சூப்பர் பிகருக்கு பத்து விண்ணப்பம் வந்தா பந்தா பண்ணும்.காலப்போக்கில பத்தில நல்லதா ஒரு அடிமைக்கு சிக்னல காட்டிடும்.மாறாக மட்ட பிகருக்கு பத்து விண்ணப்பம் போனாலோ......
விபரீதம் முளைவிடுகிறது.மொறட்டுவையில் நடந்ததும் அது தான்..........

என சென்ற பாகத்தில் இப்படி நிறுத்திச்சென்றதும் வாசகர்கள் அடுத்த பாகத்தில் உண்மைச்சம்பவங்களை உதாரணம் காட்டி விளக்க வேண்டும் என அன்புக்கட்டளை இட்டுவிட்டார்கள்.நானும் அதை சிரமேற்க்கொண்டு தொடரலாம் என நினைக்கிறேன்.ஆனால் இது மிக ஆபத்தான செயற்பாடாகும்.ஒரு பயங்கர ரவுடியுடன் மோதுவதை விட கட்டுப்பெத்தை கன்னிகளை எழுத்துக்களை போட்டுத்தாக்குவது கடினமானது.ஏனென்றால் இந்த நயவஞ்சக வாளிப்பயல்கள் ஆள்வச்சு அடிப்பது தொடக்கம்,ஜோடிக்கப்பட்ட பலான வழக்கு போடுவது வரையான செயற்பாடுகளை பல இடங்களில் ஏற்கெனவே செய்து இருக்கிறார்கள்.இது நிற்க.... விடயத்துக்கு நான் இனி வருகிறேன்.பொதுவாக தனக்கு காதலியாக்க முயலப்போகிற பெண் தொடர்பில் தமிழ் ஆண்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகளை பற்றாக்குறையாகவே நம்மினப்பெண்கள் பூர்த்தி செய்கின்றனர்.தென்னிந்திய சினிமா வரையறுத்த வரையறைகளின் படியே அநேக கட்டுபெத்தை காளைகளின் விருப்புகளும் திரிபு பெற்றிருந்தன.அதாவது மெல்லிசா,பிரகாசமா அல்லது மொழ மொழான்னு இருக்கிற பெண்களே நம் பெடியள திரும்பி பார்க்க வைத்தனர்.அபூர்வமாக சில பெடியள் மேல்குறிப்பிட்ட வரையறைக்குள் இல்லாத ஆனால் ஏதோ ஒரு வகையில் கவர்ச்சியான பெண்களை பார்க்க முயன்றாலும் சக நண்பர்கள் போட்டுத்தாக்கி அவர்கள் மனதை மாற்றிவிடுகின்றனர்.மொறட்டுவை பல்கலை பொறியியல் பீடத்துக்கு தெரிவானதும் கட்டுப்பெட்டியாக இருந்து படித்த பெடியள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு திட்டமிடுகின்றனர்."இஞ்சினியர் பெடியன் எண்டா இலகுவா பிகருகள் ஓகே சொல்லிடும்" என நண்பர்கள் உசுப்பேத்தி விட அதுவரைதாழ்வுமனப்பான்மை,வெட்கம்,படிப்பு போண்ற காரணிகளால் அழுத்தி வைத்திருந்த விருப்பை தன்னை கவர்ந்திருந்த பள்ளிக்கால ஒருதலைக்காதலியிடம் சொல்கின்றனர்.(இது மொறா பொறியியல் பீடம் வந்த மாணவரில் 90% க்கு பொருந்தும்.சில வி.வி உண்டு).சில பிகருகள் லாப நட்ட கணக்கு பார்த்து ஒகே சொல்லிவிடும்.இப்படி செட் ஆக்கினவங்கள தான் சின்ன லீவு கிடைச்சாலும் ஊருக்கு பறந்துவிடுகிற ஆட்கள்.தற்போதைய சூழ்நிலையில் வெளிநாட்டு மாப்பிள்ளை என்ற உயர்ந்த இலட்சியம் பதின்மவயதிலேயே நம்மின மறதமிழிச்சிகளிடம் கருக்கொண்டு விடுவதால் அநேக பெடியள் மறுப்பறிக்கையை வாங்கிக்கொண்டு பீல் பன்ணிக்கொண்டே கட்டுப்பெத்தைக்குள் வருகிறார்கள்.

கட்டுபெத்தைக்க வந்து இறங்கியதும் கண்ணைக்கட்டி கூட்டிவந்து நடுக்காட்டில் விட்டமாதிரி ஒரு பீலிங் நம்ம பெடியளுக்கு.புது இடம்,புரியாத மொழி,சாப்பாட்டு பிரச்சினை,வசதியில்லா தங்குமிடங்கள்,ஒரே மொழி பேசுவதால் உதவியாய் இருப்பார்கள் என எண்ணிய கலம்பு பற டமில்ஸ் காட்டும் (கு.த நல்லவர்களை தவிர்த்து) வெட்டி பந்தா என நம்ம பெடியள் தவித்துப்போனார்கள்.மெல்ல மெல்லமாக நட்பு பிடித்து அரட்டை அடித்து குப்பி எடுத்து பரீட்சைகளை தாண்டி ஆசுவாசப்படுத்தி அமர்ந்தால்.....வழமையான வயதுக்குரிய பிரச்சினை.நமக்கென்று உணர்வுகளை பகிர, தாபங்களை தணிக்க,தொலைபேசியை சூடாக்க, நம்ம ஆள் என்ற பந்தா விட ஒருத்தி வேணுமே என மனக்குரங்கு பாயத்தொடங்கியது.

இப்ப இந்த காணொளியில வாற சூழ்நிலைப்பாடலை கேட்டுவிட்டு அடுத்த பத்தியை தொடர்வது நன்றாயிருக்கும் என கருதுகிறேன்.


மரக்கிளையில் பழம் இருந்தால்த்தானே குரங்கு பசியாறலாம்.இருந்தவையோ வெம்பி உதவாபோன ஒரு சில பழங்கள்.குரங்குகளோ எண்ணிக்கையில் பல அதிகம்.ஒரு குரங்கு பறிக்க முயல,மற்றையது அதை இழுத்து கீழே விழுத்த,மறு குரங்கு வாளி வைக்க ஒன்றுக்கும் உதவாப்பழம் பப்பா மரத்தில் ஏறத்தொடங்கியது.இந்த நிலையில் வாழ்க்கை என்பது நண்பர்கள் தான்.பெண்துணை கிடைத்தால் நல்லது.அதற்காக சமர் எல்லாம் செய்ய முடியாது என கணிசமான பெடியள் பார்ட்டி,அரட்டை,ஆளையாள் போட்டுத்தாக்கல்,விளையாட்டு என வாழ்க்கையில் ஒவ்வொரு கணத்தையும் சந்தோசமாக செலவிடும் பொருட்டு இந்த குரங்கு - பழம் போராட்டத்தில் இருந்து ஒதுங்கிக்கொள்கிறார்கள்.உண்மையைச்சொல்லப்போனால் நண்பர்களோடு கிடைத்த சந்தோசம் மனதை பெண்கள் பக்கம் அலைபாய விடவில்லை என்பதே தகும்.இவர்கள் இப்படி இருக்க பெடியளோடு சேராமல் தானுண்டு தன் படிப்புண்டு என இருந்த் அந்த நல்ல பேர்வழிகளோ....

எனக்கொரு பிகர் வேணுமடா,
சப்பை பிகர் எண்டாலும் போதுமடா,
கேர்ல் பிறண்ட் தானே நம்மை போல வாளியளுக்கு பூஸ்ட் அல்லவா
கேர்ல் பிறண்ட் இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா

என கோதாவில் குதிக்கின்றனர்.விண்ணப்பம் அனுப்புகின்றனர்.குறுந்தகவல் அனுப்பி அனுப்பியே விரல் வலி எடுக்கிறது.பெண்களை மடக்க போய் அவர்களின் அடிமை நிலைக்கு சென்றுவிடுகின்றனர்.வழிந்து,நோட்ஸ் போட்டோ கொப்பி அடிச்சு,நூலகத்தில் இடம் பிடிச்சு,உணவு பொதிகள் சுமந்து,புத்தக பொதிகள் சுமந்து,திட்டுவாங்கி,புன்முறுவல் பூத்து.......அப்பாடா சொல்லிலடங்கா கேவலங்கள்.

பொதுவாகவே இளம் பெண்களுக்கு தங்களை பல ஆண்கள் பார்க்கிறார்கள் என்ற விடயம் மிகுந்த மனமகிழ்சியையும்,உத்வேகத்தையும்,சக்தியையும் தரவல்லது.பல்கலைவர முன்னர் தம்மை ஒருவருமே கவனிக்கவில்லையே என வாடியிருந்தவர்கள் ஆளுக்கு ஐஞ்சு விண்ணப்பம் வர காத்தில் பறக்க தொடங்குகிறார்கள்.


"இஞ்ச உந்த அலிபாய் என்ன பார்க்குதாமடி,கோயில் கோயிலா நேர்த்தி வச்சுக்கொண்டு திரியுதாம்,பிவானுக்கும் நம்மில செம பிளானாம்,சிட்டு அடிக்கடி என்ன கடைக்கண்ணால பார்க்கிறானப்பா,உந்த கவுதம்மேனனுக்கு தான் பெரிய ஆள் எண்டு நினைப்பு,நம்ம றேஞ்சுக்கு நம்மில பிளான் வருது அவருக்கு"


என்று கதைத்து கதைத்து புளகாங்கிதமடைகிறார்கள்.பெரிதாக விண்ணப்பம் கிடைக்கப்பெறாத ஏனைய டமிலிச்சிகளின் எரிச்சல் கதைகள் அவர்களுக்கு மேலும் மகிழ்வூட்டுகின்றன.முன்பெல்லாம்போல விடுதியில் இருக்கும் சகோதர இனமாணவியோடு தன்னை ஒப்பிட்டு "நான் எவ்வளவு கேவலமா இருக்கிறோம்?" என வருந்துவது இல்லாமல் போகிறது.அவர்களுக்கு உலகிலேயே அழகான பெண் நானே என உரக்க கத்த வேண்டும் போல இருக்கிறது.அதுதான் உண்மை என நம்பும் படி வைக்கிறது வாளிகள் அனுப்பி குவிக்கும் குறும்செய்திகளில் உள்ள வார்த்தைகள்."இவங்கள் மாதிரி ஆயிரம் பேர் நம்ம பின்னாடி வருவாங்கள் நீ படிக்கிற வேலைய பார்" என மனது துள்ளலோடு கட்டளையிடுகிறது. ஆர்வத்தோடு படித்துக்கொண்டு இவர்கள் முன்னேற விண்ணப்பம் போட்டவர்கள் பைத்தியம் பிடிக்காத குறையாக திரியதொடங்குகிறார்கள்.ஆண்களுக்கு ஒரு குண இயல்பு உண்டு.தன்னை ஒரு பெண் நிராகரித்தால் அதை தாங்கிகொள்ள மாட்டார்கள்.எப்படியாவது அவள ஒகே சொல்ல வச்சிட்டவேண்டும் என விடாப்பிடியாக முயல்வார்கள்.சில பெடியள் நீண்டகாலம் முயன்று பிகர் ஒகே சொல்லிய கட்டத்தில் வெற்றி கிடைத்ததாக திருப்திப்பட்டு எல்லாவற்றையும் முறித்துக்கொண்டு வெளியேறுவதும் உண்டு.பெண்களின் ஆதிக்கம் விண்ணப்பத்துக்கு சாதக பதில் கொடுக்கும் வரை தான்.அந்த மிதப்பு நிலையை விரும்பி பல தமிழ் பெண்கள் சாதக பதிலை தராது வருசக்கணக்கில் இழுத்தடிப்பதோடில்லாமல் மேலும் விண்ணப்பங்களை ஏற்படுத்தும் விதமான செயற்பாடுகளையும் வெளிப்படுத்துவதும் சகஜம்.இன்னொரு ஆணுக்குரிய மென் புள்ளி என்னவென்றால் ஒரு பிகர் சப்பையாக இருப்பினும் விண்ணப்பத்தை நிராகரித்து மிதப்பு நிலைக்கு செல்லும் பட்சத்தில் தொடர்ச்சியாக அதை தரை நிலைக்கு இறக்க முயன்று அவள் சிந்தனையாகவே காலத்தை செலவழித்து.....இது காரணமாக் அவர்களின் மனம் அந்த சப்பை பிகர் பிம்பத்தை சூப்பர் பிகராக வரித்துக்கொள்வது நடைபெறுகிறது.


வாளியோடு நிற்பதால் வாளிகளா?


வாளியை கவிட்டுப்போட்டு இருப்பதால் முரண் வாளியா?

