தற்போதைய நிலவரம் - 02

கெமிக்கல் அலி தனது அரிந்த பலகை உடம்பை தேக்கு மரப்பலகையாக்கும் முயற்ச்சியில் கடுமையாக ஈடுபடுவதாக மொறா2003 உளவுத்துறையின் வெளியகப்பிரிவுக்கு தகவல்கள் கிடைத்ததைஅடுத்து பிரித்தானியா சறே மாகாணத்தின் மிட்ச்சம் பிரதேசத்தின் ஜிம் ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடி கமெராச்சூட்டு தாக்குதலில் அலிபாய் வசமாக சிக்கினார்.100 கிலோ இரும்பு வட்டங்களை தடி ஒன்றில் போட்டு கும்மு கும்மு என்று குதறிய அலி தனது ஜிம் வருகைக்கான காரனங்களைப்பகிர்ந்து கொள்கையில்...

"மச்சான் 3 கிழமையா தான் இங்க வாறன்"

நிருபர் கேள்வி- "எங்களுக்கு ஏன் சொல்லேல்லை?"
பதில்-"உங்களட்ட ஒரு விசயத்த சொன்னா அது பிபிசியில போட்ட மாதிரி,அதான் சொல்லேல்ல"

நிருபர்-இப்ப உங்கள கனாக்காலம் ரீவிக்காண்டி ஒரு வீடியோ எடுக்கப்போறம்.

(அலிபாய் கோபம் கொண்டு "கம்பசில தான் என்ன நாறடிச்சியள்,இங்கயும் நிம்மதியாய் இருக்க விடமாட்டியளோ?" எண்டபடி நிருபரின் கமெராவை பறிக்க முயல்கிறார்.நிருபர் ஜிம் பாடி என்பதால் அரிந்தபலகை பாடியின் முயற்சி கை கூடவில்லை.)


திடீரென கம்பசில செமிஸ்டர் நேரத்தில நோட்ஸ்கட்டோடு நேரே வெறித்த பார்வையோடு நூலகம் நோக்கி போவது போல பளுதூக்கும் பகுதியில் இருந்து ஜிம் பிரிவுக்கு நடந்து செல்கிறார்.நிருபரும் உதவியாளர்களும் பின் தொடர்கின்றனர்.
அங்கே காணப்பட்ட பெரிய ஆனை சைஸ் பந்துகளில் ஒன்றை முதுகுக்கு பின்னால் வைத்தவர்.சட சட என்று இடுப்பை வளைக்கிறார்.சிக்ஸ் பேக் பயிற்ச்சி போல.இப்ப 4 பேக் உருவாகிட்டுதாம்.இன்னும் 2 தான் மிச்சம்.இடையிடையே ஒளித்து வைத்திருந்த புத்தூக்கி பானத்தை அருந்துகிறார்.

நிருபர் கேள்வி-"குடிக்கிறதில கொஞ்சம் தரலாமே?"

அலிபாய்-"இந்தா குடிச்சிட்டு மிச்சத்தை தாங்கோடா என்ன?"

சசி தந்தது "அப்பாஸின்ர பசிக்கு கிடைச்ச சிங்கிள் பிஸ்க்கட் போல" இருக்க அந்த புத்தூக்கிப்பானம் காலி ஆகிவிடுகிறது.வெற்றுப்போத்திலை வாங்கிய சசி கடுப்பாகி அதை வீசி விட்டு நீல கலரில றபர் சீட்டை விரிச்சுப்போட்டு நிலத்தில மல்லாக்கா படுக்கிறார்.

கடுப்பில ஜீன்ஸ்ச கிழிச்ச கதயா வரப்போகுதோ என்ற பயத்தில் நிருபர் பம்ம சசி அதே பழைய சிரித்த முகத்துடன் காலை விரித்து காற்றில் காலாட்டுகிறார்.
"மனசில வலி ஆயிரம் இருக்கு மச்சான்,மனசில இருக்கிற வலிய மறக்கோணும் எண்டா உடம்ப இரும்பாக்குவம் எண்டு தான் வந்திருக்கிறன்,தயவு செய்து இங்கயும் வந்து மனச வலிக்க வைக்காதேயுங்கோடா" எண்டு விட்டு உடை மாற்றும் அறைக்கு போனவர் வெளியே வரேக்க புரூனோ மாதிரி ஒரு மார்க்கமான கெட்டப்பில் வந்தார்.


4 வருசமா கம்பசில குப்பை கொட்டினவங்கள் கூட நிக்கிறாங்கள் எண்டதையே மறந்தவன் போல போனை எடுத்து காதில் வைத்தவர்...
"ஹலோ நான் சசி தான்.என்ன பிரச்சினையோ?.இஞ்சின் கூட எண்ணெய் குடிக்குதோ?,அப்ப வாயால காத்து ஊதி ஓடுற காரா மாத்துவமே?,கனக்க முடியாது பயப்படாதையுங்கோ"
எண்டு தொடர்ந்த படி அவருக்காகவே காத்திருந்த அந்த நவீன சைக்கிளில் தாவி ஏறினார்..
சசியின் போட்டோவ பதிவிடும் போது உருப்பெருப்பித்து பார்த்த நிருபருக்கு அதிர்ச்சி மேல அதிர்ச்சி தந்தது அங்கே தென்பட்ட ஒரு வாசகம்.சசியின் அரிந்த பலகை நெஞ்சிலே,குளிரூட்டிக்கண்ணாடி தொங்க விடப்பட்ட இடத்துக்கு மேலே இருந்த அந்த பித்தளை சங்கிலியில் "தயவு செய்து யாராவது என்னை காதலியுங்கள்" என்றிருந்தது.

பிரித்தானியாவிலும் பக்கா கிராமத்து ஆள் போல வலம் வருகிறது எண்டா அது நம்ம "சின்ரா" தான்.வேலை,வீடு,படிப்பு என அடக்கமான பிள்ளையாக வாழும் "சின்ரா" தனது குடும்பத்தவருக்கு ஆப்பிள் மரம்,பழம் என்பனவற்றை வெப்கமெராவில் காட்டேக்க எங்கள் நிருபரின் கமெராவில் சிக்கினார்.இந்த காலத்திலும் இப்பிடி வீட்டுக்கு அடக்கமாய் அச்சம்,மடம்,பயிர்ப்போட இருக்கிற பிள்ளையளும் இருக்கினம் எண்டதுக்கு இவர் நல்ல உதாரணம்.கொமெண்ட் அடிக்கிறவையும் அடக்கமா அடியுங்க,இல்லாட்டி விளைவுகளுக்கு நான் பொறுப்பாளி இல்லை.


அப்பிள் காட்டிவிட்டு திரும்பேக்க சின்ரா ஸ்கைப்பில கதச்சுக்கொண்டு போன ஓரிரண்டு வார்த்தைகள் நிருபரின் காதில் விழுந்தன.
"என்னதான் அப்பிள் எண்டாலும் நம்ம முற்றத்தில் நிக்கிற ஜம்புக்காய் மாதிரி வருமோ" முடிஞ்சா அத அடுத்த பார்சலில போட்டு விடுங்கோ,மற்றது போன முறை வந்த பார்சலில லட்டுக்கு சீனி பத்தாது,எண்டாலும் நல்ல இருந்திச்சு"

