வேலை முடிந்து வீடு செல்லும் சனக்கூட்டத்தை சுமக்க முடியாமல் திணறியபடி வந்த டொக்லாண்ட் ரயிலில் இருந்து இறங்கிய அவர்கள் நேராக நடந்து வந்து கைகளை நீட்டிய போது கண்களையே நம்ப முடியாமல் இருந்தது.வழமையான வடக்கு இந்திய சாயலில் இருந்த பவல்நாத்துக்கு பக்கத்தில் பிரகாசமான ஆலிவ் நிற சருமம் போர்த்தி மென்பச்சைக்கண்களோடு நின்ற பெண் பாலிவூட் நடிகைகளை ஒத்தவளாய் இருந்தாள். அங்கே நிலவிய சில நொடி மௌனத்தை அவள்தான் முதலில் கலைத்தாள்.

"ஹாய்! மலரவன்,ஐ ஆம் சஞ்சானா!,நீங்க போட்டோவில் இருந்ததை விட நேரில் இன்னும் ஸ்மார்ட்டா இருக்கிறீங்க"

"சஞ்சானா! பெயர் கூட அழகாய் இருக்கிறது உங்களைப்போலவே.நீங்க மட்டும் அந்த விளம்பரத்தில போட்டோவ போட்டிருந்தா டேவிட் கமரூனே விண்ணப்பம் போட்டிருப்பார் "

பெரிய ஜோக் கேட்டவன் போல பவல்நாத் தனது  சிரிப்பை இங்கேயும் அவிழ்த்துவிட்டான்.சஞ்சானா மெலிதாக புன்னகைக்கையில் கன்னத்தில் வலதுபக்கமாக வந்து ஓடிய குழி அவளுக்கு இன்னும் அழகு சேர்ப்பதாய்ப்பட்டது.

"96 விண்ணப்பம் கிடைச்சது.நிறைய வெள்ளை,கருப்பு இன ஆட்கள்,வந்த தென்னாசியர்களில் இளமையா,ஆரோக்கியமா தெரிஞ்சது நீங்க மட்டும் தான்.நீங்க படித்தவராயும் இருக்கிறீர்கள்.எங்களுக்கு ஒரு புத்திசாலி குழந்தையை தர உங்களால் முடியும் என்று நினைக்கிறேன்".சஞ்சானா தெளிவாகவும் நிதானமாகவும் பேசிக்கொண்டு போனாள்.அதில் பொய்மை கலந்திருப்பதாக அறிவுக்கு தென்படாததற்கு அவளது ஆளை அடித்து வீழ்த்தும் அழகும் காரணமாய்  இருக்கலாம் என மலரவன் எண்ணிக்கொண்டான்.அறிமுக உரையாடலை முடித்துக்கொண்டு வீடு நோக்கி பயணிக்கும் வழியில் பவல் நாத் எதோவெல்லாம் சொல்லிக்கொண்டுவந்தான்.டொக்லாண்டை வடிவமைத்த விதம் தொடர்பில் பிரித்தானிய அரசை வேறு கடிந்து கொண்டான்.பிடிக்காது விட்டால் நாற்றமடிக்கும் இந்தியாவுக்கு போக வேண்டியது தானே? என்று மலரவன் கேட்க நினைத்தாலும் சஞ்சானாவுக்காக அடக்கிக்கொள்ள வேண்டியதாயிற்று.

ஒரு மாடி வீடுகள் நிரம்பிய லண்டனில் அடுக்கு மாடி குடியிருப்புக்கள் நிரம்பிய ஒரே இடம் டொக் லாண்ட் எனப்படும் படகுத்துறைத்தேசம் தான்.வளைத்து வளைத்து வெட்டப்பட்ட கால்வாய்களும் தரித்து நிற்கும் படகுகளுமாய் எழில் கோலம் பூண்ட இடமொண்றில் அவர்களது குடியிருப்பு இருந்தது.மார்கழியின் குளிரை விரட்ட வெப்பமாக்கிகளை உச்சத்தில் இயக்கி விட்டு இருவரும் உள்ளே போனார்கள்.வரவேற்பறை அலங்கார பொருட்களின் பெறுமதி இருவரும் சேர்ந்து ஐந்து இலக்க சம்பளம் வாங்குபவர்களோ என எண்ண வைத்தது.சுவரில் இறுக்கமான ஆடைகள் அணிந்த சஞ்சானாவை பின்புறமாக இருந்து கட்டியணைத்தபடி பவல்நாத் சிரித்துக்கொண்டிருந்தான்.அணைப்பில் பிதுங்கிய பாகங்களில் கண்கள் மொய்த்தன."அது,கலியாணம் ஆன புதிதில் எடுத்தது,அப்போ கொஞ்சம் குண்டா இருந்தேன்" மெல்லிய நைட்டிக்கு மாறிவிட்டிருந்த சஞ்சானா குறுக்கிட்டாள்.குளிர்ந்து போயிருந்த வீடு மிதமான சூட்டுக்கு மாறியிருந்த போது வொட்காவில் அரைப்பகுதி காலியாகிவிட்டிருந்தது.சஞ்சானா சுயநினைவுக்கும் போதைக்கும் இடையில் ஊசலாடியபடி இருந்தாள்.மோகனமாய் வேறு அடிக்கடி புன்னகைத்தாள்.பவல் மெடாக்குடிகாரனாக இருக்க வேண்டும்.பச்சை வொட்காவை எதுவும் கலக்காமல் வார்த்து வார்த்து முகச்சுழிப்பு இல்லாமல் பருகும் விதத்திலேயே தெரிந்தது."நேரம் ஆகிறது சஞ்சானா நீ இவரை அழைத்துச்செல்,நான் இங்கேயே தொந்தரவு படுத்தாமல் இருந்துவிடுகிறேன்" என்றபடி இயர் போனை செருகிய பவல் நாத் மேலுமொரு குவளையை வார்த்துக்கொண்டான்.