இங்கே தான் அந்த படிச்ச கெட்டிக்கார கட்டுப்பெத்தை வாளிப்பெடியன் மரமண்டைக்காரன் ஆகிறான்.இந்த கேவலம் வேண்டாம் என் ஒதுங்கி இருக்கும் பெரும்பான்மையான மட்ட நண்பர்கள் வாளியாகிப்போன நண்பனுக்கு அறிவுரை சொல்கின்றனர்.அவை எல்லாம் அவனுக்கு செவிடன் காதில் ஊதிய சங்காகின்றன.விடுதியில் அரட்டை அடித்து பார்ட்டி போட்டு எப்பவும் சிரித்தபடி இருக்கும் அந்த நண்பர் கூட்டம் கசக்கிறது.தான் வித்தியாசம் என காட்ட உயிரைக்கூட தரக்கூடிய அந்த நண்பர்களை பொறுக்கிகள்,குடிகாரர்கள்,விபச்சாரியிடம் போபவர்கள் என போட்டு கொடுக்கிறார்கள்.சில வாளிகள் பிகர்களோடு கதைக்க விடயம் கிடைக்காதவிடத்து நண்பர்கள் பற்றி ஜோடிக்கப்பட்ட கேவலமான பேச்சுக்களை கொட்ட தொடங்கினர்.
அத்தோடு எங்கள் தமிழ்ப்பெண்கள் அநேகரும் பல்கலை வந்த பின்னர்தான் ஆண்களோடு பழகும் வாய்ப்பை பெறுகின்றனர்.இந்த வாளிகள் செயற்பாடுகள் காரணமாக வாலையாட்டி வாளிவைத்து இருப்பதே ஆண்களுக்குரிய இலட்சணம் என்ற கருத்து அவர்களின் மனதில் ஆழமாய் படிந்து விடுகிறது.ஸ்டோன் பெஞ்சில் இருந்து கூக்குரல் இடும் முரண் வாளி ஆண்களின் நடவடிக்கைகள் அந்நியமாய் தெரிகின்றன.

"இதென்ன காட்டுமிராண்டித்தனாமய் அல்லவா இருக்கிறது,சகோதர இன ஆண்கள் எவ்வளவு பவ்வியமாய் தத்தமது காதலிகள் பேச்சு கேட்டு இருக்கிறார்கள்,இந்த தமிழ்ப்பெடியளும் எவ்வளவு கேவலமாக திட்டினாலும் சிரித்துப்பேசுகிறார்கள்,என்னை அழகி,கோபத்தில் கூட அழகாய் இருக்கிறாய் என இன்முகம் காட்டுவார்கள்....ஆனால் இந்த கூட்டம் மட்டும் என்னை சப்பை பிகர் என்றல்லவா சொல்கிறார்கள்,முறைத்துப்பார்த்தால்க்கூட தூசணம் அல்லவா கொட்டுகிறார்கள்"

என கொதித்துப்போகிறார்கள்.பெண்களின் வாய் ஒரு எப் எம் ரேடியோ போல.கட்டுப்பெத்தைப்பெண்களுக்கு பிடித்தமான பொருள் கைத்தொலை பேசி.ஒரு நாளில் 25% அதோடு செலவிடுவார்கள்.காதல் வயப்பட்ட வாளி ஆண் போட்ட கதைகள் பெண்கள் விடுதியில் கொம்பு சீவப்பட்டு நூற்றுக்கணக்கான தொலைபேசி பேச்சுக்கள் மூலம் நாடு முழுக்க பரப்பப்படுகின்றன.அப்பாவிகளான,குழந்தை மனது கொண்ட மொறட்டுவை மட்டம் 2003 ஆண்கள் போக்கிரிகளான வரலாறு இதுதான்.


பொறுக்கிக்கெல்லாம் பொறுக்கி- பொம்.பொறுக்கி

காலச்சக்கரம் உருண்டு ஓடி பல்கலை வாழ்க்கை முடிந்து விட்டது.
இன்று நம் மட்ட கற்பரசிகள் லீலைகள் எல்லாம் பொறுக்கிகளான எமக்கு நன்றாக தெரியும்.
ஆனாலும் காலம் கடந்தே அறிய முடிந்தது.இறுதி வரை இரகசியம் பேணிய சில வாளிகள் எல்லாம் முடிந்த பின் வாய் திறந்தார்கள்.மீள் பிரச்சாரம் செய்ய காலம் வாய்க்கவில்லை.பலருக்கு மனது வரவில்லை."அவளவ அப்படி கதைச்சதுக்காண்டி நாமளும் கதைக்கிறது நல்லா இருக்காதடா" என்று ஒதுங்கிய நல்ல உள்ளங்கள் ஏராளம்.என்னைப்பொறுத்தவரை போக்கிரிகள் என பேர் வாங்கும் மொறட்டுவை தமிழ் மாணவர்கள் போல பாலியலொழுக்கம் கொண்டவர்களாக மற்றவர்கள் இல்லை.எனவே "நல்ல பெடியன்,நல்ல அடக்கம்,குடும்பப்பாங்கான பெடியன்" என மொறட்டுவை தமிழிச்சி தரும் சான்றிதழை நம்பி தன் பெண்ணை கொடுக்கப்போகும் தந்தைகளே விழித்துக்கொள்ளுங்கள்.
இந்த ஆய்வு தொடர்பில் உங்கள் கருத்துக்களை இங்கே விதையுங்கள்.

