சில்வண்டுக்கும் சிறுத்தைக்கும் என்ன வித்தியாசம்.ஒரு பிகர இலக்கு வைத்து வருடக்கணக்கில் காய் நகர்த்தி கஸ்டப்படுபவன் சில்வண்டு.பல பிகர கவரும் விதமா செயல்பட்டு, கவரப்பட்டதுகளில சிலத தெரிஞ்செடுத்து ஒண்டை கைப்பிடிப்பவன் சிறுத்தை.ஆதாம் ஏவாள் பற்ற வைத்த யுகங்கள் தாண்டி எரியும் ஆண் பெண் பாலின கவர்ச்சி நெருப்புக்கு எவரும் விதி விலக்காக முடியாது.பெண் மீது ஆணுக்கு ஈர்ப்பு உண்டாவதற்கான காரணங்கள் எத்துணையோ அதை விட பல மடங்கு அதிகமான காரணிகள் ஆண் மீது பெண்ணுக்கு உண்டாவதற்குண்டு.அக்காரணிகளில் ஒன்றோ பலவோ உள்ள ஆண் பெண்களை கவர்வதில் வெற்றி பெறுகிறான்.உண்மையான ஆண்மகன் பெண்களை கவர்வதற்காக மொறட்டுவை கம்பசில் தமிழ் மாணவர்களைடையே நடைபெறுவது போல வாளி வைப்பது,குப்பி எடுப்பது,அடுத்தவனை மட்டம் தட்டுவது,குறும் தகவல் அனுப்புவது,கௌபாய் வேடமிடுவது,பந்தா காட்டுவது,பிளாக்கனாகி பிதற்றுவது போண்ற ஈனச்செயல்களை ஒருக்காலும் செய்யமாட்டான்.ஒரு ஆணால் பெண் மீது வருகிற ஈர்ப்பை நேரடியாக வார்த்தைகளால் வெளிப்படுத்த முடிவது போல பெண்ணால் முடிவதில்லை.பலதரப்பட்ட சைகைகள் மூலமாக தெரியப்படுத்த முயல்வாள்."இஞ்சருங்கோ! உம்மை போல ஒரு கட்டழகனை கண்டதே இல்லையுங்கோ" எண்டு ஏவளாச்சும் வலிய வந்து சொல்லுவாள் என்று எதிர்பார்த்திருந்தால் பேச்சு கலியாணம் தவிர்க்க முடியாததாகிவிடும்.தனது மனதுக்கு பிடித்தமான அல்லது உடல் கிளர்ச்சியூட்கிற ஆணுக்கு முன்னிலையில் பெண் காட்டுகிற சைகைகள் பற்றி அறிந்து வைத்திருப்பது இளைஞர்களாகிய எமக்கு மிக அத்தியாவசியமானது.இது உங்கள் பால் ஈர்க்கப்பட்ட பெறுமதிமிக்க பெண் கைவிட்டு போகும் துன்பியல் நிகழ்வுகள் நிகழ்வதை தடுக்க உதவும்.


மேல இருக்கிற காணொளியில அடிப்படையான விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன.

1)ஒரு பிகருக்கு உங்கள பிடிச்சு போச்சு எண்டா பேசும் போது கண்ண தொடர்ந்து பார்க்காது.பார்த்திட்டு சட் டென்று திரும்பிடும்.மோகனப்புன்னகையோடு தொடர்ந்து அசராமல் கண்ணையே பார்க்குது என்றால் துணிஞ்ச பிகர்.வெறும் நட்ப தாண்டி உடலுள்ள பகிர்வு தொடர்பாக பிகர் யோசிக்கிறது என கருதலாம்.இயல்பாக பழகும் பெண்களாலும் இன்னொரு ஆணின் கண்களை நேரடியாக பார்த்து பேச முடியும்.அதையும் இதையும் முடிச்சுப்போட்டு அலிபாயாகி அவதிப்பட வேண்டாம்.

2)கண்ணாடி பிரதிபலிப்பு செயல்பாடுகளை வெளிப்படுத்தல்.உதாரணமா கைக்கடிகாரத்த பார்த்து விட்டு திடீரென பிகர பாருங்கள்.அது தடுமாறி தன்னோட கடிகாரத்தையோ போனையோ பார்த்தால் அதுவரை உங்களத்தான் சைட் அடித்திருக்கிறது என்று முடிவெடுத்து புளகாங்கிதம் அடைந்து கொள்ளலாம்.

