பலாலி விமானத்தளத்தில் ஓடிக்கொண்டிருந்த அந்த அன்ரனோவ் விமானம் அரைப்பனையளவு உயரத்துக்கு எழும்பிவிட்டிருந்த போது தான் கைப்பிள்ளையின் 3310 இயந்திரங்களின் கூச்சலையும் மீறி பாடதொடங்கியது.அவசரமா எடுத்து காதில் பொருத்தினால் எதிர் முனையில் அரியாலை அப்பாஸ் கிசு கிசுத்தான்." மச்சான் 10 வருசமா தேடிக்கொண்டிருந்த அலிபாய் கிடைச்சுட்டான்டா!"....என்ன செய்யலாம் என்றூ சிறிது நேரம் பரபரத்த மூளையில் பொறி தட்டியது.அருகே இருந்து உதயன் பேப்பர் படிச்சுக்கொண்டிருந்த தாத்தா அயர்ந்த நேரம் ஒரு பேப்பரை களவா உருவி அழகா மடிச்சு ஒருத்தரும் காணாத நேரம் பேப்பர் வெடியாக்கி அடிக்க ... "இந்த விமானம் பயணிகள் பகுதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு காரணமாக அவசரகால தரையிறக்கத்தை மேற்கொள்ள திரும்புகிறது" விமானி அறிவித்தார்.சனம் அல்லோலகல்லோலப்பட தொடங்கீட்டுதுகள்.பின்சீட்டில் இருந்து NGO இல வேலை செய்கிற சீனப்பெண்ணுடன் கடலை போட்டுக்கொண்டிருந்த தினேஸ் உள்ளுக்குள்ளேயே பிரதட்டை அடிக்க தொடங்கி விட்டிருந்தான். அன்ரனோவ் தரை தட்டி ஓய்ஞ்சவுடன கண்ண திறந்தா இரண்டு காலுக்கும் இடையால தலையை நீட்டியபடி ஒரு அல்சேசன் முறைச்சுக்கொண்டு நிண்டது.சடார் எண்டு அந்த மஞ்சள் ஐடிய உருவி நாயோடு நிண்ட ஆமி சேரிடம் "சேர் மம மொறட்டுவ விஸ்வ வித்தியாலா பறண ஸ்டுடன் எக்கக்" எண்டதும் வெளியே போக அனுமதி கிடைத்தது.படியால் இறங்கிக்கொண்டிருந்த போது " மம too பறண மொறா ஸ்டூடன்ற் எக்கக்.பட் ஐடி கார்ட் நா" எண்டு தினேஸ் சொல்ல "ஒயா சைனீஸ் கட்டிய வகே,பொறு கியன்ன எப்பா,கரியா" எண்டு ஆமிக்காறன் கத்துவது கேட்டது.
அரியாலைக்கு ஆட்டோ பிடிச்சு வர அப்பாஸ் வண்டி மேலே பிள்ளையை இருத்தியபடி கோயிலால் வந்துகொண்டிருந்தான்.இன்னும் ஒரு வயதை தாண்டியிராத அவனது குழந்தை புளுக்கொடியலை கடித்து மொறுக்கு மொறுக்கு என்று தின்பதை பார்க்க ஆச்சரியமாய் இருந்தது."டேய்! ஒயா பேபி உன்னை மிஞ்சும் போல" என்று கலாய்க்க தொடங்கினேன். "எனக்கு ஓபி மெசெஜ் போட்டிருக்கிறான்.நாளைக்கு இரவு 12 மணிக்கு கொட கன்ரீனுக்கு கெமிக்கல் அலி வாறானாம்" என்று சொல்லி விட்டு அடுத்த துண்டு புளுக்கொடியலை வாய்க்குள் போட்டுக்கொண்டான்.இனி அது அரைத்து முடியுமட்டும் பேசமாட்டான்.
தெளிவான வானத்தில் நட்சத்திரங்கள் கண்சிமிட்ட தொடங்கியிருந்த நேரத்தில் அப்பாசுக்கு யாழ்ப்பாண மாதர்சங்கம் பெண்ணுரிமைகள் பற்றி பேசியதற்காக அன்பளிப்பாக கொடுத்து இருந்த "றேன்ஞ் ரோவர்" வாகனம் A-9 வீதியில் ஓட தொடங்கி விட்டிருந்தது.எனது சிந்தனைகள் பின்நோக்கி ஓடத்தொடங்கின.கெமிக்கல் அலி.எங்களுக்கெல்லாம் விஞ்ஞானத்தின் வரைவிலக்கணத்தை காட்டிய புலி.ராகிங் நேரத்தில் எல்லோரும் பயந்து நடுங்கித்திரிய " நான் இங்க வந்தது படிக்க இல்லை.அமைப்பு வேலைத்திட்டம் ஒன்றுக்காக" என்று அறிக்கை விட்ட சிங்கம்.இடம் வலமாக இரண்டு இரண்டு மடிப்பு வைத்த தொள தொள நீள கால்சட்டை போட்ட வில்லேஜ் விஞ்ஞானி.சிறு வயதில் இருந்து பெல்ட்டோடு வேலை செய்தவன்.முத்தையன் கட்டு குளம் நிரம்பி பாய அதில் சக்கரம் பூட்டி கறண்ட் எடுத்தவன்.வன்னிக்குளங்கள் எல்லாம் பெருகி நிரம்பிய ஜப்பான் மீன்களை எல்லாம் பிடித்து ரின்களில் அடைத்து ரின் மீனாக்கியவன்.மொறட்டுவை முடிந்து இங்கிலாந்துக்கு உயர் படிப்புக்கு போன இடத்தில் கோழி பொரிக்கும் கடையில் புது யுக்திகளை புகுத்தியவன்.பின்னர் பெற்றோல் செட்டில் எரிபொருளோடு வீம்பா விளையாடியவன்.திடீரெண்டு கலியாணம் செய்து கொண்டான்.அதுக்கு பிறகு கொஞ்ச நாளில தொடர்பே இல்லை.2012 ஆண்டு இறுதியில் கெமிக்கல் அலியை கண்டவ பெடியள் அவன் தங்களோடு ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடியதாகவும் தமிழில் "எப்படி மச்சான் இருக்கிறாய்?" எண்டு கேட்ட போது "வாட்?" என்று திருப்பி கேட்டதாகவும் கடுப்போடு சொன்னார்கள்.பிறகு நாங்கள் ஊருக்கு செட்டில் ஆக திரும்பி வந்து 10 வருடங்கள் ஓடிவிட்டிருந்தன.
விடிகாலை கொழும்பை அடைந்து லெட்ஜ்ஜில் தூங்கிவிட்டு கட்டுப்பெத்தைக்கு பின்னேரமாக போனோம்.அப்பாஸ் எல றொட்டி,மாலு பணிஸ்,பருப்பு,பாண் என கொட கன்ரீன் மூடும் வரை சாப்பிட்டுக்கொண்டே இருந்தான்.நேரம் ஆக தூக்கம் கண்ணை கட்டி சற்றே அயர்ந்த நேரத்தில்தான் அந்த பேய் சிரிப்பு கேட்டது.திடுக்கிட்டு எழும்பி பார்க்க ஜெயசுதன் வெறித்த பார்வையோடு குத்திட்ட தலை மயிரோடு சிரித்துக்கொண்டிருந்தான். "என்னோட சம்பளம் எவ்வளவு எண்டு தெரியுமா? "யூ நோ மை சலறி?" "சீபாய், அலாமா,யூ No டை றெடியா?" "டாப் PM இன் சிங்கப்பூர்,டாப் ஏனர் ஒப் வவுனியா தெரியுமா?" சம்பந்தம் இல்லாமல் புலம்பிக்கொண்டிருந்தவனின் சட்டையை பிடிச்சு உலுப்ப நான் நிஜ உலகத்துக்கு வந்தான். "டேய்! எங்கடா கெமிக்கல் அலி,அவனுக்காக நான் அன்ரனோவை இறக்கிட்டு ஓடி வாறன்,இவன் புழுக்கொடியலை விட்டிட்டு வந்திருக்கிறான்.சொல்லுடா?,எங்கடா எங்களோட விஞ்ஞானி?" "மச்சான்! கெமிக்கல் அலி வந்திருக்கிறான் எண்டு சொன்னாத்தான் நீங்கள் அவன போட்டுத்தாக்கலாம் எண்டு விழுந்தடிச்சு ஓடி வருவியள் எண்டு இந்த புறஜெக்ட் மனேச்சருக்கு தெரியாதா?.அவன் எங்க இருக்கிறான் எண்டே எனக்கு தெரியாது.நான் உங்களை வரச்சொன்னது ஒரு உதவி கேட்கிறதுக்காக.நீங்கள் எல்லாம் அப்பா ஆகிட்டியள்.எனக்கு இன்னும் கலியாணம் கூட ஆகலை.சம்பள தொகையை அடிக்கடி சொல்லி திரிஞ்சாலும் 40 வயசில ஒருத்தியும் கண்டுகிறாள் இல்லை.வீட்டுக்காறர் " பொறுத்தது தான் பொறுத்தாய் இன்னும் 5 வருசம் பொறுக்க மாட்டியா" எண்டு சொல்லிட்டுதுகள்."ஹெல்ப் பண்ணுங்கோடா! நானும் வாழணும்".கதறி அழத்தொடங்கிய ஓபியை சமாதானப்படுத்துவதற்குள் பொழுது விடிய தொடங்கிவிட்டது.
கட்டுப்பெத்தை வளாகம் வழமையை விட பரபரப்பாக தொடங்கியது.சில மாணவர்கள் வரவேற்பு தோரணங்களை கட்ட ஆரம்பித்தார்கள்.இன்னும் சிலர் பெரிய அளவிலான பதாதைகளை கட்ட தொடங்கினார்கள்.டாக்டர் ஜெயவர்த்தன,டொக்டர் நிலாந்தி,டாக்டர் பாஸ்கரன் போண்ற பெரும் தலைகள் கூட அந்தரப்பட்டு ஓடித்திரிந்தார்கள்.பல்கலை துணைவேந்தர் கூட பற்ற வைத்த ஈர்க்கு வாணம் போல அமளிப்பட்டது வரப்போவது யாரோ ஒரு பெரிய புள்ளி என்பதை உணர்த்தியது.கமல்ஸ் கிட்டவாகப்போய் பனரில் எழுதி இருந்ததை எழுத்துக்கூட்டி வாசிக்க தொடங்கினான்."இளம் மாணவர்களாகிய எமக்கு உரையாற்றி வழிகாட்ட வரும் இங்கிலாந்து விஞ்ஞானி ரொபேர்ட் பற்றிசனை அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்" கட்டுபெத்தை மைதானத்துள் தற்காலிக மேடை ஒன்று ரொபேர்ட் பற்றிசனுக்காக காத்திருந்தது,மைதானம் முழுக்க மாணவர்களால் நிரம்பி வழிந்தது.கட்டுப்பெத்தை குடுக்காறர் கூட குடு அடிக்காமல் நல்ல பிள்ளைகளாக உட்கார்ந்து இருந்தார்கள்.சரியாக 9 மணிக்கு விஞ்ஞானி பாண்ட் வாத்தியத்தோடு உள்ளே வந்து மேடையேறினார். "பிரிட்டிஸ்காறன் எண்டுறாங்கள் கறுப்பு தலைமயிரா கிடக்கு.கலரும் குறைவா கிடக்கு" கமல்ஸ் புறுபுறுக்க தொடங்கினான். "ஒரு வேளை விக்டோறியன் ஆளா இருக்கும்.அவங்களுக்கு தான் கறுப்பு மயிர்.ஆள் ஹொலிடே போய் ரான் பண்ணிட்டு வந்து இருப்பான்.அது தான் கலர் உப்பிடி இருக்கு" ஒரே போடாக போட்டு கமல்சை அடக்கினேன்.
