தூபரூபன் எம்மனநினையை விளங்கிக்கொண்டு "அண்ணைமார் கவலைப்படாதீங்கோ உங்கட மட்டத்தில பிரபலமான மிக நல்ல அண்ணை ஒருத்தர்ட பெஸ்ட் நைட் வீடியோவ போடுறன்,பாருங்கோ,அது ஒரு வேளை நல்ல இருக்கும்" என்ற படி மெனுவினூடு தேடத்தொடங்குகிறான்."யார்டா அந்த பிரபலமானவன்" என்றபடி பலத்த யோசனையில் நானிருக்க அப்பாஸ் காதருகே வந்து "கட்டாயம் சசின்ரயாத்தானிருக்க வேண்டும்" என்று கிசுகிசுத்தான்.7ஜி உறுப்பினர்ல யாரோ ஒருத்தன் தான் என்று எதிர்பார்த்திருக்க பலத்த அதிர்ச்சியை தந்தது திரையில் வந்த உருவம்."இவன் பிரபலமா?" என்று சேகர் கத்தியே விட்டான்.திருநீற்று பட்டை அணிந்து கையில் சிறிய ரக குடை ஒன்றுடன் இருந்த அந்தப்பேர்வழி பிரபலமாகிவிட்டான் என்பதை ஜீரணிக்க முடியவில்லை.தூபரூபனை சசி முறைக்க "அண்ணா இவர் கரையேறி எண்ட பெயரில புளொக் எழுதுறவர்,நாங்கள் நாலு நல்ல கருத்து கேட்கோணும் எண்டு நினைச்சா இவரத்தான் கூப்பிடுவம்,வாயில இருந்து வாற வார்த்தை அவ்வளவும் முத்து,எழுத்துக்களில் செந்தமிழ்க்கப்பு,பெண்களை ஏறெடுத்தும் பாரா,கம்பசை கலக்கிய சித்து...."என்று கரையேறி புகழ் பாடிக்கொண்டே போனான்.
பிரச்சாரம் எவ்வளவு வலிய ஆயுதம் என்று புரிந்தது."சிங்கத்தோடு படுத்து விளைஞ்சவை தான் சிங்களவர்" எண்ட மட்ட மொக்கையை அவங்கள் ஆயிரம் ஆண்டுக்கு முன்னே எழுதி வைத்து விட்டதால் இன்று அவங்கள் ஹீரோ,ஒண்டையும் பதியாததால் நாம் இன்று சீரோ....என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்."சரியடா தம்பி ஓட்டு" என கொஞ்சம் கடினமா சொல்லி விட்டேன்.
"ராக்கிங் ஒழிஞ்சு பல வரிசமாச்சு,சும்மா கம்முன்னு இருங்கண்ணா" என்று உறுக்கியபடி ஓட்டுகிறான் சலனத்தை.
கரையேறி நெற்றியெல்லாம் திருநீறு பூசியபடி "கந்தஜட்டிகவசம்" படித்த படி கட்டிலில் வேட்டி சால்வையோடு உட்கார்ந்து இருக்கிறார்.மணப்பெண் கதவை திறக்க கரையேறி கவசத்தை கவசமாக்கி முகத்தை மூடிக்கொள்கிறார்.
பெண்-"ஏங்க உங்களுக்கு வேர்த்து கொட்டுறது"
கரையேறி-"எனக்கு தெரியலை"
பெண்-"ஏங்க கையெல்லாம் படபடன்னு நடுங்கிறது?"
கரையேறி-"எனக்கு தெரியலை"
பெண்-"என் மேல் உங்களுக்கு அன்பு இல்லையா?"
கரையேறி-"அன்பே சிவம்,சிவமே இந்தக் கரையேறி"
பெண்-"ஏங்க அநியாயத்துக்கு நல்லவரா நடிக்கிறீங்க"
கரையேறி-"அது பிறப்பில வந்தது"
பெண்- (கடுப்பாகி FBஐ திறந்து சில பெண்களின் FACE BOOK PROFILE போட்டோக்களைக்காட்டுகிறாள்) "இவங்கள் எல்லாம் என்னோட நெருங்கிய நண்பிகள்,உங்கள பற்றி விலாவாரியா சொல்லி இருக்கிறார்கள்.வழமையான சத்தியவான் வேடம் என்னிடம் பலிக்காது"
கரையேறி-"தென்னாடுடைய சிவனே போற்றி,சத்தியமெவ ஜெய,நெல்சன் மண்டேலாக்கா பச்சா"
என பலவாறு சொல்லியபடி வெறித்தனமாக பெண் மீது பாய்கிறார். 30 நிமிடங்கள் நடந்த அந்த வன்முறையை பார்த்து விறைத்துப்போய் உட்கார்திருந்தோம்.தூபரூபன் சிறிதளவு நீரை முகத்தில்தெளித்து நிஜ உலகுக்கு கொண்டு வருகிறான். ஆசுவாசப்படுத்த எல்லோரும் பல்கனிக்கு ஓடி வந்து பொல்கொடைக்காற்றை நாசிகளுள் ஆழமாக இழுத்துக்கொள்ள ஆரம்பித்தோம்.கீழே யாரோ விநோதமான ஒலியில் கத்துவது கேட்கவே திருபினோம்.ஒரு பருத்த கிழவன்,அருகே அவனை விட பருத்த பன்னியொப்ப தோற்றமுடைய பெண்.தூபரூபன் "அண்ணா ஒருக்கா என்ணெண்டு பார்த்துட்டு வாறன்" என கீழே ஓடி அரை நிமிடத்தில் மீள மூச்சிரைக்க ஓடி வந்தான்.
"அண்ணாமார் எல்லாரும் ஓடித்தப்புங்கோ,உவள் ஒரு விசரி,தனக்கு பின்னால வந்தவை,கையை பிடிச்சவை,கால தொட்டவை எண்டு கம்பசில இருக்கிற எல்லா பெடியள் மேலயும் கேஸ் போட்டவள்,இப்ப புதுசா நீங்கள் வந்ததை கண்டுட்டு தகப்பனோட கேஸ் போட வந்திருக்கிறாள்.ஓடுங்கோ,ஓடித்தப்புங்கோ"
"தம்பி பொறு விசரி எண்டால் அப்பன்காரனோட சமாதானமா
பேசிப்பார்க்க ஏலாதோ?"
நான் வினவ தூபரூபன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது.
"அண்ணா அவன் அவளை விட நூறு மடங்கு விசரன்,அவனுக்கு கிட்ட போனாலே கொலைக்கேஸ் எண்டு போட்டுடுவான்.அவள் வேற உங்கட பேரத்தான் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு நிற்கிறாள்"
என தூபரூபன் சொல்லி முடிக்க முன் ஹொஸ்டலில் இருந்து ஸ்டோன் பென்ஞ் வரை ஓடி வந்துவிட்டோம். "அடோ,பறதெமிழ,கொகேத யன்னே" என ஒரு குரல் கேட்ட திசையில் திரும்பி பார்க்க நிலாந்தி றிப்பீட் எக்சாம் கேள்விப்பேப்பரோடு தலைவிரி கோலமாக ஓடி வருவது தெரிந்தது.வேகமெடுத்து ஓடி வாசலுக்கு கிட்ட வர டயந்தன் வருகிறான்.நான் எவ்வளவு கெஞ்சியும் கேட்காமல் எம் காதுகளில் வெடிக்கிறான்.என் காதில் வெடிக்க தாங்க முடியா வேதனை.அலறிக்கொண்டு எழுகிறேன்.வெளியே பனி கொட்டிக்கொண்டிருந்தது.