3)உடற்பரிமாணங்கள் மாறுதல்.தனக்கு பிடித்தமான ஆண் முன்னிலையில் ஒரு பிகர் சாதாரண நிலையை விட பெருத்து இருக்கும்.இங்கு பெருத்து என்பதை உரிய முறையில் விளங்கிக்கொள்ளாவிட்டால் அசிங்கப்பட நேரிடும்.அதாவது நிமிர்ந்து உட்காருதல்,பெண்மையின் அடையாளமாகிய முன் அழகை தெளிவாக காட்டுதல் என்பன.

4)நீளமான தலை முடி பெண்மையின் இயல்பென்றும்,குட்டையாக வெட்டப்பட்ட முடி ஆண்மை இயல்பாகவும் மனித மனங்களில் பொதிந்துள்ளது.பிகர் தலை முடியை உங்கள் முன்னிலையில் ஸ்டைலாக தூக்கிப்போட்டால்,அல்லது தலைமுடியோடு விரல்களால் விளையாடினால் "நான் ஒரு ஆரோக்கியமான பெண் என்பது என் கூந்தலை பார்த்தும் தெரியவில்லையா? மடையா,வந்து கடலையை போடலாமே" என உள்ளே நினைக்கிறது என்று அர்த்தம்.அநேகமான பெண்கள் நேர்த்தியை விரும்புவார்கள்.காற்று போண்ற புறக்காரணிகளால் கலையும் கூந்தலை உடனடியாக ஒழுங்கு படுத்த விளைவார்கள்.எனவே இந்த விடயத்திலும் தவறான விளக்கம் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் விழிப்பாயிருத்தலவசியம்.

5)வெளிப்பாடு.முக மென்மையாக்கல்.மனிசருக்கு எதிர்ப்பாலின ஈர்ப்பு வரும் போது வார்த்தைகளால் கொட்டி முழங்கி விடுவோம்.ஆனால் மிருகங்கள் என்ன செய்யும்?.கடும் கோபக்கார கடிநாயான லக்ஸிக்கு அயல் வீட்டு கடுவன் நாய் ஜிம்மி மேல் காதல் வந்து வேலிப்பொட்டு இடைவெளிகளூடு காதல் வளர்க்கும் தருணத்தில் கல்லெறிந்து கலைக்காமல் லக்ஸி முகத்தை பார்த்து இருந்தீர்களானால் அதி மலர்களின் மென்மை தெரிவதை கண்டு இருப்பீர்கள்.அதே போல கோபக்கார பிகர் எண்டாலும் உங்கள் முன்னால் அநியாயத்துக்கு பிள்ள பூச்சி போல நடந்து கொண்டால் பெண்ணுக்குரிய மென்மை எனக்கும் இருக்கு எண்டு பிகர் உங்களுக்கு காட்ட முனையுது எண்டு அர்த்தம்.

6)பிகர் உங்கள் முன்னால் இருக்கும் சந்தர்ப்பங்களில் கால்களை குறுக்கே போட்டபடி பாதங்களின் நுனி உங்களை நோக்கும்படி இருந்தால் அது உங்களுக்கான தெளிவான பச்சை சமிக்கை.பெண்கள் பொது இடங்களில் இருக்கும் போது கால்களை ஒடுக்கியே வைத்திருப்பார்கள்.பிகர் உங்கள் அருகாமையில் கால்களை விரித்து அமர்ந்திருப்பின் உங்களை நெருக்கமான நபராக உணர்கிறது என எடுத்துக்கொள்ளலாம்

7)பெண்கள் பொதுவாக தங்களுக்கு பிடித்தமானவர்களுடன் பேசும் போதே உள்ளங்கை,மணிக்கட்டுப்பகுதிகளை காட்டும்படி இருப்பார்கள். கரங்களை,அணிந்திருக்கும் ஆபரணங்களை,மணிக்கட்டுப்பகுதியை,கழுத்துப்பகுதியை,அல்லது முன்னால் இருக்கும் பொருளை மெதுவாக வருடினால் உங்களிடம் இருந்து அதே மாதிரியான அன்பான வருடலை பிகர் எதிர்பார்க்குது என்பதை உணர்ந்து காலம் தாழ்த்தாமல் காரியத்தில் இறங்க வேண்டும்.

