜெய,சிந் ஆனந்தர்கள் பயிற்றுனருடன்..



பயிற்றுனரிடம் திட்டு வாங்கும் ஜெயசுதானந்தா



பயிற்றுனர் "8 பேக்" சுகா


தற்போதைய நிலவரம் - 02

கெமிக்கல் அலி தனது அரிந்த பலகை உடம்பை தேக்கு மரப்பலகையாக்கும் முயற்ச்சியில் கடுமையாக ஈடுபடுவதாக மொறா2003 உளவுத்துறையின் வெளியகப்பிரிவுக்கு தகவல்கள் கிடைத்ததைஅடுத்து பிரித்தானியா சறே மாகாணத்தின் மிட்ச்சம் பிரதேசத்தின் ஜிம் ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடி கமெராச்சூட்டு தாக்குதலில் அலிபாய் வசமாக சிக்கினார்.



100 கிலோ இரும்பு வட்டங்களை தடி ஒன்றில் போட்டு கும்மு கும்மு என்று குதறிய அலி தனது ஜிம் வருகைக்கான காரனங்களைப்பகிர்ந்து கொள்கையில்...

"மச்சான் 3 கிழமையா தான் இங்க வாறன்"

நிருபர் கேள்வி- "எங்களுக்கு ஏன் சொல்லேல்லை?"
பதில்-"உங்களட்ட ஒரு விசயத்த சொன்னா அது பிபிசியில போட்ட மாதிரி,அதான் சொல்லேல்ல"

நிருபர்-இப்ப உங்கள கனாக்காலம் ரீவிக்காண்டி ஒரு வீடியோ எடுக்கப்போறம்.

(அலிபாய் கோபம் கொண்டு "கம்பசில தான் என்ன நாறடிச்சியள்,இங்கயும் நிம்மதியாய் இருக்க விடமாட்டியளோ?" எண்டபடி நிருபரின் கமெராவை பறிக்க முயல்கிறார்.நிருபர் ஜிம் பாடி என்பதால் அரிந்தபலகை பாடியின் முயற்சி கை கூடவில்லை.)


திடீரென கம்பசில செமிஸ்டர் நேரத்தில நோட்ஸ்கட்டோடு நேரே வெறித்த பார்வையோடு நூலகம் நோக்கி போவது போல பளுதூக்கும் பகுதியில் இருந்து ஜிம் பிரிவுக்கு நடந்து செல்கிறார்.நிருபரும் உதவியாளர்களும் பின் தொடர்கின்றனர்.
அங்கே காணப்பட்ட பெரிய ஆனை சைஸ் பந்துகளில் ஒன்றை முதுகுக்கு பின்னால் வைத்தவர்.சட சட என்று இடுப்பை வளைக்கிறார்.சிக்ஸ் பேக் பயிற்ச்சி போல.இப்ப 4 பேக் உருவாகிட்டுதாம்.இன்னும் 2 தான் மிச்சம்.இடையிடையே ஒளித்து வைத்திருந்த புத்தூக்கி பானத்தை அருந்துகிறார்.

நிருபர் கேள்வி-"குடிக்கிறதில கொஞ்சம் தரலாமே?"

அலிபாய்-"இந்தா குடிச்சிட்டு மிச்சத்தை தாங்கோடா என்ன?"

சசி தந்தது "அப்பாஸின்ர பசிக்கு கிடைச்ச சிங்கிள் பிஸ்க்கட் போல" இருக்க அந்த புத்தூக்கிப்பானம் காலி ஆகிவிடுகிறது.வெற்றுப்போத்திலை வாங்கிய சசி கடுப்பாகி அதை வீசி விட்டு நீல கலரில றபர் சீட்டை விரிச்சுப்போட்டு நிலத்தில மல்லாக்கா படுக்கிறார்.

கடுப்பில ஜீன்ஸ்ச கிழிச்ச கதயா வரப்போகுதோ என்ற பயத்தில் நிருபர் பம்ம சசி அதே பழைய சிரித்த முகத்துடன் காலை விரித்து காற்றில் காலாட்டுகிறார்.
"மனசில வலி ஆயிரம் இருக்கு மச்சான்,மனசில இருக்கிற வலிய மறக்கோணும் எண்டா உடம்ப இரும்பாக்குவம் எண்டு தான் வந்திருக்கிறன்,தயவு செய்து இங்கயும் வந்து மனச வலிக்க வைக்காதேயுங்கோடா" எண்டு விட்டு உடை மாற்றும் அறைக்கு போனவர் வெளியே வரேக்க புரூனோ மாதிரி ஒரு மார்க்கமான கெட்டப்பில் வந்தார்.


4 வருசமா கம்பசில குப்பை கொட்டினவங்கள் கூட நிக்கிறாங்கள் எண்டதையே மறந்தவன் போல போனை எடுத்து காதில் வைத்தவர்...
"ஹலோ நான் சசி தான்.என்ன பிரச்சினையோ?.இஞ்சின் கூட எண்ணெய் குடிக்குதோ?,அப்ப வாயால காத்து ஊதி ஓடுற காரா மாத்துவமே?,கனக்க முடியாது பயப்படாதையுங்கோ"
எண்டு தொடர்ந்த படி அவருக்காகவே காத்திருந்த அந்த நவீன சைக்கிளில் தாவி ஏறினார்..
சசியின் போட்டோவ பதிவிடும் போது உருப்பெருப்பித்து பார்த்த நிருபருக்கு அதிர்ச்சி மேல அதிர்ச்சி தந்தது அங்கே தென்பட்ட ஒரு வாசகம்.சசியின் அரிந்த பலகை நெஞ்சிலே,குளிரூட்டிக்கண்ணாடி தொங்க விடப்பட்ட இடத்துக்கு மேலே இருந்த அந்த பித்தளை சங்கிலியில் "தயவு செய்து யாராவது என்னை காதலியுங்கள்" என்றிருந்தது.

