"எழுதாடா நாயே எழுதடா பேயே" என்று என்னை கடந்த ஒரு மாதமாக ஒவ்வொரு நாளும் வதைத்த சுகாவுக்கு முதற்கண் வணக்கங்களை தெரிவித்துக்கொண்டு எம் ட்ரிங்கியைப்ற்றி ஒரு பதிவை தொடர்கிறன்…


மனதில் நின்றவர்கள்-04-ட்ரிங்கோ உமா


ட்ரிங்கோ உமா , தாடிக்காரனுடைய உமா , மீசை உமா என பல பெயரால் அழைக்கப்படும் இவன் நான் கம்பஸ் வாழ்வில் கண்டவர்களில் ஒரு போதும் மறக்க முடியாதவன். அவனைப்பற்றி இந்த பதிவிடுவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி… அவன் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் இங்கு தருகிறேன்… உமா எனக்கு அறிமுகமாகியது நல்ல ஞாபகம் இருக்கிறது … இரண்டாம் செமஸ்டர் றிசல்டினை எமக்கு அறிவித்தது மது . அப்போது நாமெல்லாரும் யாழ்ப்பாணத்தில் இருந்தோம்.. எங்கோ திருநெல்வேலியில் அவனுடைய சொந்தக்கார வீட்டில் கடலை போட்டுக்கொண்டிருந்தபோது கம்பஸிலிருந்த யாரினூடாகவோ றிசல்ட் கேட்டுச் சொன்னான் மதுவதனதன்… எனக்கு றிசல்ட் பெரிதாக பிரச்சனை இல்லாவிட்டாலும் மோட்டுக்குத்து குத்திய மட்டீரியல் A தான் வந்திருந்தது… அதுதான் அப்செட்… ஆக றிகரக்சன் போடபோவதாக பலநாட்களின் பின்பு யாரிடமோ கதைத்த போது யாரோ உமாக்காந்தன் ஆமிக்காரனுடைய பாடத்துக்கு றிகரக்சன் போட்டதாக தெரிவித்திருந்தார்கள்;.. ஆகவே கம்பஸ் வந்தவுடன் உமாகாந்தனை தேடிக்கண்டு பிடித்து அவனிடம் கதையை விட்டேன்.. சிம்பிளாகச் சொன்னான்… நான் A க்கு செய்தனான். B+ போட்டுட்டான் எண்டு... நானும் சரி என்று ப்ரொசீட்சரை அறிந்து கொண்டு விட்டு விட்டேன்…இப்படித்தான் அறிமுகம் (பின்பு அவனுக்கு A வந்து விட்டிருந்ததாக பைனலியரில் சொன்னான்...)


அதன் பின்பு இரண்டாம் வருடம்… இலத்திரனியல் என்டர் பண்ணிவிட்ட படியால் நான் என்னுடைய படிப்பின் இறுக்கத்தை தளர்த்திக் கொண்டு விட்டிருந்தேன்… இனிமேலும் மண்டையை உடைக்க முடியாது என்று நினைத்து இசை , விழா ஒழுங்கமைப்புகள் , சினிமா பார்ப்பது என்று பிசியாகி விட்டேன்.. ஏதோ முதலாவது செமஸ்டரும் முடிந்து றிசல்ட் வந்தது … உமா பட்டையைக் கிளப்பியிருந்தான்.. தமிழரில் முதல் GPA .. இப்படி முதல் செமஸ்டரில் திரும்பிப்பார்க்க வைத்த உமா கடைசி வரையும் படிப்பில் ஹீரோதான்…


அதிலும் கடைசியடி நெருப்படி… எல்லாப் பெரிய மண்டைகளும் பயந்த ஒரு பைனல் இயர் புரோஜேக்டை கடைசியாக ட்ரிங்கோவில் கோயிலில் எங்கேயோ திருவிழாவில் நின்று விட்டு வந்த படியால் உமாவுக்கு தெரிவு செய்ய வேண்டியிருந்தது.. எல்லாரும் முதல் ப்ரோட்டோ டைப் முடித்திருந்தபோது அவன் ஒன்றுமே செய்யாமல் ப்ரசென்டேசன் செய்தான்… கடைசி ஒரு மாதம் மெனக்கட்டிருப்பானோ தெரியேல்ல .. அவனுடைய ப்ரொஜெக்டை ஒரு வெள்ளைக்காரன் அரை மணிநேரம் பாத்துக்கொண்டிருந்தானாம்… பிறகென்ன அதுக்கும் A+ தான்…




இனி காமெடிகளுக்கு வருவோம்… இவரும் சினிமாப்பைத்தியம்… கம்ப்யூட்டர் ஆக்கிரெக்சர் எக்சாம் மிற்கு முதல்நாள் ஆதியைப்பார்த்துவிட்டு இரவு கொடாவில் சிறியைக்கட்டிப்பித்து சொல்லித்தாடா சொல்லித்தாடா என்று அழுது கொண்டிருந்தேன்.. அடுத்த நாள் எக்சாம் நன்கு கடித்து விட்டது… சே சினிமாவுக்கு போன படியால்தான் இப்படியானது என்று என்னை நானே கடிந்து கொண்ட வேளை உமா புன்னகையுடன் வந்து நின்றான்…
நான் : எப்பிடி மச்சான் எக்சாம்?
உமா: பரவால்லடா! ஏ வரும் (இது உமாவின் ஸ்டைல் )
நான் : அடப்பாவி! எனக்கு கையிலதான்…
உமா: டேய் சும்மாவிடாத! நேற்று எனக்கு முன்னுக்கு நிண்டாய் கியூவில..
நான் :ஙே?
உமா: உன்னை அங்க கொன்கோட்டில நேற்று முன்னால கண்டன் … பிறகு கதை விடுறா… படிக்காம போனனீயெண்டு அவிக்கப்போறியா போறியா எனக்கிப்ப ?



அவனுக்கு ஏ ப்ளஸ் வந்திருந்தது அந்த பாடத்துக்கு..



உதே காமெடி சிவாஜி நேரம் திருப்பி நடந்தது… நான் 4.30 மணிக்கு (காலமை) பஸ் பிடிச்சு 5 மணிக்கு கொன் கோட் வாசலில நிக்கிறன் ஒருவனையும் காணேல்ல… எனக்கு பெரிய சந்தோசம்… சிவாஜி பெஸ்ட் சோ எப்பிடியாவது பாத்திடலாமெண்டு… ஆனா எனக்கு பிறகு வந்த ஒருத்தன் கதைவை தாண்டி உள்ள பாய்ஞ்சான்;.. எனக்கு கடுப்பாகி நானும் உள்ள பாய்ஞ்சா உள்ள பத்து பதினைஞ்சு பேர் இருக்கிறாங்கள். கிட்டப்போனா ஒருத்தன் கூப்பிடுறான்… கூர்ந்து பாத்தா நம்ம உமா… மயங்கி விழாத குறை நான்…



அடுத்தது எப்ப படிக்கிறான் எண்டு கண்டு பிடிக்க முடியாது.. நானும் கவனிச்சுப்பாத்துட்டு ஏலாதெண்டு விட்டிட்டன்.. ஆனா அவன் செய்த உதவிகளை ஆயுளுக்கும் மறக்கமாட்டன்.. சில செமிஸ்டர்கள் ஓவரா விளையாடி கடைசி நேரம் உமா முருகதாஸ் போன்றவர்களின் குப்பியிலதான் பிழைப்பே ஓடியது… உமாவிடம் போட்டியற்ற தன்மை காணப்பட்டமை என் போன்றவர்களுக்குதான் உதவியது..