8)ஆண்மையின் அடையாளமான உடல் உறுதிப்பாட்டை தொட்டுணர்வதன் மூலம் அறிய முயலுதல்.உங்களை கடந்து செல்லும் போது எதேச்சையாக உரசுதல்,புயங்களினை விளையாட்டாக அழுத்துதல்,மார்பை அழுத்துதல் போண்ற செயல்பாடுகளை செய்தால் உங்கள் அரவணைப்பு தேவைப்படுகிறது என்று கொள்ளலாம்.உதடுகளை உற்று நோக்குதல்,முதுகுப்பக்கத்தின் கீழ்ப்புறமாக கரங்களால் கோடாக இழுத்தல்,தொடைப்பகுதியை தொடுதல்,தலை முடியை கோதி விடுதல் என்பன உடல் ரீதியான நெருக்கத்தை விரும்பும் சமிக்கைகளாகும்.இச்செயற்பாட்டை சமூகத்துக்கு அஞ்சி உணர்வுகளை கொண்று வாழும் பிகர்களால் பொது இடத்தில் மேற்கொள்ள முடியாது.இத்தருணத்தில் அந்த பெண் "promiscuous women" வகையறாவா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுவது உளப்பாதிப்புக்கள் ஏற்படுவதை தடுக்கும்

9)பிகரை பார்த்து இயற்கையாக புன்னகை ஒன்றை வீசி விடுங்கள்.பதிலுக்கு கவித்துவமான புன்னகையும் கண்களில் மலர்ச்சியும் தென்பட்டால் மைனா வலையில் கிட்டத்தட்ட சிக்கி விட்டது என்று அர்த்தம்.செயற்கையா பூக்கிறாளா? இயற்கையா பூக்கிறாளா? என்ற சந்தேகம் வரின் கண்களை சூழவுழ்ழ பகுதி தசைகளை கூர்ந்து அவதானிப்பதன் மூலம் தீர்த்துக்கொள்ளலாம்.உதடுகள் அப்பழுக்கில்லா புன்னகை பூக்கும் போது கண்ணைச்சூழவுள்ள தசைகளில் சுருக்கக்கோடுகள் தென்படும்.புன்னகை வீசிய பிகர் நீங்கள் வந்து கடலைய போடமாட்டீர்களா என்று நிச்சயம் எதிர்பார்க்கும்.அநியாயத்துக்கு நல்லவனாக கடலேறி போல நடிக்க வெளிக்கிட்டால் அதே கதியாகிவிடும்.

10)பிகருடன் எதிர் எதிராக இருந்து பேசிக்கொண்டிருக்கும் போதோ வேறு சந்தர்ப்பத்திலேயோ உங்களை நோக்கிய திசையில் முன்னோக்கி வளைந்தால் அது மிகத்தீவிரமான ஓரு சமிக்கை.பதில் சமிக்கை கொடுக்காமல் அலவாங்கு விழுங்கின மாதிரி இருந்தால் பல புள்ளிகளை இழக்க நேரிடும்.வளைந்த பிகர் சாதரண நிலைக்கு போய்விட்டு ஏதாவது சம்பந்தமில்லா மொக்கை கேள்விய கேட்டால்......."நீயெல்லாம் ஒரு ஆம்பிளையாடா?..தூ!" என்று மனதுக்குள்திட்டுகிறது என்று அர்த்தம்.

11)நீங்கள் கெட்டிக்காரத்தனமாய் புல்லட் அளவுக்கு இல்லாவிட்டாலும் பூச்சிபுள்ளதனமாய் கொழுத்தி போடும் மொக்கைக்காமெடிகளுக்கு கூட விழுந்து விழுந்து சிரித்து சீன போட்டால் பிகருக்கு உங்கள ரொம்ப பிடிச்சுப்போச்சு என்று அர்த்தம்.தைரியமாக கிட்டப்போய் "இப்ப இஞ்சினியரா சாதுவா இருந்தாலும் ஊர்ல நான் பெரிய ரவுடி. எனக்கு இன்னொரு பெயர் இருக்கு.......என்ன தெரியுமா?....பண்டி... பாமன் கட பண்டி" என்று உரத்து பாட்சா ஸ்டைலில் சொல்லிவிட்டு வரலாம்.பிகர் 1000% நம்பும் அல்லது 2000% நம்பியது போல நடிக்கும்.