சஞ்சானா கையை பிடித்துக்கொண்டு முன்னே செல்ல மலரவன் பின் தொடர்ந்தான்.அறைக்கு நுழைந்ததுமே மேலாடைகளுக்கு விடுதலை கொடுத்தாவளின் பாகங்கள் மிகைப்பெருத்து இருந்தன.

"சிலிக்கன் இம்பிளான்ற் இல்லைத்தானே சஞ்சானா?"

ஏதாவது பேச வேண்டும்,அத்தோடு பதற்றத்தையும் காட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக மலரவன் கேட்டான்.

"சந்தேகம் என்றால் ஆராய்ந்து பார்க்கலாமே?"

 கலகலவென சிரித்தபடி நெருங்கியவளை நடுங்கும் விரல்களால் மெதுவாக அழுத்த கச்சை கழன்று வீழ்ந்தது."கழற்றியது நானில்லை ஆதலால் அவளாகத்தான் கழற்றியிருக்க வேண்டும்" என சூழ்நிலைக்கு தகாமல் மலரவன் புலனாய்ந்து முடிக்க முதல் அரை நிர்வாணம் ஆகியிருந்தான்.

"ஜிம்மில் நிறைய நேரம் செலவிடுவீர்களா?"

 விரல்களால் மார்பில் கோடு வரைந்தபடி கேட்டாள்.

"ம்"

"கீழேயும் நானே அவிழ்ப்பது ஆண்பிள்ளைக்கு அழகல்ல"

குரலில் ஏளனம் தொனித்தது.

"நானே செய்கிறேன்"

லேசாக சதை போட்ட அவளது இடையில் இருந்த நீல நிற பிளாஸ்டிக் பெல்லி பட்டன் குனிந்து ஆடைகளையும் போது கண்ணில் தட்டுப்பட கண நேரம் தரித்தான்.ரோம நிர்வாணம் செய்த சருமம் அத்துணை திருத்தமாக பிரகாசமாய் ஒளிர்ந்து மஞ்சள் அறை வெளிச்சத்தில் கிளர்ச்சியூட்டியது.

இப்போது மலரவன் நிமிர்ந்து நிற்க மார்போடு வழுக்கியபடி கீழே இறங்கிய சஞ்சானா மெதுவாக இயங்கத்தொடங்கினாள்.

                             **************************************************

ஒரு மணி நேரத்துக்கு மேலாக வீட்டுக்கு சற்றுத்தொலைவாக காரை தரித்துவிட்டு பலவிதமான எண்ணவோட்டங்களோடு உட்கார்ந்திருந்த மாறனும் கமல்சும் உள்ளேயிருந்து வீதிக்கு வாய்நிறைய புன்னகையோடு வந்தவனைக்கண்டு ஆசுவாசப்பட்டார்கள்.

" என்ன மச்சான் வெட்டிட்டு விட்டுட்டாங்களோ?"

 கமல்ஸ் முதலாவது கேள்வியை கொளுத்திப்போட்டான்.

"வீடியோ போட்டோ ஒண்டிலயும் சிக்கேலை தானே?" மாறன் தொடர்ந்தான்.

"நினைக்கிற மாதிரி ஒண்டும் நடக்கேலை,செம பிகர் மச்சான்.நல்லா கொம்பனி தந்தாள்.இன்னும் ஒரு வருசத்துக்கு தாங்கும்"

அடுத்ததாக கடந்து போன இரண்டு மணித்தியாலங்களுக்கும் அங்கே நடந்தது பற்றி இருவரும் மாற்றி மாற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதிலேயே மலரவனுக்கு கடந்து போயிற்று.


இருவரிடமும் விடை பெற்று அறைக்கு வந்து நீண்ட வெந்நீர் குளியல் போட்டு உட்கார்ந்த மலரவன் முகநூலை தட்ட தொடங்கினான்."பவல் நாத்" என்று தேட ஆயிரக்கணக்கில் வந்தார்கள்."சஞ்சானா பவல்நாத்" என்று பார்க்க அழகாய் வந்து நின்றாள்.முகப்பு பக்க "Married to" தொடுப்பில் பவல் சிக்கினான்.அவனது திறந்த மனது போலவே சுவரும் திறந்து கிடந்தது.இருபது நிமிடங்களுக்கு முன் போடப்பட்டிருந்த நிலைக்குறிப்பு "பரவசத்தின் உச்சியிலிருந்து இபோது தான் இறங்கிவந்தேன்.மனைவிக்கு நன்றி :) என்றிருக்க சஞ்சானா "லைக்" போட்டிருந்தாள்.

0 comments: