.

கட்டுப்பெத்தை காட்டுக்குள் கமெராவோடு...

சும்மா லெக்சருக்கு மட்டம் போட்டு குப்புற படுத்திருந்த போது தான் எமது சங்கமம் நிகழ்வு வந்தது.ஏதாவது நிகழ்ச்சு போடலாம் எண்டா பெடியளுக்கு ஆயிரம் வேலையள்.ஒவ்வொருத்தனும் பிசி எண்ட சிங்கிள் வார்த்தையோட வெட்டியோடிக்கொண்டிருந்தாங்கள்.அப்ப ஹொஸ்டல் தராததால எங்கட மட்ட பெடியள் எல்லாம் குழுமம் குழுமமா கம்பஸ சுத்தி இருக்கிற மகேஅம்மே ஆட்கள்ட வாடகை றூமுகள்ல அடைபட்டு இருந்த காலம்..வழமையாவே நம்மட தமிழாட்களுக்கு ஒற்றுமை கூட எண்ட படியா ஒவ்வொருத்தனும் தங்கட குழுமங்களுக்கு 7G+ , அறிவகம், ஆச்சிரமம், காம்ப், வடா குறூப் எண்டு பேர் வைச்சு தனித்தனி சிறப்பியல்புகளோட இருந்தாங்கள்.முதல்ல இந்த குழுக்களைப்பற்றி ஆழமா பார்த்த தான் 2003மொறட்டுவ தமிழ்க்குழுமத்தினை விளங்கிக்கொள்ள முடியும்.

2003 மட்டத்தின் பிரபல எழுத்தாளர் ஒருவர் இந்த குழு அமைப்புகளை கீழ்க்கண்டவாறு சொல்லிக்கொண்டு போகிறார்...

"மொறட்டுவ 2003 2004 மட்ட தமிழ்மாணவர்கள் அவர்கள் வாழிடங்கள் ரீதியாகவும் குணவியல்புகள்ரீதியாகவும் தனித்தனிகுழுமங்களாக தாமாகவே பிரிந்து போனார்கள்.முதலாம் வருடத்தில் ஹொஸ்டல் தரப்படாததன் விளைவு இது.

1) வடக்கு கிழக்கு பிரதேச தமிழ் மாணவர்கள்.

2)கொழுப்பு பூர்வீககுடிகளான டமில் மாணவர்களும் அவர்களோடு ஒட்டிய வடகிழக்கு டமில் மாணவர்களும்.

இதில் 2 ஆவதுவகையை ஆராய்வது நேரவிரயமாக்கும் செயலாதலால் முதல் வகையை இங்கு ஆராய்வோம்.இவர்கள் அநேகர் பல்கலையண்டியே வசித்து வந்தார்கள்.