12)பெண்கள் பொதுவாக எதையும் பகிர்ந்துகொள்ள விரும்ப மாட்டார்கள்.ஒரு பிகர் உங்களோடு உணவு,ஹெட் போன் போண்றவற்றை பகிரும் பட்சத்தில் அவள் உடலுள்ள பகிர்வு தொடர்பாயும் சிந்திக்கிறாள் என்று எடுத்துக்கொள்ளலாம்.பேசிக்கொண்டிருக்கையில் கண்களை தொடர்ந்து நோக்குவது,உதடுகளை கடிப்பது,பெருமூச்சு வாங்குவது என்பனவற்றை பிகர் செய்தும் நீங்கள் ஒண்டும் செய்யவில்லை எனில் செருப்பை கழட்டி....
உங்கள் மூஞ்சியில் பலமாக பலமுறை அடித்துக்கொள்ளவும்.
மேற்சொன்னவை அடிப்படையான விடயங்கள்.இவை தவிர பலநூறு வெளிப்பாடுகள் உள்ளன.அவை எல்லாவற்றையும் படித்து வைத்தால் ஒரு பிகரையும் நம்பமுடியாத அளவுக்கு ஆகிவிடும்.அளவோடு நிறுத்திக்கொள்ளல் நலம்.

இக்கட்டுரையின் நோக்கம் இது வரை வாழ்க்கைத்துணை சிக்காமல் இன்று வரை அலைந்து கொண்டிருக்கும் என் போண்ற இளைஞர்களுக்கு வழிகாட்டுவதே அன்றி வேறெதுவும் இல்லை.பிகரை சைக்கிளில் விரட்டி பேச்சுக்கொடுக்கும் பள்ளிக்கால காதலையும், முதல் நாள் பார்த்துவிட்டு அடுத்த நாள் முடிவை கேட்கும் கேவல கட்டுப்பெத்தைக்காதலையும் தாண்டி வெகு தூரம் வந்துவிட்டோம்.பொறுப்பான பதவிகளில்,சமுதாய கௌரவத்தோடு வாழும் நீங்கள் பிடித்தமான பெண்ணை விரட்டிக்கொண்டு கிளம்பினால் சந்தி சிரிக்கும் படி ஆகிவிடும்.ஆனால் கேவலத்துக்கு பயந்து அடக்கி வாழ்ந்து வீட்டார் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்வதும் வாழ்நாள் துன்பியல் நிகழ்வு நிகழ்வாகவும் அமையும் வாய்ப்புக்களை நிறையவே கொண்டதாகும்.எனவே உங்களை ஒரு லட்சிய ஆண்மகனாக மாற்றிக்கொண்டு உங்கள் பால் ஈர்க்கப்படும் பெண்களை இனம் கண்டு கொண்டு அவர்களில் பெறுமதியானவரை தெரிந்து எடுப்பதே இந்த வயதுக்கு தோதான வழிமுறையாகும்

அடுத்தாக உளவியல் பற்றி எழுத நீ என்ன டாக்டரா? என்று சிலர் கேணத்தனமாக கேள்வி எழுப்புகிறார்கள்.ஒவ்வொரு உளவியல் கருத்துக்களும் அவதானித்தல்,கருத்தறிதல்,அலசுதல் போண்ற செய்முறைகள் மூலமாக உருவாக்கபட்டவை.எங்களோடு கூடப்படித்த மனனம் செய்யும் ஆற்றல் தவிர வேறு எதுவும் இல்லாத சில பேர்வழிகளே இலங்கை அரசின் பரீட்சைகளில் சித்தியடைந்து வைத்தியர்களாகி நாலைந்து நூல்களை வாசித்து விட்டு மக்களின் உளவியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டறிய புறப்பட்டு இருக்கிறார்கள்.அதையும் விடவா நான் இங்கே எழுதுவதால் பெரிய பாதிப்பு வந்துவிடப்போகிறது?.

நல்ல பிகர் எண்டா சில்வண்டாயிருக்கணும்.அது சிக்கலை எண்டா பேசாம சிறுத்தை ஆகிடணும்.

ராவணன் இலங்கைய ஆண்ட அரசன்,அனுமான் எண்டவன் நடு இரவில வந்து இலங்காபுரி நகருக்கு நெருப்பூட்டிவிட்டு தப்பி ஓடின குரங்கன்.ராவணனை அரக்கனெண்டும்,ராமன கடவுள் எண்டு வடக்கன் சொல்லலாம்.ஏனெண்டா அவன் அவங்கட ஆள்.ஆனா இலங்காபுரியான இலங்கையில இருக்கிற திராவிடதமிழன் ராமன கும்பிட்டு அனுமான் கலையாடி ஆவேசப்பட்டா...........இத என்னெண்டு சொல்லுறது?

