அறை நண்பன் அமைவதும் போன பிறப்பில் செய்த வினைப்பயனைப்பொறுத்தே அமையும் என்பதை கட்டுப்பெத்தை வந்த பின் அறிந்து கொண்டேன்.சைக்கோ, காட்டு குத்துக்காரன், ஐட்ட பட விரும்பி, காதல் கிறுக்கன், தண்ணி விரும்பி, அலுப்பன், வதையன், புள்ள பூச்சி என பலவகையாக அறை நண்பர்களை பாகுபடுத்த முடியும்.மனிதன் தனித்து வாழும் பழக்கம் இல்லாதவன்.தனித்து வாழ்வது போல கொடுமை ஒன்றும் இல்லை.சந்தோசத்தை தருகிற துக்கத்தை பகிருகின்ற சகல வழிகளிலும் ஆளுக்காள் உறுதுணையாய் இருக்கிற களங்கமில்லா நண்பர்கள் பலரை தந்தது என்ற வகையில் விடுதி வாழ்க்கையை தந்த மொறட்டுவ பல்கலைக்கு என்றும் கடமைப்பட்டு இருக்கிறோம்.மாறாக அறை நண்பர்களால் அவஸ்தைப்பட்டவர்களும் இருக்கிறார்கள்.விடுதியிலோ அல்லது வாடகை அறைகளிலோ வசிக்க முன் நண்பர்கள் தெரிந்தெடுப்பதில் மிகக்கவனமாய் இருக்க வேண்டும்.மேலோட்டமான பழக்கத்தை வைத்து ஒருவனை சேர்ப்பதும், ஏதாவது ஒரு விடயத்தில் வெறியாய் உள்ளவனை சேர்ப்பதும் இனிப்பான பல்கலை வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கவிடாமல் செய்து விடும்.மட்டம் 2003 இல் இருந்த பேர்வழிகளை அடிப்படையாகக்கொண்டு இந்த பாகுபாடு செய்யப்பட்டுள்ளது.இப்பதிவு வெறும் கடந்தகால நினைவூட்டலை மட்டும் நோக்கமாக கொண்டிருக்காமல் இளைய மாணவர்களுக்கு இவ்விடயம் தொடர்பில் தெளிவூட்டுவதையும் உள்ளடக்கியுள்ளது.


காட்டு குத்து அறை நண்பன்மிக அபாயகரமானதும் அவலத்தை அள்ளி இறைக்கக்கூடியதுமான வகையாகும்.இவர்களின் எந்த நேரமும் படித்தபடி காணப்படுவார்கள்.உருக்குலைந்திருக்கும் கதிரை, மேசை கொள்ளாத புத்தகங்கள் போண்றனவற்றைக்கொண்டு இப்பேர்வழிகளை இனம் காண முடியும்.இவர்களின் நோக்கம் படிப்பு.படிப்பு மட்டும் தான்.அறையில் இருக்கும் மற்றவன் வாடகையை பகிர வந்தவன் என்ற கருத்தையே அநேகர் கொண்டிருப்பர்."சிலர் படிக்கிற பெடியனோடு இருந்தால் நாமும் படிப்பமுல்ல" எனக்கருதி இவ்வகை பேர்வழிகளோடு வலிந்து இணைவதுண்டு.ஆனால் காலப்போக்கில் இவர்களைப்பார்த்து படிப்பின் மீதே வெறுப்பு வந்துவிடும் அபாயம் உண்டு என்பதால் தவிர்ப்பது நலம்.இவ்வெச்செரிக்கையையும் மீறி இணைபவர்களுக்கு இன்னொருவரின் உதவி தேவைப்படும் நிலை நேரிடும் போது வெளி நண்பர்களிடம் ஓட வேண்டிய அவல நிலை உருவாகும்(உம்- மருத்துவமனை போதல்)

காதல் கிறுக்கன்இவ்வகைப்பேர்வழிகள் அருவருப்பூட்டும் படியான செயல்பாடுகளை நிகழ்த்தியபடி இருப்பார்கள்.தூக்கத்தை குலைத்து நாள் முழுவதும் போன் பேசுவது,பிகரோடு கதைக்க கதை இல்லாது போகும் பட்சத்தில் உங்கள் விவகாரங்களை இழுத்து போட்டு தாக்குவது,கம்பசில் நடக்கும் பிற விடயங்களை புறக்கணித்து கடலை போடுவதை மட்டுமே தொழிலாக செய்வது, தனக்கு தேவை ஏற்படின் மட்டும் ஏனையோரை அணுகுவது என இவர்களின் ஈனம் நீளும்.அத்தோடு தங்களை ஒரு காதல் நாயகனாக பாவித்து தங்களது மட்டரக கடலைகளை நீங்கள் ரசித்தே ஆகவேண்டும் என்ற மனோபாவத்தோடு சத்தம் போட்டு தொலை பேசுவார்கள்.இவ்வாறான பேர்வழிகளை முன் கூட்டியே அடையாளம் காணுவது கடினம்.பேசாமல் பெட்டி படுக்கையை கட்டிக்கொண்டு காத தூரம் விலகல் மட்டுமே தொல்லை தவிர்க்கும் வழியாகும்.


