"உன்ர பேர ஒரு தரம் கேட்டா எழுந்து புல்லும் நிற்கும்" என்று கன்னடனுக்கு தமிழன் பாட்டு எழுதிவைத்தான் அன்று.அவன்ர பெயரைக்கேட்டு உண்மையா புல்லு எழும்பிச்சுதோ இல்லையோ "நித்தியானந்தா" என்ற பெயர கேட்டாலே உடம்பு மயிரெல்லாம் அப்படியே முள்ளம்பண்டி கணக்கா எழும்பி நிக்குதப்பா நம்ம சனத்துக்கு.கம்பசில நித்தியானந்தா என்ற பெயர் கொண்ட பெடியள் இப்ப என்ன பாடு படுங்கள் எண்டு நினைச்சுப்பார்த்தாலே கண்ணில தண்ணி வருது.வழமையா "மூஞ்சியப்பாரு" எண்டு எள்ளி நகையாடிவிட்டு செல்லும் கட்டுப்பெத்தைக்கன்னிகள் "பெயரப்பாரு" எண்டு பின்னால் வந்த முகம் தெரியாத நித்தியானந்தம் என்ற ஜூனியர் மாணவனை திட்ட அவன் கேவிக்கேவி அழும் காட்சி கனவில் தெரிய நானும் என்னையறியாமல் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டேன்.இது போக,பலான மேட்டர ஒழிச்சிருந்து படம் பிடிச்சு போட்டத ஏதோ பெரிய ஜேம்ஸ்பாண்ட் பட கதைமாதிரி இந்தியர்கள் சித்தரித்தது தான் எரிச்சலூட்டியது.