பெடியர் வீணைவாசிச்சு செமையா வாங்கிக்கட்டுவார்… ஆனா பிசாசு ஒருக்காலும் விட்டுக்கொடுக்கமாட்டான்.. தான் பிடிச்ச முயலுக்கு மூண்டுகால்தான்.. அறிவகம் அலுப்பகம் எல்லாம் போய் வறுக்கும் … பாக்கிற எங்களுக்குத்தான் வேர்க்கும்…


அதோட போய்ஸ் படத்தில வாற செந்தில் மாதிரி எங்கெங்க அன்னதானம் போடுவாங்க எப்பப்ப பரீயா படம் போடுவாங்க எல்லாம் பெடிக்கு அத்துப்படி… டாண் எண்டு போய் நிண்டுடுவான் சரியான டைமுக்கு.. என்ககெண்டால் இவனென்னடா இப்பிடியிருக்கான் எண்டு யொசினை… ஆனா அதுவும் அவனுடைய ஒரு அட்ராக்சன் பொயிண்ட்தான்… அதோட காச கண்டபடி செலவழிக்க மாட்டான்… உதாரணத்துக்கு ஒண்டு சொல்றேனே… இவனுடைய 3315 போனை ஒருத்தன் சுட்டுட்டான்.. அதில இருந்தது ஒரு நாசமறுந்த ஹச் சிம்… அதுவும் அதில தெரியாத நம்பரிலருந்து கோல் வந்தா எடுக்கவே மாட்டான்.. ஏனென்றால் அப்போ இன்கமிங் காசு… ( ஒரு அந்தர அவசரத்துக்கு கூடி எடுக்கமாட்டான் கொடுமை!) இந்த வள்ளலில அந்த போனை வாங்கிறதுக்காக கள்ளன் கூட போனூடாக பேரம் பேசி 1000 இல முடிச்சு பிறகு பேர்சில 700வை மட்டும்கொண்டு போய் அவனை பிரிட்ஜ் இல சந்திச்சு 700 க்கு மடக்கி போனை வாங்கி வீடு திரும்பும்Nபுhது அவனும் கள்ளனும் ப்ரெண்ட்ஸ்.. நீங்க எடுப்பங்களா இப்பிடி ஒரு றிஸ்க்? என்னால செத்தாலும் முடியாதப்பா!


பெண்கள் பக்கமே இவன் தலை வைத்து படுத்ததில்லை ஆனால் எல்லாரும் ஒரு பஸ் பிரயாணத்தில் தோளில் யாரோ தூங்கியதாகவும் அதை கொன்சால் பார்த்ததாகவும் சொல்லி வறுப்பார்கள்… பெடி சின்ன ஸ்மைலோட போயிடும்…


நாங்கள் கப்பலில யாழ் போனபோது ஒரு கவனிப்பு கவனிச்சான் ட்ரிங்கோவில வச்சு … ஒருத்தனும் சொன்னா நம்ப மாட்டான்… சினிமாவில வாறமாதிரி கோழி அடிச்சு குழம்பு வைச்சு கொலை வெறி கவனிப்பு… மூச்சு முட்டிப்போச்சு எங்களுக்கு… கப்பலில சிவானுஜன் அஞ்சு நிமிசத்துக்கொருக்க உதைப்பற்றிதான் கதை… காசு சேர்க்கிற புத்தியுள்ளவன் கஞ்சனாயிருப்பான் எண்ட கொள்கை அதோட புஸ் ஆகிடிச்சு…


மாப்பளையிண்ட பிசினஸ் புத்தி இவருக்கு ஒவவொரு முறையும் வினையிலதான் முடியுறது… ஏதொ கோல்ட் கொய்ன் பிரமிட்டில சேர்ந்து காசு விட்டவன் (என்னையும் சேர்க்கப்பாத்தவன் நல்லகாலம் நான் சேரேல்ல) திருந்தாம பிறகும் சீகல்லில போட்டு நாமம் வாங்கினான்… இப்ப என்னவேலையில இருக்கானோ?



இவனைப் பார்ட்டியளுக்கு கூப்பிn எல்லாருக்கும் பயம்… காரணம் இவனுடைய அசகாய சாப்பாட்டு ராமானுஜம்… பாக்கிற எனக்கே தொண்டைய அடைக்கும் ..இவனோ ஒருத்தரையும் சட்டை பண்ணாமல் தன்பாட்டுக்கு உள்ளே தள்ளிக்கொண்டிருப்பான்… ஆனால் ஒரே நிம்மதி என்னவென்றால் மச்சான் முட்டை ட்டும்தான் அசைவமாக உண்பார்…ஹிஹி! அதுக்காக மிக்சர் ப்க்கட் பிஸ்கட் பக்கட் குளிர்பானம் ஏதாவது இவன் கண்ணில் பட்டால் .... பிறகென்ன கள்ளக்கடத்தல்தான்.. ரூமில போனா கிடக்கும்…


ரஜீ ஒரு முறை இவனுடைய கிடங்கு றூமைப் நக்கலடிப்பதாக கூறி ஓட்டைக்கதிரையை எல்லாம் கதையில் கொண்டுவந்து அடித்த காமெடி இப்போது நினைத்தாலும் குடல் பிய்யும் வரை சிரிக்கலாம்… எல்லாருக்கும் ஞாபகம் இருக்குமெண்டு நினைக்கிறேன் … மறந்து விடாதீர்கள்.. உமாவின் மகனுக்கு சொல்லவேண்டும்.. ஹாஹாஹா!



ஒரு முறை இவன் றூமுக்கு சென்றபோது பயோட்டினெக்ஸ் ஈ மாத்திரை உறைகள் வெளியே கிடந்தன…எதுக்கடா இது பாவிக்கிறது எண்டு கேட்டன்.. மயிர் நல்லா வளரும் மச்சான் எண்டான்.. அந்த நேரம் எனக்கு மீசை முளைக்கிற ஐடியாவிலயே இருக்கேல்ல இவனுக்கோ இடும்பன் மீசை… நானும் ஏதோ அவனுடைய மீசையிண்ட மந்திரத்தை கண்டு பிடிச்சமாதிரி அறாவிலைக்கு அந்த மருந்தில ஒரு சீட் வாங்கிக்கொண்டு வந்து ஒளிச்சு வைச்சு குடிச்சன்.. ஆனா அதை அந்த நாசமாப்போன குட்டி உமா கண்டுபிடிச்சு வெளில சொல்லி பரிசு கெடுத்திப்போட்டான்.. ஹாஹாஹா!


றஜீ எக்சாம் மூட்டங்களில இவனுடைய றூம் வாசலில வந்து நிண்டு சொல்லித்தருமாறு கேட்பான்.. இவனோ இன்னும் படிக்கலடா என்று சொல்லுவான்… அவ்வளவுதான் அந்த வாசிலில உருண்டு புரண்டு உலகத்தில இல்லாத நல்ல வார்த்தையெல்லாம் பாவிச்சு கத்திக்குழறி பிறகு ஓய்ஞ்சுபோய் “என்ட உமா கூட என்னை கைவிட்டிட்டான்” எண்டு சின்னப்பிள்ளை மாதிரி றஜீ விசும்பும்… அதுக்கு பிறகு உமா அவனை கூப்பிட்டு குப்பி டைம்டேபிள் குடுக்கும் … இந்தக்காமெடியை ஒவ்வொரு செமஸ்டரும் பார்க்கலாம் …


இப்படி சொல்லப்போனா சொல்லிக்கொண்டே போகலாம் … ஆகையால நிறுத்துறன்… மொத்தத்துல உமாவிண்ட கொள்கைகள் be simple ,ஓசியில கிடைச்சா ஒயிலையும் குடி , கல்வியில எவனுக்கும் உதவு , ஊரையும் உறவையும் மறக்காத ..

எல்லாமே நல்லதுதான்போல கிடக்கு இல்லையா?


