{இந்த கட்டுரை ஆரோக்கியமான அலசலை நோக்கமாக கொண்டதாகும்.மஞ்சள்,நீல பார்வையோட்டம் கொண்ட, மட்டம் 2003 போலிப்பேர்வழிகள் இதை தவிப்பது நலம்}

பெரிய பிரித்தானியாவுக்கு வந்த புதிதில் அடிக்க கலைக்கும் காப்பிலியையும்,உள்ளுக்குள் கடுப்பை வைத்துக்கொண்டு உதட்டில் புன்னகை அவிழ்க்கும் ஐரோப்பியனையும் விட புலம்பெயர்ந்த ஈழதமிழரின் வாரிசுகளை காணும் போதே எனக்குள் அதிக வெறுப்பு மேலிடும்.போசணையற்ற உணவூட்டலான் உருவாகும் பலவீனமான உடலோடும் கோமாளித்தனமான தலை முடியலங்காரத்தோடு,அருவருக்கத்தக்க ஆடைகளோடும் வலம் வரும் இவர்களை கண்டாலே கடும் கடுப்பு ஆகி அடுப்பில் வைத்த உணர்வே மிஞ்சும்.கால ஓட்டத்தில் சந்தித்த சில தமிழ் நண்பர்களால் "எல்லோரும் அப்படி அல்ல,குறிப்பிடத்தக்க அளவு இளைய சமுதாயம் மண்மணம் மாறாமல் இருக்கிறது" என என் கருத்தை மாற்றும் படியாயிற்று.அப்படி எனக்கு வாய்த்த அருமையான ஒரு நண்பனோடு பேரூந்தில் செல்லும் போது ஒரு விடயத்தை அவதானித்தேன்.அதாவது போதுமான இருக்கைகள் இருக்கும் பட்சத்தில் அவன் ஒருபோதும் அருகருகாக இருப்பதில்லை.முன் பின்னாக,அல்லது பக்கவாட்டாக பெரிய இடைவெளிகளில் இருந்தபடியே உரையாடியபடி வருவான்.முதலில் விடயம் பிடிபடாமல் இருந்தாலும் சில நாட்களுள்ளேயே என் நுண்ணறிவை உபயோகித்து உய்த்தறிந்துவிட்டேன்.(கடைசி வரை பிடிபடாமல் இருக்க நான் என்ன அலிபாயா? இல்லை பென்ரியம் 1 ஒபியா?)
நடுவீதியில் ஆணும் பெண்ணும் கூடினாலும் கணக்கெடுக்காம போகிற பெரிய பிரித்தானிய சனம் ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் அந்நியோன்னியாம பழகினா கண்ணையும் காதயும் கூர்மையாக்கிடும்.நண்பேன்டா நீ எண்டு கடுமையா பீல பண்ணி பகிரங்க இடத்தில நண்பன கட்டிப்பிடிச்சாலோ இல்லை தோள் மீது கை போட்டபட்டி நின்றாலோ பலரது கேவலப்பார்வைகள் அடுத்த நொடியே உங்கள் மீது விழுந்துவிடும்.இந்த நிலவரத்தால் அதிகமா பாதிக்கப்படுறது எங்கள போண்ற சேவல் கூட்டங்கள் தான்.கட்டுப்பெத்தையில் மப்ப போட்டிட்டு ஒரே பெட் சீட்டுக்குள்ள நண்பனோட படுத்து,தோள் மீது கை போட்டு ஊர் சுற்றி வளர்ந்த எமக்கு இது அந்நியமாக ஆரம்பத்தில் இருந்தது.கால ஓட்டத்தில் நாமும் எம்மை பிரித்தானிய சிந்தனைக்கேற்ப மாற்றிக்கொண்டு விட்டோம்.ஒன்றாக சுற்றினாலும் போதிய இடைவெளியை பேணுவது,பயணிக்கும் போது அருகே அமராமல் இருப்பது,கடும் மப்பு ஏறினாலும் நண்பன் துணையில்லாம நடப்பது,கூர்மையான காலணிகள்,உடலோடு ஒட்டிய கால்ச்சட்டைகளை தவிப்பது,பின்னழகை(???) மறைப்பது என நிறையவே எங்களை இந்த விடயத்தால் மாற்றிக்கொண்டு விட்டோம்.

"Gay" என அழைப்பதை விட மிகக்கேவலமான பழிப்பு ஒன்றை ஒரு ஆணுக்கு தரமுடியாது.அதையே தமிழில் "கல்லு" என்கிறோம்.கல்லு வெட்டல்,கல்லுக்காரன்,கல்லு மன்னன்,கல்லன் போண்ற வார்த்தைகள் அடிக்கடி விடுதி வாழ்க்கையில் மற்றவனை கேவலப்படுத்தும் போது பாவிப்பவை.தன்னை பலதரப்பட்ட விடயங்களில் முந்தி பெயரையும் புகழையும் சுருட்டிச்சென்றுவிடும் ஆண் மீது இன்னொரு ஆண் கடுப்பாகும் போது இந்த வார்த்தைகளில் ஒன்றேனும் பாவிப்பார்கள்.சற்றே மென்மையான இயல்புகளுடைய பேர்வழியின் அறை நண்பனை கல்லென அழைத்து கோபமூட்டி ரண்களப்படுதுவது கட்டுப்பெத்தை விடுதிகளில் அடிக்கடி நடக்கும்.சாப்பிடுறது,படிக்கிறது,குப்பி எடுக்கிறது,பயணம் போறது எண்டு அடிக்கடி இரண்டு பேர் ஒண்டாக வெளிக்கிட்டா சங்கு ஊதி பட்டம் குடுக்க பெடியள் காத்துக்கொண்டு இருப்பாங்கள்.மொத்தத்தில் ஓரின ஈர்ப்பு என்ற விடயம் பெடியள போட்டுத்தாக்க கட்டுப்பெத்தையில் பயன்பட்டதே தவிர அது தொடர்பான போதிய விளக்கம் அநேகர்க்கு பெரிய பிரித்தானியா வரும் வரை இருக்கவில்லை.

இந்த இடத்தில் விளக்கம் கெட்ட பென்ரியம் 1 Processorகாரர்களுக்கு நான் எதைப்பற்றி எழுதிக்கொண்டு போகிறேன் என்ற சந்தேகம் வரக்கூடும்.அப்படியானவர்கள் கீழே இருக்கும் பத்தியை படித்து தெளிவுபெறவும்.

//ஆணும் ஆணுக்குமிடையே அல்லது பெண்ணும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு அடிப்படையிலான உறவு ஓரினச்சேர்க்கை அல்லது தற்பால்சேர்க்கை எனப்படும். தம் பாலினத்தைச் சேர்ந்த நபர்களைக் காமுறுதல், உடலுறவுக்கு விழைதல், காதல் வயப்படுதல் என்பவற்றால் தற்பால்சேர்க்கை அடையாளம் காணப்படலாம். தன்பாலினப்புணர்ச்சி, சமப்பாலுறவு என்றும் தமிழில் ஓரினச்சேர்க்கை குறிக்கப்படுவதுண்டு.{Difntn 4m Wikipedia}//

//ஓ.சே (Homosexuality & lesbian) என்பது ஒரு மனிதனின் இயல்பான உணர்வு என்பதை நம்மில் பலரும் உணர்வதில்லை. பெண்ணை பார்த்து காதல் கொள்வது எப்படி மா.சேகளுக்கு இயல்போ அதேபோல் ஆணைப் பார்த்து காதல் கொள்வதும் ஓ.சேக்களுக்கு இயல்பு. ஓரினசேர்க்கை இயற்கைக்கு மாறானது என்ற (முட்டாள்தனமான) வாதத்தை வைப்பவர் பலர் உண்டு. உலகின் அனைத்துவகை மிருகங்கள், பறவை இனங்களிடம் ஓரினசேர்க்கை பழக்கம் உண்டு.எந்த மிருக,பறவை இனங்களிலும் 2 அல்லது 3% தொகை ஓரின சேர்க்கையாளர்தான்.மனித இனத்திலும் அதுபோலவே 2 அல்லது 3% பேர் எந்த காலத்திலும், எந்த சமூகத்திலும் ஓரினசேர்க்கையாளராகவே இருந்து வந்துள்ளனர்.//
குறித்த ஓர் மக்கட்தொகையில் ஓரின ஈர்ப்பு ஆண்களை விட லெஸ்பியன்களான பெண்களின் தொகை அதிகம் என ஆய்வுகள் சொல்லுகின்றன.செர்வே களின் போது பெண்கள் லெஸ்பியன்களாக இருந்தாலும் உண்மையை மறைப்பதால் உண்மையான வீதம் தெரிய வருவதில்லை எனச்செல்கிறார்கள்.ஆனால் தற்போதைய நிலவரப்படி உதட்டு முத்தங்களை பரிமாறியபடி செல்லும் பெண்-பெண் ஜோடிகளை ரயில்களில் காண்பது சாதாரணமாகிவிட்டது.

2 comments:

Alliyappa said...

Kaipulla nalla muyatci.....ippadiyana wishaym ezhuthum pothu athiha sirathayoda iru.....nan unnai waravetkiren...

Kaipillai said...

அலியப்பா நன்றியப்பா!,உலகத்தில் மூலை முடுக்கெல்லாம் தேடினாலும் உன் போல என் போல ஒளிவு மறைப்பில்லா வெளிப்படை உள்ளங்களை காணவே முடியாது.பாலியல் சார்விடயங்களில் அதீத வெறித்தனத்தை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு வெளியே வேடம் போடும் 2003 மட்ட போலி வேடதாரிகள் எம்போண்றவர்களின் கால்தூசிக்கு கூட பெறமாட்டார்கள்.