.

ஞாபகங்கள் தாலாட்டும் (கோகிலன்)

2004களில் மெலிதாய் உயரமாய் ஒட்டித் திரிந்த அந்த உருவத்தை முதன் முதலில் எங்கள் ஆங்கில வகுப்பறையில் சந்தித்தேன்.எங்கள் ஆங்கில புலமையின் அருமை தெரியாமல் எங்களை கடைசி வகுப்புக்களில் சேர்த்து விட அங்கே பெரும் பான்மையினர் சிறுபான்மையினராகிப் போன அவலம் நடந்தது.
பக்கத்து வகுப்புகளில் தமிழ் முழக்கம் கேட்க அங்கே எட்டிப் பார்த்த போது கோகிலன் தனக்கே உரிய புன்சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான்பின்னாளில் பல தருணங்களில் நாங்கள் ஒன்றாகவே பயணப் படப் போகிறோம் என்றறியாமல் நடந்த அந்த முதல் சந்திப்புகளை பற்றியநினைவுத் தடங்கள் இப்போது என்னிடம் இல்லை..வழக்கமான பெயர் ஊர் விசாரிப்புகளாக அவை அமைந்திருக்க கூடும்.தனது முதல் வருட வதிபிடத்தை எங்கள் மூத்த குடிகளுடன் பகிர்ந்து கொண்ட கொண்ட கோகிலனை பற்றி பலருக்கும் தெரியாது ஆனால் மிகச்சிறந்தமாவட்ட மற்றும் தேசிய பெறு பேறுகளை பெற்றவர் என்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும்.முதல் வருடத்தில் கோகிலன் முதல் குழுவிலும் நாங்கள் எல்லோரும் இரண்டாம் குழுவிலும் இடம் பெற கோகிலனுடன் அவ்வளவாக பழக்கம் ஏற்பட வில்லைபொதுவாகவே சிவில் மாணவர்களின் இரண்டாம் வருடம் சோகமாய் தொடங்கும் மற்றவர்களுக்கு முன்னாலேயே வதைக்க தொடக்கி விடும் விரிவுரைகளும் கோர்ஸ் வோர்க்குகள் ஒரு புறமும்எலேக்ட்ரோனிக்யும் கம்ப்யூட்டர்ரையும் தவற விட்ட ஏக்ககங்கள் மறுபுறுமுமாக வாட்டும்.ஆனால் ஒரே ஒரு சந்தோசம் மட்டும் எங்களுக்கு மிஞ்சியது சிவில் தான் பல்கலையில் அதிக தமிழ் மாணவர்களை கொண்ட பிரிவு கிட்டுவும் ரிஷியும் தன்யாவும் பின்னர் எங்களுடன் சேர்ந்து கொள்ள மொத்தமாக ஐந்து பேரும்(deni, thaksha ,yoga ,aingaa ,atc) மெல்லிசாக பதினாறு பேரும் எல்லாமாக இருபத்தொரு பேர் தேறினோம்.அப்போதும் கோகிலன் பொதுவாக முதல் குழுவில் இடம்பெற நான் இரண்டாம் குழுவில் இடம் பெற பெரிதாக பழக்கம் ஏற்படவில்லை ஆனாலும் அவன் நம்ம ஜாதிஎன்ற பெரும் பாசம் அவன் மீது இருந்தது சிவில் பிரிவில் எனது கட்டழகு உடலுக்கு சவால் விடுத்தவர்கள் இருவர் தான் ஒருவன் கோகிலன் மற்றவன் எனது பேரன்புக்குரிய சிஷ்யன் ராபிகடினமான மூன்றாம் வருட பரீட்சை முடிந்து industrial training கான தெரிவு நடந்தது. எப்போதும் மற்றவர்களின் சேலை தலைப்பை பிடித்து தொங்கும் நாங்கள் வழமை போல் எங்கள் முன்னோர்களின் வழியில் straad தெரிவு செய்து தொலைத்தோம் எங்கள் அறுவர் அணியில் கோகிலனும் அடக்கம்
அப்போது நாட்டு நிலைமை சற்று இறுக்கமாக இருந்தது அதனால் எங்கள் அனைவருக்கும் site வாய்ப்பு மறுதலிக்க பட்டது நாங்கள் அறுவரும் அணிவகுத்து டிசைன் ஆபீஸ் சென்றோம்.
அப்போது தான் எங்களுக்கும் எங்கள் பரமகுருவுக்கும் (நந்தன) இடையிலான முதல் சந்திப்பு நடந்தது.நீலகலர் முழுக் கை சட்டை அணிந்திருந்த பரமகுரு வாய் நிறைய புன்சிரிப்புடன் வரவேற்றார் பரமகுருவுக்கு இருக்கும் அபூர்வமான வியாதியை அறியாத நாங்களும் அவரது வரவேற்பை கண்டு அக மகிழ்ந்தோம்.
அடுத்த ஆறு மாதங்களும் எங்கள் வாழ்க்கை பரமகுருவுடன் தான் கழிந்தது பரமகுரு நல்லவர் தான் ஆனால் அவ்வப்போது பரமகுருவுக்கு அரிப்பெடுக்கும் அப்போதெல்லாம் அவருக்கு சொறிவதற்கு யாராவது ஒருவர் தேவை படுவார் சிக்கினால் நோண்டி நுங்கு எடுக்காமல் விட மாட்டார்.ஒரு சின்ன கோட்டை டிசைன் கடதாசியில் வரைந்து விட்டு எதோ சந்திர மண்டலத்திற்கு போய் விட்டு வந்த பாவனையில் தனது நகங்களை கடித்து கொள்ளும் பரம்குருவின் செய்கைகளை அவரது இருக்கைக்கு நேர் எதிர் இருக்கையில் இருந்து அவதானித்து கொண்டிருக்கும் நான் வழமையாக அவரிடம் சிக்கி கொள்வேன்.ஒரு மாதத்திற்கு பின்னர் நான் ஒருவாறாக பரம்குருவின் அழுங்கு பிடியில் இருந்து தப்பி Silkot போகும் வரை இந்த வதை தொடர்ந்தது அதன் பின்னர் அந்த பொறுப்பை சத்தீஸ்வரனும் லம்போவும் தங்கள் தலை மேல் சுமந்தனர்.