நான் இவனைப்பற்றி எழுதக்காரணம் … இவனுடனான தொடர்பு இப்போ முற்றுமே இல்லை.. ஞாபகங்கள் சிறிது சிறிதாக மறைந்து வருகிறது… அவசரமாக பதிந்து வைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கம்தான்.. குறையிருந்தால் சுட்டிக்காட்டவும்… நன்றி …

Bullet


தற்போதைய நிலவரம் - 02

கெமிக்கல் அலி தனது அரிந்த பலகை உடம்பை தேக்கு மரப்பலகையாக்கும் முயற்ச்சியில் கடுமையாக ஈடுபடுவதாக மொறா2003 உளவுத்துறையின் வெளியகப்பிரிவுக்கு தகவல்கள் கிடைத்ததைஅடுத்து பிரித்தானியா சறே மாகாணத்தின் மிட்ச்சம் பிரதேசத்தின் ஜிம் ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடி கமெராச்சூட்டு தாக்குதலில் அலிபாய் வசமாக சிக்கினார்.



100 கிலோ இரும்பு வட்டங்களை தடி ஒன்றில் போட்டு கும்மு கும்மு என்று குதறிய அலி தனது ஜிம் வருகைக்கான காரனங்களைப்பகிர்ந்து கொள்கையில்...

"மச்சான் 3 கிழமையா தான் இங்க வாறன்"

நிருபர் கேள்வி- "எங்களுக்கு ஏன் சொல்லேல்லை?"
பதில்-"உங்களட்ட ஒரு விசயத்த சொன்னா அது பிபிசியில போட்ட மாதிரி,அதான் சொல்லேல்ல"

நிருபர்-இப்ப உங்கள கனாக்காலம் ரீவிக்காண்டி ஒரு வீடியோ எடுக்கப்போறம்.

(அலிபாய் கோபம் கொண்டு "கம்பசில தான் என்ன நாறடிச்சியள்,இங்கயும் நிம்மதியாய் இருக்க விடமாட்டியளோ?" எண்டபடி நிருபரின் கமெராவை பறிக்க முயல்கிறார்.நிருபர் ஜிம் பாடி என்பதால் அரிந்தபலகை பாடியின் முயற்சி கை கூடவில்லை.)


திடீரென கம்பசில செமிஸ்டர் நேரத்தில நோட்ஸ்கட்டோடு நேரே வெறித்த பார்வையோடு நூலகம் நோக்கி போவது போல பளுதூக்கும் பகுதியில் இருந்து ஜிம் பிரிவுக்கு நடந்து செல்கிறார்.நிருபரும் உதவியாளர்களும் பின் தொடர்கின்றனர்.
அங்கே காணப்பட்ட பெரிய ஆனை சைஸ் பந்துகளில் ஒன்றை முதுகுக்கு பின்னால் வைத்தவர்.சட சட என்று இடுப்பை வளைக்கிறார்.சிக்ஸ் பேக் பயிற்ச்சி போல.இப்ப 4 பேக் உருவாகிட்டுதாம்.இன்னும் 2 தான் மிச்சம்.இடையிடையே ஒளித்து வைத்திருந்த புத்தூக்கி பானத்தை அருந்துகிறார்.

நிருபர் கேள்வி-"குடிக்கிறதில கொஞ்சம் தரலாமே?"

அலிபாய்-"இந்தா குடிச்சிட்டு மிச்சத்தை தாங்கோடா என்ன?"

சசி தந்தது "அப்பாஸின்ர பசிக்கு கிடைச்ச சிங்கிள் பிஸ்க்கட் போல" இருக்க அந்த புத்தூக்கிப்பானம் காலி ஆகிவிடுகிறது.வெற்றுப்போத்திலை வாங்கிய சசி கடுப்பாகி அதை வீசி விட்டு நீல கலரில றபர் சீட்டை விரிச்சுப்போட்டு நிலத்தில மல்லாக்கா படுக்கிறார்.

கடுப்பில ஜீன்ஸ்ச கிழிச்ச கதயா வரப்போகுதோ என்ற பயத்தில் நிருபர் பம்ம சசி அதே பழைய சிரித்த முகத்துடன் காலை விரித்து காற்றில் காலாட்டுகிறார்.
"மனசில வலி ஆயிரம் இருக்கு மச்சான்,மனசில இருக்கிற வலிய மறக்கோணும் எண்டா உடம்ப இரும்பாக்குவம் எண்டு தான் வந்திருக்கிறன்,தயவு செய்து இங்கயும் வந்து மனச வலிக்க வைக்காதேயுங்கோடா" எண்டு விட்டு உடை மாற்றும் அறைக்கு போனவர் வெளியே வரேக்க புரூனோ மாதிரி ஒரு மார்க்கமான கெட்டப்பில் வந்தார்.


4 வருசமா கம்பசில குப்பை கொட்டினவங்கள் கூட நிக்கிறாங்கள் எண்டதையே மறந்தவன் போல போனை எடுத்து காதில் வைத்தவர்...
"ஹலோ நான் சசி தான்.என்ன பிரச்சினையோ?.இஞ்சின் கூட எண்ணெய் குடிக்குதோ?,அப்ப வாயால காத்து ஊதி ஓடுற காரா மாத்துவமே?,கனக்க முடியாது பயப்படாதையுங்கோ"
எண்டு தொடர்ந்த படி அவருக்காகவே காத்திருந்த அந்த நவீன சைக்கிளில் தாவி ஏறினார்..
சசியின் போட்டோவ பதிவிடும் போது உருப்பெருப்பித்து பார்த்த நிருபருக்கு அதிர்ச்சி மேல அதிர்ச்சி தந்தது அங்கே தென்பட்ட ஒரு வாசகம்.சசியின் அரிந்த பலகை நெஞ்சிலே,குளிரூட்டிக்கண்ணாடி தொங்க விடப்பட்ட இடத்துக்கு மேலே இருந்த அந்த பித்தளை சங்கிலியில் "தயவு செய்து யாராவது என்னை காதலியுங்கள்" என்றிருந்தது.

பிரித்தானியாவிலும் பக்கா கிராமத்து ஆள் போல வலம் வருகிறது எண்டா அது நம்ம "சின்ரா" தான்.வேலை,வீடு,படிப்பு என அடக்கமான பிள்ளையாக வாழும் "சின்ரா" தனது குடும்பத்தவருக்கு ஆப்பிள் மரம்,பழம் என்பனவற்றை வெப்கமெராவில் காட்டேக்க எங்கள் நிருபரின் கமெராவில் சிக்கினார்.இந்த காலத்திலும் இப்பிடி வீட்டுக்கு அடக்கமாய் அச்சம்,மடம்,பயிர்ப்போட இருக்கிற பிள்ளையளும் இருக்கினம் எண்டதுக்கு இவர் நல்ல உதாரணம்.கொமெண்ட் அடிக்கிறவையும் அடக்கமா அடியுங்க,இல்லாட்டி விளைவுகளுக்கு நான் பொறுப்பாளி இல்லை.


அப்பிள் காட்டிவிட்டு திரும்பேக்க சின்ரா ஸ்கைப்பில கதச்சுக்கொண்டு போன ஓரிரண்டு வார்த்தைகள் நிருபரின் காதில் விழுந்தன.
"என்னதான் அப்பிள் எண்டாலும் நம்ம முற்றத்தில் நிக்கிற ஜம்புக்காய் மாதிரி வருமோ" முடிஞ்சா அத அடுத்த பார்சலில போட்டு விடுங்கோ,மற்றது போன முறை வந்த பார்சலில லட்டுக்கு சீனி பத்தாது,எண்டாலும் நல்ல இருந்திச்சு"

பிள்ளயெண்டா இப்பிடி இருக்கோணும்.சிலதுகள் வீட்டுக்கும் உதவாமல் நாட்டுக்கும் உதவாமல் திரியுதுகள்.இப்பிடியெண்டேக்க உடன நினைவில வாறவர் அரசியல்வாதி கமல்ஸ்.முள்ளுத்தலை,கறுத்தக்கண்ணாடி,லாப் டப் என வலம் வரும் இவர் இப்போது லண்டனில் பிரபலமான பாலர் ஆசிரியர்."இங்கிலீசில பாட்டுப்பாடி,ஆட்டம் போட்டு சின்ன பிள்ளையளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கிற அழகில லண்டன் தாய்க்குலமே சொக்கிப்போய் இருக்கினமாம்.அத கேட்க நாம தான் குடுத்து வைக்கேல.என்ன தான் நடந்தாலும் "லண்டனும் தமிழ்ப்பெண்களும்" என்ற தலைப்பில பெண்ணீயகட்டுரை வெளியிடோணும் எண்ட அவா மட்டும் இன்னும் தணியேல எண்டு நம்பகமான ககவல்கள் தெரிவிக்கின்றன.


