.

மொறா மட்டம் 2003 இல் படித்த சக நண்பர்களுக்கு எல்லாம் வயது 25 இனைத்தாண்டி விட்டது.இதில் சசிக்குமார்,லெஸ்லி ஆகியோர் 28 வயதைத்தாண்டப்போகிறார்கள்.செம கட்டையா கட்டணும் என்றிருந்த கனவு மங்கி 30 வயதுக்கு பிறகாகவது கலியாணம் நடக்குமா? என்ற அதிர்ச்சி அனைவரையும் பீடிக்க தொடங்கி விட்டது.அடுத்தது யார் கலியாணம் கட்டப்போகிறார்கள்? என முகப்புத்தகத்தில் தேடிக்கொண்டு வேலை,உணவு,உறக்கம் என செக்குமாட்டுத்தனமாய் ஓடுகிறது அநேகரின் வாழ்க்கை.மொறா 2003 ஹொஸ்டல் ஆண்கள் தொடர்பில் யாராவது நம் இளைய,மூத்த மட்ட பெண்களிடம் கருத்துக்கேட்டால் அகராதியில் இல்லாத வார்த்தைகள் எல்லாம் பதிலாக வரும்.கேட்டவர் ஒரு பிகரின் தந்தையாக இருக்கும் பட்சத்தில் மொறட்டுவை பொறியியல் ஆண்கள் எவருக்கும் தன் பெண்ணைக்கொடுக்க முன்வர மாட்டார்.அது மட்டுமல்ல தன்னோடு தொடர்பில் உள்ள எவரும் பெண் கொடுக்க விளைந்தாலும் தடுத்து ஆட்கொண்டு விடுவார்.அந்தளவுக்கு கடுமையாக தரப்பட்டிருக்கும் நமது மொறா பெண்களின் நம் பற்றிய விபரிப்பு.இந்தளவுக்கு மோசமானவர்களா இந்த விடுதி வாழ் போக்கிரிகள்?,இந்தப்பெண்கள் அவ்வளவுக்கு நல்லவர்களா?,அந்த காவாலிகள் இந்தளவுக்கு நல்ல கருத்து எடுக்கு அளவுக்கு என்னவெல்லாம் செய்தார்கள்?,அந்த பொறுக்கிகளின் வாழ்க்கை எப்படிப்பட்டது?.........
என தொடராக நீளும் கேள்விகளுக்கு பதில் சொல்வதே இந்த ஆய்வின் நோக்கம்.ஒரு புகைப்படமே ஒழுங்கா எடுக்கத்தெரியாதவன் திரைவிமர்சனம் எழுதுவது,பொம்மை துவக்கே கண்டிராதவன் ராணுவ ஆய்வு எழுதுவது போலவும் இல்லாமல் பல நண்பர்களோடு அலசி எழுதப்பட்டிருக்கிறது இந்த ஆய்வு.
7ஜி பிளஸ்,அறிவகம்,12 பி ஆகிய குழுமங்களை உள்ளடக்கிய ஏறத்தாழ 20 பேரளவில் இந்த பொறுக்கிகள் என்ற பாகுபாட்டில் உள்ளடக்கப்பட்டார்கள்.


பெண்களின் இவர்கள் தொடர்பான வெளிப்பாடு


இவர்கள் ஏதாவது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால் நம் மட்ட பெண்கள் அநேகமாக வர மாட்டார்கள்.

இவர்கள் ஒரு இடத்தில் குழுமி இருந்தால் இந்த இடத்தை தாண்டும் வரை தாழ்த்திய தலையை நிமிர்த்த மாட்டார்கள்.

நாலு பேருடன் கதைக்கும் போது இவர்கள் பற்றி "நச்" என்று நங்கூரம் போல இரண்டு வசவு வார்த்தைகளை போட்டு நல்ல பெயர் வாங்கி தருவார்கள்.

ஜீனியர் மாணவிகளுக்கு விளக்கங்கள் கொடுத்து கிட்டப்போனாலே அலறும் படி செய்வார்கள்.