விஞ்ஞானி பேச தொடங்கினார் "நான் பிறந்தது இங்கிலாந்தில். வளர்ந்தது இங்கிலாந்தில்.தாய் மொழி ஆங்கிலம்.படித்து ஆங்கிலத்தில்.நியூட்டனின் ஈர்ப்பு விதி பிழை என்று நிறுவி இருக்கிறேன்.தலையில் அப்பிள் விழுந்ததை வைத்து ஈர்ப்பை நிறுவியது தவறு என்கிறேன். ஏனென்றால் தலையில் தேங்காய் விழுந்திருந்தால் நிறுவ ஆளே இருந்திருக்க மாட்டார்.நாளை ஐன்ரீனும் பிழை என்று காட்டுவேன்.நான் சிறு வயதில் இருந்து பெல்ட்டோடு வேலை செய்தவன்.குளத்தால் பாய்ந்த நீரை மறித்து பக்கிங்காம் பலசுக்கு கறண்ட் குடுத்தவன்.தேம்ஸ் நதியின் இருக்கும் யப்பான் மீன்களை பிடித்து அடைத்து ரின் மீன் செய்தவன்.எண்ணெய் பாவிக்காமல் சிக்கன் பொரிக்கும் வழி கண்டு பிடித்தவன்.எனது வீட்டுக்கு செல்லும் வழியில் ஆறு ஓடிக்கொண்டு இருக்கும்.வாழ்ந்த வீடு Two storey பில்டிங்கில Up Storey ." "ரூ ஸ்ரோறி பில்டிங்கில அப் ஸ்ரோறி" இந்த வசனத்தை கேட்டதும் பொறி தட்டியது.கமல்சுக்கும் அதே பொறி தட்டியிருக்க வேண்டும்.முழுசிக்கொண்டு இருந்தான்.ஜெயசுதன் கம்பஸ் பெட்டையளை ஏக்கப்பார்வை பார்த்தபடியிருந்தான்.அவனுக்கு எந்தவொரு பொறியும் தட்டியிருக்க வாய்ப்பில்லை. "வாழ்வது முக்கியமில்லை.எப்படி வாழ்ந்தாலும் பில்டப்பா இருக்கணும் அது தான் முக்கியம்" என்று சொல்லி விஞ்ஞானி உரையை முடித்ததும் நானும் கமல்சும் ஒரே ஓட்டமாக் கம்பஸ் வாசலுக்கு ஓடி வந்தோம்.அவர் கட்டுப்பெத்தை றோட்டில் தரித்து நின்ற 18 அடி ஆடம்பர காரில் ஏற இவ்வழியாகத்தான் வரவேண்டும்.கமல்ஸ் புத்தம் புதிய 5 ரூபா குத்தி ஒன்றை நிலத்தில் போட்டு விட்டு ஒதுங்கி நின்றான்.விஞ்ஞானி கிட்ட வந்து 5 ரூபா குத்தியை கண்டதும் குனிந்து எடுத்தார்.சீரியசாக இருந்த அவரது முகம் குஸியாக மாறியது.இரண்டு எட்டில் அருகே இருந்த கொயின்ஸ் பூத்துக்கு போய் நாணயத்தை உள்ளே போட்டார்.ஏதோ ஒரு இலக்கத்துக்கு டயல் செய்து விட்டு மறு முனையில் ரிசீவ் பண்ண முதல் அலேக்காக கட் பண்ணினார்.வெளியே வந்து விழுந்த நாணயத்தை மீள எடுத்து கோட்டு பாக்கெட்டில் போட்டு நடந்து செல்ல எனக்கு தலை விறைக்க தொடங்கியது. ரூ ஸ்ரோறி பில்டிங்ல அப் ஸ்ரோறி,பெல்ட்,ரின் மீன்,குளம்,கறண்ட்,5 ரூபா குத்தி,மிஸ் கோல்......அப்ப... உது...... டேய்! மச்சான்! கெமி! கெமிக்கல் அலி! நில்லடா! எப்படி மச்சான் இருக்கிறா! ஆளே மாறிப்போயிட்டாய்!
