.


"அலியப்பா நல்லா மைண்ட றீட்(mind reading) பண்ணுவானாம்.றிங்கோ உமாக்கும் அந்த பவர் இருக்காம்.பவானும் கொஞ்சம் மைண்ட வாசிப்பான் ஆனா அலியப்பா றேஞ்சுக்கு இல்லையாம்"

இதெல்லாம் 3ம் வருடத்தில றெயினிங் முடிச்சிட்டு வந்தாப்பிறகு பரபரப்பா அடிபட்ட விடயங்களில் குறிப்பிடற்குரியவை.ரெயினிங் காலத்தில உட்க்கார்ந்தது யோசிக்க நம்ம பெடியளுக்கு நேரம் கிடைத்ததே இப்படியான உள ஆராட்சிகளுக்கு வெளிக்கிட்டதுக்கு காரணமாய் இருந்திருக்க வேண்டும்.காரசாரமாய் விவாதித்துக்கொண்டிருக்கும் போது பாதகமான விடயம் ஒன்றை "நீ இதைத்தானே மனதில வச்சு அந்த கடுப்ப காட்ட கதைக்கிறாய்" என்று அலியப்பா போட "அட அப்படி இல்லையடா" என நான் மறுக்க இல்லை "நீ அப்படித்தான் நீ நினைக்கிறாய்,நான் உன்ர மைண்ட றீட் பண்ணிட்டன்" என்று செப்ப எனக்கு அறிமுகமானதுதான் மைண்ட்றீடிங்(mind reading) எண்ட விசயம்."அலியப்பாட்ட அந்த மனச வாசிக்கிற கலைய சொல்லித்தாடா" எண்டு கேட்க்க அவன் சிம்பிளா சொன்னான்.முதல்ல ஒவ்வொருதனை பற்றியும் ஒவ்வொரு கருத்துச்சுருக்கம் வைச்சிருக்கணும்.

அதாவது தீபரூபன் எண்டா வெடியன்.
கிரிவக்சன்,சிவனுஜன் எண்டா பப்பாமரம்.
கமல்ஸ்,ஜெயசுதன் எண்டா அரசியல்.
கொழும்பு சசி -பலான பேர்வழி
அச்சுதன் - காதல்க்கிறுக்கன்.
சிறீஸ் காந்த்,கிரிவக்சன் - காட்டுக்குத்து.
கௌதமன்,கிட்டு,மது,அச்சுதன் - வெற்றிகரமான வாளிகள்.
சௌந்தர்,ஜெசுதன்,பவான் - பெ.பு.கணிக்கப்பட்ட வாளிகள்.
சிறி- நல்ல பிள்ளை வேடதாரி.


இந்த குறியீட்டுச்சொற்கள் அவனவனோட கதைக்க தொடங்கின உடன நினைவுக்கு வாறதிலதான் மைண்ட் றீடிங்கிட வெற்றி தங்கியிருக்கு.

"நீயும் உனக்குள்ள ஒவ்வொருத்தனையும் வரையறு.பிறகு மைண்ட றீட் பண்ண வெளிக்கிடு.ஆனா ஒரு விசயம் நான் வரையறுத்தது போல நீயும் அறுக்கோணும் எண்டில்லை". அலியப்பா விட்ட இந்த மன வாசிப்பு விசயத்தை வைத்தே அவனை தாக்கு தாக்கு எண்டு வருசக்கணக்கில் போட்டுத்தாக்கினோம்.


பிறகு இந்தக்கலையின் முக்கியத்துவம் உணர்ந்து மைண்ட் றீடிங் பழகி நான் வாசிச்ச முதல் மைண்ட் சசியினுடையது.சசி எக்ஸாம் வந்தா தனியத்தான் படிக்கும்.நாங்கள் கூட்டமாக இருந்து கும்மியடிப்போம்.சசி தன்ர நோட்ஸ்ச ஒருத்தருக்கும் தராது.நாங்கள் ஒரு நோட்ஸை பலரும் படிப்போம்.எக்ஸாம் நாட்களில் டேஞ்சர்,கொட உட,நூலகம் என கரையும் பொழுதுகளில் ரவிகடை,றோயல் என உணவருந்தப்போகும் போது "அந்தப்பாடம் முழுக்க முடிஞ்சுது,பாஸ் பேப்பர் செய்தா சரி.ரியாசின்ர குப்பி நல்லா பிரியோசனப்பட்டுது,ஒரு "B" க்கு மேல எடுக்கலாம் எண்ட நம்பிக்கை இருக்கு" எண்டு பலமாக கதைப்பேன்.சாப்பிட வந்த சசிக்கு வயத்தகலக்க எழும்பி போய் விடும்.பிறகு தனியாப்போய் ரியாசோட "குப்பிக்கு ஏன்டா சொல்லேல" எண்டு சசி பிரச்சினைப்படும்.அதை ரியாஸ் எங்களுக்கு வந்து சொல்ல பிறகு என்ன ஒரே காமெடிதான்.
இத நான் பெருமையா "சசிட மைண்ட றீட் பண்ணி அவனுக்கேத்த மாதிரி கதைச்சு குழப்பிட்டன்" எண்டு சொல்ல அவண்ட றூம் மேட்களான பிரகலாதன்,ஜெசி,செல்வா எல்லாம் என்னை ஒரு பிடி பிடிச்சிட்டாங்கள்.

"சசிட மைண்ட ஊரே வாசிக்கலாம்.அது ஒரு நிறைஞ்ச மனசு ,அத எவனும் போட்டு தாக்கலாம்,டேய் ஒரு பாலர் வகுப்பு பிள்ளை கூட சசிட மனச வாசிக்குமடா.போடா நீயும் உன்ர மனச வாசிக்கிறதும்".

இந்த தாக்குதலோட என்ர மைண்ட் றீடிங் படு மோசம் என உணர்ந்து பம்மி விட்டேன்.
அதுக்கு பிறகு நீயூகொஸ்டலுக்கு போனாப்பிறகு ஒரு வித்தியாசமான மைண்ட் றீடரை சந்தித்தேன்.அவர் ஒரு மன வாசிப்பாளர் என்பது தெரியாமலேயே முன்பு ஒரு சமயத்தில் அவர் மனதையே வாசிக்க முயன்று நான் கடும் எதிர்தாக்குதலை சந்தித்ருந்தேன். அவர் ஒரு ஓர்கன் வாசிப்பவர்.அவர் இசை மீட்டினால் சுற்று வட்டாரத்தில் எல்லோரும் நிம்மதி இழப்பர்.அடிக்கடி அவர் றூமுக்கு சென்று வந்த நான் அலியப்பா முறைப்படி அவர் "மைண்ட றீட்" பண்ணினேன்.

ஆளப்பற்றின கருத்துச்சுருக்கம்- பெண்களால் பு.கணிக்கப்பட்ட வாளி.
சூழல்-படிப்பு,திரைப்படம்,பெண்கள் பற்றிய ஆர்வம்.


எனவே அவர் இசை மீட்டுவது நிச்சயம் படிப்பு நோக்கத்துக்காக அல்ல.திரைப்பட இசையமைப்பு என்ற விபரீத நோக்கம் இருக்குமென்று எனக்கு பிடிபட வில்லை.எனவே பெண்கள் சம்பந்தப்பட்ட,அதாவது பெண்களைக் கவரவே இந்த ஓர்கன் வாசிப்பு என்று அவர் மைண்ட எக்குத்தப்பாக வாசித்து விட்டேன்.உதவிக்கு சிக்மெண்ட் பிரய்ட்டின்ர கருத்தையும் இழுத்துவிட்டு "மச்சான் நீ செய்யிரது எல்லாமே பெண்கள் பார்வையை உன் நோக்கி திருப்பவேண்டும் எண்ட ஒரே காரணத்துக்காகத்தான்" என்று என்னோட மைண்ட்றீட் முடிவை வெளியிட அறைக்குள் பூகம்பம் வெடிக்காதது ஒண்டு தான் குறை.

இது நடந்தது அவர் ஒரு மன வாசிப்பாளர் என்பது எனக்கு தெரிந்திருக்காத போது.ஆனால் பிறகு (நியூ ஹொஸ்டல் வந்த பிறகு) அவர் என்னை விட பல மடங்கு பெரிய "மைண்ட் றீடர்" என்பதை தாமதமாக புரிந்து கொண்டேன்."டேய்" என்று மேல் மாடியிலிருந்து அழைத்து அவர் கீழறையில் இருப்பதை உறுதி செய்து விட்டு போவேன்.மணிக்கணக்கில் அவர் றீட் பண்ணின மனசுகள் பற்றி அவர் சொல்லக்கேட்டுக்கொண்டு இருப்பேன்.எல்லாமே இளம் பெண்களின் மனங்கள்.என்னப்போல பந்தா பிடிச்ச பெடியங்கள்ட மைண்டுகளை அவர் வாசிச்சு நேர விரயம் செய்யவில்லை.தெரிந்தெடுத்து தேவதைகளின் மனசுகளாய் வாசிச்சு வைத்திருந்தார்.அவர் வாசிப்பில் எல்லா தேவதைகளும் பிசாசுகளை விட கொடூரமாக,ஒழுக்கம் கெட்டவர்களாக படிக்கப்பட்டிருந்தார்கள்.ஆரம்பத்தில் அவர் சொல்வதை நம்ப மறுத்த நம்மில் பலர் பல்கலை காலம் முடிந்து வெகு நாட்களின் பின்னரே அவையெல்லாம் 100% துல்லியமான மனவாசிப்புக்கள் என்பதை நேரடி ஆதாரங்கள் மூலமாக அறிந்து கொண்டோம்.அவரது பெயரை குறிப்பிட நான் விரும்பவில்லை.ஆனால் என் மீது மனநலம் குன்றிய ஒரு ஜூனியர் மாணவி துஸ்பிரயோக வழக்கு போட்டபோது அவர் தந்த நூல்கள்,அறிவுரைகள் என் மன நிலையை எள்ளளவும் குன்றாமல் பாதுகாத்தன.இன்னொரு பிரபல "மைண்ட் றீடர்" றிங்கோ உமா காந்தன்.சாத்திரம்,கைரேகை பார்த்தல் எல்லாம் அத்துப்படி.காதல் விவகாரங்களில் உமாவிட்ட "அது மாட்டுமா?,மாட்டாதா?"என்று பலன் பார்த்தவர்கள் பலர்.ஆனால் அவன் என்ர மனச வாசிச்சு ஒரு முடிவு கட்டி வைத்திருந்தான்."நீ ஜிம் போறது கமெராவோட திரியுறது,படம் எடுத்து எல்லாத்துக்கும் உன்ர பெயர போடுறது எல்லாமே பெண்களை கவரத்தான்" என்பது.அவன் சொல்றது குறிப்பிட்ட அளவு உண்மை தான்.பெண் பார்வை படுவதை விரும்பாத ஆண் உலகில் உண்டோ.எந்த சுழியோடி என்றாலும் இதற்க்கு விதி விலக்கு அல்ல.

சக நண்பர்கள் சிலர் மைண்ட றீட் பண்ணி எடுத்திருந்த பழைய வாசிப்புக்கள் -(இதை take it easy யாக எடுக்க கூடியவர்களையே போடுகிறேன்.)

ஜெசிந்தன் தனது படத்தை விதம் விதமாக எடிட் பன்ணி கணணி டெஸ்க் டொப் இல் விதம் விதமாக போடுவது.பேஸ் புக்ல கட்ட துவாய கட்டி ஈரம் சொட்ட சொட்ட எடுத்த கவர்ச்சிப்டம் ஒன்றை அப்லோட் பண்ணியமை.இன்ன பிற நண்பர்களின் தகவல்களுக்கமைய....

"இவர் தன்னை சிம்பு போன்ற முகவெட்டுக்கொண்ட ஒரு அழகிய ஆண்மகனாக மிக உறுதியாக கருதுகிறார்.அத்தோடு தன்னால் காதலிக்கப்படுபவர் குடுத்து வைத்தவர் எனவும் மிகவும் ஆழமாக நம்புகிறார்"

அச்சுதன் இரக்கமின்றி பெண்களுக்கு மணிக்கணக்கில் வீரசாகச கதையளப்பது,நண்பனா/காதலியா என வந்த 10க்கு மேற்ப்பட்ட சந்தர்ப்பங்களிலும் நண்பனை வெட்டியமை.இன்ன பிற தகவல்களுக்கு அமைய...

"நாம ஒரு லந்து பேர்வழி(கிறேசி guy).அதால பல பெண்களுக்கு என் மேல ஒரு ஈர்ப்பு இருக்கு.நண்பனெல்லால் சும்மா பேச்சுத்துணைக்குத்தான்,வாழ்க்கை முழுக்க வரப்போறவள் அவள் தான்."

ராபி கொன் ராபி என இவருக்கு நண்பர்கள் இட்ட பட்டப்பெயர்,விவாதங்களின் பொதுப்போக்குக்கு எதிராகவே எப்போதும் கதைப்பது போண்ற விடயங்களில் இருந்து.....

"முயலுக்கு 4 கால் என உலகம் சொன்னா நீ 3 கால் என்று சொல்வதன் மூலம் அந்த இடத்தில் ஒரு பிரச்சினையையும்,எல்லோர் பார்வையையும் உன் நோக்கி திரும்புதலையும் ஏற்ப்படுத்துவது முக்கியமானது."

ரஜீந்திர தாஸ் பலரால் போட்டுத்தாக்கப்படுவது.அப்பாவிகளை,சமயம் கிடைக்கும் போது மற்றவர்களை போட்டுத்தாக்குவது.

"நம்மை தாக்கினா தாங்க முடியாம இருக்கு.எல்லாரும் நம்மை கண்ட உடன தாக்க தொடங்கிடுறாங்கள்.எவன் தாக்க வாறான்,சும்மா வாறான் எண்டு தெரியல.அதால் எல்லாரையும் முன்னாடியே தாக்கி நம்மை பாதுகாப்போம்".

இந்தக்கட்டுரை ஹொஸ்டலில் இருந்த நண்பர்களுக்கு மட்டுமே விளங்கக் கூடியதாகும்.முன்னைய சொய்சாபுர,கொழும்பு வாழ் நண்பர்களுக்கு இது எழுந்தமான பிதற்றல் போலவும் தோன்றக்கூடும்.ஆனால் இந்த விடயம்(mind reading)நீண்ட காலமாக நம்மில் பலத்த பரபரப்பை ஏற்ப்படுத்தி இருந்தது.