வாளி சீனியரிடம் வலிந்த நடவடிக்கை எடுக்கும் படி தூண்டி விடுவது.(நடவடிக்கை எடுக்கும் துணிவு வருவதற்கே நம் செயற்பாடுகள் இடமளிக்கவில்லை.)

மிக்க அன்பு மிகும் போது விரிவுரையாளர்களிடம் கோள் மூட்டி கூத்துப்பார்ப்பது.
அப்படி பெண்கள் வெளிப்படுத்தும் அளவுக்கு இந்த 20 பேரும் செய்தவை என்ன?

ஸ்டோன் பென்ஞ்சில் குந்தி இருந்து பெண்கள் போய் வரும் போது காமப்பார்வை வீசியமை.

நாணமிகுதியால் தலை குனிந்து போகும் பெண்களின் பெயரை சொல்லி கூக்குரல் இடுவது.

பெண்களின் அன்புக்குரிய வாளிகளை போட்டுத்தாக்குவது.

சுவீட் "பாய்" களான கலம்பு பையன்களை அடிக்கடி கடுப்பாக்குவது.

வாளி வைத்து பின்னால் திரியாமல் இருப்பது.

பெண்களிடம் திட்டு வாங்கினால் இன்முகம் காட்டாமல் தூசணம் கொண்டு பொழிவது.

நடு இரவில் தொலைபேசியில் அழைத்து லந்து பண்ணுவது.

ஒருவனுக்கு காதல் வந்தால் 20 பேரும் சேர்ந்து தெரிவித்து காதலை ராணுவ நடவடிக்கை போல செய்வது.(இரு துன்பியல் நிகழ்வுகள்...உபயம் அலிபாய்,சின்ரா)

அடிக்கடி தண்ணிப்பார்ட்டி போடுவது.

நிறைவெறியில் உளறுவன எல்லாம் வாளிகள் மூலமாய் பெண்களை சென்றடைய அனுமதிப்பது.

பேடிகள் மூலமாக ஜோடிக்கப்பட்ட பலான வழக்குகளை எதிர்கொண்டமை.

பொது இடம் என பாராமல் வாக்குவாதப்பட்டு தூசணங்களை பிரயோகிப்பது.இந்த நிலவரம் 4 ஆண்டுகாலம் நீடித்தது.இந்த 20 பேரும் பொறுக்கிகளாகவே இருந்தார்கள்.அவர்களை பொறுக்கிகளாக பட்டம் சூட்டிய பெண்கள் போனில் ஒருத்தன்,chat இல் ஒருத்தன்,நேரில் ஒருத்தன்,சகோதர மொழி நண்பன் என உல்லாசப்பறவைகளாய் பறந்தார்கள்.பல்கலை முடியும் தறுவாயில் பலவிதமாய் மறைக்கப்படிருந்த தொடர்புகளும் சம்பவங்களும் வெளிப்பட்ட போது 20 பேரும் அதிர்ந்தே போனார்கள்.அதில் நல்லபிள்ளை பெயர்வாங்கிய மட்டத்து ஆண்கள் பலரும் சம்மந்தப்பட்டிருந்தார்கள்.

"அட இவளவ செய்ததில ஆயிரத்தில் ஒன்றைக்கூட நாங்கள் செய்யவில்லையே?,சும்மா குத்து மதிப்பா கதைச்சமே தவிர எக்குத்தப்பா ஒன்றுமே செய்யவில்லையே?,வெளிப்படையா கத்தினோமே தவிர ஒளித்து வைத்து பண்ணவில்லையே?,ஆனா பொறுக்கி பட்டம் மட்டும் நமக்கா?"

என இந்த 20 பேர்வழிகளும் தண்ணிப்பார்ட்டி போட்டு இறுதியில் வாய் விட்டு அலறியும் ஒரு பிரியோசனமும் கிட்டவில்லை.பொறுக்கி என்ற பெயர் பிடுங்கி எறியப்படாத அளவுக்கு ஆழ வேரூன்றிப்போயிருந்தது.

பரிதாபத்தின் பகுப்பாய்வு.