நான் காருக்கு பின்னால் ஓடிக்கொண்டிருந்தேன்.

தற்போதைய நிலவரம்-06

வாழ்க்கை சக்கரம் உருண்டோடும் வேகத்தில் என்னவெல்லாமோ நடக்கிறது.தலை நிறைய முடியோடு வலம் வந்த நண்பர்களில் பாதிப்பேருக்கு அரை மொட்டை விழுந்து விட்டது.பயிற்றங்காய் பாடியோடு வலம் வந்த பலர் பானையளவு வயிறு வளர்த்து திண்டாடுகிறார்கள்.இருப்பினும் சில மாற்றங்கள் வாழ்க்கைக்கு புதுப்பொலிவு ஊட்டுபவையாகவும் மனமகிழ்ச்சியை ஊட்டுபவையாகவும் இருக்கின்றன.அந்த வரிசையில் இடம் வலமாக இரண்டு இரண்டுப்படி நாலு மடிப்பு வைத்த "காதலன்" ஜீன்ஸ் போட்டுக்கொண்டு மொறட்டுவைக்கு 2004 ஆம் ஆண்டில் வந்த கெமிக்கல் சசி டெனிமுக்கு மாறி லண்டனுக்கு வந்து லோகிப்புக்கு இறங்கி கடைசியாக இல்லற வாழ்க்கைக்குள்ளும் குதிக்க தயாராகி விட்டார்.மட்டத்தின் சில பேர்வழிகளைப்போலல்லாது எல்லோருக்கும் அழைப்பு விடுத்து இன்முகத்தோடு தகவல் கூறி கல்யாணத்துக்கு தயாராகும் விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.பம்பலப்பிட்டி கோயிலில் உம்சாண்டியின் தம்பி செட் பண்ணிய ஆட்கள் மட்ட கைப்பொம்மை தலைவனை அடிக்க வர எல்லோரும் ஓடி ஒழிய தனிய நிண்டு அடிபட்ட போது வெளிப்பட்ட அந்த ஆண்சிங்கம் மீளவும் வேறு விதமாக தென்பட்டிருக்கிறது.விஞ்ஞான வாழ்க்கை போலவே இல்லற வாழ்விலும் சிறப்படைய வாழ்த்துவதில் கனாக்காலம் பெருமையடைகிறது.



குதிரையில் ஏறி பிஸ்டலை இடுப்பில் செருகாமலே கௌபாயாக வலம் வந்தவர் மதுவர்ணன்.டென்மார்க் நாட்டு நங்கையோடு இல்லறத்தில் இணையவென விரைவில் கடல் கடக்க போகிறார்.மட்டத்தின் அனைத்து நண்பர்களுக்கும் அழைப்பெடுத்து உரையாடி தகவல் சொல்லி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.ஆனி மாதம் இந்தியாவில் மூன்று முடிச்சை போடவிருக்கும் நண்பரை வாயார வாழ்த்துகிறோம்.பி-கு: இந்திய திருமணத்துக்கு தொப்புள் அழகன் புதுமண தம்பதியராய் போய் சிறப்பிக்க இருக்கிறாராம்."ஹனி மூன் போறதுமாச்சு,கௌபாய் கலியாணத்தில் கலக்கிறதுமாச்சு" என கல்லு ரண்டு மாங்காய் திட்டத்தோடு காத்திருக்கிறாராம்.எப்படியோ போற இடத்தில வண்டி மேல தேங்காய் விழாட்டி சரி.


இப்படி சிலர் பகிரங்கமாக திருமணம் செய்ய்தாலும் ஒளித்து மறைத்து செய்பவர்களும் இன்னும் இருக்கிறார்கள்.திருமணம்/பதிவு திருமணம் எனபது வாழ்க்கையில் ஒரு படி நிலை.அதை நண்பர்களுக்கு சொல்லாமல் மறைப்பது ஒரு வகையில் கோழைத்தனம்/தாழ்வு மனப்பான்மையில் வெளிப்பாடு என்று தான் கருத வேண்டியிருக்கிறது.