.


சங்கமம் புத்தகத்தை உருவாக்குவதற்க்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலம் அது.எல்லா வேலைகளும் முடிந்து இறுதியாக கட்டுக்கட்டாக அச்சிடப்பட்ட புத்தகங்களை அலியப்பா கொண்டு வந்து ஹொஸ்டலில் போட்டதும் ஒரு பிரச்சினை முளைவிட்டது.அதில் இருந்த ஒரு கதையை சிலர் ஏற்றுக்கொள்ளும் மனோநிலையில் இல்லாததால் பிரச்சினை பூதாகரமானது.ஹொஸ்டல் வாழ்க்கையில் போட்டுத்தாக்கல்கள் சகஜம்.ஆனால் சிலர் எவ்வளவு தாக்கியும் பக்குவப்படாத கொழும்பர்களாகவே இருந்தார்கள்.நேர்த்தியான திட்டமிடலோடு அந்தப்பக்கம் "2003 மட்டத்துக்கு" பொறுப்பாக நம்மால் அமர்த்தப்பட்டவரின் கட்டளைக்கமைய கிழிக்கப்பட்டு பத்துவதுவிதான ஹொஸ்டலின் பின்பகுதியில் வைத்து தீக்கிரையாக்கப்பட்டது.இந்தச்செயல் அந்த இடத்தில் நின்ற 7ஜி குழு பேர்வழிகளாலும் ஒரு வகையான குறுகிய நோக்கத்துக்காக இறுதியில் ஆதரிக்கப்பட்டது.
அச்சமயத்தில் ஒரு பிரதி மட்டும் கிழிபடாமல் தப்ப வைக்கப்பட்டது.அப்பிரதியை புகைப்பட பிரதியாக்கி பல்கலை வளாகத்தில் சுவரொட்டிகளாக ஒட்டும் சிலரின் முயற்சியும் சிலரால் தடுக்கப்பட்டது.2.5 வருட இடைவெளிகளுக்கு பின்னர் அந்த பிரதியை இங்கே இணைக்க உதவிகள் புரிந்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
(CLICK TO ENLARGE)




.
ஐட்டப்பட கலெக்சனும் குறுக்கால் வந்தசனியனும்..

குளிர்மையான கந்தப்பளை நகரம்.ஊரெல்லாம் பச்சை போர்த்தியது போல தேயிலைச்செடிகள் பரந்திருந்தன.வீதிகள் எல்லாம் மப்பு போட்டுவிட்டு வம்பளக்கும் கிழடுகளும்,பிகர் பார்க்க அலையும் இளசுகளுமாக கலகலப்பாக இருந்தன.எந்தக்குளிரிலும் முழுநேரமும் திறந்திருக்கும் தண்ணி விற்பனை நிலையம் தான் கந்தப்பளையின் ஹைலைட்.மெல்ல கந்தப்பளையின் அழகை காட்சிப்படுத்திய கமெரா மெதுவாக ஒரு வீட்டை நோக்கி அசைகிறது.வெகு கவனமாக அறையின் காற்றோட்ட வழி வரை வந்து ஓய்வாகிறது.

பின்னணியில் "அட்றா அட்றா நாக்கமுக்க" பாடல் ஒலித்துக்கொண்டிருக்க சௌந்தர் ஒரேஞ்கலர் ஜம்பரும் மஞ்சள்க்கலர் ரி சேட்டும் பச்சைக்கலர் சப்பாத்து போட்டபடி கட்டிலில் முகட்டைப்பார்த்தபடி படுத்திருப்பது தெரிகிறது.இரண்டு நிமிடங்களின் பின் கதவு மெல்லத்திறக்க மணப்பெண் கையில் பால்,பழங்களோடு வருகிறா....அப்படியே வந்து "ஏங்க,எழுந்திருச்சி இந்த பால குடியுங்க" என்க சௌந்தர் ஜோன்கொன்சால் தூக்கத்தால் எழுவது போல செங்குத்தாக எழுகிறான்.மணப்பெண் பால் குவளையை நீட்ட சௌந்தர் வாங்குகிறான்."ராவா அடிச்சா அத்தான்ர வயிறு புண்ணாயிடும் எண்டு பால் மிக்ஸிங் கொண்டாந்திருக்கிறீயா செல்லம்" என்ற படி பெண்ணின் கன்னத்தை கிள்ள அவ வலிதாங்க முடியாமல் கிறீச்சிட்டு கத்துகிறா..அறைக்கு வெளியே இருந்த பழசுகள் ஆளையாள் பார்த்து சிரித்துக்கொள்கிறார்கள்.திடீரெண்டு சௌந்தர் ஜம்பரை அவிழ்க்க மணப்பெண் வெட்கத்தில் முகத்தைப்பொத்திக்கொள்கிறா.சௌந்தரோ ஜம்பரை தளர்த்தி மறைத்து வைத்திருந்த "வைட் டயமண்ட்" குவாட்டர் போத்திலை எடுத்து பாலோடு வீதப்படி கலக்கிறான்."ஏலேய் பைட்ஸ் ஒண்டும் கொண்டராலயா" என்று மனுசியை உலுக்க அவவோ சௌந்தர் கைப்பட்ட கூச்சத்தில இன்னும் இறுக்கமா முகத்தை கைகளால் மூடிக்கொள்கிறா.சுற்றிப்பார்த்த சௌந்தரின் கண்களில் தட்டில் இருந்த ஆப்பிள் பழம் தட்டுப்பட சவுண்டோடு கடிபட நல்ல ஒரு பைட்ஸும் கிடைத்து விட்டது.நேரம் ஆக சௌந்தர் கண்களில் போதை மின்னுகிறது.இனி ஒரே ஜில் ஜில் தான் போங்கள் என தூபரூபன் சொல்ல எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியது.மொழ மொழன்னு யம்மா யம்மா பாட்டைப் போட்டுவிட்டு சௌந்தர் ஆட மணப்பெண் மூலையில் மிரட்சியோடு ஒளிந்து கொள்கிறா.இதற்க்கெ மேலும் இந்தக்கேடு கெட்ட பயலின் பெஸ்ட் நைட் வீடியோவை பார்க்க நாம் ஒருவரும் விரும்பவில்லை.



தூபரூபனை பணிக்க அவன் சௌந்தருடையதை நிறுத்தி விட்டு சிறீஸ்காந்தினுடையதை ஓட்டுகிறான்.சிறிஸ் புது மாப்பிள்ளைக்குரிய ஆர்ப்பாட்டங்களோ அட்டகாசங்களோ எதுவும் இன்றி வழமைபோல அமைதியாக காலை நீர் நிரப்பப்பட்ட வாளி ஒன்றுள் வைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருக்கிறான்.தொடர்ந்து நீண்ட நேரம் இருந்து படித்ததால் கதிரை சூடாகி ஆங்காங்கே புகை கிளம்பியபடி இருந்தது."கிறீச்" என்ற ஓசையோடு கதவு திறந்து கொள்ள மணப்பெண் பாலோடு உள்வருகிறாள்.முதல் பார்வையிலேயே பக்கா கிராமத்து பிகர் எண்டது தெட்டென தெரிந்தது.பட்டுப்புடவை சரசரக்க அவள் சிறிஸ் அருகே வந்து லேசாக செருமுகிறாள்.கதவு திறந்த சத்தத்தையே பொருட்படுத்தாமல் காட்டுக்குத்து குத்திக்கொண்டிருந்த சிறிஸ் காந்துக்கு செருமல் ஓசை என்ன பெரிதாகவா பட்டிருக்கும்???.......சிறிஸ் சட்டை செய்யாமல் தொடர்ந்து நோட்சுகளை குத்திக்கொண்டு இருந்தான்.ஒரு கட்டத்தில் அந்தப்பெண் கடுப்பாகி பால்ச்செம்பை சிறிஸ்ஸின் தலையில் கவிழ்க்கப்போக அலறியடித்துக்கொண்டு சிறிஸ்காந் எழுகிறான்.(அறைக்கு வெளியே இருந்த கிழவிகள் "பொண்ணு பையனை நல்லாத்தான் படுத்துறா" என்று சொல்லி சிரித்துக்கொண்டார்கள்.)எழுந்த சிறிஸ்காந்த் "இப்பவே வந்தனீர்,தண்ணி வத்திப்போச்சு, உந்த செம்பை ஒருக்கா தாரும்" என்ற படி பாலை கையில் வாங்கி கால் வைத்திருந்த வாளிக்குள் ஊற்றி விட்டு மறுபடி இருந்து படிக்கத்தொடங்குகிறான்.அந்தப்பெண்ணின் முகத்தைப்பார்க்க பரிதாபமாய் இருந்தது.சிறிது நேரம் நின்றவள் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவளாக கட்டி இருந்த சேலையை உருவி மின்விசிறியில் கொழுவி விட்டு மறுமுனையை சுருக்காக்கி கழுத்தில் போட்டு கட்டிலில் இருந்து கீழே பாய்ந்து தொங்குகிறாள்.ஐட்டம் பார்ப்பம் எண்டு கிளுகிளுப்பாக உட்கார்ந்திருந்த எமக்கு எல்லாம் இறங்கிப் போய்விட்டிருந்தது.

தூபரூபன் எம்மனநினையை விளங்கிக்கொண்டு "அண்ணைமார் கவலைப்படாதீங்கோ உங்கட மட்டத்தில பிரபலமான மிக நல்ல அண்ணை ஒருத்தர்ட பெஸ்ட் நைட் வீடியோவ போடுறன்,பாருங்கோ,அது ஒரு வேளை நல்ல இருக்கும்" என்ற படி மெனுவினூடு தேடத்தொடங்குகிறான்."யார்டா அந்த பிரபலமானவன்" என்றபடி பலத்த யோசனையில் நானிருக்க அப்பாஸ் காதருகே வந்து "கட்டாயம் சசின்ரயாத்தானிருக்க வேண்டும்" என்று கிசுகிசுத்தான்.7ஜி உறுப்பினர்ல யாரோ ஒருத்தன் தான் என்று எதிர்பார்த்திருக்க பலத்த அதிர்ச்சியை தந்தது திரையில் வந்த உருவம்."இவன் பிரபலமா?" என்று சேகர் கத்தியே விட்டான்.திருநீற்று பட்டை அணிந்து கையில் சிறிய ரக குடை ஒன்றுடன் இருந்த அந்தப்பேர்வழி பிரபலமாகிவிட்டான் என்பதை ஜீரணிக்க முடியவில்லை.தூபரூபனை சசி முறைக்க "அண்ணா இவர் கரையேறி எண்ட பெயரில புளொக் எழுதுறவர்,நாங்கள் நாலு நல்ல கருத்து கேட்கோணும் எண்டு நினைச்சா இவரத்தான் கூப்பிடுவம்,வாயில இருந்து வாற வார்த்தை அவ்வளவும் முத்து,எழுத்துக்களில் செந்தமிழ்க்கப்பு,பெண்களை ஏறெடுத்தும் பாரா,கம்பசை கலக்கிய சித்து...."என்று கரையேறி புகழ் பாடிக்கொண்டே போனான்.
பிரச்சாரம் எவ்வளவு வலிய ஆயுதம் என்று புரிந்தது."சிங்கத்தோடு படுத்து விளைஞ்சவை தான் சிங்களவர்" எண்ட மட்ட மொக்கையை அவங்கள் ஆயிரம் ஆண்டுக்கு முன்னே எழுதி வைத்து விட்டதால் இன்று அவங்கள் ஹீரோ,ஒண்டையும் பதியாததால் நாம் இன்று சீரோ....என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.
"சரியடா தம்பி ஓட்டு" என கொஞ்சம் கடினமா சொல்லி விட்டேன்.
"ராக்கிங் ஒழிஞ்சு பல வரிசமாச்சு,சும்மா கம்முன்னு இருங்கண்ணா" என்று உறுக்கியபடி ஓட்டுகிறான் சலனத்தை.

கரையேறி நெற்றியெல்லாம் திருநீறு பூசியபடி "கந்தஜட்டிகவசம்" படித்த படி கட்டிலில் வேட்டி சால்வையோடு உட்கார்ந்து இருக்கிறார்.மணப்பெண் கதவை திறக்க கரையேறி கவசத்தை கவசமாக்கி முகத்தை மூடிக்கொள்கிறார்.

பெண்-"ஏங்க உங்களுக்கு வேர்த்து கொட்டுறது"
கரையேறி-"எனக்கு தெரியலை"
பெண்-"ஏங்க கையெல்லாம் படபடன்னு நடுங்கிறது?"
கரையேறி-"எனக்கு தெரியலை"
பெண்-"என் மேல் உங்களுக்கு அன்பு இல்லையா?"
கரையேறி-"அன்பே சிவம்,சிவமே இந்தக் கரையேறி"
பெண்-"ஏங்க அநியாயத்துக்கு நல்லவரா நடிக்கிறீங்க"
கரையேறி-"அது பிறப்பில வந்தது"
பெண்- (கடுப்பாகி FBஐ திறந்து சில பெண்களின் FACE BOOK PROFILE போட்டோக்களைக்காட்டுகிறாள்) "இவங்கள் எல்லாம் என்னோட நெருங்கிய நண்பிகள்,உங்கள பற்றி விலாவாரியா சொல்லி இருக்கிறார்கள்.வழமையான சத்தியவான் வேடம் என்னிடம் பலிக்காது"
கரையேறி-"தென்னாடுடைய சிவனே போற்றி,சத்தியமெவ ஜெய,நெல்சன் மண்டேலாக்கா பச்சா"

என பலவாறு சொல்லியபடி வெறித்தனமாக பெண் மீது பாய்கிறார். 30 நிமிடங்கள் நடந்த அந்த வன்முறையை பார்த்து விறைத்துப்போய் உட்கார்திருந்தோம்.தூபரூபன் சிறிதளவு நீரை முகத்தில்தெளித்து நிஜ உலகுக்கு கொண்டு வருகிறான். ஆசுவாசப்படுத்த எல்லோரும் பல்கனிக்கு ஓடி வந்து பொல்கொடைக்காற்றை நாசிகளுள் ஆழமாக இழுத்துக்கொள்ள ஆரம்பித்தோம்.கீழே யாரோ விநோதமான ஒலியில் கத்துவது கேட்கவே திருபினோம்.ஒரு பருத்த கிழவன்,அருகே அவனை விட பருத்த பன்னியொப்ப தோற்றமுடைய பெண்.தூபரூபன் "அண்ணா ஒருக்கா என்ணெண்டு பார்த்துட்டு வாறன்" என கீழே ஓடி அரை நிமிடத்தில் மீள மூச்சிரைக்க ஓடி வந்தான்.

"அண்ணாமார் எல்லாரும் ஓடித்தப்புங்கோ,உவள் ஒரு விசரி,தனக்கு பின்னால வந்தவை,கையை பிடிச்சவை,கால தொட்டவை எண்டு கம்பசில இருக்கிற எல்லா பெடியள் மேலயும் கேஸ் போட்டவள்,இப்ப புதுசா நீங்கள் வந்ததை கண்டுட்டு தகப்பனோட கேஸ் போட வந்திருக்கிறாள்.ஓடுங்கோ,ஓடித்தப்புங்கோ"

"தம்பி பொறு விசரி எண்டால் அப்பன்காரனோட சமாதானமா
பேசிப்பார்க்க ஏலாதோ?"
நான் வினவ தூபரூபன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது.

"அண்ணா அவன் அவளை விட நூறு மடங்கு விசரன்,அவனுக்கு கிட்ட போனாலே கொலைக்கேஸ் எண்டு போட்டுடுவான்.அவள் வேற உங்கட பேரத்தான் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு நிற்கிறாள்"

என தூபரூபன் சொல்லி முடிக்க முன் ஹொஸ்டலில் இருந்து ஸ்டோன் பென்ஞ் வரை ஓடி வந்துவிட்டோம். "அடோ,பறதெமிழ,கொகேத யன்னே" என ஒரு குரல் கேட்ட திசையில் திரும்பி பார்க்க நிலாந்தி றிப்பீட் எக்சாம் கேள்விப்பேப்பரோடு தலைவிரி கோலமாக ஓடி வருவது தெரிந்தது.வேகமெடுத்து ஓடி வாசலுக்கு கிட்ட வர டயந்தன் வருகிறான்.நான் எவ்வளவு கெஞ்சியும் கேட்காமல் எம் காதுகளில் வெடிக்கிறான்.என் காதில் வெடிக்க தாங்க முடியா வேதனை.அலறிக்கொண்டு எழுகிறேன்.வெளியே பனி கொட்டிக்கொண்டிருந்தது.

.
தீபரூபன் பேரை உச்சரிக்கையிலேயே ஒரு கம்பீரம் பிறக்கிறது.நீர்வளம் மிக்க நீர்வேலியில்ப்பிறந்து வன்னிவள நாட்டில் வளர்ந்து கட்டுப்பெத்தைக்காட்டில் கலைகள் பயின்றவன்."அவன் இவன் எல்லாம் கலியாணம் கட்டுறான் நம்ம பெடியள் ஒருத்தனும் கட்டக்காணமே??" என்ற எம் ஆதங்கத்தைப்போக்கிய தீரன்.அன்று முதலாம் வருடத்திலேயே பலராலும் சாதனைகளுக்கு சொந்தக்காரனாவான் என கணிக்கப்பட்டிருந்து இன்று அதை அநாயசமாக மெய்யாக்கிவிட்டு சிரித்துக்கொண்டிருக்கிற புது மாப்பிள்ளை....இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
பல்கலை வாழ்வின் தொடக்க நாட்களின் போது அறிவகத்தில் குளிர்மையான மாலைப்பொழுது ஒன்றில் காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டு புத்தகம் வாசித்தபடி அறிமுகமானபோதே மனதில் தோன்றியது."இவன் எதிர்காலத்தில் பெரிய ரேஞ்சில சாதிப்பான்" என்று.நினைத்தபடி மட்டத்தின் பெருமையை,ஆண்மையை காப்பாற்றி கரைசேர்த்திருக்கிறான் இந்த இளம் சூறாவளி. தீபரூபன் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்து புத்தக படிப்போடு இல்லாமல் செயலிலும் காட்டி பெரிய பொறியியலாளனாய் உயர்ந்து சாதனை படைக்க மட்டம் 2003 வாழ்த்துகின்றது.









.
கையில் வந்த பாடமும்,ஐட்டப்பட கலெக்சனும்...

2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி.நேரம் மாலை 5.30.பொல்கொடை ஆற்றைக்கடந்து வரும் குளிர்காற்று இதமாக எங்களை தழுவிப் போய்க்கொண்டிருக்கிறது.மொறாட்டுவை நியூ ஹொஸ்டல்.2ம் மாடியில் இருந்த ஹயானியும் 3ம் மாடியில் இருந்த பவினந்தனும் பறக்கும் முத்தங்களைப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.கிறவுண்ட் புளோர் கியாஸ் நேற்றுவரை அறை நண்பனாக இருந்த கிப்லியை அடித்து விரட்டி விட்டு EM 1st year படிக்கிற காப்பிலி பெட்டையை ஒருத்தியை றூம் மேட்டாக கூட்டிக்கொண்டந்திருந்தான்.மொறட்டுவ கம்பஸ் உலக அளவில நல்ல Rank க்கு வந்ததால வெளிநாட்டில இருந்து கனக்க மாணவர்கள் லட்சக்கணக்கில காசு கட்டி படிக்க வருகினமாம்.அப்படி எத்தியோப்பியாவில இருந்து வந்து படிக்கிற பெட்டைதானாம் அவள்.இவன் அவளுக்கு குப்பி எடுத்து கவிழ்த்திட்டானாம்.அருகே ஒரு தமிழ்ப்பெடியள் குழு தகவல் சொல்லியபடி "அறைக்க ஏதாவது கசா முசா நடக்கும் பார்க்கலாம்" எண்டு பதுங்கி நிலை எடுத்தபடி இருந்தார்கள்."இலங்கையை அமெரிக்கா மாதிரி வளரவைக்கவேணுமெண்டா கலாச்சாரத்தையும் அமெரிக்கா போல மாத்தோணும்.பெண்களும். ஆண்களும் கலந்து பல்கலைக்கழக கொஸ்டல்ல இருப்பது அதற்கு வழி வகுக்கும்" என மகிந்த சிந்தன அத்தியாயம் 2 இன் 3 ஆம் பந்தியில் எழுதப்பட்டிருப்பதால் வோர்டன் மாத்தையா இப்படியான கேசுகளுக்கு மகிழ்வோடு அனுமதி தருகிறாராம் என்ற பதில் பலதடவை இது தொடர்பாக அவர்களிடம் கேட்டபின் கிடைத்தது.திடீரென்று 3 ஆம் மாடி பல்கனியில் ஒரு பெடியன் பெண்கள் அணியும் ஆடைகளை கொடியில் காய்வதற்காக போடுவதை (உள்ளாடைகள் உள்பட) சேகர் கூப்பிட்டுக்காட்டினான்."மச்சான் இவன் கட்டாயம் தமிழ்ப்பெடியனாத்தான் இருப்பான்டா" என பின்னால் சொல்லிக்கேட்டது.திரும்பிப்பார்த்தேன்.எங்கட விஞ்ஞானி கெமிக்கல் சசி.நோட்சை மார்க்கர் பேனைகளால் கலர்ப்படுத்திக்கொண்டிருந்தார்.அருகே அப்பாஸ் வீட்டிலிருந்து மனைவி தயாரித்துத்தந்துவிட்ட பனங்காப்பணியாரத்தை வாய்க்குள் ஒவ்வொன்றாகப்போட்டபடி வெறித்தனமாக நாளைய பரீட்சைக்காக "பிட்" தயாரித்துக்கொண்டிருந்தார். "7 வருசமா எக்சாம் றிப்பீட்ட் எடுத்தும் பாஸ் போடாத நிலாந்தியட்ட இந்த பிட் பிடிபட்டா நீ அவள் சாகும் வரை இந்த கரப்பு தைக்கிற பாடத்தை பாஸ் பன்ண மாட்டாய்" என எச்சரித்து விட்டு நோட்சில் மூழ்க முயலுகிறேன்.முடியவில்லை.நினைவுகள் ஒவ்வொன்றாக சுழலுகின்றன.

நாங்கள் பாணும் பருப்பும் சாப்பிட்ட அந்த மேசைகள்.கூடி இருந்து அரட்டை அடித்த வாயில் பென்சுகள்.உரக்கக்கத்தி தொடர்பாடல் செய்த பல்கனிகள்,கிறிக்கெட் மட்ச் பார்த்த தொலைக்காட்சிப்பெட்டிகள் எல்லாம் ஒராயிரம் நினைவுகளை மீட்டின.இங்க வந்தா "பிளாஸ் பேக்" தான் ஓடும் எண்டு எனக்கு முதலே தெரியும்.உவன் அப்பாஸ்தான் விடாப்பிடியா "வீட்ட மனிசி படிக்க விடாள் கம்பசுக்க போய் நியூ கொஸ்டல் கன்ரீனுக்கு பக்கத்த இருக்கிற ஸ்ரடி ஹோல்ல இருந்து படிப்பம்" எண்டு அடம் பிடிச்சு இங்க வர வசிச்சிட்டான்.சேகர் 6 வது தம்மை எரிக்கத்தொடங்கிவிட்டான்.படிக்க கஸ்டப்படுவது முகத்தில் தெரிந்தது.அவனுக்கு இப்ப 30 வயது.இந்த வயதில் றிப்பீட்டு எக்சாம் எழுதிறதெண்டா யாராலதான் முடியும்.உந்த நாசமாப்போன டொக்டர் நிலாந்தியும் எங்களை பாஸ் பண்ண வைச்சு டிகிறிய தந்து வெளியால விடுறதா இல்லை.2006 ஆம் ஆண்டு 4 பேருக்கும் கையில் தந்தவள்,தொடர்ந்து தந்து கொண்டே இருக்கிறாள்.இனி நாங்கள் எழுதப்போவது 7வது தடவை.அதுக்கிடையில ஒருத்தரும் படிக்க விருபுறேலை எண்டதாலை டெக்ரைல் டிப்பார்ட்மெண்டை ,மூடி அதை பல்கலைப்பொது மலசல கூடம் ஆக்கிட்டாங்கள்.நாங்கள் 4 பேரும் பாஸ் பன்ணும் வரைக்கும் நிலாந்தியை பெயரளவில டிப்பார்ட்மெண்ட் head டா போட்டிருக்கிறாங்கள்.நாங்கள் போனா பதவியும் போயிடும் எண்டதால அவள் நம்மை 7 வருசமா தட்டிப்பிழியுறாள்.இந்த முறையெண்டாலும் இரக்கப்பட்டு விட்டுடுவாள் என்ற நம்பிக்கையில் குத்திக்கொண்டிருக்கிறோம்.

நேரம் ஓடிக்கொண்டிருந்தது.அருகில் உள்ள மேசையில் ஒரு வெள்ளைக்காரி வந்து நோட்சுகளை பரப்பி விட்டு படிக்கத்தொடங்குகிறாள்.கடைக்கண் பார்வை வீசுகிறேன்.ம்ம்ம்ம்...அழகி.கூடப்படிக்கிற பெடியள் கொடுத்து வைத்தவங்கள் என நினைத்துக்கொண்டேன்.முந்தி நம்மட பட்ஜ் பெடியள் சப்பைப்பிகருகளுக்கு வாளி வைத்து கிழி வாங்கி பம்முவது நினைவுக்கு வந்தது.திடீரென "படார்" என்ற சத்தமும் கூடவே காறித்துப்புகிற ஓசையும் கேட்க திரும்பினேன்.அவள் தான்.கையில் ஹை ஹீல்சை பிடித்தபடி ஆங்கில தூசணத்தில் கத்திக் கொண்டிருந்தாள்.எதிரே ஒரு பெடியன் கன்னத்தைதடவியபடி....