டுத்ததா நம்ம ரவுடி.இவர பற்றி எழுதி எழுதியே என்ர கைரேகை தேயப்போகுது.அதிர்ச்சித்தகவல் என்னெண்டா இப்ப ஜிம் அடிக்கிறாராம்."என்ன பாடு பட்டாச்சும் பிரித்தானிய மருமகனாகி பி.ஆர் எடுத்தால்க்காணும்" எண்ட கொள்கைக்கு வீக்கான பாடிக்கொண்டிசன் தடையாக இருக்கப்படாது எண்டசிந்தனைதான் ஆள இந்த அளவுக்கு கொண்டாந்து விட்டிருக்குது எண்டுகினம் அவதானிகள்.ஏதோ வாயால மட்டுமல்ல உடம்பாலயும் ரவுடி போல தெரியட்டும் என நலன் விரும்பிகள் வாழ்த்தினாலும் பழைய அந்த வெடிக்குணம் மட்டும் போகல.

5000 கிலோ குண்டுக்கு பக்கத்த நிண்டு நம்மட 2003 மட்டத்தின் நடமாடும் அணுகுண்டு எடுத்த போட்டோவே காணும் இவன் ஒருகாலும் திருந்தான் எண்டத நிரூபிக்கிறதுக்கு.



இப்பிடி கட்டுப்பெத்தையில் ஒவ்வொரு மார்க்கமா திரிஞ்சவங்கள் இப்ப ஒவ்வொரு மூலையா ஒவ்வொரு மார்க்கமா திரியுறாங்கள்.அதுகள அந்தந்த இடத்தில இருக்கிறவங்கள் பதிவாக்கிப்போட்டா வேலை,சாப்பாடு,உறக்கம் என இயந்திரத்தனத்தோடு வாழும் நம்மில் பலருக்கு சந்தோசமான பொழுதுகளாய் சில நிமிடங்களை நீங்கள் வழங்கியவர்களாவீர்கள்.

.

ஞாபகங்கள் தாலாட்டும் (கோகிலன்)





2004களில் மெலிதாய் உயரமாய் ஒட்டித் திரிந்த அந்த உருவத்தை முதன் முதலில் எங்கள் ஆங்கில வகுப்பறையில் சந்தித்தேன்.



எங்கள் ஆங்கில புலமையின் அருமை தெரியாமல் எங்களை கடைசி வகுப்புக்களில் சேர்த்து விட அங்கே பெரும் பான்மையினர் சிறுபான்மையினராகிப் போன அவலம் நடந்தது.
பக்கத்து வகுப்புகளில் தமிழ் முழக்கம் கேட்க அங்கே எட்டிப் பார்த்த போது கோகிலன் தனக்கே உரிய புன்சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான்



பின்னாளில் பல தருணங்களில் நாங்கள் ஒன்றாகவே பயணப் படப் போகிறோம் என்றறியாமல் நடந்த அந்த முதல் சந்திப்புகளை பற்றியநினைவுத் தடங்கள் இப்போது என்னிடம் இல்லை..வழக்கமான பெயர் ஊர் விசாரிப்புகளாக அவை அமைந்திருக்க கூடும்.



தனது முதல் வருட வதிபிடத்தை எங்கள் மூத்த குடிகளுடன் பகிர்ந்து கொண்ட கொண்ட கோகிலனை பற்றி பலருக்கும் தெரியாது ஆனால் மிகச்சிறந்தமாவட்ட மற்றும் தேசிய பெறு பேறுகளை பெற்றவர் என்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும்.



முதல் வருடத்தில் கோகிலன் முதல் குழுவிலும் நாங்கள் எல்லோரும் இரண்டாம் குழுவிலும் இடம் பெற கோகிலனுடன் அவ்வளவாக பழக்கம் ஏற்பட வில்லை



பொதுவாகவே சிவில் மாணவர்களின் இரண்டாம் வருடம் சோகமாய் தொடங்கும் மற்றவர்களுக்கு முன்னாலேயே வதைக்க தொடக்கி விடும் விரிவுரைகளும் கோர்ஸ் வோர்க்குகள் ஒரு புறமும்எலேக்ட்ரோனிக்யும் கம்ப்யூட்டர்ரையும் தவற விட்ட ஏக்ககங்கள் மறுபுறுமுமாக வாட்டும்.



ஆனால் ஒரே ஒரு சந்தோசம் மட்டும் எங்களுக்கு மிஞ்சியது சிவில் தான் பல்கலையில் அதிக தமிழ் மாணவர்களை கொண்ட பிரிவு கிட்டுவும் ரிஷியும் தன்யாவும் பின்னர் எங்களுடன் சேர்ந்து கொள்ள மொத்தமாக ஐந்து பேரும்(deni, thaksha ,yoga ,aingaa ,atc) மெல்லிசாக பதினாறு பேரும் எல்லாமாக இருபத்தொரு பேர் தேறினோம்.



அப்போதும் கோகிலன் பொதுவாக முதல் குழுவில் இடம்பெற நான் இரண்டாம் குழுவில் இடம் பெற பெரிதாக பழக்கம் ஏற்படவில்லை ஆனாலும் அவன் நம்ம ஜாதிஎன்ற பெரும் பாசம் அவன் மீது இருந்தது சிவில் பிரிவில் எனது கட்டழகு உடலுக்கு சவால் விடுத்தவர்கள் இருவர் தான் ஒருவன் கோகிலன் மற்றவன் எனது பேரன்புக்குரிய சிஷ்யன் ராபி



கடினமான மூன்றாம் வருட பரீட்சை முடிந்து industrial training கான தெரிவு நடந்தது. எப்போதும் மற்றவர்களின் சேலை தலைப்பை பிடித்து தொங்கும் நாங்கள் வழமை போல் எங்கள் முன்னோர்களின் வழியில் straad தெரிவு செய்து தொலைத்தோம் எங்கள் அறுவர் அணியில் கோகிலனும் அடக்கம்




அப்போது நாட்டு நிலைமை சற்று இறுக்கமாக இருந்தது அதனால் எங்கள் அனைவருக்கும் site வாய்ப்பு மறுதலிக்க பட்டது நாங்கள் அறுவரும் அணிவகுத்து டிசைன் ஆபீஸ் சென்றோம்.




அப்போது தான் எங்களுக்கும் எங்கள் பரமகுருவுக்கும் (நந்தன) இடையிலான முதல் சந்திப்பு நடந்தது.நீலகலர் முழுக் கை சட்டை அணிந்திருந்த பரமகுரு வாய் நிறைய புன்சிரிப்புடன் வரவேற்றார் பரமகுருவுக்கு இருக்கும் அபூர்வமான வியாதியை அறியாத நாங்களும் அவரது வரவேற்பை கண்டு அக மகிழ்ந்தோம்.