கட்டுபெத்தை விடுதி,வருடம் 2006

கையடக்க இறுவட்டுக்கள் பல்கலைக்கணணிக்கூடத்தில் தரவிறக்கப்படும் பலான படங்களை விடுதிகள்,அறைகள் நோக்கி சுமந்து சுமந்து சூடாகிப்போயிருந்த காலம்.வகை வகையா பார்த்து அறிவைப்பெருக்கிக்கொண்ட காலம்.நம்ம பெடியள் pen ட்ரைவ்வோட லாப்பில இருக்கிற மூலைக்கரை கணணியில குந்தினவுடனேயே பார்க்கிறவனுக்கு விளங்கிடும் "மச்சான் ஐட்டம் அள்ள வந்கிருக்கிறார்" எண்ட விசயம்.ஆனா பெண்கள் இந்த விடயத்தில் படுசுட்டி.யார் கண்ணிலும் படாமல்,எல்லோருடைய அவதானமும் திரும்பிய நேரத்தில் வெடுக்கென்று தரவிறக்கிக்கொண்டு போய் விடுவார்கள்.கண்ணில எண்ணெய் ஊற்றிக்கொண்டு கண்காணித்தும் சகோதர இனப்பெண்களே பெடியள் கண்ணில சிக்கினார்கள்.நம்ம தமிழிச்சிகள் ஒரு ஆதாரமும் விட்டு வைக்க மாட்டார்கள்.யாராவது ஒரு உளறு வாய்ப்பெண் "இண்டைக்கு நல்ல படம் ஒண்டு பார்த்தமடி" எண்டு எங்கோ சொல்ல அது சுற்றி சுழன்று பத்துபதினைஞ்சு வாய் தாண்டி விடுதி வரும் போது செய்தி உருக்குலைந்து போய்விடும்.யார் செப்பியது,யாருக்கு,எத்தருணத்தில் என்பது எல்லாம் கிடைக்கப்பெறாது.இப்படி இருபாலருமே நம் "அந்த விடயங்கள் தொடர்பிலான" அறிவை வளர்த்துக்கொண்டிருந்த தருணத்தில்த்தான் விடுதி தமிழ் ஆண்களுக்கு அந்த விபரீத எண்ணம் தோண்றியது.அதாவது காணொளியில் பார்க்காமல் நேரடியாக பார்க்கவேண்டும் என்ற அவா மேலோங்கவே...வரைபடம் விரிக்காத குறையாக திட்டமிட்டு சிங்கவம்ச ஜோடிகள் பசியாறும் மெக்கானிக்கல் டிப்பார்ட்மெண்ட் செடிமறைவுகளுக்குள் நுளம்புக்கடிகள் வாங்கியபடி வேவு அணிகள் போல மணிக்கணக்கில் ஒளித்திருந்து "பார்த்துவிட்டு" திரும்பிய பெடியள் சொல்லும் கதைகள் விடுதியின் வெப்பநிலையை மேலும் கூட்டின.அணிஅணியாக நடு இரவில் கிளம்பிப்போவார்கள்.அநேகமாக பரீட்சைக்கு படிக்கவெளிக்கிடும் தருணத்தில்த்தான் இந்த நடவடிக்கைகள் இடம்பெறும்.திடீரென்று ஒரு நாள் ஜெயவர்த்தனபுர பல்கலையில் ஒரு சிங்கவம்ச ஜோடி போட்ட கூத்து காணொளியாக வர ஒரே பரபரப்பு."மொறட்டுவ மானத்தை காப்பாற்ற நாங்களும் ஒரு காணொளி விடுவம்" எண்டு நானும் நண்பர்களும் 4.2 Mpx கமெராவோடு L block இல் தேடுதல் வேட்டை நடத்தியபோது சிக்கியவை வெற்றுக்கோதுகள் மட்டும் தான்."இரகசியமாய் webcam ஐ பொருத்தி "நீலப்பல்லு" தொழில் நுட்பம் மூலம் வெளியே இருந்து கையடக்க கணணியில் காணொளியைப்பெறலாம்"என்ற அரிய யோசனை அலியப்பாவால் செப்பப்பட்டு பலகாலமாய் பலான மேட்டர் நடந்து வரும் கட்டட அறை ஒன்று தொடர்பில் மணிக்கணக்கில் விவாதம் போனதும் நினைவில் வருகிறது.
எது எப்படியோ சமுதாய விசக்கிருமிகளான கடவுள் மனிதர்களில் ஒன்று தொலைந்தது என சந்தோசப்பட்டுக்கொள்ளலாம்.இவனை விட பெரிய கிருமிகளான சாய்பாபா,அம்மா பகவான் போண்றவர்கள் இந்த விடயத்தோடு மிக அவதானமாய் இருப்பார்கள்.ஆனாப்பட்ட பிபிசி யாலயே பாபாவ ஆட்டிப்பார்க்க முடியலை.கவர்சிப்பாட்டு ஒளிபரப்பி பிழைக்கும் தமிழ் நாட்டு சானல்காரர்களால் காணொளி ஆதாரம் எடுக்குமளவுக்கு நெருங்க முடியுமா?.அதுவரை பாபா,சும்மா பகவான் காட்டில் அடைமழைதான்.என்னதான் வெளியே முகம் சுழித்தாலும் நித்தி ஒரு இளைஞர்,ரஞ்சிதா சினிமா நடிகையான செம கட்டை.எனவே காணொளி பல தடவை பார்க்க வைக்கும் அளவுக்கு நன்றாக இருக்கிறது.முந்தி கட்டுப்பெத்தையில் ஒளித்து ஒளித்து பார்த்ததை விட பலமடங்கு தரமானதை குடும்பமே ஒன்றாக இருந்து பார்க்குமளவுக்கு தமிழ் நாடு வளர்ந்து விட்டது என்பதும் மனமகிழ்சியை பயக்கிறது.ஆனால் சும்மா பகவான் ஒரு கிழவி,சாய் பாபா ஒரு ஓரின சேர்க்கையாளர்.தப்பித்தவறி கமெராவில இவங்கள் சிக்குப்பட்டு அதை சன்ரீவி ஒளிபரப்பினா எப்படி இருக்கும்?,கடவுளே அதுக்கு முதல் 2012 வந்திட வேணும்.

இறுதியாக...
"கைப்பிள்ளை கடைசியில நீயும் ஹிட் எடுக்க நித்தியானந்ததை கனாக்காலத்துக்க கொண்டாந்துட்டியே" என்று வைபவர்களுக்காக....பண பலம்,அரசியல் பலம் இல்லாவிட்டாலும் சன்ரீவிய விடவும் நாங்கள் எப்பவும் ஒரு படி மேல.பெரிதாக வசதிகள் அற்ற நிலையிலும் 2008 ஆம் ஆண்டு ஒரு ஆண்-ஆண் காதல் ஜோடியின் நடவடிக்கைகளை மறைப்பு கமெராக்கள் மூலம் எடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தோம்.அது தான் மொறா மட்டம் 2003.

0 comments: