டும்..டும்..டும்…சில தினங்களுக்கு முன் chat ல் ஈடுபட்டிருந்தபோது ஓர் இன்ப

அதிர்ச்சி.நண்பன் கோகிலனிடம் இருந்தது கோல்மச்சான் எனக்கு கல்யாணம்fixedஎன்று. எங்கள் அறிவக நண்பர் குழாமில் தீபரூபனைத் தொடர்ந்து கோகிலனும் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளவுள்ளார்.(ஒருவேளை ரூம் ராசியோ!) கோகிலனைப் பற்றி ஏற்கனவே கனாக்காலத்தில் பதிவு உள்ளமையால் நான் அதிகம் கூற வேண்டியதில்லை.
(மனதில் நின்றவர்கள்-03-கோகிலன)

வாடல் தேகத்துடன் முகத்தில் உணர்ச்சிகள் அதிகமின்றி கம்பஸை வலம் வந்த இவரைப் பற்றிக் கூற வேண்டுமானால் சுத்த சோம்பேறி.(பவானின் தயாரிப்பில் கம்பசில் வெளியானகபோதிதிரைப்படத்தில் கோகிலனுக்கு கிடைத்த வேடம் தான் கதையின் ஆணிவேர். என்ன பாத்திரம் தெரியுமா !கம்பஸ் சூழலில் கொலையுண்ட ஒரு சடலம்.(எப்படித்தான் பொருத்தமாய் கண்டுபிடிக்கிறாங்களோ…. J ) கோகிலன் பாத்திரத்தில் ஒன்றி நடித்திருந்தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?. இவருக்கு பிடித்த இடம் ரூம் கட்டில் தான். லெக்சர் முடிந்தவுடன் ஒடோடி வந்து கட்டிலில் சரிந்தால் சரியான கும்பகர்ணன் தான். ஆனால் எக்சாம் எல்லாம் A தான். (எப்ப தான் படித்தானோ…)சிவில் பாடங்களைப் பொறுத்தவரை structural, design என்றால் இவரிடம் குப்பிக்கு நம்பிப் போகலாம்.கம்பசில் படிக்கும் போது இவரது வாடல் தேகத்தை ஆர்னோல்ட் ஸ்வாஸ்னேகர் மாதிரி மாற்ற விரும்பி இவர் பாவித்தது body mass.. ஆனால் இதைப் பாவித்து சில காலத்தில் இவருக்கு திடீர் என்று உடல் நலம் குன்றி ஊருக்கு திரும்ப வேண்டி ஏற்பட்டது. என்னடாப்பா இன்னும் காணவில்லையே என sms பண்ணிய செல்வரஞ்சனுக்கு வந்தது reply. தனக்கு தெரிந்த நோய்களெல்லாம் பட்டியலிட்டிருந்தான் கோகிலன். இப்பொழுதும் Body mass பாவிக்கிறானோ தெரியவில்லை.

கம்பசை விட்டு வெளியேறிய பின் எனக்கும் கோகிலனுக்கும் ஒரே இட்த்தில் ( புத்தளம் பாலாவி தான்) வேலை கிடைத்தபோதும் கோகிலனுக்கு கொழும்பில் இன்னொரு design வேலை கிடைத்ததும் நான் மாத்திரம் Maga pvt ltd ல் இணைந்து கடும் வெயிலில் கருவாடாக வேண்டி இருந்தது. ஆயினும் கோகிலன் பின்னர் புத்தளத்தை விட வெயில் கடுமையான வசதிகளற்ற மன்னாரில் வேலைக்குப் போனது எனக்கு ஆச்சரியம் தான். பிறகு நான் யாழ்ப்பாணத்திற்கு வந்த போது கோகிலனும் கொழும்புக்கு மாற்றலாகி விட்டான்.

கம்பஸ் நண்பர்கள் பலரும் வெளியேறிய பின் எங்கள் பலரை மறந்து விடுவது வ்ழக்கம். அண்மையிலும் கூட ஒருவரது திருமணப் போட்டோக்களை facebook ல் பார்த்துத் தான் அறிந்து கொள்ளவேண்டி இருந்தது. ஆனால் கோகிலன் முன்பே அறிவித்தது என்னைப் பொறுத்த வரை பெரிய விடயம். முன்கூட்டிய திருமண வாழ்த்துக்கள் நண்பா………!