அதே போல நரகாசுரன் திராவிட அரசன்.எண்ணிக்கையில் பெருத்த ஆரியன் படையெடுத்து நரக சூரனை கொன்றுவிட்டு இன்னாளே நன்னாளாம் என்று கொண்டாட அதை பார்த்து நம் நன்னாளும் இன்னாளாம் எண்டு புது உடுப்பு போட்டு மினுக்கி திரியிறத........என்ன வகைக்குள்ள அடக்குறது?


தமிழர் வாழ்வியல் செயல்பாடுகள்,மனோநிலைகள் போண்றனவற்றை அலசினால் இப்படி ஆயிரம் புரிந்துகொள்ளமுடியா புள்ளிகள் தென்படும்.தமிழ் நாட்டை ஆண்ட எம்ஜி ஆரிலிருந்து மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டார் வரைக்கும் தமிழரல்லர்.திரையுலகில் கூட திராவிட பண்புகள் கொண்ட தமிழிச்சி நாயகியாக தோண்றுவதை இன்றளவும் தமிழனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் இனத்தவனோடு பேசும் போது தன் நிலையை குறிகாட்ட ஆங்கிலம் கலப்பதன் பின்னால் உள்ள மனோநிலை.மிதி வெடி எடுக்க வந்த சிம்பாவே நாட்டு படிப்பறிவில்லா வெள்ளைக்காரனை பாடசலை ஆங்கில தினத்துக்கு பிரதம விருந்தாளியாக அழைத்து காலில் விழும் யாழ்ப்பாணத்து சிந்தனை.......இப்படி ஆயிரம் ஆயிரம் பு.கொ.மு புள்ளிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
இவ்விசித்திர சிந்தனை ஓட்டத்துக்கு காரணமாக இருப்பனவற்றை அறிந்து கொள்ள ஆழ்ந்த ஆராட்சி ஒன்றும் செய்யதேவையில்லை.பதில் ஒற்றைச்சொல்லில் ஒளிந்து கிடக்கிறது.ஆயிரம் ஆண்டையும் தாண்டி தொடரும் காட்டிக்கொடுப்புக்கும் குழிபறிப்புகளுக்கும் தாழ்வு மன போக்குக்கும் காரணமான ஒற்றைச்சொல் அது.


"செருப்புப்புத்தி"

இந்த செருப்பு புத்திதான் ஆரம்பத்தில் ஆரியனுக்கு அடிபணிய வைத்தது.ஆரியனை தேவன் என விழிக்க வைத்தது.தன்னை தாழ்ந்தவனாக நினைக்க வைத்தது.தன் காரியமாற்ற தன்னினகருவறுக்கும் வேலைகளை கூட செய்யுமளவுக்கு கொண்டு போய் விட்டது.பெரியார் வந்து பகுத்தறிவு இயக்கம் வைத்துப்பார்த்தார் சரிவரவில்லை.பின்னாளில் படித்து பெரிய அளவில் தமிழன் சிந்திக்க தொடங்கிய பின்னும் செருப்பு புத்தி சப்பாத்து புத்தியாக உருமாறிற்றே தவிர மூலம் குலையவில்லை.

வெளிநாடு வந்து மேற்படிப்பு படிச்சாலும் புரட்சிகர சிந்தனை இருந்தாலும் செருப்பு புத்தி சுயநலபசை போடப்பட்டு தமிழ் மண்டையோடுகளில் இறுக்கமாக ஒட்டப்பட்டிருக்கிறது என்பதை கடந்த ஐப்பசி மாதம் 25 ம் திகதி நிரூபித்தார்கள் மொறா 2003 மட்ட மாணவர்கள்.


