மன்மதன்



அந்த நண்பர் வெளிப்படையானவர் அல்ல.உள்ளொன்று வைத்து புறமொன்று செப்புபவர்.ஆனால் ஒரே ஒரு பலவீனம் அவரிடம் இருந்தது. தண்ணியைப்போட்டால் திறந்த புத்தகம் ஆகிவிடுவார்.உள்ளுள்ள அனைத்தையும் வெளியே துப்பிவிடுவார்.சிங்கபுரியில் சிலநாள் முன்பாக உள்ளே போனதண்ணி அவரை திறந்த புத்தகம் ஆக்கிய போது பல அரிய தகவல்கள் கிடைத்தன.

நண்பர்:  மச்சான்! சிங்கப்பூர் கொம்பனியளுக்கு A1,A2,A3,B1,B2 என தரப்படுத்தல்கள் இருக்கிறது போல பிகர்களுக்கும் தரப்படுத்தல் இருக்கு.

நிருபர்: ஓ! புதுசா இருக்கே இந்த விசயம்.

நண்பர்:  இந்தோ பிகரை வச்சிருந்த அது "கிறேட் 01. ஆக அடிமட்டம். பிலிப்பைன்ஸ் தரம் 02.மலேசியாக்காரியள வச்சிருக்கிறவன் தரம் 03க்க வருவான்.சிங்கபுரி பெண் என்றால் தரம் 04.ரஸ்ய,கிழக்கு ஐரோப்பிய பெண்மணிகள் 05.உச்ச கிறேடிங் அமெரிக்க,பிரித்தானிய,பிரெஞ்சு பெண்களை வச்சிருக்கிறவங்களுக்கு குடுக்கலாம்.அது தான் தரம் 06.

நிருபர்: அப்ப நீ இப்ப எந்த கிறேட்டில இருக்கிறாய்?

நண்பர்: கிறேட் 03 தாண்டிட்டன்.நாலுக்கை இப்பதான் வந்திருக்கிறன்.இந்த வருசத்துக்குள்ள தரம் 05 க்க வரோணும் என்றதுதான் என்ர நோக்கம்.

நிருபர்: ஊக்கமும் நோக்கமும் இருந்தா நீ தரம் ஆறுக்கே போகலாம் மச்சான்.
அப்ப நம்ம ஊர் பெட்டையள கட்டுறவனுக்கு என்ன தரம் குடுக்கலாம்?

நண்பர்: அவங்களுக்கு எல்லாம் பூச்சியத்துக்கு கூட லாயக்கில்லாதவங்கள்.அவங்கள் பற்றி கதைச்சா அடிச்ச மப்பு இறங்கிடும்.

நண்பர் தரம் ஆறையும் தாண்டி வளர கனாக்காலம் வாழ்த்துகிறது.நண்பரது முகவெட்டுக்கும்,முடிவெட்டுக்கும் அண்ணாந்து பார்த்தால் அமீர்கான் போலவே இருப்பார்.அவருக்கு இதெல்லாம் பெரிய விடயமாய் இருக்காது.


இந்த பதிவை முடிக்க முதல் ஜெர்மானிய மன்மதன் ஒருவரைப்பற்றியும் சொல்லியாகவேண்டும்.அவர் பிறந்தது யாழ்ப்பாணத்தின் குக்கிராமம் ஒன்றில்.சோடாப்புட்டி கண்ணாடியோடு பார்த்தால் செல்வராகவன் பட "சைக்கோ" நாயகன் போலவே இருப்பார்.நாடு திரும்பிய அவர் சமீபத்தில் நல்லூர் கோவிலில் பாரியார் குடும்பம் சகிதம் உலாவியிருக்கிறார். கூடப்படிச்ச பாசத்தில் நண்பர் ஒருவர் புன்னகையோடு ஓடிப்போய் "எப்ப மச்சான் வந்தனி?" என்று கேட்க "I just came from Germany" என்று பதில் வந்திருக்கிறது.ஆங்கிலம் பேசிட்டு திடீரென தமிழுக்கு மாற கஸ்டப்படுறான் போல என்று மனதை திடப்படுத்து பேச்சை தொடர்ந்த நண்பருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.மன்மதன் ஆங்கிலத்தில் மட்டுமே பேசியிருக்கிறார்.அதை கூடவந்த பாரியாரும் குடும்பத்தினரும் பெருமை பொங்க பார்த்துக்கொண்டு நின்ற விதம் வேறு நண்பரை கொலைவெறிகொள்ளச்செய்திருக்கிறது.
வான்கோழி மயில் போல ஆடினாலும் மயிலாக முடியுமா?.உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? என்று நண்பர் இன்று வரை புலம்பிக்கொண்டு திரிவதாக கேள்வி.உண்மைதான்.அற்பன் வெளிநாடு போய் வந்தால் அர்த்த ராத்திரியில் ஆங்கிலம் கதைப்பான்.