பொதுவாக "கம்பஸ் பெடியள் என்றால் லவ் பண்ணி இருப்பாங்கள்" என்ற கருத்து பரவலாக காணப்படுகிறது.ஏனென்றால் அநேக பல்கலைகளில் ஆண்கள்,பெண்களிடையான வீதம் சமனாகவோ,பெண்கள் அதிகம் என்ற வகையிலேயே காணப்படுகின்றது.ஆனால் பாழாய்ப்போன மொறட்டுவை பொறியியல் பீடத்தில் மட்டும் ஏழுக்கு ஒன்று என்ற விகிதம்.சில பல்கலைகழகங்களில் சில பீடங்களில் ஆண்களை விட பெண்கள் 3 மடங்கு அதிகம்.அங்க பெடியள் எல்லாம் அஜித்,விஜய் ரேஞ்சில பில்டப் குடுத்துக்கொண்டு திரிவாங்கள் எண்டு சொல்ல கேள்விப்பட்டிருக்கிறன்.ஆனால் மொறட்டுவவில் பறவை முனியம்மா ரேஞ் பிகர் கூட பாவனா ரேஞ்சில் பில்டப் குடுக்கிற அளவுக்கு மோசமாக விகிதாசாரம் ஆண்கள் பெண்கள் இடையில் நிலவுகிறது.ஆரம்பத்தில் கலர் கலர் கனவுகளோடு வரும் தமிழ்பெடியங்கள் அதிர்ந்து போய் காலப்போக்கில் மனதை தேற்றி "ஏதோ ஒண்ட ரை பண்ணுவம்,வடிவா முக்கியம்,படிச்சு குணமா இருந்தா நல்லது தானே?" என்ற தர்க்க கேள்வியோடு களமிறங்குகிறார்கள்.சூப்பர் பிகருக்கு பத்து விண்ணப்பம் வந்தா பந்தா பண்ணும்.காலப்போக்கில பத்தில நல்லதா ஒரு அடிமைக்கு சிக்னல காட்டிடும்.மாறாக மட்ட பிகருக்கு பத்து விண்ணப்பம் போனாலோ......
விபரீதம் முளைவிடுகிறது.மொறட்டுவையில் நடந்ததும் அது தான்..........

............சோகம் நீளும்.

ககாககி-01

.

கட்டுப்பெத்தை காட்டு கவிஞர் கிறுக்கல்கள்-01

கவிதைக்கும் கம்பசுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறதோ என்னவோ.ஏனெண்டா கவிதை எண்டா என்ன எண்டு கேட்கிற அளவுக்கு தமிழறிவு உள்ள சௌந்தர் போண்றவர்களையே கவிதை எழுத வைத்தது கட்டுப்பெத்தை.முதல் வருடத்தில் சீனியர் அண்ணாமாருக்கு வாளி வைப்பதையே குலக்கடமையாக செய்யும் தினேஸ்,அப்பாஸ் ஆகியோர் ஏதாவது மொக்கைக்காரணங்களை தெரிந்து பதுவிதான ஹொஸ்டல் போவதை விருப்புடன் செய்தனர்.அங்கு போனால் "அண்ணை அண்ணை" எண்டு பாச மழை பொழிந்து உதவிகளும்,ஐடியாக்களும்,நோட்சுகளும்,பாஸ்பேப்பர்களும் எடுத்துக்கொண்டு வந்துவிடுவார்கள்.அவர்களோடு எப்பாவது நானும் போகும் போது விடுதிச்சுவர்களை நிறைத்திருந்த கிறுக்கல்கலை வெகுவாக ரசிப்பதுண்டு.தத்துவங்கள்,காதல்,காதல் தோல்வி,குடும்ப செண்டிமெண்ட் என பலவிதமாய் இருக்கும்.சில பந்தா பேர்வழிகள் பஞ்சு டயலாக்குகளும் எழுதி வைத்திருப்பார்கள்.ஆனால் சுவர்க்கிறுக்கல்களிலும் தனிப்பட்ட தினக்குறிப்பில் எழுதப்பட்டு வெளிஉலகே பார்க்காமல் முடங்கிப்போயிருக்கும் கவிதைகள் தான் பல்கலை வாழ்க்கையில் ஏராளம்.முதல் இரண்டு வருடங்களும் மட்டம் 2003 மாணவர்களுக்கு இலக்கிய நயம் காட்ட களம் அமையவில்லை.விரிவுரை நேர சிறுதுண்டு பரிமாற்றங்களும்,கடுப்பை காட்ட ஒட்டப்படும் நோட்டிஸ்களூமே இலக்கியம் படைக்கும் வழிகளாய் இருந்தன.இப்படி நிலவரம் இருக்கேக்க தான் சங்கமம் நிகழ்ச்சி வந்தது.புத்தகத்துக்கு ஆக்கம் எழுதோணும் எண்டு வெளியீட்டு பிரிவு அப்பாஸ்,அலியப்பா அறிவிக்க பெடியள் உற்சாகமாயிட்டாங்கள்.அச்சு.காதல் மன்னன் என்று சொல்வதிலும் காதல்க்கிறுக்கன் என்று இவனை சொல்வதே சாலப்பொருந்தும்.அந்த நேரம் வழமையை விட அதிகமாய் ரொமான்ஸ் மூட்டில் இருந்தார்.அந்த மீராஜாஸ்மின் அச்சுவுக்கு பச்சைக்கொடி காட்டி விட பதுவிதான 57 அறை காதல்ப் பாட்டுகளால் தாலாட்டப்பட்டுக் கொண்டிருந்தது.சங்கமம் புத்தகத்தையே காதல் கவிதைகளாய் நிறைத்துவிட முடிவெடுத்து இரவிரவாய் எழுதத்தொடங்கிவிட்டான்.சேகர்,ஓபி போண்ற பேர்வழிகளாய் கவிதை எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும் அச்சுவின் வீச்சம் புத்தகத்தில் அதிகமிருந்தது.மட்டம் 2003 இன் காதலன் சங்கமத்துக்காக எழுதிய கவிதைகளை இங்கே தருகிறேன்.


காதலியின் தவிப்பு


போடா கல்நெஞ்சக்காரா!
மானத்திற்கு ஆடை ஆசைக்கு பூட்டு!
ஒரே கணத்தில் இரண்டையும் தரித்தவனே!

தீராக் காதல் தானேடா என் மீது உனக்கு
பிறகேன் வெளியிட மறுத்தாய்?

தூக்குக் கதையின் ஆசை போல
பிரியும் போது ஏனடா பிரியம் உரைத்தாய்?

நஞ்சு வைத்திருந்து சாகாத நாகம் போல்
இத்தனை காதல் வைத்து எப்படி உயிர் தரித்தாய்?

இப்போதும் கூட நீயாய் காதலை சொல்லவில்லை.
நானாய்த் தான் கண்டறிந்தேன்.எப்படி என்கிறாயா?

என்னோடு பேசும்போது தடுமாறும் உன் குரல்;
வார்த்தைகளுள் நீ விட்ட இடைவெளி;
வாக்கியத்துக்கு வாக்கியம் நீ விழுங்கும் எச்சில்த் துளி!

இப்போதும் கள்ளத்தனம்மென்பதை
ஒப்புக்கொள்ளாத திருடன் போல்
உன் உள்ளோடும் காதலை ஒளிக்கவே பார்க்கிறாய்!

காதலில் தயக்கம்,காலம் கடத்தல் என்பன தண்டனைக்குரியது
வாழ்க்கைக்கடலில் கழுவிய கணங்களை
சேமிக்க உன்னால் முடியாது!

என் பூங்காவரை வந்து விட்டு சட்டென்று வற்றிவிட்ட நதி நீ
என் சந்தோசத்தை இடுகாடாக்கி விட்ட பூகம்பம் நீ

நீ உன காதலை சொல்லிய கணத்தில்
நான் என் வசமில்லை!
நீ வலியப்பிரிந்த வேளை
இந்த இலகிலேயே நானில்லை!

உன் காதலால் என் வாழ்க்கை கொஞ்சம் செலவழிந்துவிட்டது
இந்த வாழ்வின் மிகுதி சொல்லக்கூடாத சில கனவுகளுடனும்
உன் காதல் நினைவுகளுடனும்...
அன்பே கொஞ்சம் கேள்..!