"டேய் ரயந்தன் உனக்கு எத்தினை தரம் சொல்லுறது என்னோட டேட்டிங் போக விருப்பமெண்டா நேர வந்து கேள்,நோட்சுக்க துண்டில எழுதிவச்சு,சுவர்ல எழுதி அசிங்கப்படுத்தாத எண்டு" அவள் குரலில் கோபமும் ஏளனமும் மிகுந்திருந்தது.தலையைக்குனிந்தபடி நின்ற அந்த ரயந்தன் என்றவன் தோற்றத்திலும் தயந்தனை ஒத்திருந்தமை வியப்பளித்தது.அவனை விரட்டியபின் திரும்பி "சாரி போர் த டிஸ்ரேபன்ஸ்" என்றவள்..."இந்த தமிழ்ப்பெடியளே இப்படித்தான்,எல்லாத்தையும் பொத்திப்பொத்தி வச்சு பழுக்கவும் இல்லை,பழக்கவும் இல்லை" என அலுத்துக்கொண்டாள்.காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் நம்ம தமிழ்ப்பெடியள் மட்டும் மாறவே இல்லை என்பது மனதை வருத்தியது.ஒருத்தன் பெண்களுக்கு ஆடைகள் துவைத்து சேவகம் செய்கிறான்(பின்னர் அவன் பெயர் கிண்டர்சன் என யாரோ சொன்னார்கள்),இன்னொருத்தன் வாளி வைத்து வெள்ளைக்காரியிடமே அடிவாங்குகிறான் என எம்மின இளையவர் நிலை நினைக்க துயரம் மிகுந்தது.நோட்சுகளை பார்த்துக்கொள்ளும் படி அவளிடம் சொல்லி விட்டு ஒரு றவுண்டு போய் வருவோம் என புறப்பட்டோம்.நேரடியாக ஸ்டோன் பெஞ்சுக்கு வந்து கீழே விழுந்திருந்த தேக்கங்காய்களை குத்திச்சாப்பிட்டோம்.எல்லாரும் வினோதமாக பார்த்தபடி போய்க்கொண்டிருந்தார்கள்.அப்படியே கஜு காட்டு வழி காலாற நடந்தோம்.ஒரு காதல் ஜோடியையும் காணாவில்லை."றூம் போட்டு குடுத்தா யார் இங்க வருவாங்கள்" என சசி சொன்னதுதான் காரணமெனப்பட்டது.பவிலியன் வந்து அமர்ந்து கொண்டோம்.கூட்டம் அதிகமிருந்தது.நம்ம காலத்தில நூலகத்தில தான் சனம் இருக்கும்.இங்கே இலையான் மெய்க்கும்.இப்ப எல்லாம் மாறிட்டுது.பல முகங்கள்.அதில் சில தமிழ் முகங்கள்.ஒருத்தரும் கண்டு கொள்ளவில்லை.5 வருட இடைவெளியில் எம்மை தெரிந்திருக்க நியாயமில்லைத்தானே என ஆறுதல்படுத்திக்கொண்டோம்.அப்போது சடுதியாக ஒரு பெடியன் எம்மை நோக்கி கையை நீட்டிக்கொண்டு வருகிறான்.வந்து என்னிடம் கையைத்தந்து விட்டு நீங்கள் "டைரக்டர் தானே" என்கிறான்.எனக்கு வானத்தில் பறக்கிறமாதிரி இருந்தது." "கிட்டத்தட்ட...ஆனா நான் டைரக்டர் மட்டும் இல்லை ..எடிட்டர்,சினிமோட்டோகிறாபர்,சண்டைப்பயிற்சியாளார் இன்னபிற"எனச்சொல்லி நிறுத்தினேன்.கூட்டம் கூடி விட்டது.தமிழ்ப் பெண்களுடைய முகங்களும் சில தென்பட்டன.முதலில் வந்தவன் கையைத்தந்து விட்டு "நான் தூபரூபன்,நீங்கள் இயக்கிய ஐட்டப்படங்கள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் பார்த்து வருகிறேன்,அதிலும் சௌந்தர்,கரையேறி,கெமி ஆகியோர் நடித்த படங்கள் மிக அருமை" என்க ஒருக்கா கிரிவக்சனட்ட சிக்கின பீலிங் வந்து அடிவயிறு கலக்க தொடங்குகிறது..கெமிக்கல் சசியைப் பார்க்கிறேன்..அசிட்டைக்குடித்தவ்ன் போல என்னைப்பார்துக்கொண்டிருந்தான்.
"டேய் திருட்டுத்தனமா என்ர பெஸ்ட் நைட்ட வீடியோ எடுத்து காசுக்கு வித்துகித்துப்போட்டியோ?,உண்மையைச்சொல்லு நீ தானே என்ர கலியாணாத்துக்கும் கமெராவோட வந்து திரிஞ்சனி?"
சசி வழமையா வைத்திருக்கிற சாவிக்கொத்தில இருக்கிற கத்தியை எடுத்து நீட்டியபடி உறுக்குகிறான்.



"டேய் உன்ர கலியாணக்கசெட் என்ன எந்திரன் படமாடா?,பலகோடி காசில விலைப்படுறதுக்கு?,அதோட அதப்பார்த்தவங்கள் யாராவது வாழ்க்கையில கலியாணம் கட்ட முன் வருவாங்களா எண்டத யோசிச்சுப்பார்த்தியா?"
ஒரே போடா போட அலிபாய் அடங்கி விட்டார்.நாங்கள் நால்வரும் எங்களுக்குள் குசுகுசுத்து இறுதியாக அந்த ஐட்டவீடியோக்களைப்பார்த்து உண்மையை அறிவோம் என முடிவெடுத்த பின் நீண்ட மௌனத்தை நான் கலைக்கிறேன்.
"தம்பி தூபரூபன்! நான் எடுத்ததா நீர் சொன்ன அந்த ஐட்டப்படங்களை ஒருக்கா காட்டுவீரோ?"
கோரிக்கை நிறைவேற்றப்படுகிறது.புளூரே வடிவில் சேமிக்கப்பட்ட அந்த ஐட்டசலனங்களை கையடக்க புறஜெக்டர் உதவியோடு நியூகொஸ்டல் 232ம் இலக்க அறைஉட்சுவரில் விரித்து தூபரூபன் ஓட்ட ஒரு செலெக்சன் மெனு "றியல் ரமில் 1st நைட் கலெக்சன்" என்ற தலையங்கத்தோடு மின்னுகிறது.சின்ன சின்ன பெட்டி பெட்டியா கனக்கபேர்ட பேருகள் கிடக்கு.ஒவ்வொண்டா பார்க்கிறேன்.Achuthan,Ainkaran,Bavananthan,Dinesh,Elancheliayn என ஆங்கில அகராதிவரிசையில் ஓடி S க்கு வந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.Sounder,Senthil,Segaran,Selvaranjan....எல்லோர் விருப்பப்படி சௌந்தரின் சாகசத்தை ஓட்டும் படி நான் கேட்க திரையில் விரிகிறது காட்சி.

(பாகம் 2 இல் அதிர்ச்சி தொடரும்.)

கல்யாணரூபன்

.

முதல்வருடத்தில் ஒரு வெடியனாகவும் காமெடியனாகவும் போட்டுத்தாக்கும் கலை அறிந்தவனாகவும் அறிமுகமான தீபரூபன் ஒரு காதலனாக தன்னை நிலை நிறுத்தி கணவனாக வாழ்வத்ற்கான அடித்தளத்தை இந்த மாத இறுதிப்ப்பகுதியில் போடவிருக்கிறார்.இது தொடர்பாக முகப்புத்தகத்தில் குறுந்தகவல் அனுப்பிய தீபரூபன் எங்கே,எப்போது என்ற விடயங்களை குறிப்பிட மறந்துவிட்டதால் பலரும் இந்த வரலாற்று சாதனை தொடர்பில் தகவல்கள் வேண்டி அவாவி நிற்க்கின்றனர்.அதாவது பல்கலை வளாகத்தில் குழுமமாக வாழ்ந்து பின்னாளில் ஹொஸ்டலில் குடும்பமாக இருந்த நம்ம மட்ட பெடியளில் முதலாவது வெற்றிகரமான காதலுக்கு சொந்தக்காரனான தீபரூபன் கல்யாணம் உரிய பிரச்சாரம் இன்றி முதன்மை குறைந்து போவதை நாம் அனுமதிக்க முடியாது.இந்த விடயம் தொடர்பில் தீபரூபனால் தாக்கப்பட்டோரும்,தீபரூபனை தாக்கியோரும் ஒத்த நிலைப்பாட்டைக்கொண்டுள்ளனர்.எங்கள் மட்டத்து ரெப்பான தினேஸ் வழிப்படுத்த அப்பாஸ் இல்லை என்பதாலும்,அருகே பலமான ஆளணி இல்லாமையாலும் இது தொடர்பில் வலிந்த நடவடிக்கைகளை செய்யவியலாது இருக்கிறார் என்பதை நாம் அறிந்ததே.அத்தோடு அவரை சுற்றி இருக்கும் சிலரும் பதிவெழுதி,பதிவர் சந்திப்பு போடக்கூடியவர்களே தவிர வேறொண்றும் இயலாதவர்கள்.இன்னபிறகாரணிகளால் நாமே களமிறங்க வேண்டியது தவிர்க்க முடியாததாகின்றது.மேலும் வெட்டிப்பேச்சு பேசி செல்வரஞ்சன் போல காலத்தை கழிக்காமல் ராக்தீபன் கலியாணத்துக்கு நம்மால் செய்யக்கூடியவை சிலவற்றை ஐடியாக்களாய் கீழே தந்திருக்கிறேன்.படிச்சு பிடிச்சுப்போனா கருத்தைக்கவ்விக்கொள்ளுங்கள்.


1)மட்டம் 2003 காசு சேர்த்து பரிசுப்பொதி ஒன்றை வாங்கித்தீபரூபனுக்கு கொடுக்கலாம்.
இந்தப்பரிசு தீபரூபனின் வெடிகளில் இருந்து அந்த வாழ்க்கைத்துணையாக வரப்போகிற கொடுத்து வைத்த பெண் தன் காதுகளை பாதுகாக்க தரப்படுகிற பஞ்சாகவோ இல்லை விலையுடர்ந்த மோட்டார் வாகனமாகவோ இருக்கலாம்.(பிகு-தீபரூபனுக்கு சாளி மட்டுமே ஒடத்தெரியும் என்பதால் செலவு 60,000 ஐத்தாண்டாது.)

2)கலியாண நாளன்று மரம் நடலாம்.ஆளுக்கு 10 மரப்படி 100 மரம் நட்டாலே இது பத்திரிகை செய்தியாகி பப்ளிசிட்டி கிடைக்க வாய்ப்புண்டு.இந்த விடயத்தை எல்லாரும் பின்பற்றினால் வவுனியா சோலைவனமாகிவிடும்.

3)மட்டம் 2003,மற்றும் இளைய மாணவர்களான புளொக்கர்களுக்கு அன்புக்கட்டளை இட்டு எல்லோரையும் இந்த கலியாணம் பற்றியும் தீபரூபன் நற்க்குணங்கள் பற்றியும் எழுதக்கேட்கலாம்.இதன் போது அந்தக்கடலேறி குறுக்கால் இழுக்க வாய்ப்புண்டு.(அவரது புளொக்கை அவரே வாசிப்பதில்லை என்பதால் பெரிதாக அலட்டிக்கொள்ளத்தேவை இல்லை.)

4)தீபரூபனின் குப்பியால் மற்ஸ் பாஸ் பண்ணினவங்கள் எல்லாம் கலியாண நாளன்று பெரிய பலகையில் "கணக்குக்கிறுக்கன்" என எழுதி பரிசாகத்தரலாம்.இது தீபரூபன் தொடர்பில் புகுந்த வீட்டாருக்கு ஒரு இமேஜை உருவாக்குவதோடு,மனைவிக்கு கொளுத்திப்போட கிடைத்த நல்ல
ஒரு சரவெடியாக தீபரூபனுக்கு இது அமையக்கூடும்.

5)தீபரூபனின் ஆருயிர் போட்டுத்தாக்கல் நண்பனான சசி தீபரூபன் கலியாணத்துக்கு நேரில் வரமுடியாது என்பதால் தீபரூபன் மிகுந்த கவலை அடையக்கூடும்.அதைப்போக்க சசியின் பெரிய போட்டோ/பொம்மையை தீபரூபன் கண்ணில் படுமாறு மண்டப மூலையில் வைக்கலாம்.கல்யாணம் முடிந்தபின் நண்பர்கள் அந்த பொம்மையை செருப்பால் அடித்து கொடும்பாவி கொழுத்தி மழையை வரவைத்து தம்பதியினரை வித்தியாசமாக வாழ்த்தலாம்.

6)குறூப் போட்டோ எடுக்கும் போது நண்பர்கள் எல்லோரும் அபூர்வசகோதரர் கமல் போல நின்று தீபரூபனை உயரமாக காட்டலாம்.இது பின்னாளில் கலியாண ஆல்பத்திக்காட்டி பிள்ளையளுக்கு தீ பரூபன் சோறு ஊட்டும் போது " எங்கட பட்ஜ்சில நான் தான் சரியான உயரம்" எனச்சொல்ல உதவக்கூடும்.

7)காலை தொடக்கம் மாலை நீளும் நீண்ட சடங்கு சம்பிரதாயங்களால் தீபரூபன் களைப்படையும் தருணங்களில் நண்பர்கள் கூட்டம் பின்னால் இருந்து "சசி,சசி" எனக்கத்தி
தீபரூபனை உற்ச்சாகமூட்டலாம்.

