முக்கிய அறிவித்தல்இனிமேல் திருமணம் செய்யும் எமது மட்ட பேர்வழிகளுக்கு வாழ்த்து எழுதுவதில்லை என கடுப்பாகி முடிவெடுக்க முக நூலில் வரிசையாக வந்த கலியாண கோலங்கள் காரணமாய் அமைந்தன.வெளிநாட்டிலை இருக்கிறவன்,உள்நாட்டிலை இருக்கிறவன்,சும்மா இருக்கிறவன்,கடலை போட்டுக்கொண்டு இருந்தவன்,ரெஸ்ற் எடுத்து ரயர்ட் ஆகி திரும்ப ரெஸ்ற் எடுத்துக்கொண்டிருந்தவன் எல்லாரும் கட்டு கட்டு என்று கட்டி முகநூலை கலியாண வெப்சை போல ஆக்கிக்கொண்டு இருக்கிறார்கள்."பேச்சோ? இல்லை காதலோ?" என்று கேட்டால் "ஒன் இயர் லவ்" "த்ரீ இயர் சின்சியர் லவ்" என்று காதில் வாழைப்பூவை வைத்து கண்ணில் குண்டூசியை ஏத்துகிறார்கள்.கட்டினமா பிள்ளைய பெத்தமா என்று இருக்காமல் தனியா இருக்கிறவனை வேறு வலுக்கட்டாயமாக "சட்" டுக்கு இழுத்து "உனக்கு எப்ப கலியாணம்?"  என்று கேட்டு கொலைவெறியை கிளப்புகிறார்கள்.ஆயினும் நேரகாலத்துக்கு கலியாணம் கட்டுவதை மிகச்சிறந்த அடைவாகவும் பிள்ளை பெறுவதை ஆண்மையின் அடையாளமாகவும் பிள்ளைக்கு பிறந்த நாள் கொண்டாடுவதை வாழ்நாள் சாதனையாகவும் கொண்ட தமிழ் சமுதாயத்தில் பிறந்த நாமும் இவ்வழக்கின் படி ஒழுகாவிட்டால் எதிர்காலத்தின் பலவிதமான சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பது வெளிப்படை."பிள்ளை காய்ஞ்சது காணும் இனி தாம்பத்திய வாழ்க்கையை அனுபவிக்கட்டும்.இல்லாட்டி நெறி தவறிடுவான்/வாள்" என யதார்த்தமாக சிந்திக்கும் தாய் தந்தையர் பதார்த்தமாக பேசி சம்மந்தம் பிடிக்கிறார்கள்.அத்தோடு "எப்படா கட்டுவம்" என்று இருப்பவர்களில் ஒரு சாரார் முகநூலிலோ ,கோயில் வீதிகளிலோ அதே தேவையோடு சந்திக்கும் எதிர்ப்பாலரிடம் சாதகமான முடிவு கிடைக்கும் பட்சத்தில் "வெற்றிகரமான துரித காதலை" நிறைவேற்றி திருமணம் முடிக்கின்றனர்.இவர்கள் போக எஞ்சியவர்களின் நிலைதான் மிகவும் சிக்கலானது.பலர் தங்கச்சி கலியாணம் கட்டோணும்,தம்பி படிச்சு முடிக்கோணும்,வீடு கட்டோணும்,காணி வாங்கோணும்,கடன் காசு குடுக்கோணும் என்று மிருகமாய் உழைத்தபடியிருப்பவர்கள்.இவர்களுக்கு பெண் நண்பியை பிடிக்கவும் நேரமிருப்பதில்லை,துரிதகாதல் முறையில் பிடிச்சாலும் பராமரிக்க முடியாமல் சொதப்பி விடுகிறார்கள்.பேச்சு கலியாணம் கட்டி வைக்காமல் தாய் தந்தையரால் இழுத்தடிக்கப்படும் இவர்கள் மிகவும் பரிதாபகரமானவர்கள்.சௌகரியமில்லாத தாம்பத்திய வாழ்க்கையையும் உறவுகளின் ஏளனத்துக்கும் எதிர்காலத்தில் ஆளாகக்கூடிய இவர்களுக்கு வழி காட்டுவது மட்டம் 2003 ஆகிய நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

இதன்படி நமது மட்டத்தின் உள்ள மணமகன்கள்/மணமகள்கள்,அவர்களது ஆற்றல்கள்,சாதனைகள்,சீதனப்பெறுமதி,எதிர்பார்க்கும் எதிர்ப்பாலரின் தகைமைகள் ஆகியனவற்றை "கானாக்காலம்" வெளியிட்டு ஒரு திருமணதளம் போல செயல்ப்படவுள்ளது.இதனை கேவலமானதாகவோ/மொக்கையாகவோ கருதாமல் அனைவரும் வரவேற்று ஆதரவளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.இவ்விபரங்கள் "சிங்கிள் சிங்கங்கள்" என்ற தலைப்பில் வெளியாகவுள்ளன.ஒவ்வொரு பதிவும் 5 (மணமகன் + மணமகள்) களின் விபரங்களை தாங்கிவரும்.நீங்களும் அதில் இடம்பெற விரும்பினால் தலைமைச்செயலகத்தை உடனடியாக தொடர்பு கொள்ளவும்.