சைக்கோ றூம் மேட்இவர்களும் ஒரு வகையில் அந்நியன் தான்.பல வகையில் நம்மிடமிருந்து அந்நியப்பட்ட்டு போய் இருப்பார்கள்.இவர்களில் தன்ர பாட்டில இருப்பவர்களே அதிகம்.ஏதாவது வகையில் மனத்தாக்கம் அடைந்து அதை மறக்கப் போராடிக்கொண்டு இருப்பார்கள்.பழைய பாட்டுக்கள் கேட்பது,தனிமையில் இருந்து மணிக்கணக்கில் யோசிப்பது,திடீரென எரிந்து விழுவது போண்ற குண இயல்புகளை வைத்து இவர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம்.இவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல.மாறாக பரிவோடு கவனிக்கப்பட வேண்டியவர்கள்.ஆனால் சில சமயங்களில் அதிர்ச்சிகளை உங்களுக்கு தந்து விடுவார்கள்.உதாரணமாக நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போது உங்களை அறையுள் வைத்து தாளிட்டு விட்டு விரிவுரை சென்று விடுவது போண்ற செயற்ப்பாடுகளை இவர்கள் செய்யக்கூடும்.


ஐட்ட பட விரும்பிஇவ்வகைப்பேர்வழியை நண்பனாக வைத்திருந்தால் உங்கள் பலான விடயங்கள் சம்பந்தப்பட்ட அறிவு பெருகி வழியும்.புதிது புதிதாய் புத்தகங்களை மற்றும் ஐட்ட படங்களை பென் ட்ரைவ் களில் கொண்டு வந்து பார்த்து இன்புறுவது மட்டுமல்லாமல் உவந்து பார்க்கவைத்து தான் பெற்ற இன்பத்தை உங்களுக்கும் தருவார்கள்.அறைச்சுவரில் அரைகுறை அல்லது அம்மண ஆடை பிகர் ஒன்றை ஒட்டி வைத்து தினமும் வழிபாடு செய்வார்கள்.காட்டுகுத்து வகையாளரும் ஐட்டபட விரும்பியும் அறையை பகிர்வது கொலைக்கேசில் முடியும்.சாதாரண பேர்வழிகளுக்கு இவர்கள் அறை நண்பனாக வாய்ப்பது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.


தண்ணி விரும்பிதண்ணியப்போட்டு தலைகீழாக நிற்காமல் முடிந்த பல்கலை வாழ்வு போல கேவலமானது ஒன்றும் இல்லை.சிறு தீப்பொறியாய் கிளரும் "பார்ட்டி போடலாமா?" என்ற ஐடியாவை காட்டுத்தீயாக்கி செயல்படுத்தி நண்பர்களை இணையவைக்கும் இணைப்புப்பாலம் இவர்கள்.மற்றவன் பிரச்சினையை தன் பிரச்சினையாக எண்ணி துடிப்பது அநேக கம்பஸ் குடிகாரரின் இயல்பு.ஆனால் எப்பாவது மிக்ஸிக் வீதம் தவறாகி அறையில் பிண நாத்தத்துடன் இவர்கள் போடும் "ஆம்லேட்" டை நீங்கள் பெரிது படுத்த மாட்டீர்கள் என்றால் துணிந்து இவர்களை அறை நண்பனாக்கிக்கொள்ளலாம்.


அலுப்பன், வதையன் & புள்ள பூச்சிஅலுப்பனுக்கும் வதையனுக்கும் நூலிழை வித்தியாசம் தானுண்டு.சிம்பிளா சொல்லப்போனா அலுப்பனுடைய நடவடிக்கைகள் அனைவரையும் எரிச்சலூட்டும் ஆனால் வதையனுடைய நடவடிக்கைகள் சந்தர்ப்பத்தை பொறுத்து மாறுபடும்.வதையன் வதைப்பது நீங்களல்லாது விடின் அவ்வதை சிரிப்பூட்டும்,மாறாக சிக்குவது நீங்களாயின் அது மிகக்கடும் சினமூட்டும்.அலுப்பன் காமெடி செய்ய முயன்று தோற்றும் முயல்பவன்.வதையன் அதில் வெற்றி காண்பவன்.இவர்களிடம் சிக்கி சின்னா பின்னப்படுபவர்கள் தான் புள்ள பூச்சிகள்.இவ்வகைகளில் குழப்பத்தை தெளிவிக்க மட்டநபர்களில் இருந்து உதாரணம் சொல்வது இவ்விடத்தில் இன்றியமையாதது என்பதால் சொல்கிறேன்.