அடுத்த ஆறு மாதங்களும் எங்கள் வாழ்க்கை பரமகுருவுடன் தான் கழிந்தது பரமகுரு நல்லவர் தான் ஆனால் அவ்வப்போது பரமகுருவுக்கு அரிப்பெடுக்கும் அப்போதெல்லாம் அவருக்கு சொறிவதற்கு யாராவது ஒருவர் தேவை படுவார் சிக்கினால் நோண்டி நுங்கு எடுக்காமல் விட மாட்டார்.



ஒரு சின்ன கோட்டை டிசைன் கடதாசியில் வரைந்து விட்டு எதோ சந்திர மண்டலத்திற்கு போய் விட்டு வந்த பாவனையில் தனது நகங்களை கடித்து கொள்ளும் பரம்குருவின் செய்கைகளை அவரது இருக்கைக்கு நேர் எதிர் இருக்கையில் இருந்து அவதானித்து கொண்டிருக்கும் நான் வழமையாக அவரிடம் சிக்கி கொள்வேன்.



ஒரு மாதத்திற்கு பின்னர் நான் ஒருவாறாக பரம்குருவின் அழுங்கு பிடியில் இருந்து தப்பி Silkot போகும் வரை இந்த வதை தொடர்ந்தது அதன் பின்னர் அந்த பொறுப்பை சத்தீஸ்வரனும் லம்போவும் தங்கள் தலை மேல் சுமந்தனர்.





பரமகுருவிடம் இருந்து சாதுரியமாக கோகிலன் தப்பி கொள்வான்அவரின் இருக்கைக்கு சமாந்தரமான வரிசையில் இருந்து முகத்தை அப்பாவியாக வைத்துக் கொள்வான்.அவர் பார்வை வீச்சை அவனை நோக்கி திருப்பும் போது ஒரு புன்னகை வேறு பூப்பான்



கோகிலன் அங்கிருந்த(straad) சசினி மிஸ்சின் நம்பிக்கைக்குரிய சீடனாக விளங்க்கினான் சசினி மிஸ்சின் எல்லா moment redistribution calculations கோகிலன் தான் செய்வான் அது தவிர அவரது மதிய உணவை கொட்டிலில் இருந்துவாங்கி வரும் பொறுப்பும் கோகிலனை சார்ந்ததே அது தவிர கீர்த்திகவுடம் கையளிக்கப் படும் எல்லா ஸ்டீல் டிசைன் calculationனும் கோகிலனின் தலையிலேயே கட்டப்படும்.கோகிலன் எல்லா வேலைகளையும் சமர்த்தாக செய்து முடிப்பான்.



ஒரு நாள் கொள்ளுபுட்டியில் இருந்த சைட்டில் இரவு static load test செய்ய வேண்டி இருந்தது அதற்காக நாங்கள் இரவு அங்கு தங்க வேண்டி இருந்ததுஅப்போது வெள்ளை வானின் நடமாட்டங்கள் அதிகமாக இருந்த காலம் இரவு பதினொன்று இருக்கும் தீடிரெண்டு கோகிலனை காணவில்லை நானும் கீர்த்திகவும் பதறி போய் தேட கோகிலன் அங்கிருந்த பெரிய கனரக வாகனத்தில் ஏறி அதனுடன் கதை பேசிக் கொண்டிருந்தான்.



நான் அருகில் சென்ற பொது கோகிலனின் கண்கள் சிவந்திருந்தன.நான் என்ன மச்சான் என்ன நடந்தது என்று கேட்ட போது முதலில் எதுவும் சொல்ல மறுத்த கோகிலன் பின்னர் தனது அமைதியை கலைத்தான்.



தனது காதலி கொழும்பு வந்திருப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து வெளி நாடு செல்ல இருப்பதாகவும் சொன்னான் நான் வழமை போல்விடு மச்சி இருக்கிறவனுக்கு ஒன்று இல்லாதவனுக்கு ஆயிரம் என்று சொல்ல உனக்கென்னடா தெரியும் காதலை பற்றி என்று எகிறினான்.



எப்போதாவது காதலித்திருக்கிறாயா என எதிர் கேள்வி கேட்ட கோகிலன் தனது காதலியின் முகத்தை வாழ் நாள் முழுவதும் பார்த்து கொண்டே இருக்கலாம்என்றும் தான் அவளை மிகவும் நேசித்ததாகவும் சொன்னான்.



உயர் தரம் முடித்த பின்னர் ஒரு முறை பஸ்ஸில் ஏறிய போது அவள் ஒரு புன்னகையை வீசி விட்டு சென்றதாகவும் அதன் பின்னர் அவளை பல தடவைகள் பின் தொடர்ந்ததாகவும் ஆனால் பல்கலை தொடங்கிய பின்னர் தான் இங்கே வந்து விட்டதாகவும் அதற்கிடையில் எல்லாம் நடந்து முடிந்து விட்டதாகவும் சொன்னான்.



பிறிதொரு முறை அவனுடன் கதைத்த போது தனது முன்னாள் காதலிக்கு குழந்தை கிடைத்திருப்பதாக சொன்னான் என்ன பெயராம் என்று கேள்வி கேக்க நினைத்த நான் ஏனோ கேட்க வில்லை அவனும் அதை சொல்லவில்லை.



முதல் வருடத்தில் மோசமான பெறுபேற்றை பெற்ற எங்களுக்கு மூன்றாம் வருட இறுதியில் எங்கள் சிவில் பிரிவு தரும் மிக மோசமான தண்டனை தான் surveying camp.வாழும் போதே நரக வாழ்க்கையை அனுவிக்கும் மோசமான நாட்கள் அவை



அதிகாலை இரண்டு மணிக்கு நித்திரைக்கு போய் விட்டு மீண்டும் ஐந்தரை மணிக்கு எழும்பி குளித்து விட்டு காடளக்க புறப்பட்டு விடுவோம் பலாக் காய்களுடனும் கட்டை சம்பளுடனும் எங்களுக்கு எப்போதும் இணக்கம் இருந்ததில்லை எதோ உயிர் தங்க சாப்பிடு விட்டு காடளக்க புறப்படுவோம் கொளுத்து வெயிலில் எங்களுக்கு ஒதுக்க பட்ட வேலையை நிறைவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் கல்லும் முள்ளும் குத்த குத்த அளவிடை எடுப்போம்.




எல்லோரும் வெறுத்து போயிருந்தார்கள் எல்லோரும் தங்கள் குழுவுக்கு தான் அதிக வேலை என வாதம் செய்வார்கள்



நானும் கோகிலனும் தான் எங்கள் குழுவின் தமிழ் உறுப்பினர்கள் நாங்கள் வேலை எல்லாம் முடித்த பின்னர் குளித்து பவுடர் எல்லாம் போட்டு விட்டு நம்மவர்களுக்கு முன்னால் போய் நின்று கொண்டு எங்கள் குழுவுக்கு பெரிதாய் வேலை இல்லை என்றும் நாங்கள் மர நிழலில் நின்று இளைப்பாறி விட்டு வந்ததாய் கதை விடுவோம் அவர்களும் அதை கேட்டு கடுப்பாவர்கள்



காடளந்து விட்டு வந்தால் எட்டு மணிக்கு வரைதல் தொடங்கி விடும் எங்கள் குழுவின் தலைவர் எங்கள்ளுக்கும் (எனக்கும் கோகிலனுக்கும்) சில வேலை தருவதற்காய் எங்களிடம் வருவார் தனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் எங்களுக்கு விளங்கப் படுத்துவார் நாங்கள் விளங்கிளானும் விளங்க வில்லை எனத் தலையாட்டுவோம்.




அவரும் மறு படியும் விளங்க படுத்துவார் நாங்களும் விடாமல் விளங்க வில்லை என்று தலை அசைப்போம் இறுதியில் தனக்கு வந்து வாய்த்தவர்கள் வேதாளங்கள் என்ற உண்மை விளங்கிய பின்னர் தனது முயட்சியை கைவிட்டு விடுவார்.