8)தீபரூபன் ஸ்டண்ட் செய்த கபோதி திரைப்படத்தை அகலத்திரையில் கலியாண மண்டப மூலையில் அடிக்கடி போட்டுக்காட்டலாம்.இது "மாப்பிளை பெரிய சண்டைக்காரன் போல" என்று கலியாணத்துக்கு வந்தோரை முணுமுணுக்க வைப்பதோடு பெண்ணுக்கு "இவர வெருட்டி அடக்கேலாது" என்ற எண்ணத்தை விதைக்கும்.

இவை காலை கழிவறையில் இருந்தபோது என்மனதில் உதித்த ஐடியாக்கள்.ஆளாளுக்கு ஆயிரம் ஐடியாக்கள் வந்திருக்கும்.எதாவது செய்து ராக்தீபனின் திருமணநாளில் அவனுக்கு திட்திப்பூடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

.
சனிப்பெயர்சி பலன் காரணமாய் கம்பசில் சிலர் கதைப்பதை நாம் கேட்க நேரிட்டால் அது "கொலை" என்றும் அட்டமத்துச்சனிக்காலத்தில் சிலரின் வெடிகளை வலிந்து நாமே சென்று கேட்பது "தற்க்கொலை" என்றும் குறிச்சொற்களால் தரப்படும் .எமது மட்டத்தில் இவ்வகையில் புகழ் பூத்த கொலையாளிகளாக ராக் தீபன்,வசந்தன்,அலி,தொப்புள் ரஜி,குடுமான்,கிட்டார் கிரி ஆகியோர் திகழ்ந்தனர்.இவர்கள் கொலையாளிகள் என்று தெரிந்தும் கிட்டப்போய் பேச்சைக்கொடுத்து தற்க்கொலைக்கு முயன்று மயிரிழையில் உயிர் பிழைத்தவர்கள் பலர்.இவர்களில் தொப்புள் ரஜியை தவிர மற்ற அனைவரும் திட்டமிட்டு நேர்த்தியாக ஏதோ ஒரு நோக்கத்தை அடைவதற்க்காக வெடித்து மற்றவர்களை கொலை செய்தனர்.ரஜீந்திர தாஸ் தனது பூச்சிய உலக அறிவு காரணமாக திட்டமிட்ட வெடிகளை செய்யும் வல்லமை இல்லாமல் இருந்தார்.குத்து மதிப்பா தனது அறிவைக்காட்ட கதைக்க வெளிக்கிட அவை பலருக்கும் "பார்ட்டி நேர சிரிப்பூட்டிகளாக" மாறிப்போயின.



அதில் மிகப்பரபரப்பூட்டிய வெடிதான் இது.இதை வாசிக்கும் பட்சத்தில் தொப்புள்ரஜிக்கு ஒருவரும் பெண்கொடுக்க மாட்டார்கள்.சம்பவம் முதலாம் வருடத்தின் 2 வது தவணைக்காலத்தில்,அத்துக்கோறளை கிழவன் வீட்டில் நள்ளிரவைத்தாண்டி நடந்தது.பெண்ணீயவாதி கமல்ஸ் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக சொல்லிக்கொண்டிருந்தார்.அதை சசிக்குமார் செவிமடுத்து வழிமொழிந்து கொண்டிருந்தார்.இடையிடையே தினேஸ் "பெண்கள் பாவம் தான்,ஆனா எல்லாப்பெண்களும் நல்லமெண்டு இல்லை" எனப்பல கருத்துக்களை விதைக்க, கிரி வக்சன் மார்க்கர் பேனையால் நோட்சுகளை கலராக்கிக்கொண்டிருக்க,சேது லெஸ்லி ஏதோ ஒரு பழம் பாட்டை வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டு இருக்க பேச்சு சூடு பிடித்தது."ஆண்கள் குடும்பத்தை காப்பாற்ற எவ்வளவு கஸ்டப்படுகிறார்கள்,பெண்களுக்கு வீதப்படி பார்த்தா கஸ்டம் இல்லையே.இப்ப கூட நாங்கள் இரவிரவா முழிச்சு படிக்கிறம்.ஆனா அவளவையில கனபேர் ஓஎல் ஓட நிப்பாட்டிப்போட்டு மேனிவனப்ப காட்டி ஆராவது புள்ள பூச்சிய மடக்கி கலியாணம் கட்டி வெளிநாடு போய் சொகுசா வாழுறாளவை"என்ற கருத்தை நான் முன்வைக்க இது கமல்ஸ்,தொப்புள் ரஜியால் நிராகரிக்கப்பட்டது.உலகிலேயே மிககொடூரமான வேதனையை தருவதான பிரசவத்தை நிகழ்த்தும் பெண்களை எந்தவகையிலும் குற்றம் சாட்ட முடியாது எனச்சொன்ன கமல்ஸ் பிரசவம் சம்பந்தமாக உயிரியல் புத்தகங்களில் படித்தவற்றை சொல்லத்தொடங்கினார்.......

ஏதாவது இந்த விடயம் தொடர்பில் கதைக்க வேண்டும் என வாடியிருந்த தொப்புள் ரஜி திடீரென குறுக்கிட்டு சொன்னார்.....


"மச்சான் நாங்கள் சில நேரம் 2 க்கு போகவே எவ்வளவு கஸ்டப்படுறம்,அந்த பாதையால ஒரு பிள்ளை வருதெண்டா எவ்வளவு கஸ்டப்படுவாளவை?.பாவமடா பெண்கள்"

எல்லோரும் உருண்டு உருண்டு சிரிப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தேன்.ஆனால அது நடக்கவில்லை.5 பேரும் ரஜிந்திரதாசை சீரியசாக் பார்தபடியிருந்தனர்.வசமா ஒருத்தன் சிக்கிட்டான்,அவனை எடுத்த எடுப்பிலேயே குதறுவானேன்? என்றெண்ணி அமைதியாகிவிட்டனர் போலும் என எண்டிக்கொண்டேன். மேன் மேலும் கதையைப்போட்டோம்.அவன் சும்மா காமெடிக்கு சொல்லவில்லை சீரியசாகத்தான் கதைக்கிறான் என முடிவு பண்ணும் வரை வாயை கிளறினோம்.போதும் எனப்பட்ட பின் "ஆனா அந்த பாதை இல்லையேடா" என சேது சொல்ல ரஜி ஆடு மாடு குட்டி போட்டத நேரில் பார்த்தகதைகளை சொல்லி "பாதையில் சந்தேகமே இல்லை,அதேதான்" என்று வாதிட தொடங்க எழுந்த சிரிப்பு அலைகள் அத்துக்கோறளை கதவை அடித்து தூசணத்தில் கத்தும் வரை நீண்டது.




தொப்புள்ரஜி காமெடிக்கு ஏ சான்றிதழ் தரலாம் என்றால் வசந்தனின் காமெடிகளில் பலவற்றுக்கு PG கொடுக்கலாம்.ஏனென்றால் எல்லாம் குழந்தைக்கால காமெடிகள்.மல்லாவியில் 3 வயதில் வசந்தன் செத்த யானை ஒண்டுக்கு மேல ஏறினவன்.4 வயதில வயசுக்கு வந்த வசந்தன் முதல்பாம்பு அடிச்சது 5 வயசில.இவ்வளவு அட்டகாசம் போட்டும் ஒரு முதலை கொஞ்சம் கூட பயம் இல்லாமல் வசந்தன் வீட்டுக்கு பக்கத்த வந்திட்டுது."முதலை,முதலை"என ஊர்ப்பெண்கள் கூச்சலிட்டதில் மல்லாவியே திரண்டு வந்து விட்டிருந்தது.பெரிய பெரிய பயில்வான்கள் எல்லாம் அடிக்கிறார்கள் முதலை மசியவில்லை.வசந்தன் வாறான்.பெரிய கல்லு ஒண்டை எடுத்து தலைக்கு மேலே தூக்கி முதலையின்ர மண்டைக்கு மேல ஒரே போடு.முதலை ஒருக்கா துள்ளி விழுகிறது.குனிந்து முதலையின் கண்ணைப் பார்க்கிறான்.கண்ணால் இரத்தம் ஒரு சொட்டு வந்து வெளியால் விழுகிறது.முதலை செத்ததாக வசந்தன் அறிவிக்கிறான்.ஊர் மக்கள் பாராட்டுகின்றனர்.அது வசந்தன் அச்சுவுக்கு தனியாக றூமில சொன்னது.8 வயசில் இது சாத்தியமா எண்டு யோசிச்சு மண்டய குடைஞ்ச அச்சு முடியாம இந்த கதய வெளியால விட்டுட்டான்.



இவர்களுக்கு அடுத்தபடியாக தரவரிசையில் 3வது நிலையை பிடிப்பவர் கிரிவக்சன்.இவரின் பெரும் வெடிகளை இங்கே எழுதப்போனால் அவர் இந்த புளொக்கில் இருந்தே நீங்கி விடும் அபாயம் உண்டென்பதால் அந்த "புகழ் பூத்த அரவிந்தசாமி" கதையை மட்டும் சொல்கிறேன்.கிரி ஒருதடவை என்னை தனது மாமா வீட்டுக்கு அழைத்துப்போனான்.போறவழியில சொன்னான் "டேய் என்ர மாமா அரவிந்தசாமி மாதிரி இருப்பார்,நல்ல வடிவு,வந்து பாரன்" எண்டு.போய் பார்த்தேன்.ஒன்றும் பேசாமல் வாற வழியில் " ஓமடா நீ சொன்னது உண்மைதான்" என ஒரு பொய்யை சொல்லி விட்டு பேசாமல் வந்துவிட்டேன்.(பிற்க்காலத்தில் இக்கதையை செந்திலுக்கு,சிவகரனுக்கு நான் சொல்லப்போக அவர்களுக்கும் கிரிவக்சன் இவைகளை ஏற்க்கெனவே சொல்லி விட்டது தெரிந்தது.).கமலகாசனின் பாடல்களை போட்டுவிட்டு "என்ன வடிவா இருக்கிறாண்டா,அவன்ர கலரும்,முகவெட்டும் வேற யாருக்கு இருக்கு,கட்டையெண்டாலும் ஹண்ட்சம் மச்சான்" என கிரி அடிக்கடி புல்லரிப்பதை பார்த்து விட்டு பலரும் பப்பாவில் ஏத்த ஒரு நாள் அந்த உள்மனநினைவு வெளிப்பட்டு விட்டது.அதாவது கிரிவக்சன் தன்னை ஒரு கமலகாசனின் குளோன் என்று ஆழமாக நம்புகிறான் என்பது வெளிப்பட்டு விட்டது.பிறகு ஒரு நாள் சொன்னான் "எனர மச்சாள் திரிசா மாதிரி எண்டு பெடியள் எல்லாம் கலைக்கிறாங்கள்,ஆனா எனக்கு அவள்ல ஆர்வம் இல்லைடா".ஆக மொத்ததில் கிரி சுத்தி சுத்தி தனது உறவு,குடும்பங்களில் 90% மானவர்களை நடிக,நடிகைகளுடன் ஒப்பிட்டிருக்கிறான் என்பது 4ம் வருட முடிவில்த்தான் தெரிய வந்தது.

இவர்களை விட வரிசைப்படுத்தலில் மெகா வெடியர்களான ஓபி,சசி,ராக் தீபன் ஆகியோரை உள்ளடக்கவில்லை.அடக்க முடியவில்லை என்பதே உண்மை.அதற்க்கு ஒரு முழு நீள காவியமே எழுதவேண்டும்.அல்லாவிட்டால் பாற்க்கடலை நக்கி குடிக்க பூனை வெளிக்கிட்டது போல ஆகிவிடும்.

.


டைரக்டர் டயறி


தினக்குறிப்பு எழுதுவது எனக்கு பிடித்தமானது.கடந்து போன நினைவுகளை மீட்க மிக வலுவான சாதனம் அது.மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் நண்பர்கள் குழாம் கிடைத்த பின்பாடு கடக்கும் ஒவ்வொரு நாட்களும் சந்தோசமாகவே போயின. ஒவ்வொரு நாளும் படுக்கைக்கு போக முன்னர் அரை மணித்தியாலங்கள் வரை எழுத செலவிடுவேன்.காலமை எழும்பினது,லெக்சர் மட்டம் போட்டது,ஸ்டோன் பெஞ்சில் இருந்து பிகர் பார்த்தது,யார் யாருக்கு ஆப்பிட்டது?,யார் யாருக்கு குப்பி எடுத்தது?,எவனுக்கு எவள் செட் ஆனது போண்ற முக்கிய விடயங்கள் முதல்க்கொண்டு ரவிகடை கொத்து வரையான சாதாரண விடயங்கள் வரை பதிவேன்.(இந்தச்சொல்லை வைத்துக்கொண்டு "இவனும் அந்த பதியுற சங்க ஆள் சந்திப்புக்கெல்லாம் போவான் போல" எண்டு பயப்பட வேண்டாம்).சுய தணிக்கை,பூசி மறைப்பு போண்ற வேடமிடவேண்டிய தேவைகள் தினக்குறிப்பு எழுதும் போது இருப்பதில்லை ஆதலால் மனதில் ஓடுவது எல்லாமே எழுத்துக்களாகின.வருடங்கள் கழிந்து அமைதியான இரவுப்பொழுதுகளிலே பல ஆயிரம் மைல்களுக்கப்பாலிருந்து அந்தப்பக்கங்களை தட்டும் போது முழுக்காட்சியும் மனதுள் விரியும்.எந்த ஒருகவலையும்,பொறுப்புக்களும் இல்லாமல் இருந்த அந்த நாட்கள் மீட்க்கப்படும் போது ஒவ்வொன்றும் ஒவ்வொரு திரைப்படங்களாய் நீண்டு இனம் பிரியாத ஒரு மகிழ்ச்சியை,இழையோடும் சோகத்தை தந்து போகின்றன.