நான் கிறுக்கியது பல அதில் ஓவியமாகியது சில
நான் உளறியது பல அதில் கவிதையாகியது சில
கவிதைகள் ஓராயிரம் அதில் கவர்ந்தது ஒன்றிரண்டு
மாதர்கள் ஓராயிரம் அதில் கவர்ந்தது ஒருவள் மட்டும்
கனவுகள் நூறாயிரம் அதில் பிடித்தது என்னவள் வருவது
சிரிப்புகள் பலவிதம் அதில் ரசித்தது என்னவள் சிரிப்பு
வாழ்க்கைகள் பலவிதம் அதில் நீயிணைந்தால் புதுவிதம்


காதல்

மீண்டும் புதிதாய் பூக்கும் காதல்
இனி எனக்கு.....

காதலி வீட்டு பூக்களும் காதல் கொள்ளும் என்னுடன்
அவள் துப்பட்டாவும் உரசிச்சொல்லும் காதலை

அவள் முன்செல்ல விதவிதமாய் தலைவகிடும் என் சீப்பு
அவள் பெயரை அழகாய் அசிங்கமாய் கிறுக்கிடும் என் பேனா

அவளோடு கதைத்திட கவிதைகள் தேடிடும் என் சொற்கள்
அவள் பேசிடும் வாக்கியங்களை மன பேங்கரில் பதித்திடும் என் இதயம்

தூங்கும் போது அவளுக்கு இடம் ஒதுக்கிடும் என் படுக்கை
தூக்கத்தில் என் தலையணை படும் இனிய அவஸ்தை

அவளை ஆயிரம் தடவைகள் புகைப்படம் எடுக்கும் என் கண்கள்
அவள் கூந்தல் வாசம் தேடிச்செல்லும் என் மனம்

கையோடு கை உரசுகையில் ஒட்டிக்கொள்ளும் எம் ரேகைகள்
அவள் கால்த்தடத்தின்மேல் தடம் பதிக்கும் என் கால்

என் தோளில் கொட்டிக்கிடக்கும் அவள் வாசம்
என் ஆடையில் ஒட்டிக்கிடக்கும் அவள் கூந்தல் முடி

என் கன்னத்தில் ஒட்டிக்கிடக்கும் உதட்டுச்சாயம்
என் புன்னகையை காணத்துடிக்கும் அவள் கண்கள்

என் நெஞ்சில் நிறைந்து கிடக்கும் அவள் காதல்
இனி எனக்கு எல்லாம் புதிது


-அச்சுதன்
7G+
மட்டம் 04


3 கவிதைகள் எழுதியும் அவனது காதல் வெறி அடங்கவில்லை.வெளியீட்டுப்பிரிவு சங்கமம் 2007 நூல் அச்சுவின் காதல் வெளியீடாக மாறிவிடும் அபாயம் கருதி மேலதிக கவிதைகளுக்கு தடை விதித்தது நினைவிருக்கிறது.அச்சு காதல் கவிதை எழுதவே ஜெயசுதனும் எழுத வெளிக்கிட்டு முடியாமல்ப்போக உண்மைச்சம்பவம் ஒன்றால் பாதிக்கப்பட்டு குமுறிக்கொண்டிருந்த மனத்தை திறந்து ஹைக்கூ கவிதையாய் கொட்டிவிட்டார்.


காதல்


கெம்பஸ்க்கு வெளியே பார்த்தேன் - "காதலை"
கண்ணே கலங்கியது!
கெம்பஸ்சில் பார்த்தேன்
கண்ணே கூசுகிறது.


ஜெயசுதன்
7G+
மட்டம்-04


இவர்களின் கவிதைமழையை ஓரமாக இருந்து பார்த்துக்கொண்டிருந்த மலையக மைந்தனுக்குள்ளும் தமிழ் லேசாக சுரக்கத்தொடங்கிவிடவே போதையில் உளறும் உளறலாக ஒரு வகையான கட்டுரைப்பாணியில் ஏதோ ஒன்றை எழுதி வெளியீட்டுப்பிரிவிடம் நீட்டிவிட்டான்.வெளியீட்டுப்பிரிவு அதைப் பார்த்துவிட்டு அலறிவிட்டது.பின்னர் படைப்பாளியின் மனம் கோணக்கூடாது என்பதற்க்காக பல தமிழறிஞர்களை அமர்த்தி அந்த கிறுக்கல்களை சற்றேனும் ஒரு கவிதைப்பாணியில் எடுக்க முயன்று சற்று வெற்றியும் அதில் கண்டிருந்தது.இதே அந்த காவியம்.