சில அளவிடுகள் குடி மனைகளையும் தோட்டங்களையும் ஊடறுத்து எடுக்க வேண்டி இருந்தது நாங்கள் கால்வாய் வெட்டுவதக்காய் அளக்கிறோம் என்று காலம் காலமாக சொன்ன பொய்களால் ஊரவர்கள் வெறுத்து போய் இருந்தார்கள்.



ஒரு மரவள்ளித தோட்டத்தை ஊடறுத்து அளவிடு எடுக்க இருந்தது கோகிலன் மர வள்ளி கொப்புகள்அளவூட்டை மறைத்ததால் அவற்றை முறித்தான் அப்போது அங்கிருந்த தோட்டக்க் காரன் சிங்களத்தில் பேச அது புரியாத கோகிலன் தனது வழமையான புன்சிரிப்பை தவிழ விட்டு விட்டு மேலும் சில கொப்புகளை முறிக்க தோட்டக் காரன் கடுப்பாகி அடிக்க போக அங்கிருந்த சகோதர இன மாணவன் நிலைமையை தோட்டக் காரனுக்கு விளக்கி தடுத்து நிறுத்தினான்.



கோகிலனுக்கு எங்கள் பல்கலை அருகில் இருக்கும் சைனீஸ் கடை fried rice ரொம்ப பிடிக்கும் எனக்கும் அது ரொம்ப பிடிக்கும் என்பதால் அடிக்கடி நாங்கள் கூட்டணி அமைத்து கொள்வோம் தினமும் chicken சாப்பிடும் எங்கள் இருவரினதும் உடற் கட்டமைப்பை பார்த்து கடை முதலாளி எங்களை தனது கடையின் விளம்பர மாடல்களாக நடிக்கும் படி கேட்டும் நாங்கள் அதற்கு மறுத்து விட்டோம்.



இது கோகிலனின் பல்கலை வாழ்வின் முழுமையான பதிவல்ல. அவன் என்னோடு பயணித்த சில காலங்களின் தடங்கள் மட்டுமே இந்த பதிவு முழுமை பெற அவனை பற்றிய உங்களினது பதிவுகளும் அவசியம்.



இன்னும் ஓரிரு வருடங்களில் தனி நூலக உருவெடுக்க இருக்கும் இந்த வலைத்தளத்தின் பதிவுகளுக்கு நீங்களும் உரமிடுங்கள்.



காலப் பெரு வெள்ளத்தில் கரைந்து போகாமல் இருக்கும் உங்கள் எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொள்வதன் மூலம் எங்கள் பல்கலையின் வாழ்வுகளை மீட்டி பார்க்கும் இந்த இனிய முயற்சிக்கு ஆதரவு தாருங்கள்.




இயன்றவரை எல்லோரையும் பற்றிய பதிவுகளுக்கு நாங்கள் முயற்சிப்போம்



மறு படியும் ராபியை பற்றிய பதிவுடன் உங்களை சந்திப்பேன்



வாழ்க்கையின் எந்த தருணங்களும் மீள வரா. அந்த தருணங்களை அசை போடுகின்ற நொடிகளில் தான் நாங்கள் தொலைத்து விட்ட அந்த நொடிகளின் அருமை தெரிகிறது.



-SP





.




வேறு பெயர்கள்-டேஞ்சர் சரி,விஞ்ஞானி,அலிபாய்,கெமிக்கல் அலி

கொக்குவில் எனும் ஊரிலே ஒரு தம்பதியினர் வாழ்ந்து வந்தனர்.மிக்க சிவ பக்தி கொண்ட அவர்கள் தவறாது கோவில் திருவிழாக்களில் கலந்து கொண்டு வந்தனர்.ஆனால் அவர்களின் மனைதையும் உறவுகளின் மனதையும் அரித்து வந்த ஒரு விடயம் இருந்தது.அதாகப்பட்டது அவர்களின் உறவுகளில் யாருக்கும் ஆண்வாரிசு கிடையாது என்பது பலத்த கவலையை தோற்று வித்திருந்தது.இதனால் மனமுடைந்த உறவினர்கள்,தம்பதியினர் எல்லோரும் ஆண்டவனிடம் ஆண்மகவு வேண்டி 333 நாட்கள் தொடர்ந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.ஆண்டவனும் மனமிரங்கி திருவருள் பாலித்தார்.1983ம் ஆண்டு ஜீன் மாதம் ஊரில்லாம் உறங்கிக்கொண்டிருந்த வேளை கொக்குவிலை பகலாக்கியது போல ஒரு ஒளி வானில் தெரிந்தது.




ஆமிக்காரன் தான் பரா லைட் அடிச்சிட்டு செல் அடிக்கப்போறான் என்று ஊரவர்கள் பதுங்கு குழிக்குள் முடங்கிக்கொண்டனர்.ஆனால் அந்த ஒளி அவர்கள் வீட்டு முற்றத்தில் இறங்கியது.ஊரார் அச்சத்தை விடுத்து அருகே வந்த போது அங்கே அழகா ஆறு குழந்தைகள் காணப்பட்டன.அதில் ஒன்று கட்டுக்கட்டாக புத்தகங்களோடும்,இன்னொன்று மிருதங்கத்தோடும்,இன்னொன்று 5 ரூபாய் குத்திகளோடும்,இன்னொன்று லாண்ட் மாஸ்ரர் பெல்ட்டோடும்,இன்னொன்று இரசாயன குவளைகளோடும்,கடைசிக்குழந்தை ரின் மீனோடும் காணப்பட்டன.ஆசையோடு ஆறு குழந்தைகளையும் அணைத்து எடுத்து உச்சி மோர்ந்த போது ஆறு குழந்தைகளின் உடல்களும் ஒட்டி அரிந்தபலகை போன்ற ஒரு உடம்பு தோன்றிவிட்டது.அவர்கள் அக்குழந்தைக்கு சசிவர்ணன் என்ற பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.



தமிழகராதி அர்த்தங்கள்-சசி - இந்துப்பு(வெடியுப்பு) : கருப்பூரம் : சந்திரன் : பச்சைக் கருப்பூரம் : கடல் : மழை.

அலிகொண்ட அலிபாய்



சசி என்றால் கற்ப்பூரம்.பெயருக்கேற்ர கற்பூரம் போல உடனே பத்திக்கிற இயல்போடும்,வீரத்தோடும் வளர்ந்து வந்த சசிவர்ணன் குத்தில் மட்டுமல்ல,யானை ஏற்றம் ,குதிரை ஏற்றம் முதலியவற்ரையும் கற்று பெரு வீரனாக திகழ்ந்தான்.வன்னி வள நாட்டின் முத்தையன் கட்டுக்குளத்தில் காத்தாடி பூட்டி ஆட்டி கறன்ட் எடுத்து இருண்டா காடுகளை எல்லாம் பகலாக்கினான்.சும்மா திண்டு கொழுத்திருந்த மீன்களை எல்லாம் ரின்னில் அடைத்து ரின்மீன் செய்து பட்டினி போக்கினான்.பாமரமக்களெல்லாம் வண்டியை அமத்த பெல்ட் பாவிக்க சசியோ இயந்திரங்களில் பெல்ட்டை போட்டு ஓட்டி தொழில்நுட்பப் புரட்சி செய்தான்.கன்னியர் உள்ளம் கவர் கள்வனாக திகழ்ந்த இவனை பார்த்த இளம் பெண்கள் எல்லோரும் இவனென்ன இந்திரனா?/சந்திரனா என எண்ணி உடல் சோர்ந்ததாக பழைய வன்னிக்கவிஞர்களின் ஏட்டுச்சுவடிகளில் சசிபற்றி குறிப்புக்கள் காணப்படுகின்றன.ஆனாலும் எல்லா புகழும் வன்னியில் ஒரு சிறு பிரதேசத்துக்குள்ளேயே குறுக்கிப்போயிருந்தன.அதாவது குடத்திலிட்ட விளக்கு போல இருந்த சசியின் பிரகாசம் வெளியே தெரிந்தது கட்டுப்பெத்தை என்ற மேட்டில் ஏறியபிறகுதான்.ஆனால் முக்கால்க்கழுசானும் ,ஜெல் வைத்து கிளறி விட்டப்பட்ட முள்ளுத்தலையும் கொண்ட கலம்பு டமில் பெடியளலேயே அடைய முடியாத பிரபலத்தை 3 பிளீட்ஸ் வைச்ச "காதலன் ஜீன்ஸ்",நெற்றி நிறைய திருநீறு பூச்சு,பாட்டா செருப்பு என வலம் வந்த சசியால் எப்படி பெற முடிந்தது???.இதற்கு சசி பாவித்தது தனது பிரச்சாரத்திறனை.இவர் ஜெயசுதன்,தீபரூபன்,அச்சுதன்,ஜெனா,வசந்தன் மாதிரி ஊரைக்கூட்டும் சரவெடியன் அல்ல,அலுங்காமல் குலுங்காமல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல காலுக்கடியில் கொளுத்திப்போட்டு,பாதிக்கப்பட்டவன் வெடி என உணர முதலே இடத்தை காலி செய்யும் அசாத்திய திறமைசாலி.வன்னியில் இருந்து புறப்பட்ட இந்த புயல் கட்டுப்பெத்தையில் 4 வருசம் மையங்கொண்டு விளைவித்த சேதாரங்கள் சொல்லிஅடங்காதவை.

