7 ஜி பிளஸ்,அறிவகம் ஆகியன குழுமங்களால் அடித்தளமிடப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட மொறட்டுவை படவுலகம் 2 வருடத்தின் பின் தனது மௌனத்தைக்கலைத்து இருக்கிறது.தமிழ் மாணவர்கள் வைத்திருந்த கமெராக்களை பறித்தும், கலைஞர்களை மிரட்டியும் கொடுமைப்படுத்திய இனவாதம் வெற்றிப்பெருமிததோடு உறங்கு நிலைக்கு சென்றதைத்தொடர்ந்து குறும்பட தயாரிப்பு முயற்சிகள் சூடு பிடித்துள்ளன.

2004/2005 மட்டத்தை சேர்ந்த மணிவண்ணன்,சயந்தன் ஆகியோர் கட்டுப்பெத்தையில் இருந்து அறிவழகன் என்ற குறும்படத்தை 2007 தொடக்கத்தில் இளையோர்க்கான வரவேற்பு விழாவில் வெளியிட்டு புது அத்தியாயம் ஒன்றைதொடக்கி வைத்தனர்.காலம் காலமாக இவ்வாறான நிகழ்வுகளில் நாடகம், வில்லிசை என அரங்கேற்றி வந்த சூழலில் இது வித்தியாசமான ஒரு அணுகுமுறையாக காணப்ப்பட்டது.சில மாதங்களின் பின்னர் 2007 ஜுன் இல் இடம்பெற்ற சங்கமம் விழாவில் அறிவகம்,7ஜி பிளஸ் என இரு குழுமங்கள் திரைப்படங்களால் மோதல் நடத்தியதும் அதைத்தொடர்ந்து நடந்த ரசிகர் மன்ற மோதலும் "கம்பசில படம் எடுத்தா ஒரு பந்தாவ மெயின்டெயின் பண்ணலாம்" என்ற கருவை உண்டாக்கி விட்டிருந்தது.அறிவக தயாரிப்பில் இயக்குனர் பவான் எடுத்த கபோதி திரைப்படம் மொறட்டுவை பெடியளில் அத்தியாவசிய பிரச்சினைகளான காதல்,வாளி,ஏமாற்றம்,ஐட்ட படம் போண்ற விடயங்களை அடிப்படையாக கொண்டு பின்னப்பட்டு பலத்த வரவேற்ப்பை பெற்றது.நீண்டகாலமாக காதல் தோல்வியில் துவண்டு போய் இருந்த விஞ்ஞானி அலிபாய் "அவளுக்கு நான் யார் எண்டத காட்டுறன்" எண்டு போட்ட பெண்வேடம் பலராலும் பாராட்டப்பட்டதுடன் "அவள விட வடிவான பெட்டையா இருக்கிறானே" என அலசலுக்கும் உட்பட்டது.

கட்டுப்பெத்தையில் இருந்து அறிவழகன்



கபோதி-The Real Undergraduate




வழமையான பல்கலை குறும்படங்கள் ராக்கிங்,காதல்,வாளி போண்ற விடயங்களுக்குள்ளேயே முடங்கிப்போயிருந்தன.அடிதடி,பந்தா,பஞ்சு டயலாக்கு போண்ற மசாலா விடயங்கள் உள்ளடக்க கடினமானவையாக கருதப்பட்டன.இக்கருத்தை உடைத்தெறிவது போல 7ஜி பிளஸ் குழுமத்தால் வெளியிடப்பட்ட படம் தான் "பில்லா 2007". "கதையே இல்லாம படம் எடுத்திருக்குதுகள் பொறுக்கியள்" என கட்டுப்பெத்தை கன்னிகளிடம் சான்றிதழ் வாங்கியபடம்."துலைந்து போன நோட்சை ஒருத்தன் தேடி கண்டு பிடிக்கிறான்".இந்த ஒரு வரிக்குள் அடங்குகிற கதையெல்லாம் ஒரு கதையா என்று பலரின் கடுப்பை கிளறிய படம். வரும் கால கட்டுப்பெத்தை மசாலா பாணி திரைப்படங்களுக்கு எப்போதும் ஒரு நல்ல முன்னுதாரணமாக திகழும் என பாராட்டப்பெற்ற இப்படம் சுகாவின் சிந்தனையில் கருக்கொண்டு சேகரன் எனும் பிறவிக்கலைஞனால் உருக்கொள்ள வைக்கப்பட்டது.


பில்லா 2007- The Track Of Dog



இத்திரைப்படத்தின் வீச்சம் எத்தகையது என்பதற்க்கு ஒரு சின்ன உதாரணம்




அறிவக குழுமம் சிதறிய பின்னர் 7ஜி பிளஸ் தன் வல்லமைய நிலைநாட்டவும் பல்கலை வாழ்வில் பிறரால் மறக்கப்பட முடியாத அடைவு ஒன்றை ஏற்படுத்தும் முகமாகவும் பிரமாண்டமாக அவதாரம் என்ற படத்தை தயாரிக்கத்தொடங்கியது.இரட்டை வேட சண்டைக்காட்சிகள், Time Slicing கமெராக்கள் என மாதக்கணக்கில் நீண்ட படப்பிடிப்பு சிங்களவர்க்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கருதி கமெராக்களை பறித்து சிலரை சிறையில் அடைத்து வதைத்ததோடு நின்று போயிற்று.தொடர்ந்து வந்த மட்ட மாணவர்கள் குறும்படங்களை தயாரிக்க விரும்பினாலும் சுய பாதுகாப்பு குறித்த அச்சம் அதற்க்கு முயல்வதை தடுத்து வந்தது.2 வருடங்கள் பின்னர் அசிங்களம் தன் கோரப்பசியடங்கி அமைதியானதைத்தொடர்ந்து தமிழ் மாணவர்களின் திரைப்பட ஆக்கங்கள் சார் முயற்சிகள் மீள கிளர்ந்துள்ளன.