7 comments:

Rajeeth said...

மிகவும் தெளிவான ஆய்வு. எதனையும் கண்டுகொள்ளாது இருந்த என்னை முரண்வாளியாக்கியது இந்த பொய் பரப்புரைகள் தான்.

Anonymous said...

ரயீத் அண்ணா
நீங்க பொய் தானே சொல்லுரிங்க
but இந்த ஆய்வு மட்டும் 100% உண்மை என்பதோடு நான் campus வந்தவுடனேயே இதபற்றி நல்லா விளக்கம் தந்த senior அண்ணாக்களுக்கு எனது நன்றிகள தெரிவித்துக் கொள்ளுகிறன்.

Anonymous said...

by kajenthiran

செந்தில் said...

ஆண்களுக்கு ஒரு குண இயல்பு உண்டு.தன்னை ஒரு பெண் நிராகரித்தால் அதை தாங்கிகொள்ள மாட்டார்கள்.எப்படியாவது அவள ஒகே சொல்ல வச்சிட்டவேண்டும் எனவிடாப்பிடியாக முயல்வார்கள்.////
Exactly.......!

Raja said...

ithil comment addippor romba kavanama irunko valikal romba carefula kavanikkiranka unkalai
naalaikku entha marathukku keela nindu pechu vankirinkalo theriyala

Kaipillai said...

ரஜீத்! //////

நீங்கள் முதல் வருடத்தில் நூல் விட்ட சப்பை பிகருகள் உங்களுக்கு திருப்பி சிக்னல காட்டாத படியாயும் பிறகு உங்கள் மனதை அந்த வெள்ளவத்தை அழகி உருவி எடுத்து விட்டதாலும் கம்பசை பொறுத்தவரை முரண்வாளி ஆகிவிட்டீர்கள் என சிலர் கதைத்து வருகிறார்களே?

தம்பி கஜேந்திரன்/////

சீனியர் அண்ணா சொன்னதெண்டு நம்பி ஒரு பிகரையும் பார்க்காம இருந்துவிடாதே!,கிடைக்கும் சந்தர்ப்பங்களில் பத்து பிகருக்கெண்டாலும் விண்ணப்பம் போட்டு வைக்கோணும்.அதில் சாதகபதில் காட்டுறதில் நல்லத தெரிவு செய்ய வேண்டும்.இது தொடர்பில் மேலதிக விளக்கம் தேவை எண்டால் தீராதவிளையாட்டுப்பிள்ளை படத்தை பார் தம்பி.
வாளிகளுக்கு பயந்தால் மகத்தான காரியங்கள் எதையும் செய்ய முடியாது.வாளிகள் எனக்கு எதிராக பலான வழக்கு ஒன்றையே ஜோடித்தவர்கள்.அதைவிட ஊடலில் இருந்த காதல் ஜோடியை "அவன் விபச்சாரியிடம் போனவன்" என பெண்ணுக்கு சொல்வதன் மூலம் உடைத்து செட் ஆகின விசித்திரமும் நம் மட்டத்தில் நடந்தது.ஏன் நம்மட்ட தலைவர் கூட பெண்ணுக்காய் அடிவாங்கிவிட்டு அதை கொழும்பர்கள் "உன்னை தேடிவந்த இடத்தில் எனக்கு அடித்துவிட்டனர்" என கதையை மாற்றிப்போட்டவர் தான்.அதற்காக நாம் பயந்து போனோமா? இல்லையே.

செந்தில்!
இந்த ஆண்களிம் இயல்பு காரமாய்த்தான் டமிலிச்சிகள் பப்பா மரத்தில் ஏறி இருக்கிறார்கள்."இது போனா இன்னொன்று என்ற மனநிலை வர நிறைய பக்குவம் வேண்டும்"

எஸ் சக்திவேல் said...

> அநேக பெடியள் மறுப்பறிக்கையை வாங்கிக்கொண்டு பீல் பன்ணிக்கொண்டே கட்டுப்பெத்தைக்குள் வருகிறார்கள்.

ஹீ ஹீ.