பரமகுருவிடம் இருந்து சாதுரியமாக கோகிலன் தப்பி கொள்வான்அவரின் இருக்கைக்கு சமாந்தரமான வரிசையில் இருந்து முகத்தை அப்பாவியாக வைத்துக் கொள்வான்.அவர் பார்வை வீச்சை அவனை நோக்கி திருப்பும் போது ஒரு புன்னகை வேறு பூப்பான்கோகிலன் அங்கிருந்த(straad) சசினி மிஸ்சின் நம்பிக்கைக்குரிய சீடனாக விளங்க்கினான் சசினி மிஸ்சின் எல்லா moment redistribution calculations கோகிலன் தான் செய்வான் அது தவிர அவரது மதிய உணவை கொட்டிலில் இருந்துவாங்கி வரும் பொறுப்பும் கோகிலனை சார்ந்ததே அது தவிர கீர்த்திகவுடம் கையளிக்கப் படும் எல்லா ஸ்டீல் டிசைன் calculationனும் கோகிலனின் தலையிலேயே கட்டப்படும்.கோகிலன் எல்லா வேலைகளையும் சமர்த்தாக செய்து முடிப்பான்.ஒரு நாள் கொள்ளுபுட்டியில் இருந்த சைட்டில் இரவு static load test செய்ய வேண்டி இருந்தது அதற்காக நாங்கள் இரவு அங்கு தங்க வேண்டி இருந்ததுஅப்போது வெள்ளை வானின் நடமாட்டங்கள் அதிகமாக இருந்த காலம் இரவு பதினொன்று இருக்கும் தீடிரெண்டு கோகிலனை காணவில்லை நானும் கீர்த்திகவும் பதறி போய் தேட கோகிலன் அங்கிருந்த பெரிய கனரக வாகனத்தில் ஏறி அதனுடன் கதை பேசிக் கொண்டிருந்தான்.நான் அருகில் சென்ற பொது கோகிலனின் கண்கள் சிவந்திருந்தன.நான் என்ன மச்சான் என்ன நடந்தது என்று கேட்ட போது முதலில் எதுவும் சொல்ல மறுத்த கோகிலன் பின்னர் தனது அமைதியை கலைத்தான்.தனது காதலி கொழும்பு வந்திருப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து வெளி நாடு செல்ல இருப்பதாகவும் சொன்னான் நான் வழமை போல்விடு மச்சி இருக்கிறவனுக்கு ஒன்று இல்லாதவனுக்கு ஆயிரம் என்று சொல்ல உனக்கென்னடா தெரியும் காதலை பற்றி என்று எகிறினான்.எப்போதாவது காதலித்திருக்கிறாயா என எதிர் கேள்வி கேட்ட கோகிலன் தனது காதலியின் முகத்தை வாழ் நாள் முழுவதும் பார்த்து கொண்டே இருக்கலாம்என்றும் தான் அவளை மிகவும் நேசித்ததாகவும் சொன்னான்.உயர் தரம் முடித்த பின்னர் ஒரு முறை பஸ்ஸில் ஏறிய போது அவள் ஒரு புன்னகையை வீசி விட்டு சென்றதாகவும் அதன் பின்னர் அவளை பல தடவைகள் பின் தொடர்ந்ததாகவும் ஆனால் பல்கலை தொடங்கிய பின்னர் தான் இங்கே வந்து விட்டதாகவும் அதற்கிடையில் எல்லாம் நடந்து முடிந்து விட்டதாகவும் சொன்னான்.பிறிதொரு முறை அவனுடன் கதைத்த போது தனது முன்னாள் காதலிக்கு குழந்தை கிடைத்திருப்பதாக சொன்னான் என்ன பெயராம் என்று கேள்வி கேக்க நினைத்த நான் ஏனோ கேட்க வில்லை அவனும் அதை சொல்லவில்லை.முதல் வருடத்தில் மோசமான பெறுபேற்றை பெற்ற எங்களுக்கு மூன்றாம் வருட இறுதியில் எங்கள் சிவில் பிரிவு தரும் மிக மோசமான தண்டனை தான் surveying camp.வாழும் போதே நரக வாழ்க்கையை அனுவிக்கும் மோசமான நாட்கள் அவைஅதிகாலை இரண்டு மணிக்கு நித்திரைக்கு போய் விட்டு மீண்டும் ஐந்தரை மணிக்கு எழும்பி குளித்து விட்டு காடளக்க புறப்பட்டு விடுவோம் பலாக் காய்களுடனும் கட்டை சம்பளுடனும் எங்களுக்கு எப்போதும் இணக்கம் இருந்ததில்லை எதோ உயிர் தங்க சாப்பிடு விட்டு காடளக்க புறப்படுவோம் கொளுத்து வெயிலில் எங்களுக்கு ஒதுக்க பட்ட வேலையை நிறைவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் கல்லும் முள்ளும் குத்த குத்த அளவிடை எடுப்போம்.