கட்டுப்பெத்தையில் கட்டுக்கடங்கா காளை




மொறட்டுவயில் கத்தரிக்கோல்.,கத்தி,நக வெட்டி போன்ற பல ஆயுதங்களை உள்ளடக்கிய அறைச்சாவிக்கொத்தை வெளியே தெரியும் படி விரலில் கொழுவிக்கொண்டு வலம் வந்த சசி "நான் படிக்க வரேல்லை ......... வேலைத்திட்டத்துக்கு தான் வந்தனான்" என்று பயப்படாம பரவலா கொழுத்திப்போட்ட வெடிதான் எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைத்தது.அடுத்த தாக ஹெல்த் சென்ரரில் டாக்டருக்கு சேர்ட்டை கழட்டி பாடி காட்டிவிட்டு திரும்பிய சேகர நோக்கி "என்ன இது உடம்பாடா இது?,எதோ அரிஞ்ச பலகை மாதிரி இருக்கு? நான் இப்ப கழட்டுவன் சேர்ட்ட,நீ நிண்டு பார்த்துட்டு போ" எண்டு சசி சொல்ல சேகர் தன்ர பாடிய இப்பிடி கேவலப்படுத்திட்டானே எண்ட கடுப்பில மேட்டர எல்லாருக்கும் போட "எவனோ சசியாம்? யார்ரா அவன்?" எண்டு தெரியாதவர்கள கேட்க வைத்தது.



ஒரு நாள் டெக்ஸ்டைல் ரிப்பார்ட்மெண்ட் விரிவுரையில எழுந்தமானமா கிறுக்கிக்கொண்டு போன லெக்சரர் ரெஸ்ட்ரியூப் ஒண்டிண்ட படத்த வரைய அந்தக் கிறுக்கல்கள ஒன்று விடாம பிரதிபண்ணிக்கொண்டிருந்த சசி உடனே பென்சில எடுத்து 2 சமாந்தரக்கோடுகளை வரைந்து,பரிசோதனைக்குழாயின் வளைந்த அடிப்பக்கம் வரைய வெண்டு வட்டவாரிய எடுக்க பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கெல்லாம் வயிற்றில புளிய கரைச்ச மாதிரி இருந்தது.நல்ல ஜிபிஏ எடுத்தா கெமிக்கல் டிப்பார்ட்ட்மெண்டுக்கு ஏத்தி வுடுவாங்களாம் எண்டு யாரோ போட்ட வெடிய நம்பி லிfகோ லிக்சனரி, மாக்கர் பேனைகள்,மார்க் பண்ணி கலரா மாறின நோட்ஸூகள்,என டேஞ்சரில் சசி போட்ட "காட்டுக்குத்து"(பெயருக்கான காப்புரிமை சிறிஸ்காந்திடம் இருந்து பெறப்பட்டது) டேஞ்சர் சசி,கெமிக்கல் சசி என்ற பெயர்களை சசிக்கு வாங்கித்தந்ததே தவிர கெமிக்கல் கனவு சாத்தியப்படவில்லை.சற்றும் மனம் தளராத சசி "நமக்கு கெமிக்கல் டிப்பார்ட் மெண்ட் கிடைக்காட்டி என்ன நமக்கு வரப்போறவள் நல்ல டிப்பார்ட் மெண்டா இருந்தா காணும்" எண்டு போட்ட பிளான் மொறட்டுவ வராலாற்றில் பொன் எழுத்துக்களால் பதியப்பட வேண்டியது.ஆனால் சசியின் தெரிவுதான் பிசகி விட்டது.எல்லோர் மனதிலும் எழுந்த கேள்விகள் இவைகள் தான்...............
சசிக்கு ஏன் இந்த கோணல்ப்புத்தி?/சசிக்கு கண்பார்வை குறைபாடா?/சசி பெண்களையே பார்த்ததில்லையா?/சசிக்கு விசரா?.......
இந்த நிலையில் இவற்றுக்கெல்லாம் பதில் தேட "பிளாஸ் பேக்"கில 2 ஆண்டுகள் பின்னோக்கி போக வேண்டியது அவசியமாகிறது.

வன்னிவளநாடும் கைலாயவன்னியனும்.



நிரம்பியோடும் நீர்நிலைகள்,வயல்களில் நிறைந்து பாரந்தாங்காமல் வளைந்து நிற்கின்ற நெற்கதிர்கள் , கொழுத்த ஜப்பான்,திலாப்பியா மீனினங்கள் நிறைந்த பாசன வாய்க்கால்களும் அவற்றை உண்ணும் விருப்புடன் கூடிய பறவைகள் கூட்டங்கள்,மதகு மேல்குந்தி கூட்டம் போடும் வயசுப்பெடியங்கள்,காற்றில் பறக்கவிடாமல் ஆடைகளை அழுத்திப்பிடித்தபடி சைக்கிளோடும் கன்னிப்பெண்கள்,ரொட்டிக்கடை வாசலில் பத்திரிகையோடு கூட்டம் போடும் பெரிசுகள்,பாக்குரலை கடந்த காலத்தை அசை போட்டபடி இடித்துக்கொண்டிருக்கும் கிழவிகள் என விசுவமடுவின் சகல அங்கங்களும் அறிந்தவன் சசி."பிள்ளயெண்டா அவன மாதிரி இருக்கோணும்" எண்டு மாற்றாக்கள சொல்ல வச்சது சசி உடையார்கட்டில் டிசைன் பண்னின ரின் மீன் தொழிற்சாலை.மண்ணெண்னை ரம் தகரத்தில் ரின் செய்து யப்பான் மீனுகள பிடிச்சு துண்ணு துண்டா வெட்டி கடைசியா "யூ" வளைவில போய் டின் அலுங்காம குலுங்காம விழுகிற மாதிரி செய்த இயந்திரம் நியூட்டனின் கண்டு பிடிப்புக்களுக்கு இணையானது ஆகும்.அதுக்கு பிறகு முத்தையன் கட்டுகுளக்கட்டால தன்ர பாட்டில பாய்ஞ்சுகொண்டிருந்த தண்ணிக்கு குறுக்கால காத்தாடி வச்சு கறண்ட் எடுத்து பல சிறார்களின் கல்விக்கு ஒளி ஏற்றியமை சசியின் மனிதாபிமானத்துக்கு எடுத்துக்கு காட்டாகும்.இளம் பிராயத்தின் பெரும் பகுதியை சித்தப்பாவின் பட்டறையில் கழித்த இவனுக்கு இயந்திரத்தின் பெல்ட்டோடு வேலை செய்வது மிகப்பிடித்தமானதாக இருந்தது.அத்தோடு மயூரன் அண்ணா பண்டாரவன்னியன் நாடகத்துக்கு வாள் பிடிக்கும் வேளைகளில் எல்லாம் கைலாய வன்னியனாக வால் பிடிக்கும் வேடம் சசிக்கே வந்துசேர நடிப்பில் பின்னி எடுக்கும் தருணங்களும் சேர்ந்து கொள்ளும்.