அ) அறிவகம்-மிகப்பெரிய மாணவர்குழுமமாக இருந்ததோடு குத்தில் சிறந்தவர்களாகவும் இருந்தார்கள்.பொழுதுபோக்கு-கோவில் போவது,பெண்களோடு போனில் பேசுவது
ஆ)வடமராச்சி+ திருகோணமலை பிரதேச மாணவர்கள்-பார்க்க அமைதியானா ஆனால் விவகாரமான ஆட்களை கொண்டது.பல்கலையில் படிப்பில் கொடிகட்டி பறந்தது இவர்கள் தான் என்ற போதும் பெண்கள் விடயத்தில் பயங்கர வீக் என்பது கம்பஸ் அறிந்த உண்மையாகும்.பொழுதுபோக்கு-குத்துவது,வாளி வைப்பது.
இ)அத்துகோறளை வீட்டில் இருந்தவர்கள்-இதில் பல்கலைவரலாற்றில் பழுத்த அரசியல் வாதியான கமல்ஸ் உள்பட ஒ- சசி,தொப்புள் ரஜி,கிட்டார்கிரி,றெப் தினேஸ்,சேது லெஸ்லி ,கைப்பிள்ளை சுகா என எழுவரைக்கொண்ட அணி.இது தினேசை றெப் ஆக்க்கியதன் மூலம் முக்கியம் பெற்றது.பொழுது போக்கு-பழைய பாடல் கேட்பது,படுப்ப்து,ஐட்டம் பார்ப்பது,சாப்பிடுவது.
ஈ)7G+ இது ஆரம்பத்தில் அலியப்பா,சௌந்தர்,கொன்சால்,ஜெயசுதன்,ரிஸ்மி ஆகியோரை கொண்ட குழுமமாக இருந்து ஜெயசுதனின் நம்ப முடியாத புழுகுகளால் கவரப்பட்டு இரண்டாம் வருட தொடக்கத்தில் அச்சுதனையும் உள்வாங்கியது.பின் டோம் கிடைத்த போது தமிழ்மாணவர்கள் ஒருத்தரும் வராத நிலையில் டோமுக்கு இடம் மாறி இக்காலத்தில் சுகந்தமாறனை உள்வாங்கியது,அறிவகம் சிதறிய போது சேகரனை உள்வாங்கியது.இறுதி வருடத்தில் ரஜித்தை உள்வாங்கி யது.பொழுது போக்கு-வெடிப்பது,பந்தா விடுவது,தண்ணியடிப்பது,தம்மடிப்பது,நிகழ்சிகளில் கலக்குவது,வலிந்து தாக்குவது,பிறரின் ஆப்புகளுக்குள் உதவ போய் சிக்குவது,கற்புகரசிகளிடம் நல்ல பெயர் வாங்குவது,இதெல்லாம் போரடிச்சா படிப்பது.

இனி மீள விட்ட இடத்துக்கே வருவோம்.அதாவது 2003 மட்டம் விழாக்கோலம் பூண வேண்டிய கட்டாயத்திலிருந்தது.சில குழுக்கள் "சங்கமம் மாதிரி நிகழ்வுகளை செய்ய வெட்டியள் இருக்கிறாங்கள் நாம நம்ம பாட்டை பார்ப்பம்" என்று காட்டுக்குத்தினை தொடர மறுபக்கம் எப்படியெல்லாம் சங்கமம் நிகழ்வில பப்ளிசிட்டி அடையலாம் ஏண்டு 2குழுக்கள் மூளைய கசக்கின.


வழமை போல முதல்நாள் பார்ட்டி தந்த களைப்பு கலைந்து 12 மணிக்கு பின் எழுந்திருந்த 7G+ உறுப்பினர்களிடையே சங்கமத்துக்கு வீடியோ பாட்டு எடுப்பம் எண்ட கருத்து முன் வைக்கப்பட்ட போது அது பல விதமாக பந்தாடப்பட்டது.முக்கிய உறுப்பினரான ரவுடி ஜேசு அடியோடு மறுத்து இந்த விசர் விளையாட்டுக்கு வரேல்லை எண்டு ஒரே போடா போட்ட்டுட்டார்.சற்றும் மனம் தளராது நத்தை வேகத்தில சூட்டிங் ஹொஸ்டல்ல போய்க்கொண்டிருக்கேக்க தான் நம்ம பெடியள சூடாக்கி சுறுசுறுப்பாக்கிவிட்டது ஒரு தகவல்.

அதாவது...
அறிவகம் ஒரு படம் எடுக்கிறாங்களாம் சங்கமத்துக்கு...
உளவுத்துறைத்தகவல்....

உடன படுத்திருந்த எங்கள் பெடியள் எல்லாம் குதிச்செழும்பி கட்டுப்பெத்தை காடு முழுக்க சுத்தி திரிஞ்சு காம்ப் பெடியள்ட ஒத்துழைப்போட எடுத்த படம் தான்(?????) இந்த பில்லா 2007.இத தான் பிறகு அஜித் காப்பியடிச்சு தன்ர பில்லா படத்த எடுத்தவர்.என்ன செய்ய,நாங்கள் பெரிய மனசுக்காரர் எண்ட படியா பேசாம விட்டுட்டம்.

இந்த சரித்திரப்படம் பற்றி அதன் இயக்குனர் இவ்வாறு சொல்லிக்கொண்டு போகிறார்....

"முதல் கணொளிப் படைப்பு.என்னைப்பொறுத்தவரை எமது பல்கலைவாழ்க்கயை மீட்டிப்பாக்க உதவக்கூடிய ஆவணங்களில் ஒன்று.ஆரம்பத்தில் இதனை மீளப்பார்க்கையில் பிராவகித்த மன மகிழ்ச்சி இப்போது வருவதில்லை....மாறாக ஆழமான மறக்கமுடியாத பல்கலை பொழுதுகள் மீள்வதால் உண்டாகும் ஏக்கமே மிஞ்சுகின்றது.....சேகரன் எனும் பிறவி கலைஞனின் அபாரமான நடிப்பாற்றலையும்......குழந்தைவேல் வசந்தன்,குடிகாரன் சௌந்தரின் சண்டை ஆற்றலையும்.........குடுகாரன் போல திரியும் ஜெயசுதனுள்ளும் விஸயம் இருக்கு என்றதையும்........அச்சு காதல் பண்ண மட்டும் தான் லயக்கு என்பது பொய் என்பதையும்......கிரி வெறும் வெடியல்ல ஒரு பாமன்கட பன்னி என்றதையும் .....................மேலாக இதை கேலிக்குரிய விடயமாக கருதாமல் பல வழியிலும் உதவிகள் புரிந்த ரஜித்,சிவகரன்,குமரன்,கரிசன்,கேதரசர்மா,தீ பரூபன்,சிறீஸ்காந்த்,செந்தில்,அப்பாஸ்,சிப்லி ஆகியோரின் களங்கமற்ற நட்பையும்.....வெளிப்படுத்தி நிக்கிறது இந்த படைப்பு"

வேட்டையாடு விளையாடு பட கரு சுடப்பட்டு இந்த குறும்படம் உருவாக்கப்பட்டிருந்தது....
மொழிமாற்றம் செந்தில் என்ற ஆங்கில புலமையாளனால் செய்யப்பட்டிருந்தது....

கீழ படத்தோட முன்னோட்ட இணைப்பு போட்டிருக்கிறம்...கிளிக்கி பார்த்து மகிழுங்கள்.

முன்னோட்டத்த பார்த்திட்டு ரொம்ப சின்னபுள்ள தனமா இருக்கு எண்டு நினைக்கவேண்டாம்.ஏனெண்டா இந்த படத்தால 2003 மட்டத்தில ரசிகர்களிடையே பெரும் மோதல் வேறு வெடித்து பெரும் கலவரமாகியது.அது தொடர்பான சுவாரசியமான மேலதிக தகவல்களோடும் இந்த அதிரடி திரைப்படத்தின் முழுக்காணொளியோடும் அடுத்த பதிவில் வருகிறோம்.

8 comments:

பேரு -கைப்புள்ள said...

நிறைய எதிர்பார்கிறோம்...
வாழ்த்துகள்

கைப்பிள்ளை said...

கைப்பிள்ளை எதிர்பார்க்கிறது எல்லாம் இருக்கட்டும்.நீங்கள் அக்காவ அடகு வச்சு பேக்கரிய வாங்கின கதய எழுதேக்க கட்டத்துர ஆட்கள செட்டப்பண்ணி அடிக்க மட்டும் வந்திட வேண்டும்.

பேரு -கைப்புள்ள said...
This comment has been removed by the author.
மாயா said...

அருமையான முயற்சி நன்பரே!

அத்துடன் சொல் சரிபார்ப்பு என்ற Optionஐ எடுத்துவிடவும்

Rama said...

வடா+றின்கோ பெண்கள் விசயத்தில் வீக் எண்டதை வன்மையா கண்டிககுறோம்

கைப்பிள்ளை said...

இந்த இடுகையை கைப்புள்ள நீக்கிவிட்டார்.

கைப்பிள்ளை said...

மாயா எப்பிடி அத எடுக்கிறது எண்டத குப்பி எடுக்க நாளைக்கு அறைக்கு வாறன்.

மாயா said...

// மாயா எப்பிடி அத எடுக்கிறது எண்டத குப்பி எடுக்க நாளைக்கு அறைக்கு வாறன். //

உதென்ன பழக்கம் .. பப்பிளிக்கில இதுகளையெல்லாம் சொல்லுறதே . .