உளறல்கள்

Lecture கட் அடித்தாலென்ன?
Lunch time என்றால் என்ன?
புதிய மாணவர் வரவென்றால் என்ன?
வழமையான குதூகலத்தில் ஒரு ரணகளம் என்றால் என்ன?
நம்மவர் முகங்களை காணலாம் Stone bench இல்.

எத்தனை பென்ஞ்கள் இருந்தாலும் L அடி stone bench என்றால்,
Civil dept பிகர், Tronics dept பிகர்,
Textile dept பிகர், Textile designing பிகர்,
எல்லோரையும் இதம் பதமாக கவர் பண்ணலாம்.

Stone bench என்றாலே மாதர்களை
கண்ணார பார்க்கும் இடம் என்றாகிவிட்டதே.

Party என்றாலே bottleகளை அடுக்கும் நம்மவர் மத்தியில்
சோடாவை மட்டும் ஒரு துளி இறக்கும் சிலர்,
chicken buriyani,mutton buriyani parcialகள் வழங்கினாலும்
அய்யய்யோ இண்டைக்கு கோயில் நான் சைவம் என சிலர்,
பாடல்கள் பாடியே bottle களை emptyயாக்கும் பலர்,
அதில் ஆடிக்கொண்டே "ஆம்லட்" போடும் சிலர்,
அத்தனை நடந்தும்கூட இருந்துகொண்டே
சரக்குகளை "சம்சாரி" யாக்கும் பலர்
அதனுள் அத்தனை bottleகளையும் முடித்துவிட்டு
அடுத்துவரும் bottle களுக்கு எதிர்பார்ப்புடன் சிலர்.

இத்தனை தாண்டி ஒருவன் lecture க்கு சென்றால்
பின் கதிரைகளில் பினைஞ்சுகொண்டிருப்பவர்களின் கூத்துக்கள்
அவர்கள் கண்களில் ஏதும் பட்டால் போதும்
எத்தனை packageகள் எத்தனை noticeகள்
இதில் உருவான காதல்கள்தான் எத்தனை?
அதில் கரை கண்டது எத்தனை?

விடுதிக்கு சென்றால் வீண்வம்புகள் எத்தனை?
அறையில் ஆண்மையைக் காட்டும் அம்பலங்கள் எத்தனை?
அதில் ஆர்வத்துடன் படிக்கும் ஆர்வக்கோளாறுகள் சிலர்
நண்பகல் நள்ளிரவு என்று பார்க்காமல்
நல்ல பல முழு நீள நீல படங்களில்
நீந்திக்கொண்டிருப்பவர்கள் எத்தனை எத்தனை பேர்


- Sounder
7G+
Level 4

எமது மட்டத்தின் கிட்டார் மன்னனும் வெடியரசனுமாகிய கிரி பல்கலை வாழ்க்கையை வெறுத்து வெறுத்து ஓட்டி வந்தார்.நாமெல்லாம் கம்பஸ் முடியப்போகுதே என கலங்க அவரோ குதூகலித்து கவிதையா கொட்டினார்.

பிரிவோம் சந்திப்போம்

தூரம் அதிகம் இல்லை-அந்தோ
தெரியுது கட்டுப்பெத்தை எல்லை
காலம் அதிகம் இல்லை-மச்சான்
ஒழியுது நமக்கு எல்லாம் தொல்லை
வீறுநடை போட இன்னும் விடியல் வரவில்லை
மாசம் பன்னிரெண்டு போனால் 255உம்
தேவை இல்லை.