மேளத்தில் துயிலும் அழகு கண்டு மோகம் கொண்ட மோகினி.



வனப்பு மிக்க வாலிபன் சசி தன் ஓய்வு நேரத்தில் மிருதங்கம் பயின்று வித்துவானாக வரும் வரை எல்லாம் நன்றாகத்தானிருந்தது.சசியின் துடிப்பைக்கண்ட பரத நாட்டிய ரீச்சர் தனது வகுப்புக்கு மிருதங்கம் வாசிக்கக்கூப்பிட்டு விபரீதத்துக்கு வித்திட்டார்.கன்னிகள் ஆட கண்ணன் போல சசி கொட்டில் நடுவில் இருந்து நல்ல பிள்ளையாட்டம் மிருதங்கம் வாசிச்சு விட்டு தன்ர பாட்டில திரும்பி விடுவான்.இந்த அடக்கம்,அழகு,அறிவு,திறமை எல்லாம் அதில் ஒருத்திக்கு பிடித்துப்போயிற்று.ஒரு நாள் வகுப்புக்கு மேளத்தோடு வேளைக்கே வந்த சசி ஒருத்தரும் வரக்காணாது சற்றே மிருதங்கத்தை தலையணையாக்கி கண்னயர தலை மாட்டில் சற்று நேரத்தில் "சல்" "சல்" என்று கொலுசுச்சத்தம்.விழித்துப்பார்த்தால் அவள்...புன்முறுவல் பூத்தபடி தரையை லேசாக தட்டியபடி இருந்தாள்.




கண்டதும் காதல்




இயந்திரம்,பெல்ட்,ரின் மீன்,கறண்ட் என வறண்டு போன சசியின் மனதுக்குள் குளிர்மையான அருவி போல அவள் புகுந்தாள்.தூக்கமில்லா இரவுகள்,கண்ணாடி முன் போன பகல்ப்பொழுதுகள் என வளர்ந்த அந்தக்காதல்ச்செடி கனகாலம் நீடிக்காது நாயகியின் வெளிநாட்டுப்பயணத்தோடு கருகிப்போனது.ஒருவருடம் தாடி வளர்த்து வாணரம் ஆயிரம் குடுக்கார சூரியா போல திரிஞ்ச சசி போனால் போகட்டும் போடா எண்டு பாடிவிட்டு கடைசி 3 மாசம் படிச்சு வந்ததுதான் புடவைபொறியியல்ப்பீடம்,இல்லாட்டி இருக்கவேண்டிய இடமே வேற...இந்த பிளாஸ் பேக் ஒரு இரவு நேர ஏ_9 வீதிப்பயணத்தில் முதலாவது செமிஸ்டர் நேரத்தில் எனக்கு சசி சொன்னது.முதல் சொன்ன லவ் பெயிலியர் கதையிலும் கடைசி வரியையே சசி முதன்மையால் எனக்கு சொல்ல வந்ததாய்ப்பட்டது எனக்கு."சரி இந்த பிளாஸ் பேக்குக்கும் கம்பஸ் கதைக்கு என்ன தொடர்பு என்ன?" என நீங்கள் முணுமுணுப்பதுக்கு சசி அப்போ சொன்னதை அப்படியே இங்கே எழுதிவிடுகிறேன்.


"இவள நான் பார்த்தது என்னத்துக்கெண்டா,அந்த பீலிங்ஸ்ச மறக்கோணும் எண்டதுக்காண்டி...
அதோட அவளும் இவள மாதிரி சரியான கட்டைதான்.வடிவு எண்டதில அவளோட இவள ஒப்பிடேலாது.ஆனா கொஞ்ச சாயல் இருக்குத்தான்.இனிமேலாவது சும்மா என்ர லவ்வ கொச்சைப்படுத்தாம இரு என்ன?..."


கண்ணியும் சிக்காத கன்னியும்(?????)

இதற்க்குப்பிறகு சசி அந்த தேவதையை(????) மடக்க போட்ட பிளானுகள் ஏராளம்.5ரூபா குத்தியை போட்டு பல்கலை வளாக பொது தொலைபேசியால் மிஸ்ட்கால் அடித்து மறுமுனையில் அழுத்தமுதல் றிசீவரை வைத்து மீள 5 ரூபாயை எடுத்து அடுத்த நாள் மிஸ்ட்கோலுக்கு பக்குவப்படுத்துவது,போனுக்கோ/ஐபொட்டுக்கோ தொடுக்கப்படாத வெறு இயர் போனை காதில் மாட்டிக்கொண்டு திரிவது,பிரபுதேவா ஜீன்ஸிலிருந்து டெனிமுக்கு மாறினது,தமிழோடான ஆங்கில வார்த்தைக்கலப்பை கூட்டியது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.எல்லாத்தையும் எழுதப்போனால் புளொக் ஸ்ரக் ஆகிவிடும்.சசி எத்தனை பிளானை போட்டாலும் அவை எல்லாம் கட்சியா வடிவேலு தாலி கட்ட வெளிக்கிட்ட கதயாத்தான் போச்சு.(அந்த பிகர் ரீமா போல இருக்கும் என நினைப்பவர்கள் உங்கள் செருப்பை கழட்டி உங்கள் மூஞ்சியில் 3 முறை அடித்துக்கொள்ளவும்.)




பிணம் கூட சிரிக்கும் இவன் கதை கேட்டு.


சசி பற்றி ஒரு பதிவில் எழுதுவது என்பது சமுத்திரத்தை இறைத்து வற்ற வைப்பது போலவாகும்.சசி போட்ட வெடிகளில் சில எம் காதுகளில் கேட்டன.ஆனால் கேட்க்காமல் போன வெடிகள் தான் பல.நீங்கள் மனது வைத்தால் சசி தனிப்பட்ட முறையில் உங்களுக்கு கொளுத்திப்போட்ட வெடிகளை ஒவ்வொருவரும் இங்கே பதிவாக்க முடியும்.அவை ஆவணப்படுத்துவது அவசியமாகும்.ஏனேன்றால் சசியின் வெடிகள் சில நூற்றாண்டுகள் தாண்டிப்பேசப்படவேண்டியவை ஆகும்.
சசியின் நடிப்பாற்றலையும் அழகையும் கண்டு இயக்குனர் பவான் அவர்கள் "கபோதி" திரைப்படத்தில் நாயகனாக்கி இருந்தார்.பெண்வேடத்தில் வந்து கலக்கிய சசி உண்மையில் அந்த "தேவதை"யை விட ஆயிரம் மடங்கு அழகாக இருந்தார்.பவான் "கபோதி" பட அனுபவங்களை,காணொளியை இங்கே பதிவிடுவார் என எதிர்பார்க்கிறேன்.கபோதி பட திறமை கண்டு சசியிடம் கஸ்டப்பட்டு கால்சீட் எடுத்து காணொளிபப்படுத்தி முற்றுப்பெற வாய்ப்புக்கூடாத அவதாரம் படத்துக்கான அந்த காட்சியை இங்கே இணைத்துள்ளேன்.