பிள்ளயெண்டா இப்பிடி இருக்கோணும்.சிலதுகள் வீட்டுக்கும் உதவாமல் நாட்டுக்கும் உதவாமல் திரியுதுகள்.இப்பிடியெண்டேக்க உடன நினைவில வாறவர் அரசியல்வாதி கமல்ஸ்.முள்ளுத்தலை,கறுத்தக்கண்ணாடி,லாப் டப் என வலம் வரும் இவர் இப்போது லண்டனில் பிரபலமான பாலர் ஆசிரியர்."இங்கிலீசில பாட்டுப்பாடி,ஆட்டம் போட்டு சின்ன பிள்ளையளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கிற அழகில லண்டன் தாய்க்குலமே சொக்கிப்போய் இருக்கினமாம்.அத கேட்க நாம தான் குடுத்து வைக்கேல.என்ன தான் நடந்தாலும் "லண்டனும் தமிழ்ப்பெண்களும்" என்ற தலைப்பில பெண்ணீயகட்டுரை வெளியிடோணும் எண்ட அவா மட்டும் இன்னும் தணியேல எண்டு நம்பகமான ககவல்கள் தெரிவிக்கின்றன.


டுத்ததா நம்ம ரவுடி.இவர பற்றி எழுதி எழுதியே என்ர கைரேகை தேயப்போகுது.அதிர்ச்சித்தகவல் என்னெண்டா இப்ப ஜிம் அடிக்கிறாராம்."என்ன பாடு பட்டாச்சும் பிரித்தானிய மருமகனாகி பி.ஆர் எடுத்தால்க்காணும்" எண்ட கொள்கைக்கு வீக்கான பாடிக்கொண்டிசன் தடையாக இருக்கப்படாது எண்டசிந்தனைதான் ஆள இந்த அளவுக்கு கொண்டாந்து விட்டிருக்குது எண்டுகினம் அவதானிகள்.ஏதோ வாயால மட்டுமல்ல உடம்பாலயும் ரவுடி போல தெரியட்டும் என நலன் விரும்பிகள் வாழ்த்தினாலும் பழைய அந்த வெடிக்குணம் மட்டும் போகல.

5000 கிலோ குண்டுக்கு பக்கத்த நிண்டு நம்மட 2003 மட்டத்தின் நடமாடும் அணுகுண்டு எடுத்த போட்டோவே காணும் இவன் ஒருகாலும் திருந்தான் எண்டத நிரூபிக்கிறதுக்கு.இப்பிடி கட்டுப்பெத்தையில் ஒவ்வொரு மார்க்கமா திரிஞ்சவங்கள் இப்ப ஒவ்வொரு மூலையா ஒவ்வொரு மார்க்கமா திரியுறாங்கள்.அதுகள அந்தந்த இடத்தில இருக்கிறவங்கள் பதிவாக்கிப்போட்டா வேலை,சாப்பாடு,உறக்கம் என இயந்திரத்தனத்தோடு வாழும் நம்மில் பலருக்கு சந்தோசமான பொழுதுகளாய் சில நிமிடங்களை நீங்கள் வழங்கியவர்களாவீர்கள்.

6 comments:

செந்தில் said...

Its grt to heat abt current affairs of our friends....
Gd wrk suga

Rama said...

என்ன சொன்னாலும், ஆரயும் பார்த்து தேவதை என்டு சொல்லாட்டி சரிதான்....

சுகா said...

நன்றி செந்தில்.நேரம் ஒதுக்கி பின்னூட்டம் போட்டதுக்கு.பெண் பிள்ளைகள் Face bookல Status எழுதிறதுகளுக்கு நீளமா பின்னூட்டம் போடுற மாதிரி இங்க போட ஒருதருக்கும் மனம் வருதில்லையே?

சுகா said...

என்ன சொன்னாலும், ஆரயும் பார்த்து தேவதை என்டு சொல்லாட்டி சரிதான்//
லண்டன்ல நிலவரம் வேறமாதிரி.. சசி கடையில நிற்கேக்க வாற வெள்ளக்காறியள் "ஏஞ்சல் போல இருக்கிறீர்" எண்டு சொல்லி வெட்கப்பட்டு சிவக்க இவர் "நோ, நோ ,லை" எண்டு பம்மி காத்தில பறக்கிறது தான் நடக்குது.

Anonymous said...

புரூனோ :- Bruno இங்க போய் பாருங்க....

snake babu said...

excellent

you are so great.............

sasi oru nalla thalaippu