பிரித்தானியாவிலும் பக்கா கிராமத்து ஆள் போல வலம் வருகிறது எண்டா அது நம்ம "சின்ரா" தான்.வேலை,வீடு,படிப்பு என அடக்கமான பிள்ளையாக வாழும் "சின்ரா" தனது குடும்பத்தவருக்கு ஆப்பிள் மரம்,பழம் என்பனவற்றை வெப்கமெராவில் காட்டேக்க எங்கள் நிருபரின் கமெராவில் சிக்கினார்.இந்த காலத்திலும் இப்பிடி வீட்டுக்கு அடக்கமாய் அச்சம்,மடம்,பயிர்ப்போட இருக்கிற பிள்ளையளும் இருக்கினம் எண்டதுக்கு இவர் நல்ல உதாரணம்.கொமெண்ட் அடிக்கிறவையும் அடக்கமா அடியுங்க,இல்லாட்டி விளைவுகளுக்கு நான் பொறுப்பாளி இல்லை.


அப்பிள் காட்டிவிட்டு திரும்பேக்க சின்ரா ஸ்கைப்பில கதச்சுக்கொண்டு போன ஓரிரண்டு வார்த்தைகள் நிருபரின் காதில் விழுந்தன.
"என்னதான் அப்பிள் எண்டாலும் நம்ம முற்றத்தில் நிக்கிற ஜம்புக்காய் மாதிரி வருமோ" முடிஞ்சா அத அடுத்த பார்சலில போட்டு விடுங்கோ,மற்றது போன முறை வந்த பார்சலில லட்டுக்கு சீனி பத்தாது,எண்டாலும் நல்ல இருந்திச்சு"

பிள்ளயெண்டா இப்பிடி இருக்கோணும்.சிலதுகள் வீட்டுக்கும் உதவாமல் நாட்டுக்கும் உதவாமல் திரியுதுகள்.இப்பிடியெண்டேக்க உடன நினைவில வாறவர் அரசியல்வாதி கமல்ஸ்.முள்ளுத்தலை,கறுத்தக்கண்ணாடி,லாப் டப் என வலம் வரும் இவர் இப்போது லண்டனில் பிரபலமான பாலர் ஆசிரியர்."இங்கிலீசில பாட்டுப்பாடி,ஆட்டம் போட்டு சின்ன பிள்ளையளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கிற அழகில லண்டன் தாய்க்குலமே சொக்கிப்போய் இருக்கினமாம்.அத கேட்க நாம தான் குடுத்து வைக்கேல.என்ன தான் நடந்தாலும் "லண்டனும் தமிழ்ப்பெண்களும்" என்ற தலைப்பில பெண்ணீயகட்டுரை வெளியிடோணும் எண்ட அவா மட்டும் இன்னும் தணியேல எண்டு நம்பகமான ககவல்கள் தெரிவிக்கின்றன.


டுத்ததா நம்ம ரவுடி.இவர பற்றி எழுதி எழுதியே என்ர கைரேகை தேயப்போகுது.அதிர்ச்சித்தகவல் என்னெண்டா இப்ப ஜிம் அடிக்கிறாராம்."என்ன பாடு பட்டாச்சும் பிரித்தானிய மருமகனாகி பி.ஆர் எடுத்தால்க்காணும்" எண்ட கொள்கைக்கு வீக்கான பாடிக்கொண்டிசன் தடையாக இருக்கப்படாது எண்டசிந்தனைதான் ஆள இந்த அளவுக்கு கொண்டாந்து விட்டிருக்குது எண்டுகினம் அவதானிகள்.ஏதோ வாயால மட்டுமல்ல உடம்பாலயும் ரவுடி போல தெரியட்டும் என நலன் விரும்பிகள் வாழ்த்தினாலும் பழைய அந்த வெடிக்குணம் மட்டும் போகல.

5000 கிலோ குண்டுக்கு பக்கத்த நிண்டு நம்மட 2003 மட்டத்தின் நடமாடும் அணுகுண்டு எடுத்த போட்டோவே காணும் இவன் ஒருகாலும் திருந்தான் எண்டத நிரூபிக்கிறதுக்கு.



இப்பிடி கட்டுப்பெத்தையில் ஒவ்வொரு மார்க்கமா திரிஞ்சவங்கள் இப்ப ஒவ்வொரு மூலையா ஒவ்வொரு மார்க்கமா திரியுறாங்கள்.அதுகள அந்தந்த இடத்தில இருக்கிறவங்கள் பதிவாக்கிப்போட்டா வேலை,சாப்பாடு,உறக்கம் என இயந்திரத்தனத்தோடு வாழும் நம்மில் பலருக்கு சந்தோசமான பொழுதுகளாய் சில நிமிடங்களை நீங்கள் வழங்கியவர்களாவீர்கள்.