எல்லோரும் வெறுத்து போயிருந்தார்கள் எல்லோரும் தங்கள் குழுவுக்கு தான் அதிக வேலை என வாதம் செய்வார்கள்நானும் கோகிலனும் தான் எங்கள் குழுவின் தமிழ் உறுப்பினர்கள் நாங்கள் வேலை எல்லாம் முடித்த பின்னர் குளித்து பவுடர் எல்லாம் போட்டு விட்டு நம்மவர்களுக்கு முன்னால் போய் நின்று கொண்டு எங்கள் குழுவுக்கு பெரிதாய் வேலை இல்லை என்றும் நாங்கள் மர நிழலில் நின்று இளைப்பாறி விட்டு வந்ததாய் கதை விடுவோம் அவர்களும் அதை கேட்டு கடுப்பாவர்கள்காடளந்து விட்டு வந்தால் எட்டு மணிக்கு வரைதல் தொடங்கி விடும் எங்கள் குழுவின் தலைவர் எங்கள்ளுக்கும் (எனக்கும் கோகிலனுக்கும்) சில வேலை தருவதற்காய் எங்களிடம் வருவார் தனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் எங்களுக்கு விளங்கப் படுத்துவார் நாங்கள் விளங்கிளானும் விளங்க வில்லை எனத் தலையாட்டுவோம்.
அவரும் மறு படியும் விளங்க படுத்துவார் நாங்களும் விடாமல் விளங்க வில்லை என்று தலை அசைப்போம் இறுதியில் தனக்கு வந்து வாய்த்தவர்கள் வேதாளங்கள் என்ற உண்மை விளங்கிய பின்னர் தனது முயட்சியை கைவிட்டு விடுவார்.சில அளவிடுகள் குடி மனைகளையும் தோட்டங்களையும் ஊடறுத்து எடுக்க வேண்டி இருந்தது நாங்கள் கால்வாய் வெட்டுவதக்காய் அளக்கிறோம் என்று காலம் காலமாக சொன்ன பொய்களால் ஊரவர்கள் வெறுத்து போய் இருந்தார்கள்.ஒரு மரவள்ளித தோட்டத்தை ஊடறுத்து அளவிடு எடுக்க இருந்தது கோகிலன் மர வள்ளி கொப்புகள்அளவூட்டை மறைத்ததால் அவற்றை முறித்தான் அப்போது அங்கிருந்த தோட்டக்க் காரன் சிங்களத்தில் பேச அது புரியாத கோகிலன் தனது வழமையான புன்சிரிப்பை தவிழ விட்டு விட்டு மேலும் சில கொப்புகளை முறிக்க தோட்டக் காரன் கடுப்பாகி அடிக்க போக அங்கிருந்த சகோதர இன மாணவன் நிலைமையை தோட்டக் காரனுக்கு விளக்கி தடுத்து நிறுத்தினான்.கோகிலனுக்கு எங்கள் பல்கலை அருகில் இருக்கும் சைனீஸ் கடை fried rice ரொம்ப பிடிக்கும் எனக்கும் அது ரொம்ப பிடிக்கும் என்பதால் அடிக்கடி நாங்கள் கூட்டணி அமைத்து கொள்வோம் தினமும் chicken சாப்பிடும் எங்கள் இருவரினதும் உடற் கட்டமைப்பை பார்த்து கடை முதலாளி எங்களை தனது கடையின் விளம்பர மாடல்களாக நடிக்கும் படி கேட்டும் நாங்கள் அதற்கு மறுத்து விட்டோம்.இது கோகிலனின் பல்கலை வாழ்வின் முழுமையான பதிவல்ல. அவன் என்னோடு பயணித்த சில காலங்களின் தடங்கள் மட்டுமே இந்த பதிவு முழுமை பெற அவனை பற்றிய உங்களினது பதிவுகளும் அவசியம்.இன்னும் ஓரிரு வருடங்களில் தனி நூலக உருவெடுக்க இருக்கும் இந்த வலைத்தளத்தின் பதிவுகளுக்கு நீங்களும் உரமிடுங்கள்.காலப் பெரு வெள்ளத்தில் கரைந்து போகாமல் இருக்கும் உங்கள் எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொள்வதன் மூலம் எங்கள் பல்கலையின் வாழ்வுகளை மீட்டி பார்க்கும் இந்த இனிய முயற்சிக்கு ஆதரவு தாருங்கள்.
இயன்றவரை எல்லோரையும் பற்றிய பதிவுகளுக்கு நாங்கள் முயற்சிப்போம்மறு படியும் ராபியை பற்றிய பதிவுடன் உங்களை சந்திப்பேன்வாழ்க்கையின் எந்த தருணங்களும் மீள வரா. அந்த தருணங்களை அசை போடுகின்ற நொடிகளில் தான் நாங்கள் தொலைத்து விட்ட அந்த நொடிகளின் அருமை தெரிகிறது.-SP

3 comments:

கைப்பிள்ளை said...

கோகுலனை என்னால ஆயுளுக்கும் மறக்கேலாது.ரெயினிங் காலத்தில இரவு சாப்பட்டை முடிச்சிட்டு அறிவகம்,7G+ தலைமையகம் எண்டு ஒவ்வொரு இடமா இரவிரவா திரிவன்.அப்ப ராக்தீபனும் கோகுலனும் இருந்த அறைக்கு போய் கொஞ்ச நேரமானாலும் கதையளக்க தவறுவதில்லை.கோகுலனுக்கு பாடிய டெவலப் ஆக்கோணும் எண்ட ஆர்வம் காரணமாக புரோட்டீன் பவுடர கரைச்சு குடிச்சு ஆஸ்பத்திரியில பல நாள் இருந்த சம்பவமும் அப்ப தான் நடந்தது.கோகுலனோட பாடி கண்டிசன செக் பண்ண விளையாட்டா ஒவ்வொரு நாளும் வயிற்றில் குத்துவேன்.வழமை போல ஒரு நாள் நிசாந்த கடை முன்னால வச்சு கோகுலன்ர வயிற்றில குத்த அவன் காத பொத்தி ஒன்று எனக்கு போட்டு விட்டான்.எனக்கு உலகம் சுத்துறது தெரியுது.இவன் தொடர்ந்து ஏதோ பேசிக்கொண்டு போறான்.நிசாந்த சிரிக்கிறான்.நாம ஒருமாதிரி ஒரு சமாளிச்சு பஞ்சு டயலாக்க விறைப்பா விட்டிட்டு வந்திட்டன்.கன காலமா 2 பேரும் கதைக்கிறேல்லை.பிறகு பைனல் பார்ட்டியில தான் கதைச்சனாங்கள்.இப்ப அத நினைச்சாலும் ஐங்கரன நேர பார்க்கேக்க வாற பயம் நெஞ்சில வரும் எனக்கு.

புல்லட் பாண்டி said...

மிக நன்றாகவும் ரசிக்கத்தக்க வகையிலும் எழுதியுள்ளாய் சசி... பாராட்டுக்கள்.. உனது கைவண்ணத்தில் ராபியைப்பற்றியும் எதிர்பார்க்கிறோம்..

மற்றவர்களை புண்படுத்தாத வகையில் மிகவும் சிறப்பாக இவ்வலைப்பதிவு எழுதப்பட்டு வருகிறது..மாறனுக்கு எனது வாழ்த்துக்கள்...

மிக விரைவில் நானும் ஒரு பதிவு தருவதாக உள்ளேன்... அனைவரும் பங்கேற்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்..

SP said...

நன்றிகள் சுகந்தமாறன் மற்றும் பவான்