பின்னணி


கீழைத்தேயவரான எமக்கு மேலைத்தேய கலாச்சாரம் கிளுகிளுப்பூடுகிறது.நாளையை பற்றி யோசிக்காமல் தனக்காக உழைத்து தனக்காக வாழ்வது.கண்ணைப்பறிக்கும் ஒளிவிளக்குகளின் மின்னல்களோடு அதிரவைக்கும் இசைசேர்த்து நடனமாடி உற்சாகபான மிதப்பில் தாபங்களை தணிக்கும் தற்காலிக துணையோடு இரவுகளை ஓட்டுவது என்பனவெல்லாம் எமக்கு அந்நியமாக இருந்தாலும் அடிக்கடி ஆசையூட்டுபவை.அதேபோல் அமைதியான பந்தபிணைப்புகள் நிரம்பிய தியானம் வழிபாடு கலாச்சாரம் கட்டுப்பாடுகள் சேர்ந்த கீழைத்தேய வாழ்க்கை முறையாலும் மேற்க்குலகத்தினர் கவரப்படுகிறார்கள்.அவ்வாறு இந்து மதம் மீது ஈர்க்கப்பட்ட பிரித்தானியர்கள் வேல்ஸ் எனும் இடத்தில் ஒரு முருகன் கோவிலை கட்டி வழிபாடுகள் செய்து வருகின்றனர்.நம்மவர்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி ஆங்கில துதிப்பாடல்களை பாடி வழிபடுவது போல அவர்கள் செய்கிறார்கள்.

செருப்பு புத்தி வெளிப்பாடு


வழமையான ஒன்றுகூடல்களுக்கு கூட வராத பலரும் வரலாறு காணாதவாறு(?) பெருமெடுப்பில் ஒன்று கூடி 1000£ பவுண்ட்ஸ் செலவில் வாகனம் ஒன்றை அமர்த்தி வேலைகளுக்கு விடுமுறை எடுத்து 2 நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு வெள்ளைக்காரர் பூசை செய்யும் அந்த புனித தலத்தை தரிசித்து வரங்கள் வாங்கி திரும்பி வந்தார்கள்.


இந்த அறிவு ஜீவிகளிடம் இந்த தளத்தின் வழியாக சில கேள்விகளை முன்வைக்கிறேன்.

கடவுள் நம்பிக்கையை வாழ்க்கைக்கு ஊன்று கோல போண்றது.தடுமாறும் சமயங்களில் பிடித்தே ஆகவேண்டும்.வாழ்க்கையே தடுமாற்றம் என்றால் வாழ்க்கை முழுக்க இடுப்பில் மந்திரித்த அரைஞாண் கயிறு கட்டியே ஆகவேண்டும்.பிழை சொல்லவில்லை.ஆனால்....

1) கடவுளை தேடி இவ்வளவு தூரம் பெரும் பண செலவோடு போயே ஆகவேண்டுமா?.
நாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளில் சிலவற்றை தெரிந்தெடுத்து உதவி இருக்கலாமே?,அந்த பிஞ்சு உள்ளங்கள் உங்களை வாழ்த்தும் போது வேல்ஸ் முருகன் தராதது கூட கிடைத்து இருக்கும்.

2)வெள்ளைக்காரன் பூசை செய்தால் புனித தலமா?, அப்போ ஒரு பேச்சுக்கு பிரிக்ஸ்டனின் காப்பிலியள் கோயில் கட்டினல் அதை புனித தலமாக்கி யாத்திரை போவீர்களா?

3)போரில் உயிர்நீத்தவர்களை நினைவு கூர்வதற்க்கு கூட வேலைக்கு விடுப்பு போட்டு ஒன்று சேராத நீங்கள் இந்த புனித யாத்திரைக்காக மட்டும் ஒன்று கூடியதன் காரணம் என்ன?

மேற்சொன்ன வினாக்கள் மூலம் என்னை பகுத்தறிவுவாதியாகவும் வித்தியாசமானவனாகவும் காட்டிக்கொள்ளும் எண்ணம் கிஞ்சித்துமில்லை.இதே கேள்விகளை என்னிடமும் கேட்கப்போகிறேன்.என்கவலை எல்லாம் படித்தவர்கள் விளக்கமானவர்கள் என்று சமூகத்தில் சிறுபகுதியேனும் வைத்திருக்கிற நம்பிக்கைகளை இவ்வாறான புனித தல (?) யாத்திரைகள் சிதைத்துவிடக்கூடாது என்பதுதான்.சிதைந்து போன ஓரினத்தின் தூண்களான நம்போண்ற இளைஞர்கள் மத ஊண்றுகோல் பிடித்து தள்ளாடினால் ஆயிரம் ஆண்டுக்கும் எழுந்திருக்க முடியாது.

இறுதியாக பஞ்சு டயலாக்....

தன்னம்பிக்கை உள்ள சுயநலமில்லா மனிதனுக்கு மதங்கள் தேவையில்லை.
ஆதி திராவிடன் எந்த மதத்தையும் பின்பற்றவுமில்லை..