கனாக்காலத்துக்காக ஏதாவது எழுதலாம் என்று நினைத்தால் ஒன்றுமே இப்போது தோன்றுவதில்லை.அப்படி ஏதாவது மினெக்கெட்டு எழுதினாலும் ஒருத்தரும் கருத்துக்களை பகிர்வதில்லை.ஒரு பத்துப்பேர் படிப்பதற்க்காக எழுதுவதை விட கொடுமையானது ஒன்றுமில்லை.சரி எல்லாரும் நம்மை போல வெட்டிப்பயலா நேரமில்லாம இருக்கிறாங்கள் போல எண்டு மனதை தேற்றினலும் ஒவ்வொருத்தனும் முகப்புத்தகத்தில பெண்களுக்கு வாளி வைத்து,பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து,அவை அனுப்பிற பாடலுகளில விருப்பப்பட்டு,கவிதையா பின்னூட்டமிட்டு போடுற கும்மாளம் மனதை பற்றி எரிய வைக்குது.கன காலமா புளொக்கில எழுதிவாற ஒரு நண்பர் கேட்டார்.....

"டேய் அதில 30 பேருக்கு கிட்ட இருக்கிறாங்களே.அதில ஒரு 5 பேருக்கு கூட பின்னூட்டமிட நேரமில்லையா?,என்னதான் 4 வருசம் ஒண்டா படிச்சனியளோ? எண்டு.

நான் அவருக்கு காட்டமா சொன்னேன்....
"4 வருசமா ஒண்டா இருந்து நம்மட பெடியள பற்றி நல்லா நான் புரிஞ்சு வைச்சிருக்கிறன்.அவங்கள் ஒரு இடத்தில எழுதோணும் எண்டா அங்க பெண்வாசனை அடிக்கோணும்,இல்லாட்டி பப்ளிசிட்டி கிடைக்கோணும்.இது ரண்டும் இல்லாமல் எப்படி வருவாங்கள்?, அதோட நம்மட சனம் வேண்டுதல் பலிக்க தேரிழுக்கிறதில மட்டும் தானே ஒற்றுமையா இருக்கிறதுகள்.பொது விடயம் எண்டா குழிபறிப்பும் புறக்கணிப்பும் தானே செய்யுறதுகள்? மரபணுவில படிஞ்சு போன ஒரு குணவியல்பை வைச்சுக்கொண்டு நம்ம மொறா 2003 மட்ட பெடிபெட்டையள்ல குறை சொல்ல முடியாது தானேடா?"

நண்பர் எனது கருத்தை ஆமோதித்து தலையை ஆட்டுகிறார்.நான் வீடு வந்து அந்த கனாக்காலத்துக்கு காலப்பயணம் செய்ய விரும்பி பழைய தினக்குறிப்பு ஒன்றில் மூழ்குகிறேன்.



2007 ஆம் ஆண்டு ஆனி மாதம் 20ஆம் திகதி.புதன் கிழமை.

அறிவகக்காரர் படம் எடுக்கிறாங்கள் எண்டதால 7ஜி பிளஸ் தலமையகத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டிருந்தது."மச்சான் ஓவரா சவுண்டு குடுக்குறாங்கள் விடப்படாது" எண்டு அச்சு ஒரே பிடியா நிண்டான்."போய்ஸ் படத்த உல்டா பண்ணி எடுப்பமடா,அதில சித்தார்த் மாதிரி இதில நான்,எப்பிடி?" என்க ஓபி கையில கிடைச்ச எதாலயோ அச்சுவுக்கு எறிஞ்சான்.நானோ வேட்டையாடு விளையாடு பார்த்த பாதிப்பிலிருந்தேன்.டேய் "அதில கமல் ஆக்கள போட்டுத்தள்ளினவங்கள தேடி நியூயோர்க் போன மாதிரி இதில நோட்ச சுட்டவங்கள தேடி சேகர் பெராக்கு போறார்" என்று கதய வைப்பம் என்று விவாதத்தினிடையே அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தேன்.போடா "நீயும் உன்ர கதயும் நோட்ச சுடுறதெல்லாம் ஒரு கதயாடா?" எண்டு என்கதைக்கருவை அடிக்கடி ஓபி அவமானப்படுத்திக்கொண்டிருந்தான்.சூடான விவாத நடுவில அப்பாஸ் புறஜெக்ட் புறப்போசல் எழுத என்னை அழைக்க உடனடியாய் முடிவு எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் தொற்றிக்கொண்டது.சரி ஏதோ நீ நினைச்சபடியே எடுப்பம்.ஆனா இந்த கதை சரிவராது எண்டு ஓபி திருவாய் மலர்ந்து வழியனுப்பினான்.

21-06-2007,வியாழக்கிழமை.

அதிரடி ஹீரோ சேகருக்கு அறிமுகப்பாடல் தேவைப்பட்டது.நண்பர்களின் ஏகோபித்த முடிவுடன் இரக்கமின்றி கற்க கற்க பாடல் சுடப்பட்டது.பதுவிதான ஹொஸ்டல் வளாகத்தில் சேகர் போற வாற பெடியளுக்கெல்லாம் பேப்பர் வெடி அடிக்கிறான்,ஷவரில நிண்டு துள்ளுறான்,படிக்கட்டு கைப்பிடியில சறுக்கி குதிக்கிறான்.எல்லாத்தையும் "அருமை,கலக்கல் நடிப்பு"என்று பாராட்டிக்கொண்டு வீடியோ எடுத்துக்கொண்டிருந்தேன்.மூவி மேக்கரில் எடிடிங் லைனில் காணொளிகளை போட்டு ஓட்டிக்காட்ட நம்ம பெடியள்ட முகத்தில் ஒரு நம்பிக்கை.பிற்பகல் டைரக்டர் பவானின் சூட்டிங்க்கு அறிவகம் வருவதாய் சில நாள் முன் வாக்களித்திருந்தேன்.ஆனால் வழமை போல எம் பிரச்சினை உருவாக்கிகளான அச்சு,சௌந்தர்,சுதன் ஆகியோர் பிடித்துக்கொண்டார்கள்."நீ போகேலாது,போனா இங்க படம் எடுக்க வரேலாது" என்று .ஒரு மாதிரி இவங்களை வெட்டி அங்க போனா அங்கே சசி,சின்ரா,சிறிப்பிரகஸ் கேட்டார்கள் "ஏண்டா தமிழனெண்டா ஒற்றுமையா ஒரு வேலைய செய்ய மாட்டியளா?".எனக்கு சிரிப்பு பீறிட்டுக்கொண்டு வந்தது.ஒற்றுமைய பற்றி இவங்கள் கதைக்கிற அளவுக்கு நிலவரம் படுமோசம் எண்டு அடக்கிக்கொண்டேன்.கமெரா மேனாகிய சசி அப்பிடி வா இப்பிடி வா எண்டு சொல்லிக்கொண்டிருந்தான்.பவான் கதைவசனத்தை தந்து உச்சரிக்கச்சொன்னான்.இடையே உச்சரிப்பில் பிழை விட்டுவிட்டேன்.இதுக்கெண்டே காத்திருந்தது போல சின்ரா சொன்னான் "ஒழுங்கா சொல்ல தெரியாது,இதுக்க படம் வேற எடுக்க வெளிக்கிட்டாய்".கிட்டத்தட்ட நான் அழாக்குறையாக றூமுக்கு போய் காலை எடுத்த காணொளிகளை எடிட் பண்ண தொடங்கினேன்.சிவகரன்,கிரி,ஹரிசன் கருத்துக்கள் சொல்லி நல்ல வடிவமைப்புக்கு வழிவகுத்தார்கள்.



22-06-2007,வெள்ளிக்கிழமை.

"சேகர் நீ 20 பேர பிரிச்சு மேயுற மாதிரி சீன் வைக்கிறன்" என்க சேகர் பரபரத்தான்.ஒவ்வொருத்தனா போனடிச்சு வரச்சொன்னேன்.கிரிவக்சன்,தீபரூபன்,ரஜித்,அச்சு,வசந்தன்,சௌந்தர்,சிவகரன்.கரிசன்,NDT நண்பர்களான குமரன்,சிவகரன் என 10 பேர மட்டுமே பிடிக்க முடிஞ்சுது.நான் வித்தியாசமா கமெரா வைக்கிறன் எண்டு நினைச்சு மரத்தில ஏறிட்டன்.2 கமெரா இருந்தது.ஒண்டு ரஜித் தந்தது.மற்றது தயந்தன் காலை தந்தது.ஒருகட்டத்தில் சேகர் உசுப்பேறி உண்மையா எல்லாருக்கும் அடிக்க வெளிக்கிட்டான்.ரஜித்,கிரி,ராக் தீபன் ஆகியோருக்கு இது தான் சந்தர்ப்பம் எண்டு குத்தி குமுறிட்டான்.அதன் பிற்பாடு "எல்லாம் சரி அந்த ரவுடிய தாக்குற மாதிரி சீன் ஒண்டு வைப்பமடா" என்க பெடியள் எல்லோர் முகத்திலும் ஆயிரம் பல்ப்பு எரிஞ்ச மாதிரி பிரகாசம்.பாய்ஞ்சடிச்சு ஐடியா குடுத்தாங்கள்.கிரிக்கு "பாமன் கடை பன்னி" எண்டு பேர் சூட்டப்பட்டது.கிரி சொன்னான் மச்சான்"நான் பிடியுங்கடா" எண்ட எல்லாரும் "என்னை பாய்ஞ்சு பிடிக்கட்டும்" சீன் செம கடியா வரும் எண்டு.இருள் கவ்விக்கொண்டிருந்தது.ஹீரோவின் புயபலத்தை காட்ட 10 பேர தூக்கி எறிஞ்சாத்தான் சரிவரும் என் முடிவெடுத்து "ஆக்சன்" எண்டு கத்திப்போட்டு பார்த்தா 9 பேர் விழுந்திட்டாங்கள் ஒருதன் மெதுவா குந்தி இருக்கிறான்.அட ஆர்ரா சனியன் எண்டு பார்த்தா "நம்ம வவுனியா ரவுடி ஜெயசுதன்".நான் கெட்ட வார்த்தையால் திட்ட அவன் திருப்பி கத்திட்டு சொன்னான் "டேய் ஏலுமெண்டா நீ வந்து நடியடா".மரத்தில இருந்து குதித்தே விட்டேன்.கமெராவ பிடிக்கிறது எப்படி எண்டு சொல்லிக்கொடுத்து விட்டு கீழ வந்து 10 பேரும் பாய்ந்து விழுந்தோம்.எல்லார் முகத்திலும் ஒரு கலக்கம். "இவன் றெக்கோட் பட்டனை அமத்தாமலும் விடக்கூடிய ஆள்" அச்சு காதருகே கிசுகிசுத்தான்.நல்லவேளையாக அவன் வழமை போல அன்று செயற்ப்படவில்லை.6 மணியளவில் எல்லோரும் எல் கண்டீன் போய் சாப்பிட்டோம்.சகலரின் பேச்சும் அறிவகத்தினை மடக்கோணும் என்பது குறித்தே இருந்தது.



23-06-2007,சனிக்கிழமை

ஹீரோ களவு போன நோட்ச தேடி போகவேண்டும்.வழமையா நோட்ச சுடுறவங்கள் அத றூமில தானே ஒளிச்சு வைப்பாங்கள்.ஆனா இங்க வாற நோட்ச சுட்டவங்கள் ஒரு வகையான சைக்கோ கேசுகள்.(நிஜத்திலும் அது உண்மைதான்).எனவே நோட்ச காட்டுக்க ஒளிச்சு வைக்கிறாங்கள்.சீனை (???) விளக்கி விட்டு "அப்ப சேகர் வாடா காட்டுக்க போய் தேடுவம்" எண்டு கஜு காட்டுக்க இறங்கிட்டேன்.சேகர் ஒரு விசரனை பார்க்கிற மாதிரி என்னை பார்த்துக்கொண்டு வந்து கொண்டிருந்தான்.அச்சு இரட்டை வேடத்தில் நடிக்கப்போறன் எண்டு சொல்லி அடிக்கடி பயமுறுத்திக்கொண்டிருந்தான்.11 மணிக்கு படகுதுறையில் வெளிக்கிட்டு டேஞ்சர் வந்து சேர 3மணி ஆனது.அப்ப கேதா வந்து சேர்ந்தான்.சீனை நான் விளக்க முதல் அவன் என்னை விளக்கு விளக்கு எண்டு விளக்கிட்டான்.நான் யோசித்ததை விட அவன் சொன்ன வசனங்கள் அருமையாக இருந்தன.பேட்டி எடுக்கும் சீன் எடுத்துக்கொன்டிருந்த போது சேகர் போட்ட அதிரடியில் அச்சுவின் போன் நெறுங்கிப்போனது."எக்பிறஸ் ஸ்ரேசன்" (கிரி வக்சன் அதிவிரைவு ரெயில் இங்கு இருந்தே காலை கிளம்பி விரிவுரை முடிந்ததும் மாலை திரும்பும்.) போகும் வழியில் அறிவகம் போனேன்.சின்ரா "எந்தப்படம் ஓடுது பார்ப்பமடா" என்க இன்னும் போட்டி சூடு பிடித்தது.



