அலியப்பாவுக்கு ஒரு கெட்ட குணம் எவர் எதைப்பற்றிச்சொன்னாலும் அவனும் அதைப்பற்றி ஏதாவது சொல்லிவிடுவான்.உதாரணத்துக்கு நீங்கள் ஒரு விமானமோட்டியாக இருந்ததாகவும் கடும் காத்து அடிக்கிற நேரத்தில் தரையிறக்கிறது கஸ்டம் என்றும் சும்மா குத்து மதிப்பாக அலியப்பாவிடம் கதை அளக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.அவன் சற்றும் அசராமல்  "கடும் காத்தில இறக்கிறத விட ரிவேஸ் கியர்ல இறக்கிறது இன்னும் கஸ்டம்" எண்டு அடிச்சு உங்களை வாயை அடைத்துவிடுவான்.இந்த ஒரு வசனம் மட்டுமே அலியப்பா பற்றி தெரியாதவர்களுக்கு குத்துமதிப்பான அறிமுகம் ஒன்றை கொடுக்க போதுமானதாக இருக்கும்.இனி கதைக்கு வருகிறேன்.ஒரு நாள் பம்பலப்பிட்டியில் நண்பர்கள் இரவு உணவாக கொத்து ரொட்டி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.அதில் சில கொழும்பு பல்கலை நண்பர்களும் இருந்தனர்.அவர்கள் எதைக்கதைக்கத்தொடங்கினாலும் அலியப்பா அதைப்பற்றிக்கதைத்து வாயடைக்கவைத்துக்கொண்டு இருந்தான்.கதை அங்க போய் இங்க போய் கடைசியில் கொத்து ரொட்டிக்குள் வந்து நின்றது.கொத்து ரொட்டியைப்பற்றியும் அலியப்பா கதைக்கத்தொடங்கிவிட்டான்.ஒரு நண்பன் கொத்து ரொட்டிக்குள் இருந்த மிளகாய்த்துண்டுகளை ஒதுக்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தான்."ஊரில எங்கட வீட்ட ஒரு நாய் இருந்தது.சாப்பாட்டுக்க எத்தினை கறிவேப்பிலை இருந்தாலும் கண்டு பிடிச்சு ஒதுக்கி மிச்ச எல்லாத்தையும் சாப்பிடும்.ஆள் சாப்பிட்டு முடியேக்க கருவேப்பிலை குவியலா கிடக்கும்" என்று யாரோ சொன்னதை சாப்பாட்டில் குறியாய் இருந்த அலியப்பா கிரகித்த போதிலும் "நாய்" என்பதை மட்டும் தவறிவிட்டான். "உங்கட வீட்டில மட்டுமில்ல நம்ம வீட்டிலயும் ஒரு ஆள் இருந்தவர்.அது நான் தான்.ஒரு கருவேப்பிலை விடாம ஒதுக்குவன்".அலியப்பா சொல்லி முடிக்க "கொல்" என கிளம்பிய வெடிச்சிரிப்பு அடங்க சில நேரம் ஆனது.இன்றுவரை சாப்பாட்டில் பிடிக்காதபகுதியை விலத்திச்சாப்பிடும் நாய்களைக்கண்டால் அலியப்பாவின் கருவேப்பிலை கதை நினைவுக்கு வந்து சிரிப்பூட்டுகிறது.


2004 ஆம் ஆண்டு விடுதியில் முழுமையாக இருள்கலையாத பொழுதில் யாரோ குதித்த சத்தம் கேட்டு தூக்கம் கலைந்த எனக்கு தூக்கிவாரிப்போட்டது.எதிரே ஒரு உருவம் வாயில் போர்வையை கவ்வியபடி பயங்கரமாக நின்றிருந்தது.திடீரென்று அந்த உருவம் வாயை திறக்க போர்வை பிடி நழுவி நிலத்தில் விழ பயம் தெளிந்த நான் விழுந்து விழுந்து சிரிக்கத்தொடங்கினேன்.காலை வேளைகளில் என்ன எது செய்கிறேன் என்று தெரியாமல் பென்ரியம் 1 மூளையை சூடாக்குவதற்காக வாயில் சாரத்தை கவ்வியபடி சிரிப்பு ரவுடி நடந்து திரியும் காட்சியை கண்டு கழிப்புறுவதில் அலியப்பாவுக்கு அலாதிப்பிரியம்.சில நாட்களின் முன் சிங்கையில் பெட்சீட்டை கவ்வும் போது அலியப்பா எடுத்த போட்டோ உங்களுக்காக இதோ!