டெங்கு ஜெனா- அலுப்பன்
ராக் தீபன் - வதையன்
அலிபாய்- புள்ள பூச்சி

விடுதி வாழ்க்கை என்பது குடும்ப வாழ்வை விட சிக்கலானது.மேற்சொன்னவற்றை விட சிக்கலான இயல்புகளுள்ள நபர்களை எல்லாம் சந்திக்க நேரிடும்.எல்லாவகையான கேசுகளையும் சமாளித்து ஒருவரையும் பகைக்காமல் எல்லோர்க்கும் இனிப்பாக இருப்பவனே பல்கலை வாழ்வின் அனைத்து சுவைகளையும் அனுபவிக்கிறான்.இவ்வகை பேர்வழிகளே விடுதி வாழ்க்கை எனும் வண்டியின் அச்சாணி போண்றவர்கள்.இவர்கள் போல நாலைந்து பேர் இருந்தால் போதும் ஒரு மட்டம் தூள் பறத்தும்.அன்றேல் பரிதாபகரமான வாளி மட்டமாய்ப்போகும்.

வாழ்த்துகிறோம்.

.
கிளு கிளு கனவுகளோட வாற பெடியள் மனசில மண்ண அள்ளி போட்டதும் மட்டுமில்லாம மண்ணெண்ணய ஊத்தி பற்ற வச்சு துடிக்க வைக்கிற கம்பஸ் எண்டா இலங்கையில அது மொறட்டுவை தான்.ஏனைய பல்கலைகள் விடுமுறை தரும் நாட்களில் கூட சாதாரண பாடவிதானத்தைவிட மேலதிகமாக யூன் ரேம், யூலை ரேம் எண்டு தவணையள் போட்டு "விளையாடுறது, போட்டோ எடுக்கிறது எப்பிடி எண்டு படிப்பிக்கிறம்" என்றெல்லாம் விதம் விதமாய் படிப்பிச்சு துன்புறுத்துகிற வதை முகாம்.மிக நீண்டகாலமாய் அடிப்படை விளையாட்டு வசதிகள் கூட செய்து தராமல் அலுப்படிச்ச புத்தகப்பூச்சி பொறுப்பானவர்களின் கீழ் இருந்த இடம்.எவ்வளவு கொடுமைகள் நடந்தாலும் மகே அம்மே ஆட்கள் மாலை நேரங்களில் பெண் நண்பியோடு அடித்து தொட்டு விளையாடி புத்துணர்வு பெற்றுவிடுவார்கள்.வெள்ளி மாலையானதும் ஊருக்கு பறந்து விடுவார்கள்.கலம்பு அரை டமில்ஸ்சும் ஓடி விடுவார்கள்.வடகிழக்கு டமில் மாணவர்களே முழு சித்ரவதையையும் அனுபவிப்பார்கள். முழு நேரமும் கட்டுப்பெத்தை வனாந்தரத்துக்குள் இருந்து டம்மி டமில் பிகருகளோடு கடலை போட்டு ஏச்சு வாங்கி குடுக்காரரிடம் இரவு மசாஜ் வாங்கி சிங்க வம்ச யாலுவா இடம் திட்டு வாங்கி கூட இருந்து ஆப்படிக்கிற மரத்தமிழ் நண்பனை சமாளிச்சு அரைத்தமிழ் கொழும்பரோட முட்டுப்பட்டு ,குத்தி, குப்பி எடுத்து டெங்கு, சிக்கன் பொக்ஸ் தடை எல்லாம் தாண்டி பட்டத்த வாங்கி பறக்க விடுறது எண்டா சாதாரண விடயம் இல்லை.ஒரு வதை முகாமுக்கு நிகராக சோதனைகள் தருவாதாலே என்னவோ, வெளியே வாற எங்கட பெடி, பெட்டயள் எந்த தடையையும் இலகுவாக தாண்டும் தகமை நிரம்பி இருக்கிறார்கள்.


எங்களுக்கும் ஜூனியர் வருவாங்கள் தானே என்ற முதலாம் வருட பேரவாவை நிறைவு செய்யும் விதமாய் வந்து வாளி வைப்பதை எந்த மட்டத்திலுமில்லாத அளவுக்கு செய்து பரீட்சை எண்ட பொக்ஸ உடைச்சு வெற்றியா வெளியேறிய நம் தம்பி தங்கைகள் நாளை (22/06/2010) பட்டம் வாங்குகிறார்கள்.நம் மட்ட(தறு) தலை தினேஸ் ஆணைப்படி இந்த பதிவுச்சுவரிலே பாசமிகு சீனியர்களாகிய எங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பதிப்பதில் மொறா மட்டம் 2003 ஆகிய நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.


இதை விட எங்கள் ரவுடி சினேக் ரியாசும் நிலாந்தி என்ற அரக்கியின் நயவஞ்சக நடவடிக்கைகள் காரணமாக ஒரு வருடம் பிந்தி இளையோருடன் சேர்ந்து பட்டம் வாங்குகிறார்.அவரை விசேடமாக வாழ்த்துவதில் கனாக்காலம் ஆசிரிய பீடம் மனமகிழ்வு கொள்கிறது.