24-06-2007 தொடக்கம் 26-06-2007

ஹீரோ மொறட்டுவவில் துப்பறிவது தொடக்கம் பெராதெனியாவில் தேடுவது வரையான காட்சிகளை படமாக்கினோம்.கிளைமாக்ஸ் காட்சி எடுப்பத்ற்க்காக வில்லன்கள் இருவரையும் பிடிப்பது மிகக்கடினமாக இருந்தது.சங்கமம் புத்தக வேலைகளை செய்யும் பொறுப்பு இருவரிலும் சுமத்தப்பட்டிருந்ததால் ஏகத்துக்கு பந்தா விட்டு திரிந்தார்கள்.குத்து மதிப்பாக எடுக்கத்திருந்த காணொளிகளை ஒன்று சேர்த்த போது தொடர்ச்சி சிதைந்து போனது.இந்த தவற்றை திருத்த கதையோட்டத்தை பெருமளவில் திருத்த வேண்டியதாயிற்று.

27-06-2007,புதன் கிழமை

வில்லன்களான அலியப்பாவும் ,சௌந்தரும் இரக்கப்பட்டு கால்சீட் தந்துவிட்டார்கள் என்ற மகிழ்வோடு ஹொஸ்டலுக்கு போனால் நாயகனும் வில்லனும் வெள்ள வத்தை புறப்பட தயாராகிக்கொண்டிருந்தனர்.கன காலமா அவவ காணாமல் நாயகன் தவித்துப்போய் சூட்டிங்க விட அவ்வோடான சட்டிங்கே பெரிது என முடிவெடுத்து கிளம்ப முயன்ற வேளை கையும் களவுமாய் பிடித்தேன்.நாயகன் "டேய் சீன் இன்னும் இருக்கோடா"எண்டு சமாளிச்சுக்கொண்டு திரும்பி விட்டார்.ஆனால் பந்தாக்கு அரசனான அலியப்பா அசராமல் போய்விட்டான்.பிற்பகல் அலியப்பா வர படகுத்துறையருகே படப்பிடிப்பு தொடங்கியது.வேகமாய் எல்லாம் எடுத்துக்கொண்டிருந்தேன்."ரியாலிட்டி வேணுமடா" என சொல்லிச்சொல்லி அலியப்பா சேகரை பலதடவை மோசமாக தாக்கிவிட்டான்."கடைசியா கட்டையால தலையில அடிபட்டுத்தான் நான் மயங்கோணும்.அதுவரை வெறித்தனமா நான் அடிபடுவன்.ஏணண்டா நான் ஒரு பயங்கர முரட்டு வில்லன்,சரியோ?" எண்டது தொடங்கி இந்தக்கட்டை என்னில அடிபட்டு சில்லுச்சில்லா சிதறவேணும் எண்டு சொல்லியபடி ஒரு பெரிய கொட்டனை காட்டி அலுப்படிச்சது வரை அலியப்பா அட்டகாசம் தாங்க முடியல.எல்லாம் நல்லா போய்க்கொண்டிருத போது தான் கட்டுப்பெத்தை கற்பரசி சுலைக்சியும்,வேற்றினப்பெண் குமாரியும் படகு வலிக்க வந்தார்கள். அலியப்பாவின் காட்டுடலழகை கண்டோ என்னவோ அந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு மொக்கை போட ஆரம்பித்தனர்.கடுப்பில் இடம் மாறி அரைகுறையாய் முடித்து அறை மீண்டேன்.அதிகாலை 4 மணி வரை எடிடிங்.



28-06-2007,வியாழக்கிழமை

உறங்கப்போனது 4 மணிக்கு.காலை 5 மணிக்கு எமது டாக்டர்(?????) நிலாந்தி அம்மையாரின் பாடத்தின் "factory visit"க்கு போக வேண்டு.5 மணிக்கு எழுந்து முகம் கூட கழுவாமல் ஓட நான் என்ன ஜெயசுதனா?.போய்ச்சேர 5.15 ஆனது.நிலா நிக்கவச்சு காய்ச்சி எடுத்தது.பஸ் ஓடிக்கொண்டிருந்த்து.எனக்கோ நாளை மறுதினம் சங்கமத்துக்கு திரையிடுவது சாத்தியமா? என்ற பயம் தொற்றிக்கொண்டிருந்தது.அருகே பார்த்தேன் கபோதி நாயகன் சசி இயர் போனில் காதல் பாடலை ஓட்டிவிட்டி கனாக்கண்டு கொண்டிருந்தார்.தட்டி எழுப்பி "சசி யார்ட படம் ஓடுது பாப்பமோ?,டேய் நம்மட படம் 100கிமீ/மணி வேகம்" என்றேன்.சசி சொன்னான்"நம்மட 80 கிமீ/மணி வேகம்தான்.ஆனா திடீரெண்டு பாய்ஞ்சு 150கிமீ/மணியில் போகும்".பதிலேது எனக்கு சொல்ல வரவில்லை.நிலாவின் வதை முடித்து மீள 4 ஆனது.டப்பிங்,எடிடிங் என ஹொஸ்டலில் 3 மணிவரை நீண்டது.

29-06-2007,வெள்ளிக்கிழமை.

இன்று எடிடிங் முழுமைப்படுத்தியாக வேண்டும்.சேகர் தொலை பேசியில் உரையாடும் காட்சியை எடுத்து விட்டு 3 மணிவரை பார்த்துக்கொண்டிருந்தோம்.ஒரு விஐபி வரவேண்டும்.வேற யார் நம்ம குடுமான் தான்.அவர் நடித்து தந்த 5 நிமிட நீளமான காட்சியை குப்பை என சொல்லி நான் தூக்கியதால் "நான் நடிச்சத தூக்க நீ யார்டா" எண்ட கடுப்பில் இருந்தார்.அதனால் சில நாட்க்களாக சூட்டிங்கை புறக்கணித்து வழமைபோல தனது வேலைகளை செய்து கொண்டிருந்தார்.கடைசியா 4 மணிக்கு வந்து அரை மணித்தியாலம் கால்சீட் தர வேகமாக சிவில்டிப்பார்ட்மெண்ட் முன்பாக காணொளிப்படுத்தினோம்.இரவு ஒரு மணித்தியாலம் தான் தூக்கம் கிடைத்தது.பிழை பிழையா டப்பிங் பேசி அச்சு வதைத்துக்கொண்டிருந்தான்.



30-06-2007,சனிக்கிழமை,சங்கமம் 2007.

இன்று சங்கமம்.உறக்கமில்லா விழிகளோடு அச்சுவும் நானும் எடிடிங் செய்து கொண்டிருந்தோம்.ஒருவாறு முதல் பிரதி எடுக்க பிற்பகல் 1மணி ஆயிற்று.மீள மீள ஓட்டிப்பார்க்கப்பட்டு கருத்துக்கள் நண்பர்களிடம் கேட்க்கப்பட்டு திருத்தங்கள் செய்த படி இருந்தோம்.4 மணியளவில் அச்சு செய்திருந்த முன்னோட்டத்தை போட்டு பரீட்ச்சிக்கும் படி ஜெயசுதனை அனுப்பிவிட்டு நான் அறை திரும்பினேன்.நண்பர்கள் ஆரவாரமாய் சங்கமத்துக்கு தயாராகிக்கொண்டிருதனர்.குடுமானிடமிருந்து தொலை பேசி அழைப்பி வருகிறது.என்ன இழவோ என்ற கடுப்புடன் றிசீவ் பண்ணுகிறேன் "மச்சான் ரெயிலர் பிச்சு உதறுது,பெடியள் எல்லாம் கூ அடிக்கிறாங்கள்,நீ கெதியா வாடா" என்கிறான்.தூக்கமில்லா களைப்பு விலகி உற்சாக்ம் பீறிட வேகமாக நடக்கிறேன் விழா மண்டபத்தை நோக்கி.....

*************************************************************************************
நண்பர்கள் பலரிடம் சேர்க்கப்பட்ட அனுபவ நினைவுகளை ஆதரமாய்க்கொண்டு முழு சங்கமம் நிகழ்வையும் ஒரு பொதுக்கண்ணோட்டத்தில் விரைவில் எழுதுவேன்.

இப்பதிவு பல்கலைவாழ்க்கை பற்றிய ஒரு தனிமனிதனின் பார்வையாகும்.சுயதம்பட்டமோ,பப்ளிசிட்டியோ எனது நோக்கமல்ல.எல்லோரும் தங்கள் பார்வையில் நடந்த இனிப்பன நினைவுகளை இங்கே பதிவிடலாம்.முகம் தெரியா பல்லாயிரம் பேருக்காக சீரியஸ் பதிவராக வேடம் கொள்வதை விட முகம் தெரிந்த சுகதுக்கங்களில் பங்கெடுத்த 10 நண்பர்கள் படிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு எழுதுவதில் உள்ள ஆத்மதிருப்தி அலாதியானது.

7ஜி+,காம்ப் கூட்டுத்தயாரிப்பான பில்லா2007 திரைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

PART-01



PART-02



PART-03



PART-04



PART-05

.


"அலியப்பா நல்லா மைண்ட றீட்(mind reading) பண்ணுவானாம்.றிங்கோ உமாக்கும் அந்த பவர் இருக்காம்.பவானும் கொஞ்சம் மைண்ட வாசிப்பான் ஆனா அலியப்பா றேஞ்சுக்கு இல்லையாம்"

இதெல்லாம் 3ம் வருடத்தில றெயினிங் முடிச்சிட்டு வந்தாப்பிறகு பரபரப்பா அடிபட்ட விடயங்களில் குறிப்பிடற்குரியவை.ரெயினிங் காலத்தில உட்க்கார்ந்தது யோசிக்க நம்ம பெடியளுக்கு நேரம் கிடைத்ததே இப்படியான உள ஆராட்சிகளுக்கு வெளிக்கிட்டதுக்கு காரணமாய் இருந்திருக்க வேண்டும்.காரசாரமாய் விவாதித்துக்கொண்டிருக்கும் போது பாதகமான விடயம் ஒன்றை "நீ இதைத்தானே மனதில வச்சு அந்த கடுப்ப காட்ட கதைக்கிறாய்" என்று அலியப்பா போட "அட அப்படி இல்லையடா" என நான் மறுக்க இல்லை "நீ அப்படித்தான் நீ நினைக்கிறாய்,நான் உன்ர மைண்ட றீட் பண்ணிட்டன்" என்று செப்ப எனக்கு அறிமுகமானதுதான் மைண்ட்றீடிங்(mind reading) எண்ட விசயம்.



"அலியப்பாட்ட அந்த மனச வாசிக்கிற கலைய சொல்லித்தாடா" எண்டு கேட்க்க அவன் சிம்பிளா சொன்னான்.முதல்ல ஒவ்வொருதனை பற்றியும் ஒவ்வொரு கருத்துச்சுருக்கம் வைச்சிருக்கணும்.

அதாவது தீபரூபன் எண்டா வெடியன்.
கிரிவக்சன்,சிவனுஜன் எண்டா பப்பாமரம்.
கமல்ஸ்,ஜெயசுதன் எண்டா அரசியல்.
கொழும்பு சசி -பலான பேர்வழி
அச்சுதன் - காதல்க்கிறுக்கன்.
சிறீஸ் காந்த்,கிரிவக்சன் - காட்டுக்குத்து.
கௌதமன்,கிட்டு,மது,அச்சுதன் - வெற்றிகரமான வாளிகள்.
சௌந்தர்,ஜெசுதன்,பவான் - பெ.பு.கணிக்கப்பட்ட வாளிகள்.
சிறி- நல்ல பிள்ளை வேடதாரி.


இந்த குறியீட்டுச்சொற்கள் அவனவனோட கதைக்க தொடங்கின உடன நினைவுக்கு வாறதிலதான் மைண்ட் றீடிங்கிட வெற்றி தங்கியிருக்கு.

"நீயும் உனக்குள்ள ஒவ்வொருத்தனையும் வரையறு.பிறகு மைண்ட றீட் பண்ண வெளிக்கிடு.ஆனா ஒரு விசயம் நான் வரையறுத்தது போல நீயும் அறுக்கோணும் எண்டில்லை". அலியப்பா விட்ட இந்த மன வாசிப்பு விசயத்தை வைத்தே அவனை தாக்கு தாக்கு எண்டு வருசக்கணக்கில் போட்டுத்தாக்கினோம்.