வாளி என்று பெயர் வாங்கி வதைபட தேவை இல்லை.
ஓடித்தப்பும் காலம் வரும் எவனிடமும் அடிவாங்க
தேவையில்லை.
சாந்தமாய் காதலித்து,அடி வாங்கி பரிதவிச்சு
குப்பிவச்சு,ஆப்புவச்சு,மனசுக்குள்ளே ஒளிச்சு வைச்சு
எத்தனை காதலுண்டு கம்பசுக்குள்ளே-அவற்றை
நினைச்சு நினைச்சு சிரிப்பதுண்டு மனசுக்குள்ளே
கட்டுப்பெத்தை ராணிகளின் அழகு முகங்கள்(!!!???) யாவும்-
என்னை
கனவில் வந்து கட்டிவைத்து தீமூட்டிக்கொல்லும்
தோழவரின் தோள்களில் கைபோட்டு நின்றதெல்லாம்
இந்த பந்தம் இன்னும் நிலைக்கும் என்றே சொல்லும்
கூடித்திரிந்த நண்பர் முகம் நினைவில் வந்து போகும்-அந்த
நினைவுகள் நிழலாடும் போது விழிகள் லேசாய் வியர்க்கும்
கலங்கி நிற்கும் மனங்களுக்கு காலம் களிம்பு பூசும்
காலத்தை பின்னழைத்து மீண்டும் கம்பசுக்கே
போகச்சொல்லும்.

- ஆக்கம்
சி.கிரிவக்சன்
மட்டம் 4
பொறியியல் பீடம்

இத்தருணத்தில்த்தான் மிக நீண்டகாலமாய் வாளி வைப்பதை குலத்தொழிலாய் செய்துகொண்டும் மட்ட ஆண் மாணவர்களிடம் இருந்து பெரிதும் விலகி சொய்சாபுரத்தில் வசித்து வந்த பவானந்தன் நம்மவர்களோடு சேர்ந்திருந்தார்.புத்தகத்துக்கான வரவேற்பு கவிதையை அவரே இனிதாக எழுதி இருந்தார்.


சங்கமம்

நாம் தற்செயலாய் சந்தித்தோம்
எம் வழியில் செல்லுமுன் பேதம் மறந்து
சில கணம் சங்கமிக்கிறோம்.

நெருப்பிலும் நாம் நடந்ததுண்டு-வழியில்
தடக்கிய தழல்களை விழுங்கியதுண்டு
வாழ்வின் தழும்புகளிடையே-இனியதோர்
களிம்பாய் இன்று என் சங்கமம்

கண்மறையும் வரை நின்று
கையசைக்கும் தாய் போல-நாம் செல்லும் வழி எங்காயினும்
இந் நான்காண்டின் நினைவாய் நின்று
கண்பனிக்க வைக்கும் இச்சங்கமம்

ஆறாய்,அருவிகளாய்
வேர்களாய்,மழைத்துளிகளாய்
இன்று இச்சங்கமத்தில்
இனிய பதிவுகளுக்காய் சங்கமிப்போம்.த.பவான்
மட்டம்-04

இதே நேரம் சங்கமத்துக்காக படம் இயக்குவதில் மும்முரமாய் ஈடுபட்டிருந்த டைரக்டர் சுகா தனது பொன்னான நேரத்தை ஒதுக்கி ஒரு வெண்பாவை எழுதி இருந்தார்.ஆப்புகளாலும் முதுகில் விழுந்த குத்தல்களாலும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்த அவர் உள்ளக்கிடக்கைகளை இவ்வாறு கொட்டி இருந்தார்.

ஆப்பு வெண்பா

சடாவும் நடாவும் பிரண்ட்ஸ்!
சப்பை சாமான் கிடைப்பினும்
(B)பிட்டு பிட்டா பிரிச்சு திங்கிறளவுக்கு
செம (F)பிட்டு.

சம வயசு பெடியள் எல்லாம்
செம கட்டையா தேடி அலைய இவங்கள்
சமமாய் காசு போட்டு
செமத்தியாய் தண்ணி அடித்தார்கள்.

(B)பார் தரும் தண்ணி வெறுத்து
பனை தரும் தண்ணி விரும்பி
பக்கத்தூர் புகுகையில் கண்ணில் பட்டாள்
பவளவாய்ப் பாவை.

தணலெரிக்கும் முட்டை முழியிலும்
தகதகக்கும் தங்க நிறத்திலும்
தரை தட்ட நின்ற கூந்தல் அழகிலும்
தடுக்கி விழுந்தான் சடா

நாணமிகு வாலிபன் காதலை சொல்லிவர
நண்பனை நாடி நிற்க
நடையழகன் கட்டழகன் நடாவும்
நட்புக்காய் நங்கையிடமேகி நின்றான்

செந்தமிழ்ச் செல்வி, தெத்துப்பல்த் தேவி
சென்ரிலுமினிய நாற்றமுடை வல்லி
செகத்திலே சிறந்த ஓர் மல்லி
செப்பினான் காதலை கள்ளி

"காதலின் நாயகனே கலப்படமற்ற தூதுவனே
காவாலி நண்பனுக்காய் காதலுரைத்த கள்வனே
கட்டினால் உன்னைத்தான் கட்டுவேன் அன்றேல்
கடத்தியேனும் கட்டுவேன்" என்றாள்.

"நண்பர்கள் பிடிப்பது இலகு இலகு
நறுமுகை அமைவதோ அரிது அரிது
நங்கையே ஓடி வா! இந்த நடாவின்
நாற்பதிஞ்சி தோளில் சாயவா" என்றான்.

துயரத்தில் கொடியது துரோகத்தால் வருவது
துனபமெனும் வஸ்து ஆக்ஷனுக்கு வித்து
தூங்கிவரும் மனிதருள் கோபமெனும் ஜந்து
துள்ளியதே பகைக்குணம் கொண்டு.

மூக்கு வழி பெயர்க்கவல்ல கும்மாங்குத்துக்கள்
மூச்சு முட்டும் உரப்பில் தூஷண பொழிவுகள்
முள்ளெலும்பை வலிக்க வைத்த கொட்டன் அடிகள்
மூன்றுமாய் சேர உடைந்தனவே நட்பெனும் விழுதுகள்

ஆளையடிக்கிறதுக்கும் ,ஆப்பு வைக்கிறதுக்கும்
ஆடு பிடிக்கிறதுக்கும், ஆட்டம் போடுறதுக்கும்
அழைக்கலாம் அன்புடை நண்பரை
அணுகவே கூடாது அணங்கு பிடிக்கவே!


சுகந்தமாறன்.கு
7G+
மட்டம்-04

சகோதர இன நாய்க்காதலையும்,நம்மினத்து ஜவ்வு காதலையும் ஒப்பிட்டு மனம் கொதித்துப்போன சிவகரன் என்ற வாலிபன் தனது கருத்தை சங்கமம் புத்தகத்தில் இவ்வாறு பதித்தான்.


அதுவுமல்ல இதுவுமல்ல


ஒரே உணவு இரண்டு பேர்
பேருந்து ஒரே பின்சீற்றீல் இருவர்
காலிமுகத்திடலில் குடைமறைவு சங்கதிகள்
கடற்க்கரை தாளை மரங்களின் ஓலம்
கையைக்கூட பிரியமுடியாத நெருக்கம்
திரையரங்கில் இருளில் இன்னுமொரு
இலவசக்காட்சி
ஒரே உணவு ஒரே கனவு
காதலர் தினமன்று
ஒரே தலையணை ஒரே உறக்கம்
மறுவருடம் வேறொருவருடன் திருமணம்
அது சகோதர இனக்காதல்.

கைத்தொலைபேசிதான் கடற்கரை
அதுவேதான் எமக்கு திரையரங்கு
மூன்று உணவு
இரண்டு நமக்கு ஒன்று கைத்தொலைபேசிக்கு
நம்முடைய கைகள் வடதென் துருவங்கள்
அவை திருமணத்தில்த்தான் சந்திக்கும்
நம்மிடையே எப்பொழுதுமிருக்கும்
அந்த ஐந்தடி இடைவெளி
இது நம்மினக்காதல்

காதல் அதுவுமல்ல இதுவுமல்ல
அது இரண்டிற்குமிடையில் எதோ ஒரு
புள்ளியில்
சுகந்திரமாக உறங்குகிறது
பாவம் அந்த குழந்தையை தட்டி எழுப்பாதீர்கள்.


சிவா
பொறியியல்ப்பீடம்
மட்டம் 04


....................................................தொடரும்.