தொ(ல்)லை பேசி

கம்பஸில் முதலாம் வருடம் நானும் ஒருவாறு பெற்றோரிடம் கெஞ்சிக் கூத்தாடி அப்போதைய 3315 மொடல் போன் ஒன்று வாங்கினேன். போன் வாங்கி நண்பர் சிலருக்கு நம்பர் கொடுத்த பின்னர் நான் பட்ட பாடு இருக்கிறதே. சொல்லி மாளாது. தெரியாத நம்பர்களில் இருந்து மிஸ்கோல்கள் வரும். அப்போது hatch sim ல் இருந்து நம்பர் வராமல் கோல் எடுக்க முடியும். புது போன் வங்கின எனக்கு இது பெரும் தலையிடியாக இருந்தது. ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் மிஸ்கோல் அடித்த நண்பனே சிறிது நேரத்தில் வந்து எனது response பார்த்து ரசித்து விட்டுப் போய் மீண்டும் தொடருவது தான். பின்னர் இவைகள் எல்லாம் பழகிப் போக அந்தத்தொல்லையும் விட்டது. இவ்வாறான தொல்லைகளை சமாளிக்க ஒரு வழி தெரியாத நம்பிரில இருந்து வரும் கோல்களை கணக்கெடுக்காம விடலாம். இலகு வ்ழி போனில் உள்ள SWITCH OFF எனும் option தான்.

வதந்தியும் நிஜமும்

சுனாமி முடிந்த நேரம் பெரும்பாலும் மட்டக்களப்பு மாவட்ட்த்தைப் பெரிதும் பாதித்திருந்த நேரம். சுனாமியின் பாதிப்பின் எதிரொலி பல்கலைக்கழகத்திலும் இருந்த நேரம். எங்கள் மட்டக்களப்பு மாணவன் அச்சுதனும் அப்போது தான் பல்கலை திரும்பியிருந்தான். Package களுக்குப் பெயர் போன சிலரால்அச்சுதனும் சுனாமியில போயிட்டானாம்என்று பொழுதுபொக்கிற்காக வதந்தி ஒன்று பரப்பி விடப்பட்டது. அப்போது தான் புதிதாக phone வாங்கியிருந்த என்க்கும் ஒரு sms வந்திருந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன் தான் கம்பசில் அச்சுதனைப் பார்த்திருந்த படியால் நானுமொரு sms அனுப்பினேன்அச்சு சாகவில்லை.கம்பசில் கண்டேன். தூங்கும்போது கூட காலாட்டிக்கொண்டு தான் தூங்க வேண்டும்,இல்லாவிட்டால் செத்தாச்சு எண்டு புதைத்து விடுவீர்கள்என்று கேள்விப்பட்ட வாசகம் ஒன்றையும் அனுப்பினேன்.அது தான் நான் செய்த தவறு.பொழுது போக்க நான் தான் சிக்கினேன்.”ஏண்டா செத்தவீட்டுக்கு போகவில்லைஎன்று வந்தது அடுத்த sms. sms மோதல் தொடர்ந்தது.உயிரோடு இருக்கிற ஒருவனை செத்ததாக சாதிப்பது எனக்கு வேப்பங்காயாக கசந்தது.அதுவும் சுனாமி நேரத்தில்: எனது கோபத்தைத் தூண்டி வேடிக்கை பார்க்க தீபரூபன், சவுந்தர்,ரிஸ்மி உட்பட்ட ஒரு கூட்டமே கிளம்ப நானும் கடுப்பாகி எக்சாமிற்கு படிக்க முடியாதளவு அலுப்பு வாங்கி சுகந்தமாறனின் தலையீட்டுடன் எல்லாம் முடிவுக்கு வந்தது. ஆனால் இதற்குப் பின்னணியில் அச்சுதனும் ஒத்துழைத்ததாக அறிந்த போது எனக்கு சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.


இப்போது
ஒன்றரை மாதங்களுக்கு முன் facebook ல் பல்கலைப்பட்டமளிப்பு போட்டோவில் பிரகலாதனின் குடும்ப போட்டோவை tag பண்ணி விட்டு வீடு வந்த போது 2 sms.ஒன்று செல்வா இடமிருந்துis it prahalathan’s broஅடுத்தது எங்கள் package க்குப் பேர் போன தீபரூபனிடமிருந்துour friend prahalathan’s brother passed away in Jaffna.please convey this to all friends.” இது தான் செய்தி. நான் இவற்றைக் கணக்கெடுக்கவில்லை. இவங்கள் என்னோடு விளையாடுறாங்கள் போல என்று விட்டு விட்டேன். மறு நாள் தீபருபன் கோல் எடுத்த்தும் கடுப்பாகி கதையை மாற்றிக் கட் பண்ணி விட்டேன். இதை மறந்து பல நாட்கள். தற்போது இரு நாட்களுக்கு முன் தற்செயலாக பிரகலாதனின் facebook பார்த்தபோது எனக்கு உண்மையில் பலத்த அதிர்ச்சி.பிரகலாதனின் அண்ணா சாரங்கன் உண்மையிலேயே காலமாகி விட்டிருந்தார். கம்பசில் படிக்கும் போது பிரகலாதனின் வீட்டுக்கு சென்றிருந்தபோது அவரைக் கண்டுள்ளேன். அப்போது மருத்துவக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அவர் மல்லன் போன்ற உடல் வாகு கொண்டவர். அவர் எப்படி இந்த வயதிலே என்று என்னாலும் நம்ப முடியவில்லை. காலனுக்குத் தெரியுமா மருத்துவனா, மல்லனா என்று. பக்கத்தில் இருந்தும்(சுன்னாகம் எனது ஊரிற்கு அருகாமையில் தான்) இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத கவலை ஒருபுறம் இருக்க நண்பனுக்கு தேறுதல் கூடக் கூறாத குற்ற உணர்வு மறுபுறம். அதனை ஓரளவாவது இந்தப் பதிவின் மூலம் நீக்கிக் கொள்கிறேன்.

விடயம் தெரிந்தபோது நண்பனோ தேறுதல் கேட்கும் நிலையைத்தாண்டியிருந்த்தான். அவனது facebook ல் அவனால் எழுதப்பட்ட இரங்கல் கவிதையின் சில வரிகள்.

"இரவின் பனியை உண்டு

இன்புற்றிருந்தது

இறுதி நாளின்பயணத்தை எண்ணி;

உதிரப்போகும் சருகொன்று…

இன்பம் தானா உதிர்வதில்?!…

துளிர்த்ததுமுதல்உதிரும்

நாள் வரை உழைத்தாகிவிட்டது…

உயிர்கள் சுவாசிக்க

ஆக்சிஸனைகொடுத்தாகிவிட்டது…

உதிர்தலென்பது உயிர்விடலா?!…

இல்லையில்லை…

இலையின் வாழ்க்கை

சுழற்சியின்இன்னொரு பக்கம்…"

5 comments:

Kaipillai said...

“கபோதி” திரைப்படத்தில் கோகிலனுக்கு கிடைத்த வேடம் தான் கதையின் ஆணிவேர். என்ன பாத்திரம் தெரியுமா !கம்பஸ் சூழலில் கொலையுண்ட ஒரு சடலம்.

Kaipillai said...

அருமை.கோகுலன் உன்னை கண்டான் எண்டால் வெட்டி கொல்லாம விட மாட்டான்.

காதலன் said...

இதில் நடந்தது என்னவென்றால் .... முன்னமே வதந்திய கிளப்பி விட்டவர்கள் பின்னாடி வந்து " மச்சான் செழியநிட்ட உன்ன சுனாமி கொண்டு போச்சு எண்டு சொல்லிட்டம் கொஞ்ச நாளுக்கு காம்பஸ் வராத " எண்டு சொன்னானுகள்.. அப்போ நான் ரத்மலான இருந்து காம்பஸ் வாறனான்... அன்று காலை காம்பஸ் ல என்னை கண்ட செழியன் பின்னேரம் call பண்ணும் போது எக்கோ போட்டு கதைச்சு பயமுறுத்தி கடுப்பு எத்தினம்...

லந்து said...

சுருக்கமாக கோகுலனை ஒரு நடமாடும் பிணம் எண்டு சொல்லுறியோ செழியன்?

செழியன் said...

அடப்பாவிகளா, கோகிலனைப் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. திருமண பந்தத்தில் இணையும் கோகிலனை பற்றி பதிவு மேற்கொள்ளுவதே என் நோக்கம்