அவதாரம்



இந்திலையில் சில வாரங்களுக்கு முன் வெளியான சரவெடி என்ற குறும்படம் புதிய நம்பிக்கையை தருவதாக உள்ளது.அநேக தமிழ் மாணவர்கள் படைப்புக்களை உருவாக்கும் பொழுது பார்வையாராக வரக்கூடிய தமிழ் பெண்களின் முகம் கோணக்கூடாது என்பது குறித்து அதீத அக்கறை செலுத்துவதுண்டு.ஏனெனில் ஏ தர நகைச்சுவைகள், பாலுணர்வை வெளிப்படுத்தும் காட்சிகள் தங்களுக்கு பிடிபதில்லை என காட்டும் முகமாக அருவருப்பான புறக்கணிப்பை தமிழ்ப்பெண்கள் செய்வது வழமை.(இச்செய்கை போலியானது,பிடிக்கிறது எனக்காட்டினால் தன் மீதான பிறர் பார்வை மாறும் என்ற அச்சத்தினால் ஆவது.) பெண்களின் போலி விமர்சனங்களை புறம்தள்ளி படைப்புக்களை உருவாக்குபவர்கள் மீது படுமோசமான அவப்பெயர்களை பரப்புவது கட்டுப்பெத்தைப்பெண்களின் வழமை.விபரீதமான, எதிர்கால கலியாண பேச்சுக்களை குழப்பக்கூடிய ஒரு விடயத்தை பொருட்டாகவே எடுக்காமல் வார்த்தைகளுக்கு தணிக்கை தராமல் துணிவாக சொல்ல வந்ததை காணொளியில் கொண்டு வந்தமைக்காக "சரவெடி" படக்குழுவிற்க்கு ஒரு பெரிய "சல்யூட்".





வெளியே பசு வேடம் போட்டு உள்ளே பாஞ்சாலியாக வாழும் மரதமிழ்ப்பெண்களைப்பற்றி சுவாரசியமாக அடிதடி,நகைச்சுவை,மொக்கை என கலந்து தந்திருக்கிறார்கள்.வசனங்கள் பல தெளிவற்று இருப்பதுவும்,சில அநாவசியமான நீள் காட்சிகள் தவிர ஒரு தரமான கட்டுபெத்தை மசாலாப்படம்.அந்த பர பர எடிடிங் படத்தை எங்கும் தொய்ய விடவில்லை.வெளிப்பாடுகளை வைத்துப்பார்க்கும் போது "சரவெடி" படக்குழுவுக்கு அகச்சக்தி அதிகம்.எனவே பல படப்புக்களை அவர்களிடம் இருந்து இனி வரும் காலங்களில் எதிர்பார்க்கலாம்.

SARAVEDI - சரவெடி - Trailer



இப்படம் வெளியாகி சில நாட்களுக்குள்ளாகவே முகநூலில் "DUMMY" என்ற குறும்படத்துக்கான முன்னோட்டத்தை வெளியிட்டிருந்தார்கள்.மட்டம் 2006 மாணவர்களில் வேகமும் விவேகமும் கொண்ட திலீபன்.சிறியெயந்தன்,நந்தரூபன் போண்ற தம்பிகள் இப்படைப்போடு சம்பந்தப்பட்டிருப்பதால் தரமான ஒரு வெளியீடாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.

குறூம்படங்கள் ஏறத்தாள 20 தொடக்கம் 30 நிமிடங்கள் நீளமானவையாக இருக்க வேண்டும் என்ற கருத்து இப்போது மாற்றப்பட்டு வருகின்றது.5 நிமிட கால எல்லைக்குள் ஆழமான விடயம் ஒன்றை தொட்டுச்செல்வதே இன்றைய பாணி.பொறியியல் துறை சார் மாணவர்களின் படைப்புக்களில் எப்போதும் தனித்தன்மை ஒன்று காணப்படுவது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்.இன்றளவும் இலங்கையில் நடக்கிற குறும்பட விழாக்களில் வெற்றியீட்டுபவை நத்தை வேகத்தில் நகர்கிற அசிங்களவரின் மொக்கைப்படங்கள் தான். கெட்டிக்காரர்களான மொறட்டுவை கம்பஸ் தம்பிகளால் இத்திரை நாடகங்களை புறம் தள்ளும் அளவுக்கு சிறப்பான படைப்புக்களை உருவாக்கிடுவது ஒன்றும் அத்துணை கடினமான விடயங்கள் அல்ல.கொஞ்சம் சிந்தனையும் கொஞ்சம் முயற்சியும் இருந்தால் மிஞ்சிடலாம்.