தற்போதைய நிலவரம் -10

இன்பத்தையும் துன்பத்தையும் பலவித அனுபவங்களையும் தந்த 2014 ஆம் ஆண்டு இன்னும் இரண்டே வாரங்களில் விடை பெறுகிறது. உலகமெல்லாம் பரந்து வாழும் எமது மட்டத்து நண்பர்களில் பிரித்தானியாவில் இருப்பவர்களே கூட்டிக்கழித்து பார்க்கும் போது இந்த வருடம் முழுவது கலக்கு கலக்கு என்று கலக்கியிருக்கிறார்கள். சிங்கபுரி வாழ் பேர்வழிகளில் பலரும் திருமணவாழ்வில் இணைந்த போதிலும் அதிக பரபரப்பில்லாத முகநூலில் புகைப்படங்கள் தென்பட்ட நிகழ்வுகளாகவே அவை கடந்து சென்றன. இலங்கா புரியிலும் குறிப்பிடத்தக்க சில பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை ஆய்வுக்குட்படுத்திய ஆசிரியர் பீடம் முக்கியத்துவ அடிப்படையில் அவற்றை கீழே வரிசைப்படுத்தியுள்ளது.

1) ஆறுபை சேகர்

நாய் சேகர் என்று பிரபலமான அதிரடி நாயகன் இவர். கலியாணம் கட்டாதவன் கட்டுறதுக்கு அலைய, கட்டினவன் பிள்ளைக்கு அலைய இவர் மட்டும் மனத்தை சிதறவிடாமல் இரும்புகளை தூக்குவதும் டயட்டுமாக அலைந்து ஆறு பையை செதுக்கியிருக்கிறார். வேலை வேலை என்று பறக்கிற பிரித்தானியாவில் இருந்து கொண்டு உடம்பை இறுக்கமா பேணுவதற்க்கு ஒரு தனித்திறமை வேணும் பாருங்கோ!. ஆறு பை ஏழு பையாகி ஏழு எட்டாக வாழ்த்துகிறோம்.


2) சிங்கம் "ராகுல்"

 முதன் முதலாக மட்டத்தில் கலியாணம் கட்டியவர். முதன் முதலாக அப்பா ஆகியவர். இரண்டாவது குழந்தைக்கும் அப்பா ஆகி இருக்கிறார். மூத்த பிள்ளை விளையாட பொம்மை கேட்டதெண்டு இரண்டாவது குழந்தையை பெற்றேனாக்கும் என்று முகநூலில் நிலைக்குறிப்பு போட்டுவிட்டு நெஞ்சை நிமிர்த்திக்கொள்கிறார் இந்த ஆண் சிங்கன்.



3) அப்பா ஆனார் அலிபாய்.

பலர் முதல் குழந்தைக்கு அப்பா/அம்மா ஆகியுள்ள போதிலும் இங்கே அப்பா ஆகியிருப்பவர் ஒரு விஞ்ஞானி. முத்தையன் கட்டு நியூட்டன். வன்னியிலேயே ரின்மீன் செய்த அப்துல் கலாம். பெண் குழந்தை பரிசாக கிடைத்தது என்று முகநூலில் நிலைக்குறிப்பிட்டு மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டுள்ளார். பிரித்தானியாவில் அறிவு மிக்க தமிழ் சந்ததி உருவாக சசியின் சேவை மேலும் தமிழினத்துக்கு தேவை.


4) காரோட்டும் செழியம்.

யாழ்குடாநாட்டில் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையோடு வாகனம் செலுத்தும் படி கேட்க்கப்படுகிறார்கள். கண்ணாடி அணிந்த பொறியியலாளர் ஒருவர் கண் மண் தெரியாத வேகத்தில் கண்மூடித்தனமாக காரோட்டுவதால் இவ்வெச்சரிக்கை விடப்படுகிறது . வதையின் அலகான செழியம் முன்னர் வெறுங்காலில் வந்தது பின்னர் உந்துருளியின் வலம் வந்தது. இப்போது காரில் தேரோட்டம் போகிறது. சமீபத்தில் மன்னார் சென்ற செழியம் அடுத்தது எந்த மாவட்டத்தை குறி வைக்கப்போகிறதோ?.


5) முதலாளி அலியப்பா

கடந்த 8 மாதங்களாக பலவிதமாக முதலாளி ஆகுவதற்கு முயன்று வந்த அலியப்பா சில வாரங்கள் முன்னர் அதில் வெற்றியும் கண்டிருந்தார். ஆனால் கன்னி முயற்சியிலேயே நிலக்கீழ் உயர் அழுத்த வயரை அறுத்து மாட்டிக்கொண்டுள்ளார். எரிந்த குழிக்கு அருகே இருந்த படி சுப்பவைசரை காலணி வாங்கி வரும் படி அனுப்பியிருக்கிறார். அந்த அறிவாளியும் இரண்டு வலது கால் அணிகளை வாங்கி வந்திருக்கிறான். இப்படியான புத்திசாலிகளை வைத்திருந்து எப்படி வேலை செய்வது என்று கடுப்பான முதலாளி பழையபடி தொழிலாளி ஆகிவிட்டார். முதலாளி வாட்சப்பில் அனுப்பிய படங்கள் கீழே!