உச்சா போகாமல் தொடர்ந்து உம்மா கொடுப்பது,பாம்போடு பலநாள் படுப்பது,அம்மணமா அணிநடை போவது போண்ற கீழ்தர வகையறா சாதனைகளுக்கே பெரிய ஊடக முக்கியத்துவம் தரப்பட்டுகிற காலத்தில் உலகளாவிய ரீதியில் பிரபலமான விளையாட்டில் எட்டமுடியாத சாதனயை ஒரு வீரன் நிகழ்த்தும் போது அதற்கு எத்தனை பிரமாண்டமான இடம் தரப்படும் என்பதை மேற்குலக ஊடகங்கள் காட்டின.

22/07/2010,2.00 PM

இங்கிலாந்து, மிட்சம் கிராமத்தில் இருக்கும் உடற்பயிற்சிக்கூடம்.........

வரிசையாக பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சிகள் முத்தையா முரளிதரனின் சாதனையை விபரித்த போது எல்லோரும் கூர்ந்து நோக்கினார்கள்.மைக்கலும்,பாரக்கும் தங்கட ஆட்கள் என்று சொல்லிகொள்வதில் பெருமை கொள்ளும் காப்பிலிகள் இவரும் தங்கட ஆளா? என பரபரக்க தொடங்க "அவர் ஒரு இலங்கை தமிழர்" என அறிவித்து அடக்கி வைத்தனர் நம்மவர்கள்.
குதர்க்க ஆராட்சிகளுக்கு அப்பால்ப்பட்டு உலகத்தின் பார்வையை தன் நோக்கி திருப்பிய ஒருவன் சொந்த இனத்துக்காரனாக இருக்கையில் ஏற்படும் பெருமிதம் அலாதியானது.ஏ.ஆர் ரகுமானைப்பற்றி யாராவது கதைக்கையில் குறுக்கால் பாய்ந்து அவர் ஒரு தமிழர் என சொல்ல வேண்டும் போல இருக்கும்.வடக்கன் யாராவது ஹிந்தி சினிமா புகழ் பாட வெளிக்கிட்டால் "மணிரத்னம் ஒரு தமிழர், தெரியுமா?" என கேட்டு பல தடவை அடக்கி இருக்கிறேன்.லண்டனில் "ரமில் டைகர்ஸ் நாங்கள், கவனமாய் இருங்கள்" எனச்சொல்லி வேற்றின ஆட்களை கழுசானை முழங்காலில் போட்டுக்கொண்டு திரியும் இளவட்டங்கள் அடக்கும் போதில்லாம் ஓரமாக இருந்து ரசிக்கத்தோண்றும்.அப்துல் கலாமும், நைட் சியாமளனும் நம்மவர்கள் எனச்சொல்லும் போது மதங்கள் குறுக்கே தெரிவதில்லை.இந்த உணர்வு இயற்கையானது.மாறி வரும் உலகில் புறத்தோற்ற இன அடையாளங்களை சுமந்து செல்ல முடியா சூழலில் இவ்வாறாக எம் தனித்தன்மையை அடையாளப்படுத்தும் திறமைசாலிகள் என்றும் வரவேற்கப்பட வேண்டியவர்களே.


22/07/2010, 5.00 PM

எதிர்பார்த்தபடி முக நூலை திறந்த போது முரளியை வாழ்த்தி அநேகர் குறிப்பிட்டிருந்தார்கள்.சிலர் இந்த சாதனையில் ஜூலைக்கலவர நினைவுகள் மறக்கடிக்கப்படுவதாக சாடியிருந்தார்கள்."மகிந்த முரளியின் சாதனையை தன் மீது போர்த்திக்கொண்டு தப்பிக்கொள்ளப்பார்க்கிறார், விடாதீர்கள், பிடியுங்கள்" என முக நூல அரசியல் நோக்கர்கள் சிலாகிதிருந்தனர்.நேரம் செல்லச்செல்ல வாதப்பிரதிவாதங்களால் முக நூல் சூடேறத்தொடங்கியது.ஒரு கட்டத்தில் முரளியை தமிழர் என கருத முடியாது என ஆரம்பித்தது அந்த சாதனையாளனின் வரலாறை இழுத்து கேவலப்படுத்தும் அளவுக்கு போனது.


முரளிக்கு எதிராக/ அவரது சாதனைக்கு எதிராக போர்க்கொடி பிடித்த மர/ற தமிழரிடம் இங்கே சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறேன்.

1)
ஜூலைக்கலவரத்தில் இறந்தவர்கள் ஏறக்குறைய 6000 பேர்.2009 மே மாதத்தில் முள்ளி வாய்க்காலில் இறந்தவர்கள் 30 000 பேர்.மார்ச்சில் 10 000 பெப்ரவரியில் 4000 ஜனவரில் ..... என பட்டியல் நீழும்.30 வருட போரில் ஒவ்வொரு கடந்த ஒவ்வொரு நாட்களுமே வலி சுமந்தவைதான்.கறுப்பு ஜூலையை கணக்கில் எடுப்பவர்கள் இவற்றையும் கருத்தில்க்கொண்டு குறைந்த பட்சம் உங்கள் பிறந்த நாட் கொண்டாட்டங்களையாவது இழப்புக்கள் நடைபெற்ற மாதங்களில் தவிர்திருக்கிறீர்களா?

2)
இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆதரவளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் உடன்படுகிறேன்.அந்த அணியின் உறுப்பினர் என்ற ரீதியில் முரளிக்கு எதிரான எதிர்ப்பும் பொதுவானது என்ற உங்கள் கருத்துப்படி கொலைகார இலங்கை அரசின் திணைக்களங்களில் சேவகம் செய்வதும் தவறானது,உங்கள் உறவுகள் யாராவது அப்படி இருப்பின் உடனடியாக அவர்களை வேலையை விட்டு நீங்கி சுய தொழில் செய்து வாழும் படி கேட்க முடியுமா?

3)
விமானத்தில் பயணிப்பது அவனது உற்பத்திகளை "ஊர்ச்சாமான் போல வாராது" என்ற கொள்கையோடு வாங்குவது ........இதில் எதையாவது நீங்கள் செய்யாமல் இருந்திருக்கிறீர்களா?


இது போல ஆயிரம் கேள்விகள் அடுக்கலாம்.அவ்வளவும் வேண்டாம்.மேற்சொன்ன மூன்று வினாக்களுக்கும் சாதகமான பதில் உங்களிடம் இருப்பின் ....

நீங்கள் முரளி மீது வசை பாட தகுதியானவர் தான்.பாடுங்கள்.பொறுமையாக இருந்து கேட்கிறேன்.இல்லாட்டி சும்மா கடுப்ப கிளப்பாதையுங்கோ.நல்ல வாயிலை வருது.சொல்லுக்கு முதல் செயல் இருக்கோணும்.கருத்தெழுதுற நேரம் வேலைக்குபோய் ஊர்ல கால்,கை,கண் இல்லாத பிள்ளையளுக்கு உதவுறதுக்கு காசு அனுப்புங்கோ.இல்லாட்டி பேசாம கலியாணம் கட்டிட்டு அம்மா பகவானட்ட/ சாய்பாபாட்ட போய் பிள்ள வரம் கேளுங்கோ!