பிறகு இந்தக்கலையின் முக்கியத்துவம் உணர்ந்து மைண்ட் றீடிங் பழகி நான் வாசிச்ச முதல் மைண்ட் சசியினுடையது.சசி எக்ஸாம் வந்தா தனியத்தான் படிக்கும்.நாங்கள் கூட்டமாக இருந்து கும்மியடிப்போம்.சசி தன்ர நோட்ஸ்ச ஒருத்தருக்கும் தராது.நாங்கள் ஒரு நோட்ஸை பலரும் படிப்போம்.எக்ஸாம் நாட்களில் டேஞ்சர்,கொட உட,நூலகம் என கரையும் பொழுதுகளில் ரவிகடை,றோயல் என உணவருந்தப்போகும் போது "அந்தப்பாடம் முழுக்க முடிஞ்சுது,பாஸ் பேப்பர் செய்தா சரி.ரியாசின்ர குப்பி நல்லா பிரியோசனப்பட்டுது,ஒரு "B" க்கு மேல எடுக்கலாம் எண்ட நம்பிக்கை இருக்கு" எண்டு பலமாக கதைப்பேன்.சாப்பிட வந்த சசிக்கு வயத்தகலக்க எழும்பி போய் விடும்.பிறகு தனியாப்போய் ரியாசோட "குப்பிக்கு ஏன்டா சொல்லேல" எண்டு சசி பிரச்சினைப்படும்.அதை ரியாஸ் எங்களுக்கு வந்து சொல்ல பிறகு என்ன ஒரே காமெடிதான்.
இத நான் பெருமையா "சசிட மைண்ட றீட் பண்ணி அவனுக்கேத்த மாதிரி கதைச்சு குழப்பிட்டன்" எண்டு சொல்ல அவண்ட றூம் மேட்களான பிரகலாதன்,ஜெசி,செல்வா எல்லாம் என்னை ஒரு பிடி பிடிச்சிட்டாங்கள்.

"சசிட மைண்ட ஊரே வாசிக்கலாம்.அது ஒரு நிறைஞ்ச மனசு ,அத எவனும் போட்டு தாக்கலாம்,டேய் ஒரு பாலர் வகுப்பு பிள்ளை கூட சசிட மனச வாசிக்குமடா.போடா நீயும் உன்ர மனச வாசிக்கிறதும்".

இந்த தாக்குதலோட என்ர மைண்ட் றீடிங் படு மோசம் என உணர்ந்து பம்மி விட்டேன்.
அதுக்கு பிறகு நீயூகொஸ்டலுக்கு போனாப்பிறகு ஒரு வித்தியாசமான மைண்ட் றீடரை சந்தித்தேன்.அவர் ஒரு மன வாசிப்பாளர் என்பது தெரியாமலேயே முன்பு ஒரு சமயத்தில் அவர் மனதையே வாசிக்க முயன்று நான் கடும் எதிர்தாக்குதலை சந்தித்ருந்தேன். அவர் ஒரு ஓர்கன் வாசிப்பவர்.அவர் இசை மீட்டினால் சுற்று வட்டாரத்தில் எல்லோரும் நிம்மதி இழப்பர்.அடிக்கடி அவர் றூமுக்கு சென்று வந்த நான் அலியப்பா முறைப்படி அவர் "மைண்ட றீட்" பண்ணினேன்.

ஆளப்பற்றின கருத்துச்சுருக்கம்- பெண்களால் பு.கணிக்கப்பட்ட வாளி.
சூழல்-படிப்பு,திரைப்படம்,பெண்கள் பற்றிய ஆர்வம்.


எனவே அவர் இசை மீட்டுவது நிச்சயம் படிப்பு நோக்கத்துக்காக அல்ல.திரைப்பட இசையமைப்பு என்ற விபரீத நோக்கம் இருக்குமென்று எனக்கு பிடிபட வில்லை.எனவே பெண்கள் சம்பந்தப்பட்ட,அதாவது பெண்களைக் கவரவே இந்த ஓர்கன் வாசிப்பு என்று அவர் மைண்ட எக்குத்தப்பாக வாசித்து விட்டேன்.உதவிக்கு சிக்மெண்ட் பிரய்ட்டின்ர கருத்தையும் இழுத்துவிட்டு "மச்சான் நீ செய்யிரது எல்லாமே பெண்கள் பார்வையை உன் நோக்கி திருப்பவேண்டும் எண்ட ஒரே காரணத்துக்காகத்தான்" என்று என்னோட மைண்ட்றீட் முடிவை வெளியிட அறைக்குள் பூகம்பம் வெடிக்காதது ஒண்டு தான் குறை.

இது நடந்தது அவர் ஒரு மன வாசிப்பாளர் என்பது எனக்கு தெரிந்திருக்காத போது.ஆனால் பிறகு (நியூ ஹொஸ்டல் வந்த பிறகு) அவர் என்னை விட பல மடங்கு பெரிய "மைண்ட் றீடர்" என்பதை தாமதமாக புரிந்து கொண்டேன்."டேய்" என்று மேல் மாடியிலிருந்து அழைத்து அவர் கீழறையில் இருப்பதை உறுதி செய்து விட்டு போவேன்.மணிக்கணக்கில் அவர் றீட் பண்ணின மனசுகள் பற்றி அவர் சொல்லக்கேட்டுக்கொண்டு இருப்பேன்.எல்லாமே இளம் பெண்களின் மனங்கள்.என்னப்போல பந்தா பிடிச்ச பெடியங்கள்ட மைண்டுகளை அவர் வாசிச்சு நேர விரயம் செய்யவில்லை.தெரிந்தெடுத்து தேவதைகளின் மனசுகளாய் வாசிச்சு வைத்திருந்தார்.அவர் வாசிப்பில் எல்லா தேவதைகளும் பிசாசுகளை விட கொடூரமாக,ஒழுக்கம் கெட்டவர்களாக படிக்கப்பட்டிருந்தார்கள்.ஆரம்பத்தில் அவர் சொல்வதை நம்ப மறுத்த நம்மில் பலர் பல்கலை காலம் முடிந்து வெகு நாட்களின் பின்னரே அவையெல்லாம் 100% துல்லியமான மனவாசிப்புக்கள் என்பதை நேரடி ஆதாரங்கள் மூலமாக அறிந்து கொண்டோம்.அவரது பெயரை குறிப்பிட நான் விரும்பவில்லை.ஆனால் என் மீது மனநலம் குன்றிய ஒரு ஜூனியர் மாணவி துஸ்பிரயோக வழக்கு போட்டபோது அவர் தந்த நூல்கள்,அறிவுரைகள் என் மன நிலையை எள்ளளவும் குன்றாமல் பாதுகாத்தன.



இன்னொரு பிரபல "மைண்ட் றீடர்" றிங்கோ உமா காந்தன்.சாத்திரம்,கைரேகை பார்த்தல் எல்லாம் அத்துப்படி.காதல் விவகாரங்களில் உமாவிட்ட "அது மாட்டுமா?,மாட்டாதா?"என்று பலன் பார்த்தவர்கள் பலர்.ஆனால் அவன் என்ர மனச வாசிச்சு ஒரு முடிவு கட்டி வைத்திருந்தான்."நீ ஜிம் போறது கமெராவோட திரியுறது,படம் எடுத்து எல்லாத்துக்கும் உன்ர பெயர போடுறது எல்லாமே பெண்களை கவரத்தான்" என்பது.அவன் சொல்றது குறிப்பிட்ட அளவு உண்மை தான்.பெண் பார்வை படுவதை விரும்பாத ஆண் உலகில் உண்டோ.எந்த சுழியோடி என்றாலும் இதற்க்கு விதி விலக்கு அல்ல.

சக நண்பர்கள் சிலர் மைண்ட றீட் பண்ணி எடுத்திருந்த பழைய வாசிப்புக்கள் -(இதை take it easy யாக எடுக்க கூடியவர்களையே போடுகிறேன்.)

ஜெசிந்தன் தனது படத்தை விதம் விதமாக எடிட் பன்ணி கணணி டெஸ்க் டொப் இல் விதம் விதமாக போடுவது.பேஸ் புக்ல கட்ட துவாய கட்டி ஈரம் சொட்ட சொட்ட எடுத்த கவர்ச்சிப்டம் ஒன்றை அப்லோட் பண்ணியமை.இன்ன பிற நண்பர்களின் தகவல்களுக்கமைய....

"இவர் தன்னை சிம்பு போன்ற முகவெட்டுக்கொண்ட ஒரு அழகிய ஆண்மகனாக மிக உறுதியாக கருதுகிறார்.அத்தோடு தன்னால் காதலிக்கப்படுபவர் குடுத்து வைத்தவர் எனவும் மிகவும் ஆழமாக நம்புகிறார்"

அச்சுதன் இரக்கமின்றி பெண்களுக்கு மணிக்கணக்கில் வீரசாகச கதையளப்பது,நண்பனா/காதலியா என வந்த 10க்கு மேற்ப்பட்ட சந்தர்ப்பங்களிலும் நண்பனை வெட்டியமை.இன்ன பிற தகவல்களுக்கு அமைய...

"நாம ஒரு லந்து பேர்வழி(கிறேசி guy).அதால பல பெண்களுக்கு என் மேல ஒரு ஈர்ப்பு இருக்கு.நண்பனெல்லால் சும்மா பேச்சுத்துணைக்குத்தான்,வாழ்க்கை முழுக்க வரப்போறவள் அவள் தான்."

ராபி கொன் ராபி என இவருக்கு நண்பர்கள் இட்ட பட்டப்பெயர்,விவாதங்களின் பொதுப்போக்குக்கு எதிராகவே எப்போதும் கதைப்பது போண்ற விடயங்களில் இருந்து.....

"முயலுக்கு 4 கால் என உலகம் சொன்னா நீ 3 கால் என்று சொல்வதன் மூலம் அந்த இடத்தில் ஒரு பிரச்சினையையும்,எல்லோர் பார்வையையும் உன் நோக்கி திரும்புதலையும் ஏற்ப்படுத்துவது முக்கியமானது."

ரஜீந்திர தாஸ் பலரால் போட்டுத்தாக்கப்படுவது.அப்பாவிகளை,சமயம் கிடைக்கும் போது மற்றவர்களை போட்டுத்தாக்குவது.

"நம்மை தாக்கினா தாங்க முடியாம இருக்கு.எல்லாரும் நம்மை கண்ட உடன தாக்க தொடங்கிடுறாங்கள்.எவன் தாக்க வாறான்,சும்மா வாறான் எண்டு தெரியல.அதால் எல்லாரையும் முன்னாடியே தாக்கி நம்மை பாதுகாப்போம்".

இந்தக்கட்டுரை ஹொஸ்டலில் இருந்த நண்பர்களுக்கு மட்டுமே விளங்கக் கூடியதாகும்.முன்னைய சொய்சாபுர,கொழும்பு வாழ் நண்பர்களுக்கு இது எழுந்தமான பிதற்றல் போலவும் தோன்றக்கூடும்.ஆனால் இந்த விடயம்(mind reading)நீண்ட காலமாக நம்மில் பலத்த பரபரப்பை ஏற்ப்படுத்தி இருந்தது.


"எழுதாடா நாயே எழுதடா பேயே" என்று என்னை கடந்த ஒரு மாதமாக ஒவ்வொரு நாளும் வதைத்த சுகாவுக்கு முதற்கண் வணக்கங்களை தெரிவித்துக்கொண்டு எம் ட்ரிங்கியைப்ற்றி ஒரு பதிவை தொடர்கிறன்…


மனதில் நின்றவர்கள்-04-ட்ரிங்கோ உமா


ட்ரிங்கோ உமா , தாடிக்காரனுடைய உமா , மீசை உமா என பல பெயரால் அழைக்கப்படும் இவன் நான் கம்பஸ் வாழ்வில் கண்டவர்களில் ஒரு போதும் மறக்க முடியாதவன். அவனைப்பற்றி இந்த பதிவிடுவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி… அவன் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் இங்கு தருகிறேன்… உமா எனக்கு அறிமுகமாகியது நல்ல ஞாபகம் இருக்கிறது … இரண்டாம் செமஸ்டர் றிசல்டினை எமக்கு அறிவித்தது மது . அப்போது நாமெல்லாரும் யாழ்ப்பாணத்தில் இருந்தோம்.. எங்கோ திருநெல்வேலியில் அவனுடைய சொந்தக்கார வீட்டில் கடலை போட்டுக்கொண்டிருந்தபோது கம்பஸிலிருந்த யாரினூடாகவோ றிசல்ட் கேட்டுச் சொன்னான் மதுவதனதன்… எனக்கு றிசல்ட் பெரிதாக பிரச்சனை இல்லாவிட்டாலும் மோட்டுக்குத்து குத்திய மட்டீரியல் A தான் வந்திருந்தது… அதுதான் அப்செட்… ஆக றிகரக்சன் போடபோவதாக பலநாட்களின் பின்பு யாரிடமோ கதைத்த போது யாரோ உமாக்காந்தன் ஆமிக்காரனுடைய பாடத்துக்கு றிகரக்சன் போட்டதாக தெரிவித்திருந்தார்கள்;.. ஆகவே கம்பஸ் வந்தவுடன் உமாகாந்தனை தேடிக்கண்டு பிடித்து அவனிடம் கதையை விட்டேன்.. சிம்பிளாகச் சொன்னான்… நான் A க்கு செய்தனான். B+ போட்டுட்டான் எண்டு... நானும் சரி என்று ப்ரொசீட்சரை அறிந்து கொண்டு விட்டு விட்டேன்…இப்படித்தான் அறிமுகம் (பின்பு அவனுக்கு A வந்து விட்டிருந்ததாக பைனலியரில் சொன்னான்...)


அதன் பின்பு இரண்டாம் வருடம்… இலத்திரனியல் என்டர் பண்ணிவிட்ட படியால் நான் என்னுடைய படிப்பின் இறுக்கத்தை தளர்த்திக் கொண்டு விட்டிருந்தேன்… இனிமேலும் மண்டையை உடைக்க முடியாது என்று நினைத்து இசை , விழா ஒழுங்கமைப்புகள் , சினிமா பார்ப்பது என்று பிசியாகி விட்டேன்.. ஏதோ முதலாவது செமஸ்டரும் முடிந்து றிசல்ட் வந்தது … உமா பட்டையைக் கிளப்பியிருந்தான்.. தமிழரில் முதல் GPA .. இப்படி முதல் செமஸ்டரில் திரும்பிப்பார்க்க வைத்த உமா கடைசி வரையும் படிப்பில் ஹீரோதான்…


அதிலும் கடைசியடி நெருப்படி… எல்லாப் பெரிய மண்டைகளும் பயந்த ஒரு பைனல் இயர் புரோஜேக்டை கடைசியாக ட்ரிங்கோவில் கோயிலில் எங்கேயோ திருவிழாவில் நின்று விட்டு வந்த படியால் உமாவுக்கு தெரிவு செய்ய வேண்டியிருந்தது.. எல்லாரும் முதல் ப்ரோட்டோ டைப் முடித்திருந்தபோது அவன் ஒன்றுமே செய்யாமல் ப்ரசென்டேசன் செய்தான்… கடைசி ஒரு மாதம் மெனக்கட்டிருப்பானோ தெரியேல்ல .. அவனுடைய ப்ரொஜெக்டை ஒரு வெள்ளைக்காரன் அரை மணிநேரம் பாத்துக்கொண்டிருந்தானாம்… பிறகென்ன அதுக்கும் A+ தான்…




இனி காமெடிகளுக்கு வருவோம்… இவரும் சினிமாப்பைத்தியம்… கம்ப்யூட்டர் ஆக்கிரெக்சர் எக்சாம் மிற்கு முதல்நாள் ஆதியைப்பார்த்துவிட்டு இரவு கொடாவில் சிறியைக்கட்டிப்பித்து சொல்லித்தாடா சொல்லித்தாடா என்று அழுது கொண்டிருந்தேன்.. அடுத்த நாள் எக்சாம் நன்கு கடித்து விட்டது… சே சினிமாவுக்கு போன படியால்தான் இப்படியானது என்று என்னை நானே கடிந்து கொண்ட வேளை உமா புன்னகையுடன் வந்து நின்றான்…
நான் : எப்பிடி மச்சான் எக்சாம்?
உமா: பரவால்லடா! ஏ வரும் (இது உமாவின் ஸ்டைல் )
நான் : அடப்பாவி! எனக்கு கையிலதான்…
உமா: டேய் சும்மாவிடாத! நேற்று எனக்கு முன்னுக்கு நிண்டாய் கியூவில..
நான் :ஙே?
உமா: உன்னை அங்க கொன்கோட்டில நேற்று முன்னால கண்டன் … பிறகு கதை விடுறா… படிக்காம போனனீயெண்டு அவிக்கப்போறியா போறியா எனக்கிப்ப ?



அவனுக்கு ஏ ப்ளஸ் வந்திருந்தது அந்த பாடத்துக்கு..



உதே காமெடி சிவாஜி நேரம் திருப்பி நடந்தது… நான் 4.30 மணிக்கு (காலமை) பஸ் பிடிச்சு 5 மணிக்கு கொன் கோட் வாசலில நிக்கிறன் ஒருவனையும் காணேல்ல… எனக்கு பெரிய சந்தோசம்… சிவாஜி பெஸ்ட் சோ எப்பிடியாவது பாத்திடலாமெண்டு… ஆனா எனக்கு பிறகு வந்த ஒருத்தன் கதைவை தாண்டி உள்ள பாய்ஞ்சான்;.. எனக்கு கடுப்பாகி நானும் உள்ள பாய்ஞ்சா உள்ள பத்து பதினைஞ்சு பேர் இருக்கிறாங்கள். கிட்டப்போனா ஒருத்தன் கூப்பிடுறான்… கூர்ந்து பாத்தா நம்ம உமா… மயங்கி விழாத குறை நான்…



அடுத்தது எப்ப படிக்கிறான் எண்டு கண்டு பிடிக்க முடியாது.. நானும் கவனிச்சுப்பாத்துட்டு ஏலாதெண்டு விட்டிட்டன்.. ஆனா அவன் செய்த உதவிகளை ஆயுளுக்கும் மறக்கமாட்டன்.. சில செமிஸ்டர்கள் ஓவரா விளையாடி கடைசி நேரம் உமா முருகதாஸ் போன்றவர்களின் குப்பியிலதான் பிழைப்பே ஓடியது… உமாவிடம் போட்டியற்ற தன்மை காணப்பட்டமை என் போன்றவர்களுக்குதான் உதவியது..


பெடியர் வீணைவாசிச்சு செமையா வாங்கிக்கட்டுவார்… ஆனா பிசாசு ஒருக்காலும் விட்டுக்கொடுக்கமாட்டான்.. தான் பிடிச்ச முயலுக்கு மூண்டுகால்தான்.. அறிவகம் அலுப்பகம் எல்லாம் போய் வறுக்கும் … பாக்கிற எங்களுக்குத்தான் வேர்க்கும்…


அதோட போய்ஸ் படத்தில வாற செந்தில் மாதிரி எங்கெங்க அன்னதானம் போடுவாங்க எப்பப்ப பரீயா படம் போடுவாங்க எல்லாம் பெடிக்கு அத்துப்படி… டாண் எண்டு போய் நிண்டுடுவான் சரியான டைமுக்கு.. என்ககெண்டால் இவனென்னடா இப்பிடியிருக்கான் எண்டு யொசினை… ஆனா அதுவும் அவனுடைய ஒரு அட்ராக்சன் பொயிண்ட்தான்… அதோட காச கண்டபடி செலவழிக்க மாட்டான்… உதாரணத்துக்கு ஒண்டு சொல்றேனே… இவனுடைய 3315 போனை ஒருத்தன் சுட்டுட்டான்.. அதில இருந்தது ஒரு நாசமறுந்த ஹச் சிம்… அதுவும் அதில தெரியாத நம்பரிலருந்து கோல் வந்தா எடுக்கவே மாட்டான்.. ஏனென்றால் அப்போ இன்கமிங் காசு… ( ஒரு அந்தர அவசரத்துக்கு கூடி எடுக்கமாட்டான் கொடுமை!) இந்த வள்ளலில அந்த போனை வாங்கிறதுக்காக கள்ளன் கூட போனூடாக பேரம் பேசி 1000 இல முடிச்சு பிறகு பேர்சில 700வை மட்டும்கொண்டு போய் அவனை பிரிட்ஜ் இல சந்திச்சு 700 க்கு மடக்கி போனை வாங்கி வீடு திரும்பும்Nபுhது அவனும் கள்ளனும் ப்ரெண்ட்ஸ்.. நீங்க எடுப்பங்களா இப்பிடி ஒரு றிஸ்க்? என்னால செத்தாலும் முடியாதப்பா!


பெண்கள் பக்கமே இவன் தலை வைத்து படுத்ததில்லை ஆனால் எல்லாரும் ஒரு பஸ் பிரயாணத்தில் தோளில் யாரோ தூங்கியதாகவும் அதை கொன்சால் பார்த்ததாகவும் சொல்லி வறுப்பார்கள்… பெடி சின்ன ஸ்மைலோட போயிடும்…


நாங்கள் கப்பலில யாழ் போனபோது ஒரு கவனிப்பு கவனிச்சான் ட்ரிங்கோவில வச்சு … ஒருத்தனும் சொன்னா நம்ப மாட்டான்… சினிமாவில வாறமாதிரி கோழி அடிச்சு குழம்பு வைச்சு கொலை வெறி கவனிப்பு… மூச்சு முட்டிப்போச்சு எங்களுக்கு… கப்பலில சிவானுஜன் அஞ்சு நிமிசத்துக்கொருக்க உதைப்பற்றிதான் கதை… காசு சேர்க்கிற புத்தியுள்ளவன் கஞ்சனாயிருப்பான் எண்ட கொள்கை அதோட புஸ் ஆகிடிச்சு…


மாப்பளையிண்ட பிசினஸ் புத்தி இவருக்கு ஒவவொரு முறையும் வினையிலதான் முடியுறது… ஏதொ கோல்ட் கொய்ன் பிரமிட்டில சேர்ந்து காசு விட்டவன் (என்னையும் சேர்க்கப்பாத்தவன் நல்லகாலம் நான் சேரேல்ல) திருந்தாம பிறகும் சீகல்லில போட்டு நாமம் வாங்கினான்… இப்ப என்னவேலையில இருக்கானோ?



இவனைப் பார்ட்டியளுக்கு கூப்பிn எல்லாருக்கும் பயம்… காரணம் இவனுடைய அசகாய சாப்பாட்டு ராமானுஜம்… பாக்கிற எனக்கே தொண்டைய அடைக்கும் ..இவனோ ஒருத்தரையும் சட்டை பண்ணாமல் தன்பாட்டுக்கு உள்ளே தள்ளிக்கொண்டிருப்பான்… ஆனால் ஒரே நிம்மதி என்னவென்றால் மச்சான் முட்டை ட்டும்தான் அசைவமாக உண்பார்…ஹிஹி! அதுக்காக மிக்சர் ப்க்கட் பிஸ்கட் பக்கட் குளிர்பானம் ஏதாவது இவன் கண்ணில் பட்டால் .... பிறகென்ன கள்ளக்கடத்தல்தான்.. ரூமில போனா கிடக்கும்…


ரஜீ ஒரு முறை இவனுடைய கிடங்கு றூமைப் நக்கலடிப்பதாக கூறி ஓட்டைக்கதிரையை எல்லாம் கதையில் கொண்டுவந்து அடித்த காமெடி இப்போது நினைத்தாலும் குடல் பிய்யும் வரை சிரிக்கலாம்… எல்லாருக்கும் ஞாபகம் இருக்குமெண்டு நினைக்கிறேன் … மறந்து விடாதீர்கள்.. உமாவின் மகனுக்கு சொல்லவேண்டும்.. ஹாஹாஹா!



ஒரு முறை இவன் றூமுக்கு சென்றபோது பயோட்டினெக்ஸ் ஈ மாத்திரை உறைகள் வெளியே கிடந்தன…எதுக்கடா இது பாவிக்கிறது எண்டு கேட்டன்.. மயிர் நல்லா வளரும் மச்சான் எண்டான்.. அந்த நேரம் எனக்கு மீசை முளைக்கிற ஐடியாவிலயே இருக்கேல்ல இவனுக்கோ இடும்பன் மீசை… நானும் ஏதோ அவனுடைய மீசையிண்ட மந்திரத்தை கண்டு பிடிச்சமாதிரி அறாவிலைக்கு அந்த மருந்தில ஒரு சீட் வாங்கிக்கொண்டு வந்து ஒளிச்சு வைச்சு குடிச்சன்.. ஆனா அதை அந்த நாசமாப்போன குட்டி உமா கண்டுபிடிச்சு வெளில சொல்லி பரிசு கெடுத்திப்போட்டான்.. ஹாஹாஹா!


றஜீ எக்சாம் மூட்டங்களில இவனுடைய றூம் வாசலில வந்து நிண்டு சொல்லித்தருமாறு கேட்பான்.. இவனோ இன்னும் படிக்கலடா என்று சொல்லுவான்… அவ்வளவுதான் அந்த வாசிலில உருண்டு புரண்டு உலகத்தில இல்லாத நல்ல வார்த்தையெல்லாம் பாவிச்சு கத்திக்குழறி பிறகு ஓய்ஞ்சுபோய் “என்ட உமா கூட என்னை கைவிட்டிட்டான்” எண்டு சின்னப்பிள்ளை மாதிரி றஜீ விசும்பும்… அதுக்கு பிறகு உமா அவனை கூப்பிட்டு குப்பி டைம்டேபிள் குடுக்கும் … இந்தக்காமெடியை ஒவ்வொரு செமஸ்டரும் பார்க்கலாம் …


இப்படி சொல்லப்போனா சொல்லிக்கொண்டே போகலாம் … ஆகையால நிறுத்துறன்… மொத்தத்துல உமாவிண்ட கொள்கைகள் be simple ,ஓசியில கிடைச்சா ஒயிலையும் குடி , கல்வியில எவனுக்கும் உதவு , ஊரையும் உறவையும் மறக்காத ..

எல்லாமே நல்லதுதான்போல கிடக்கு இல்லையா?


நான் இவனைப்பற்றி எழுதக்காரணம் … இவனுடனான தொடர்பு இப்போ முற்றுமே இல்லை.. ஞாபகங்கள் சிறிது சிறிதாக மறைந்து வருகிறது… அவசரமாக பதிந்து வைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கம்தான்.. குறையிருந்தால் சுட்டிக்காட்டவும்… நன்றி …

Bullet